…
…

…
வியக்க வைக்கும் சீன நூலகம் பற்றிய புகைப்படங்களின் தொடர்ச்சியாக அந்த நூலகத்தைப்பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்…
சீனாவில், Tianjin, Binhai Cultural District -ல் உருவாக்கப்பட்டுள்ள
5 மாடி உயர, 33,700 சதுர மீட்டர் பரப்பை உள்ளடக்கியுள்ள இந்த
நூலகம் டச்சு நிறுவனமான MVRDV -யால், வடிவமைக்கப்பட்டு, Tianjin
Urban Planning and Design Institute ( TUPDI) -ன் ஒத்துழைப்புடன்,
மூன்றே வருடங்களில் கட்டி முடிக்கப்பட்டு விட்டது என்றால்
ஆச்சரியமாக இல்லை…?
இதற்கு என்ன தொகை செலவானது என்கிற விஷயம் வெளியே தெரிவிக்கப்படவில்லை…( அதானே…. சீனா…!!! )
நூலகத்தின் உள்ளே இருப்பது அனைத்தையும், வெளியிலிருந்து பார்க்க
முடியும் என்பது இன்னொரு சிறப்பம்சம்.
புத்தகங்கள் இருக்கும் இடத்தருகிலேயே உட்கார்ந்து படிக்க,
தனியாக லவுஞ்சில் உட்கார்ந்து படிக்க, அலுவலக வேலைகளுக்காக,
கலந்துரையாடல் கூட்டங்களை நிகழ்த்த உள்ளரங்கம், கணினி
பயன்பாட்டிற்கென – என்று சகலவிதமான தேவைகளையும் கவனத்தில்
கொண்டு, நூலகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த நூலகம் 12 லட்சம் புத்தகங்களை கொண்டிருக்கும் என்று
முதலில் சொல்லப்பட்டது. புகைப்படங்களை பார்க்கும்போது,
தரையிலிருந்து கூரை வரை அனைத்து மட்டங்களிலும், வளைந்து
வளைந்து வெவ்வேறு கோணங்களில், புத்தக ஷெல்ஃப் (book shelf) அமைக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது அல்லவா…? அங்கங்கே அதே உயரங்களில் உட்கார்ந்து, வாசகர்கள் படிக்க முடியும் என்றும் சொல்லப்பட்டது.
இதன் பின்னால் தெரிய வந்தது ஒரு வேடிக்கை – இதைக்காண சென்றவர்கள்
– தரையிலிருந்து கூரை வரை உள்ள ஷெல்புகள் அனைத்திலும்
உண்மையில் புத்தகங்கள் இல்லை. நடமாடக்கூடிய உயரங்களில் உள்ள
சில வரிசைகளில் மட்டுமே நிஜத்தில் புத்தகங்கள் உள்ளன. மற்ற
உயரமான இடங்களில் உள்ள ஷெல்ஃப் களில், புத்தகங்கள் இருப்பது
போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.. அவ்வளவே..!
என்று ஏமாற்றத்துடன் கூறினர்…
இந்த தகவல்கள் வெளிவந்த பிறகு, இதை உருவாக்கிய MVRDV நிறுவனம், அது உண்மை தான் என்று ஒப்புக்கொண்டிருக்கிறது. உண்மையில் அத்தனை உயரத்திற்கும் புத்தகங்களை வைக்கும் விதத்தில் ஷெல்ப் களை அமைக்கத்தான் திட்டம் என்றும், ஆனால், குறிப்பிடப்பட்ட கால அவகாசத்திற்குள் அந்த வேலையை முடிக்க இயலாது என்பதால், அந்த இடங்களை “perforated aluminum plates printed to represent books” -ஐ கொண்டு நிரப்பி விட்டதாக ஒப்புக்கொண்டுள்ளது. இப்போது புகைப்படங்களில் கூட தொலைவிலிருந்து பார்க்கும்போது, புத்தகங்கள் இருப்பது போலவே தோற்றமளிக்கிறது அல்லவா…!!!
( கலைஞர் ஆட்சியின் கடைசி கட்டத்தில், தேர்தலுக்கு முன்னதாக
பிரதமரை கொண்டு, அவசரமாக நிகழ்ந்த திறப்பு விழாவிற்காக, தமிழக
தலைமைச்செயலக புதிய கட்டிடத்திற்கு சினிமா கலைஞர்களைக் கொண்டு
“டூம்” செட் போட்டது நினைவிற்கு வருகிறதா… 🙂 🙂
ஆனாலும், சீனாவில் இதை நான் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை….!
இதன் விளைவாக, 12 லட்சம் புத்தகங்கள் என்று அறிவிக்கப்பட்ட இடத்தில் இப்போது 2 லட்சம் புத்தகங்கள் மட்டுமே வைக்கப்பட்டிருக்கின்றனவாம்..!!!
ஆனாலும், இது குறித்த எக்கச்சக்கமான விளம்பரங்கள் காரணமாக,
வாரக்கடைசியில் இங்கு வரும் டூரிஸ்டுகளின் எண்ணிக்கை 15,000 -ஐயும் தாண்டுகிறதாம்…!!!
இறுதியாக, புத்தகங்கள் குறைவாக இருப்பது கூட பெரிய பிரச்சினை
இல்லை… பாதுகாப்பு இல்லாத தளவரிசைகளில், ஏறி இறங்கும்போது
பலர் தடுமாறி விழுவது தான் பிரச்சினையாக இருக்கிறது என்கிறார்கள்…. புகைப்படங்களை பார்த்தால், நமக்கே அந்த பயம் வருகிறது அல்லவா…? சிலர் ஏற்கெனவே விழுந்து ஆஸ்பத்திரியில் கிடக்கிறார்களாம்…….அழகின் பின்னே இப்படி ஒரு ஆபத்து…!!! ( கட்டிடம், விரைவில் சில மாறுதல்களுக்கு உள்ளாகலாம்…)
( இந்த விவரங்கள் எல்லாம் தெரிந்த பிறகு அந்த புகைப்படங்களை மீண்டும் ஒரு முறை பார்த்தால், அதன் அமைப்பை தெளிவாக புரிந்துகொள்ள முடியும்..)
இப்போதெல்லாம் சீனாவைப்பற்றியெல்லாம் கூட நிறைய தகவல்கள்
வெளிவருகின்றன..!!!
இருந்தாலும் கூட ……….



அய்யா ….! இது புதுசு … சீனாவில் பீஜிங்கில் உள்ள தேசிய நூலகம் நூற்றாண்டுகளை கடந்ததின் சிறப்புகளை … இந்த புதுசாேடு ஒப்பிட்டு சுட்டிக்காட்டிருக்கலாம் …!. ஒரு செய்தி கீழே :
// இதுதான் கமல்ஹாசனின் புதிய ட்விட்டர் ப்ரோஃபைல் போட்டோ! //
https://www.vikatan.com/news/tamilnadu/108528-kamal-haasan-changed-his-twitter-profile-picture.html இது ” வேதனையா … வேடிக்கையா …? ” ஏன் இந்த வினாேத ஆசை …?
பிரனீஷ்,
இது வேடிக்கையும் இல்லை வேதனையும் இல்லை…
வாடிக்கை… அவருக்கு இது வாடிக்கை..
அவரது அடுத்த வேடம் இது…
என்ன …. திரைப்படம் அல்லாமல்,
நிஜ வாழ்க்கையிலேயே போட விரும்பும் வேடம்…!
இதை – மக்கள் புரிந்து கொள்வார்கள்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
‘செட்’ என்பது லைப்ரரியின் நோக்கத்தைச் சீர்குலைக்கவில்லை. இரண்டு லட்சம் புத்தகம் என்பதும் குறைவு அல்லவே. இதில் உள்ள குறைகளை விரைவில் களைந்துவிடுவார்கள்.
சீனாவின் இந்த பெரிய செயலை, கருணானிதியின் ‘தலைமைச் செயலக செட்’ டோட ஒப்பிடுவது சரியா? கருணானிதி, துபாயைச் சேர்ந்த (தங்களின் 20% கமிஷன் கொடுக்கும் பார்ட்னர்) ஸ்டார் குரூப்பிற்குத்தானே கட்டிடம் கட்டும் உரிமையைக் கொடுத்திருந்தார். பைசா பண்ணுவதற்கும், அத்துடன், ‘தான் கட்டிய கட்டிடத்தில்தான் தலைமைச் செயலகம் இயங்குகிறது’ என்ற புகழுக்காகச் செய்ததை, சைனாவின் லைப்ரரியோடு ஒப்பிடலாமா? கருணானிதி செயல்படுத்திய ‘அண்ணா நூலகக் கட்டிடத்தோடு’ வேண்டுமானால் ஒப்பிட்டிருக்கலாம்.