“Didi” -மமதா பானர்ஜி – திரு. ஷாரூக் கான்- ஒரு குறு வீடியோ…!!!


“Didi” – (“மூத்த சகோதரி”) என்றழைக்கப்படும் மமதா பானர்ஜி
அவர்களும், புகழ்பெற்ற ஹிந்தி திரையுலக நாயகன் ஷா ரூக் கான்
அவர்களும் தோன்றும் ஒரு அரை நிமிட வீடியோ கீழே….

மமதா அவர்களை முன் கோபக்காரர், பொறுமை இல்லாதவர்
எல்லாரையும் தூக்கி எறிந்து பேசக்கூடியவர் என்றேல்லாம்
நிறைய பேர் அரசியல் ரீதியாக குறை சொல்லலாம்…

– ஆனால், இரண்டு முறை மத்திய அரசில்
கேபினட் அமைச்சராக பதவி வகித்தவர்,

– 2011 முதல் தொடர்ந்து மேற்கு வங்க முதலமைச்சர் பதவியை
வகித்து வருபவர்,

-M.A. , B.Ed., மற்றும் B.L. பட்டங்கள் பெறும் அளவிற்கு படித்தவர்…

– என்று இவரைப் பார்த்து யாராவது சொல்ல முடியுமா..?
எவ்வளவு எளிமை…?

போலீஸ் எஸ்கார்ட் எதையும் முன்பாக காணோம்….தன்னுடைய
சிறிய காரில் முன் சீட்டில் டிரைவருக்கு பக்கத்தில் உட்கார்ந்து
கொண்டு வருகிறார்… கார் நிற்கும் முன்னரே, தானே
கதவை திறந்துகொண்டு இறங்கும் வேகம்…

எந்தவித பந்தாவும் இல்லாமல், சாதாரணமாக உரையாற்றிக்கொண்டே
செல்லும் வேகம்…

இந்திய அரசியல் உலகில் மிகவும் வித்தியாசமானவர் “தீதி”…!!!

இவர் மீண்டும் டெல்லி அரசியலுக்கு வருவாரா…????
வந்தால் எப்படி இருக்கும்….???
A Million Dollar Question …!!!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to “Didi” -மமதா பானர்ஜி – திரு. ஷாரூக் கான்- ஒரு குறு வீடியோ…!!!

  1. இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

    கே.எம்.சார்,

    சீரியசாக கேட்கிறேன்.
    பெங்காலிகள் இவரை போக விடுவார்களா ?
    அப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறதா ?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      இளங்கோ,

      முதலில் நமது நண்பர்கள் இதைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று
      பார்ப்போமே…!

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  2. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    // இவர் மீண்டும் டெல்லி அரசியலுக்கு வருவாரா…????
    வந்தால் எப்படி இருக்கும்….??? //

    இவர் மாதரியானவர்கள் வரணும். டெல்லிக்கு.

    நிதிஷ் குமாரை எதிர்பார்த்தோம். காலை வாரினார்.

    தேவ தூதனுக்கு எதிராக இவராவது நிற்கனும்…

    காங்கிரஸ் அனுமதிக்குமா….? குஜராத் பதில் சொல்லக்கூடும்.

    நல்லதேநடக்கனும், நடக்கும்.

  3. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    டெல்லி அரசியல் ….? மேற்கு வங்காள மக்களுக்கு நல்லது நடக்கட்டும் … தற்பாேது இவராவது மத்திய அரசை சிலவற்றில் கேள்விகள் எழுப்பி எதிர்ப்பை காட்டுகிறார் … அதுவே தாெடரட்டும் … இவரும்டெ ல்லிக்கு சென்று விட்டால் … ஆக்டாேபஸ் பிடிக்குள் …மே .வ …!!!

  4. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    மம்தா பானர்ஜி அவர்கள் மிக எளிமையானவர் என்பதில் சந்தேகமே இல்லை. இதற்கெல்லாம் காரணமாக நான் நினைப்பது மேற்கு வங்க கம்யூனிச ஆட்சிதான். ஆட்சியாளர்கள், தேவதூதர்கள் அல்லர், அவர்களும் சக மனிதர்கள்தான் என்று காட்டி, எந்தவித ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் ஆகாமல் இருந்தவர்கள் மே.வங்க முதல்வர்கள் (40 வருடங்களாகவே). அதனால் மம்தா பானர்ஜி அவர்களும் இப்படி எளிமையாக இருப்பதில் ஆச்சர்யம் இல்லை. இவர்களைப்போன்ற அரசியல்வாதிகள் இன்னும் பெரிய இடங்களுக்கு வரவேண்டும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.