…
…
யூ ட்யூப் வலைத்தளம், தோண்ட தோண்ட கொடுத்துக்கொண்டே
இருக்கும் ஒரு வைரச்சுரங்கம்…
என்ன… பொறுமையாக நமக்கு வேண்டியது கிடைக்கும் வரை
மாற்றி மாற்றி வெவ்வெறு கோணங்களில் தேடிக்கொண்டே
இருக்க வேண்டும்… இடையில், திசை திருப்ப நிறைய விஷயங்கள்
குறுக்கிடும்… கொஞ்சம் ஏமாந்தால், தேடியதை விட்டு விட்டு,
வேறு எதன் பின்னாலோ போய்க்கொண்டிருப்போம்.
“ஆல்காட்” இடுகைக்காக சில வீடியோக்களை
தேடிக்கொண்டிருக்கும்போது, வேறு சில வீடியோக்களை பார்த்தேன்.
வெவ்வேறு இசைச்சிற்பிகளின் கோணங்களில், பாரதியின் பாடல்களை
ஒருங்கிணைத்து இங்கு ஒரு சிறு பதிவு போடலாமே என்று
தோன்றியது….
ஏகப்பட்ட பாடல்கள் இருக்கின்றன.. எல்லாவற்றையும் ஒரே சமயத்தில்
இங்கு சேர்த்தால், பார்ப்பவர்களுக்கு சிரமம்…
எனவே, குறிப்பிட்ட சிலவற்றை மட்டும் இங்கே தொகுத்திருக்கிறேன்…
பின்னர், வேறோரு சமயத்தில், இன்னும் கொஞ்சம் பார்க்கலாம்.
இப்போதே எண்ணிக்கை கொஞ்சம் அதிகம் தான். ஆனாலும்,
இந்த பாடல்களில் எதையும் விட்டு விட எனக்கு மனமில்லை.
நேரம் கிடைக்காதவர்கள், இரண்டிரண்டு பாடல்களாக பாருங்கள்….
பாரதி இந்த பாடல்களை எல்லாம் இயற்றி கிட்டத்தட்ட 100 ஆண்டுகள்
கடந்து விட்டன… அவர் எந்தெந்த சூழ்நிலைகளில், எந்த மனநிலையில்
இவற்றை இயற்றினார் என்பது நமக்கு நிச்சயமாக தெரியாது.
பிற்காலத்தில் தனது பாடல்கள் தமிழ் திரைப்படங்களில் வடிவம் பெறும்
என்றோ, இந்த அளவிற்கு இசைமேடைகளில் இசைக்கப்படும் என்றோ
அவர் நினைத்திருக்கவே முடியாது. அவர் இருந்தபோது, அவருக்கு
கிடைத்த மதிப்பும், மரியாதையும் – அத்தகையது…!
வாழும்போது அவரை கொண்டாடாத சமூகம் நமது தமிழ்ச்சமூகம்..
அவர் மறைந்து கிட்டத்தட்ட நூறாண்டுகள் ஆகின்ற நிலையில், பிற்காலத்திலாவது அவரது அருமை உணரப்பட்டது ஒரு திருப்தி.
நம் மனதில் நிறைந்து நிற்கும் பாரதியின் சில பாடல்களின் தொகுப்பு
கீழே… வெவ்வேறு இசைக்கலைஞர்களால் பாடப்பெற்ற இவற்றில் சில
திரைப்படங்களிலும் இடம் பெற்றவை….
நின்னை சரணடைந்தேன் –
இளையராஜா
சின்னஞ்சிறு கிளியே -எம்.எல்.வி.
காணி நிலம் வேண்டும்…
அக்கினி குஞ்சொன்று…
மனதில் உறுதி வேண்டும்..
ஆசை முகம் மறந்து போச்சே -ஓ.எஸ்.அருண்
மோகத்தை கொன்று விடு…
மஹாராஜபுரம் சந்தானம் –
நெஞ்சில் உரம் இன்றி –
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் –
நல்லதோர் வீணை செய்தே



எம்.எல்.விதான் முதலில் பாரதியார் பாடல்களை திரைப்படங்களில் பாடியவர் என்று நினைக்கிறேன். நாம் இருவர் படத்துக்குப் பிறகு அதிக அளவில் பாரதியார் பாடல்கள் இடம்பெற்ற படம் ஏழாவது மனிதன். நான் கல்லூரியில் படிக்கும்போது வெளியான படம் இது.
நாம் இருவர் (ஏவிஎம்) படத்தின் தனிச் சிறப்பு, பாரதியார் பாடல்களை, சுதந்திரம் பெறுவதற்கு முன்பு திரைப்படத்தில் உபயோகப்படுத்திக்கொண்டது.
பாரதியார் பாடல்கள் (திரையிசை ஆனதில்) அனைத்தும் பிடிக்கும் என்றாலும், ‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம்’ கேட்கும்போது மனதில் சோகமும் வெறுமையும் அப்பிக்கொள்ளும். எனக்கு அடுத்து பிடித்த பாடல், ‘வெற்றி எட்டுத் திக்கும் என்று கொட்டு முரசே’.
பகிர்வுக்கு நன்றி. (அடுத்த முறை ஏழாவது மனிதன் படப் பாடல்களை மறந்துவிடாதீர்கள்)
புதியவன்,
அடுத்த பதிவு வரை காத்திருப்பானேன்…!!!
// பாரதியார் பாடல்கள் (திரையிசை ஆனதில்) அனைத்தும் பிடிக்கும் என்றாலும், ‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம்’ கேட்கும்போது மனதில் சோகமும் வெறுமையும் அப்பிக்கொள்ளும்… //
எனக்கும் அதே உணர்வு தான் ஏற்படும். இருந்தாலும், மீண்டும் மீண்டும் பலரும் அதைக்கேட்க வேண்டும்; பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். எத்தனை பாடுபட்டார்கள் சுதந்திரம் பெற….
இன்று என்ன செய்து கொண்டிருக்கிறோம் அந்த சுதந்திரத்தை வைத்துக்கொண்டு என்று ஒவ்வொருவரும் யோசிக்க அந்த பாடல்/காட்சி ஒரு தூண்டுதலாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
பாரதி பற்றி கவிமணி அவர்கள்
” பாட்டுக் கொருபுலவன் பாரதியடா! – அவன்
பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானடா!
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா! – அந்தக்
கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா!
சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமேயடா! – கவி
துள்ளும் மறியைப்போலத் துள்ளுமேயடா !
கல்லும் கனிந்துகனி யாகுமேயடா ! – பசுங்
கன்றும் பால் உண்டிடாது கேட்குமேயடா! ”
என்று பாடியது எவ்வளவு பாெருத்தமான வரிகள் … என் விருப்பம் 1. அடுத்து 12. தற்பாேது 15 … என்று பதிவுகளில் பாரதியின் பாடல்கள் பற்றி எழுதி வருவது தாெடர வேண்டும் … அவன் புகழ் பரவிக் காெண்டே இருக்க வேண்டும ..
தமிழ் திரைப்படங்கள் ஐம்பதுக்கும் மேலானவற்றில் அவனது பாடல்கள் இடம் பிடித்துள்ளன என்பது இன்னும் அதிகரிக்க வேண்டும் ….!!!
அய்யா …! https://www.yarl.com/forum3/topic/180380-மகாகவி-பாரதியார்/ இந்த லிங்க்கில் பாரதயாரின் பாடல்கள் இடம் பெற்ற திரைப்படங்களின் பெயர்கள் … பாடலின் மற்றும் பாடியவர்களின் பெயர்களும் உள்ளன …!!!
நன்றி பிரனீஷ்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Bharathiyar’s songs tend to make our hearts melt. I came across on YouTube “Chinnanchiru Kiliye’ sung by Swetha Mohan. It is very touching.