…
…
திரைப்படங்களிலும், மேடை நாடகங்களிலும் பணியாற்றும்
“ஒப்பனைக்கலை” ( மேக்கப் ) நிபுணர்களுக்கும், காமிரா (ஒளிப்பதிவு)
நிபுணர்களுக்கும் –
ஒரு நாடகத்திற்கு மேக்கப் போடுவதற்கும்,
ஒரு திரைப்படத்திற்கு மேக்கப் போடுவதற்கும் உள்ள வித்தியாசங்கள்
நன்கு தெரியும்.
நாடகங்களில், தொலைவில் அமர்ந்து பார்க்கும் பார்வையாளர்களுக்கு
முகம் பளிச்சென்று தெரிய வேண்டும் என்பதால், ஹெவி மேக்கப்
போடுவார்கள்…. ஆனால், அதே அளவு மேக்கப்பை திரைப்படங்களில்
நடிகர்களுக்கு பயன்படுத்தினால், க்ளோசப் காட்சிகளில் படுகோரமாகத்
தெரியும்…
அதே போல், உலக அளவில் பயன்படுத்துவதற்காக
( meant for international consumption ) “தயாரிக்கப்பட்ட” சில புள்ளி
விவரங்களை உள்ளூரில் பயன்படுத்தினால், அது அசிங்கமாக
பல்லிளிக்கும்.
இதெல்லாம் பொது அறிவு சம்பந்தப்பட்ட விஷயம்…..
நாம் விஷயத்திற்கு வருவோம்…!!!
இன்று, அமெரிக்காவைச் சேர்ந்த ப்யூ ஆராய்ச்சி நிறுவனம்
( Pew Research Centre (PRC) ) சில புள்ளி விவரங்களை
வெளியிட்டிருப்பதாக செய்திகள் வெளி வந்திருக்கின்றன…
இந்தியாவில், முக்கியமாக தென்னிந்தியாவில் – ஆந்திரா, தெலங்கானா,
கர்நாடகா, தமிழ் நாடு ஆகிய மாநிலங்களில் 10 க்கு 9 பேர் மோடிஜி
அவர்களை ஆதரிக்கிறார்களாம். வட இந்திய மாநிலங்களில் -10 க்கு
8.8 பேர் ஆதரவாம். அவரது செல்வாக்கு நாளுக்கு நாள்
வளர்ந்துகொண்டே போகிறதாம். (கேரளா, வடகிழக்கு மாநிலங்கள்
மற்றும் ஜம்மு காஷ்மீர் மட்டும் இந்த சர்வேயில் சேர்க்கப்படவில்லை
என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது….)
” “Modi’s overwhelming popularity extends across India. At least nine in 10
Indians in the southern States of Andhra Pradesh, Karnataka, Tamil Nadu and
Telangana
and in the western States of Maharashtra, Gujarat and Chhattisgarh hold a
favourable view of the Prime Minister. Since 2015, Modi’s popularity is relatively unchanged in the north, has risen in the west and the south”
.
அமெரிக்காவிலிருந்து ரிப்போர்ட் வெளியிடப்பட்டிருக்கிறதே….!!!
எனவே நமது ” லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் பேரவை ” அடிக்கடி
வெளியிடும் சர்வே ரிப்போர்ட்டை போலவேயும், இன்னும் கூடுதல் “தரம்” மிக்கதாகவும், “நம்பகமானதாக”வும் இருக்குமென்று நம்புவோமாக…!
ஒரே ஒரு சந்தேகம்…
இவ்வளவு பாப்புலாரிடி இருக்கும்போது –
10 -க்கு 9 பேர் ஆதரவு இருக்கும்போது,
குஜராத் சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக தலைவரும்,
பிரதமரும் இவ்வளவு சிரமப்படுவானேன்…
டென்ஷன் அடைவானேன்…?
கடந்த 9 மாதங்களில் 10 முறை குஜராத் விசிட்…
அடுத்த ஒரு மாதத்தில் குஜராத்தின் 30 மாநிலங்களிலும்
பிரதமரின் பேரணிகள், roadshow என்றெல்லாம்
அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
பாஜக அநாவசியமாக இவ்வளவு டென்ஷன் ஆகி,
பாவம் – மோடிஜியையும் தொந்திரவு செய்யாமல் இருந்திருக்கலாம்…
இப்படி ஒரு ப்யூ ரிப்போர்ட் வெளிவந்திருப்பதை பார்த்த பிறகாவது,
பாஜக தனது பதட்டங்களை குறைத்துக்கொண்டு,
“சாந்தி” அடையுமென்று நம்புவோமாக…!!!

இந்த ஜிடிபி ரிப்போர்ட் எல்லாம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது…இதெல்லாம் தூக்கி குப்பையில் போட வேண்டிய சமாச்சாரங்கள்… அமெரிக்க லயோலா காலேஜ் “ப்யூ” ரிப்போர்ட் முன் இவையெல்லாம் நத்திங்…!!!



லயோலா கருத்துக்கணிப்பு குழுவில் — தாடியுடன் – குல்லா போட்டுக்கிட்டு ஒருத்தர் இருப்பாரே …! அவரைப்போல அங்கேயும் ஒருத்தர் இருக்கிறாரோ …? அமெரிக்காவில் இருந்து வந்துள்ள கணிப்பு இருந்தாலும் — இங்கே உள்ள உண்மை நிலவரத்தை நேரிடையாக தெரிந்தவர்களுக்கு — பதட்டமடையாமல் — சாந்தி அடைவது எப்படி …?
தமிழ்நாட்டில் 10 பேரில் 9 பேருக்கு மோடிஜியை பிடித்திருக்கிறது என்கிற
தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கே தெரியாத உண்மையை
அமெரிக்க “ப்யூ” நிறுவனம் கண்டுபிடித்திருப்பது வியந்து பாராட்டத்தக்கது.
அதற்கு எத்தனை (!) வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
அந்த பத்து பேரில், மோடிஜியை பிடித்த ஒன்பது பேர் யார் யாராக இருக்கலாமென்று யூகிக்க முடிகிறது. திருமதி தமிழிசை, திரு.ஹெச்.ராஜா இத்யாதி இத்யாதி
ஆனால், பிடித்ததாக சொல்லாத அந்த பத்தாவது நபர் மட்டும் யார் என்று தெரிந்தால் ——–
உண்மைதான். இந்தியா முழுவதும் 2400 பேரிடம் கேள்வி கேட்கப்பட்டது. இது போதுமா? அத்துடன் அவர்களே வெளி நாட்டைப் பொறுத்த வரை முற்றிலும் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என சொல்லி இருப்பது.
கூடவே கேள்வி கேட்டவர்,கேட்கப்பட்டவர் என பதில் மாறுபடலாம்.அதுவும் face to face என்பதால் பலருடைய பதிலும் சரியாக இருக்க வாய்ப்பு குறைவே. எல்லாமே அவர்களுடைய survey methodology பொறுத்தது தான்.
// ஹர்திக் படேல் விவகாரம்… இருந்தாலும் பாஜகவின் புத்தி இவ்வளவு மோசமாக இருக்கக் கூடாது! //
Read more at: https://tamil.oneindia.com/news/india/hardik-has-more-nehru-s-dna-photo-tweet-bjp-it-cell-head-creates-sensation-302045.html பா.ஜ .க . வை குற்றம் சொல்லுவதாக யாரும் நினைக்க வேண்டாம் { திரு .கா.மை . அய்யா போல கூறிவிடுவது நல்லதல்லவா } …. இந்த செய்தியில் :– // பாஜகவின் ஐடி பிரிவின் தலைவர் அமித் மால்வியா ஜவஹர்லால் நேரு பெண்களுடன் நெருங்கிப் பேசும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதற்கு ஹர்திக்கிற்கு நேருவின் டிஎன்ஏ இருக்கும் போல என்றும் அவர் தலைப்பிட்டுள்ளார். // இந்த வாக்கியங்களை என்னவென்று கூறுவது — ஏற்றுக்கொள்வது …? மோடிஜி நெ 1 . என்று செய்திகள் வருகின்ற போது … இப்படியுமா …?
//இதெல்லாம் பொது அறிவு சம்பந்தப்பட்ட விஷயம்…..//
நச்…!
இதெல்லாம் ஒண்ணுமில்ல. உண்மை தெரிய வந்தால் கொடுப்பார்கள் பாருங்கள் ஒரு விளக்கம்…
”இதுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை” என்று.
இத ஆதரித்து சிலர் வருவார்கள். இன்னும் அது வேடிக்கை.
// ”இதுதான் சென்னை தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு..!” – சொல்கிறார் ‘நிஜ’ பஞ்சவன் பாரிவேந்தன் // https://www.vikatan.com/news/coverstory/108008-the-only-way-to-retrieve-chennai-says-the-original-panchavan-pariventhan.html?utm_source=newsletter&utm_medium=content&utm_campaign=15186
இவர் கூறியுள்ள கல்வி பற்றிய கருத்துக்கள் உற்று நோக்கத்தக்கவை … ! // “அர்த்தமற்ற இந்தப் போட்டிக்கு ஏன் அவர்களை பலிகடா ஆக்க வேண்டும்.// ……. நீட் தேர்வை சாடுவதுபோல தெரிகிறது — சென்னைக்கு அவர் கூறியுள்ள தீர்வு நடைமுறைக்கு ” சாத்தியமா இனி ” … ? கஷ்டம் தான் … ஆனால் துணை நகரம் பல கிலோ மீட்டர் இடைவெளியில் துவங்குவது தான் இனி நல்லது …!!!
“At least nine in 10 Indians in the southern States ” – எப்படித்தான் இந்த அமெரிக்க லயோலாக்கள் கருத்துக்கணிப்பு எடுக்கின்றனவோ. அதையும் சிரிக்காமல் வெளியிட்டிருக்கிறார்களே,, அதிலும் 3% தவறு இருக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்களே, அதைப் பாராட்டணும்.
நம்ம ஊரில், எப்போதும் கருத்துக்கணிப்பு எடுத்தால், எடுக்கும் நிறுவனம், ஆட்களுக்கேற்றவாறுதான் மக்கள் கருத்தைச் சொல்லுவார்கள். இதனை, விகடன், நக்கீரன், தினமலர், லயோலா (பார்ட்1, பார்ட்2) கருத்துக்கணிப்புகளில் பார்த்திருக்கிறோம். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் போலல்ல, தான் நினைப்பதை வெளிப்படையாகச் சொல்ல.
60 சதவிகிதம் பேர், ஸ்டாலின் முதல்வராக வரணும்னு சொல்றதும் இந்த வகைதான் போலிருக்கு. நல்லவேளை 90% என்று சொல்லாமல் போனார்களே.