குழப்பும் 2.11 லட்சம் கோடி கடன் …!!!


New Indian currency rupees

வாராக் கடன்களின் சுமையால், பலவீனமாக இருக்கும் பொதுத்துறை
வங்கிகளை மீட்க, மத்திய அரசு அடுத்த இரண்டு ஆண்டுகளில்
2.11 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளில் முதலீடு செய்து
வங்கிகளுக்கு புது ரத்தம் பாய்ச்சும் என்று நிதியமைச்சர் திரு.ஜெட்லி
அற்புதமானதொரு திட்டத்தை குஜராத் தேர்தலையொட்டி அவசரம்
அவசரமாக அறிவித்திருக்கிறார். அதைப்பற்றி உங்களுக்கு விவரம்
புரிந்ததா…?

புரியாதவர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி குழப்பத்தை தெளிவுபடுத்திக் கொள்வதற்காக அல்லது மேலும் குழப்பிக்க்கொள்வதற்காக தான் இந்த இடுகை…

ஏற்கெனவே நிதிநெருக்கடியில் இருக்கும் மத்திய அரசு –
இந்த 2.11 லட்சம் கோடியை கொடுக்க காசுக்கு எங்கே போகும்…
என்று பலத்த சந்தேகம் வரும்….!

எனவே ஒரு வித்தியாசமான திட்டத்தை செயலுக்கு கொண்டு
வரவிருக்கிறார்கள்…

ரொம்ப சிம்பிள்…. வங்கிகளில் அரசு முதலீடு செய்ய –
அந்த வங்கிகளே அரசுக்கு …..கடன் கொடுக்கும்…!!!

கொஞ்சம் விவரமாக –

மொத்தம் கொடுக்கவிருக்கும் 2.11 லட்சம் கோடி உதவிநிதியில் –
1.35 லட்சம் கோடி ரூபாய், கடன் பத்திரங்கள் மூலமாகவும்,
58 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீடு மூலமாகவும்,
மீதி 18,000 கோடி ரூபாயை அரசு வங்கிகளின் மீதான தன் பங்குகளை
பொது மார்க்கெட்டில் விற்பதன் மூலமும் திரட்டும்…. என்று
சொல்லப்படுகிறது.

58,000 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு…
18,000 கோடி அரசு ஷேர்களை விற்பதன் மூலம் –
இரண்டும் சரி ஓகே – புரிகிறது….!

அந்த 1.35 லட்சம் கோடி – கடன் பத்திரங்கள் மூலமாக என்று
சொல்லப்படுகிறதல்லவா அங்கே தான் இருக்கிறது தமாஷ்.

இந்த பணம் எப்படி திரட்டப்படும் என்றால் –
( இது குறித்து இன்னும் முழு விவரங்கள், அதிகாரபூர்வமாக
அறிவிக்கப்படவில்லை…விவரங்களை நிதானமாக எப்போது வேண்டுமானாலும் வெளியிட்டுக் கொள்ளலாம்…. தேர்தல் நடைமுறை அதை கட்டுப்படுத்தாது…)

முதலில், மத்தியஅரசு இந்த தொகைக்கு கடன் பத்திரங்களை
வெளியிடும். இந்த கடன் பத்திரங்கள் பொதுமக்களுக்கானது அல்ல.

வங்கிகளிடம், demonetization மூலம் சேர்ந்த பணம் எக்கச்சக்கமாக
குவிந்திருக்கிறது… அதிலிருந்து 1.35 லட்சம் கோடி ரூபாயை
வங்கிகள் அரசுக்கு (கடன்) கொடுத்து, அந்த கடன் பத்திரங்களை
வங்கிகளே வாங்கிக் கொள்ளும்.

கடன் பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் இவ்வாறு திரட்டப்படும்
1.35 லட்சம் கோடியை மத்திய அரசு (மீண்டும்) அந்த வங்கிகளிலேயே
மறுமுதலீடு செய்து விடும்….!!!

அதாவது, வங்கிகளிடமிருந்து கடன் வாங்கி,
அந்த பணத்தையே மீண்டும் வங்கிகளில் முதலீடு செய்து விடுவது…!!
சூப்பர் ஐடியா அல்லவா …? புரிகிறதா…?

புரியவில்லையென்றால் மீண்டும் ஒருமுறை தொடக்கத்திலிருந்து
படிக்கலாம் ..

அப்படியும் புரியவில்லையென்றால் –

கிட்னி சரிவர செயல்படாதவர்களுக்கு,  டயலிசிஸ் ஏன் செய்யப்படுகிறது, எப்படி  செய்யப்படுகிறது என்று  விவரமாகப் படித்தால்  புரிந்துவிடும் என்று நினைக்கிறேன்…!!! 🙂 🙂

———————————————————————————

 

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to குழப்பும் 2.11 லட்சம் கோடி கடன் …!!!

  1. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    “கரந்த பால் மடி புகுகிறது” என்று தலைப்பை மாத்துனீங்கன்னா நல்லா ப்ரியும் ஐயா!!

    அடுத்தாப்புலே “ஏ கெழவா நீ இன்ன ஆடிட்டரா இல்லே சீஏ-வான்னு” வருவானுங்க… ஜாக்கிரதையாக இருங்கள் ஐயா

  2. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    // வங்கிகளிடம், demonetization மூலம் சேர்ந்த பணம் எக்கச்சக்கமாக
    குவிந்திருக்கிறது… // குவிந்திருக்கிற பணத்தைக் காெண்டு வங்கிகளே ” புது ரத்தம் ” பாச்சிக்க முடியாதா …? ” காேல்மால் என்பதற்கு தமிழில் என்னங்கய்யா அர்த்தம்….?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      பிரனீஷ்,

      இதில் ஒரு உத்தி இருக்கிறது.
      suppose – இப்போது ஒரு பொதுத்துறை வங்கியின் மூலதனம்
      நூறு ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். அதில் 10 ரூபாய்
      வாராக்கடனாக இருந்தால், அதை 10% வாராக்கடன் என்று
      குறை சொல்வார்கள்.
      அதே வங்கியில், இப்படி கடன் வாங்கி, மூலதனத்தை 120 ரூபாயாக
      உயர்த்திக் கொண்டார்கள் என்று வைத்துக்கொண்டால் –
      வாராக்கடனின் சதவீதம் மொத்த முதலீட்டில், 8.33 % என்று
      குறைந்து விடும். எனவே வாராக்கடனின் சதவீதத்தை குறைப்பது
      ஒரு சாதனை தானே…!!!

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

        நன்றி அய்யா … ! மேலும் ……
        ஒரு சிலரின் பின்னூட்டங்களை இடுபவரின் பெயரை பார்த்தவுடன் { முன்னமே பலமுறை அவர்களின் பின்னூட்ட கருத்துக்களை படித்த அனுபவம் இருப்பதால் } — படிக்கவே தோன்றவில்லையே அது ஏன் …. ? அவர் இதைத்தான் கூறியிருப்பார் என்ற எண்ணமா … அரைத்த மாவையே அரைத்திருப்பார் என்ற தோன்றலா … ஒருதலைப்பட்சமா தான் இருக்கும் என்ற நினைப்பா ….? எது தான் காரணம் என்று ” அனுபவசாலியான ” நீங்கள் என்னைப்போன்றவர்களுக்கு விளக்குவீர்களா …. ?

  3. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    சரி. புரியுது, என் கிட்னி பாதுகாக்கப் படுமா இல்ல புடுங்கிக்குவாங்களா. தெரியலயே.

    இரண்டு கிட்னி வைத்துள்ள பக்தாஸ்களெல்லாம் கொடுத்து உதவலாம்ல.

    கொஞ்சம் உதவுங்களேன்பா.

  4. M. Syed's avatar M. Syed சொல்கிறார்:

    நான் என்னமோ 2000. ரூபாய் நோடடை எல்லாம் செல்லாக்காசாக்கி அதில் வரும் பணத்தை வங்கிகளுக்கு கொடுக்கபோறாரோ ஜெட்லி என்று பயந்துபோனேன். மக்களை ஏமாத்த இப்படி ஒரு வழி இருக்கா ? ரூம் பூட்டு யோசிப்பாங்களோ ? அமெரிக்கா மாதிரி வங்கி எல்லாம் திவாலாகி விடும் என்று ஒரு பேச்சு வருகிறதே உண்மையா யாரவது விளக்கவும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.