…
…


(இது என்னுடைய கற்பனை அல்ல… எங்கோ பார்த்தது…
பாராட்டுக்குரியவர், மிக எளிதாக விஷயத்தை விளக்கும் இந்த கருத்தை
முதலில் வெளியிட்டவர் தான்…! )
——————
மோடிஜி –
ஜிஎஸ்டி யை முதலில் அறிமுகப்படுத்தியது
காங்கிரஸ் தானே – டாக்டர் மன்மோகன் சிங் தானே….
ஏன் என்னை குறை சொல்கிறீர்கள்….?
டாக்டர் மன்மோகன் சிங் –
உண்மை. ஆனால், ஒரு டாக்டர் செய்ய வேண்டிய ஆபரேஷனை
கம்பவுண்டர் செய்தால் என்ன ஆகும்…?
அது தானே இப்போது ஆகி இருக்கிறது…
அதற்கு நானா பொறுப்பு…? – 🙂 🙂 🙂



கத்தி கைல இருக்குன்னு யார் வேண்டுமானாலும் ஆபரேஷன்
செஞ்சா என்ன ஆகும்னு ரொம்ப ஈஸியா புரிய வெச்சுட்டாங்க.
நண்பர்களுக்கு,
சில தீவிர பாஜக ஆதரவாளர்கள் நான் என்னவோ வேண்டுமென்றே மோடிஜிக்கு எதிராகத்தான் இப்படி எல்லாம் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று நினைத்து, அதை பின்னூட்டங்களிலும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். முன்னதாக டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சியில் அவரைப்பற்றி இந்த தளத்தில் எத்தகைய விமரிசனங்கள் முன்வைக்கப்பட்டன என்பதை நண்பர்கள் நினைவுபடுத்திக்கொள்ள ஒரு சாம்பிள் பார்க்க இதை க்ளிக் செய்யவும் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும் ஊழல்கள்/ தவறுகள் நிகழும்போதெல்லாம் அதை விமரிசனம் செய்ய இந்த தளம் என்றும் தயங்கியதில்லை என்பதை நினைவுபடுத்தவே இந்த சாம்பிள்…
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
மன்மோகன் சிங்கை எதிர்த்தேன் அன்று, மோடியை எதிர்க்கிறேன் இன்று என்கிறீர்கள். மகிழ்ச்சி
இதுபோலவே ……..தாங்கள் ஜெயலலிதாவை என்ன செய்தாலும் ஆதரித்தீர் அன்று. இனி அடுத்து ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் அவரை ஜெ போலவே அன்-கன்டிசனாலாக ஆதரிப்பீரா என உடன்பிறப்புக்கள் கேட்கிறார்கள்! 🙂
டாகடர் செய்யவேண்டிய ஆபரேஷனை கம்பவுண்டர் செய்ததன் பலனை பேஷண்டாகிய நாம் அனுபவிக்கின்றோம் … இதை சொன்னால் நாம் ஆண்டிஇந்தியனு சொல்லுவானுவ தேசபக்தாள்ஸ் …
மன்மோகன்சிங சொன்னது பொன்மொழி .
M. செய்யது
Dubai
கருத்துப்படம் நல்லாத்தான் இருக்கு. இருந்தாலும் இதைச் செயல்படுத்துபவர்கள் அதிகாரிகள்தான். முடிவு எடுக்க தைரியம் வேண்டும், அது மோடி அவர்களுக்கு மட்டும்தான் இருந்தது. Accountability நாட்டுக்கு நல்லதுதான். இதனால் வணிகர்கள் பாதிக்கப்படுகின்றனர் (வெளிப்படையாக கணக்கு இருக்கவேண்டும் என்பதால்) ஜி.எஸ்.டியால் நிச்சயம் முன்னேற்றம் ஏற்படும். ஆரம்பச் சிக்கல்கள் இருக்கும், ஆனால் இது நிச்சயம் நாட்டுக்கு நல்லது. (ஆனா அதுல indirectஆ மானிலங்கள் பாதிக்கப்படுகிறது. அதைத் தட்டிக்கேட்க ஆளே இல்லையே. ஏன்னா நம்ம நாடு என்பது மானிலங்கள் சேர்ந்த அமைப்பு. அமெரிக்கா போல்)
டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள், அவருக்குக் கைவந்த வேலையைப் பார்க்காமல், புகழுக்காக, சொந்த நலனுக்காக நாட்டை 10 வருடங்கள் காவு வாங்கினாரே. மற்றவர்கள் சூறையிட அனுமதித்தாரே… அவர் பொருளாதாரத்தில் புலியாக இருந்து நாட்டுக்கு என்ன பிரயோசனம்? HE DID NOT DELIVER ANYTHING WHAT HE WAS SUPPOSED TO DELIVER. ராகுல் மன்மோகன்சிங் முடிவை எதிர்த்து நான்சென்ஸ் என்று கிழித்துப்போட்டது ஞாபகம் வருகிறது. ஆனால் ராகுலுக்கு இந்த ஞானோதயம் வந்தது 9 1/2யாவது ஆண்டில்தான்.
//முடிவு எடுக்க தைரியம் வேண்டும்.
அது மோடி அவர்களுக்கு மட்டும்தான் இருந்தது. //
அநியாயத்துக்கு சப்பக்கட்டு கட்டறீங்களே தமிழன் அய்யா.
actual ஆ – முடிவெடுக்க மெஜாரிடி வேண்டும். அது காங்கிரஸ்
அரசுக்கு இல்லை. காங்கிரஸ் கொண்டுவந்தபோது பாஜக அப்போது இதை முற்றிலுமாக எதிர்த்தது. ஒங்க மோடிக்காக கதையையே மாத்தறீங்களே. யாருக்கும் பழசு தெரியாதுன்னு நெனைப்பா ?
// இது நிச்சயம் நாட்டுக்கு நல்லது. (ஆனா அதுல indirectஆ மானிலங்கள் பாதிக்கப்படுகிறது. //
இதுக்கு என்ன அர்த்தம் தமிழரே ? வடிவேலுவின் வரும் ஆனா வராது மாதிரி ?
மாநிலங்கள் பாதிக்கப்படும்னா, நாட்டுக்கு எப்படி நல்லது ?
மாநிலங்கள் இல்லாம தனியா நாடா ?
திரு இளங்கோ சொன்னதை வேறுவிதமாக இப்படி சொல்லலாம்.
என்ன மண்ணாங்கட்டி credibility இருக்கு இதுல.
கத்திய எடுத்து சிகிச்சை செய்ய சொன்னால் கொலை செய்வதற்கு பெயரா credibility.
வெங்காயம்.
நன்ப இளங்கோ,
Good going. Keep it up. I’ve not much time to spend with. Well done.
Accoutability என்று திருத்தி கொள்க.
ரூ13,50 ல் இருந்து ரூ 25 க்கு தாவிவிட்ட ரேஷன் கடை சர்க்கரை விலை … நுகர்வாேர் பாதுகாப்பு … நியாயமாக கிடைக்க வழி இதுதானா ….தெய்வமே…?
// மோடி அரசின் மொத்த சாதனையையும் சொல்ல இந்த ஒரு படம் போதும்! //
Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/film-maker-shirish-kunder-tweet-goes-viral-299912.html ..
பின்னால் நல்லது நடக்கிறதோ இல்லையோ …. தற்போது இந்த செய்தியில் உள்ள படத்தின் படி தேஷ் பக்தாள்களுக்கு பிடித்தமான ” ஒரு ஜீவனுக்கு ” பாதுகாப்பான ஒரு இடம் படுத்து இளைப்பாற கிடைத்துள்ளதே — நல்லது தானே …. அதுவே ஒரு வெற்றிதானே …. !!!
நன்றி பிரனீஷ்,
ATM – மாடு போட்டோ பிரணமாதம்…!!!
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
இந்த படத்தைதான் நான் போட நினைத்தேன் . நீங்கள் போட்டுவிட்டிர்கள் இதைவிட அருமையாக யாரும் சொல்லமுடியாது அந்த பாலிவுட் இயக்குனருக்கு நன்றி .
நன்றி நண்பரே..
M.செய்யது
Dubai
என்னமோ மன்மோஹன் கிழி கிழி என்று கிழித்தமாதிரி ஒரு கருத்து இந்த போட்டோவுக்கு!
ஏதோ என்னால் முடிந்த வரை நான் நாட்டை கெடுத்தேன். இதை மேலும் கெடுப்பது உங்கள் கையில் உள்ளது என்று மன்மோகன் சொல்வது போலவும், கவலையே படாதீங்க.. நான் பாத்துக்கறேன்.. என்று மோடி சொல்வது போலவும் உள்ளது!
மன்மோஹன் சிங் பற்றி அவருக்கு முன் இருந்த ரிசர்வ் வங்கி கவர்னர் சொன்னது என நினைக்கிறேன்.
He is an over-rated economist and under-rated politician!
“மாடு சாணம் போடறதுக்கெல்லாம் எங்க எஜமான் என்ன ஐயா செய்வார். ”
வருவாங்க இப்படி பின்னூட்டத்தோடு. இல்ல இப்படி கூட கேட்கலாம்,
“காங்கிரஸ் ஆட்சில மாடு சாணம் போடலயானு”
ஒரு சாம்பிரானியாவது கண்டிப்பாக வரும். நகைக்க தயாராகுங்கள்.
அறிவழகு, I don’t support any of the economic decisions of Modi. But Manmohan was not a saint either! I thought I made that clear!