…
…

…

நிர்வாணிகள் உலகில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்
என்று சொல்வார்கள்… மருத்துவம் என்றாலே பணம் பறிக்க
மிகச்சிறந்த ஒரு வழி என்றாகி விட்ட இன்றைய உலகில் –
சம்பாதிக்கத் தெரியாத – தப்பிப் பிறந்திருக்கும் ஒரு மருத்துவர் –
ஒரு ரூபாய் மருத்துவர் திரு.ராமமூர்த்தி ….
இவரை இங்கு அறிமுகப்படுத்தி வைக்க நான் கொடுத்து
வைத்திருக்க வேண்டும்…!!!
இந்த சமுதாயத்தில் இன்னமும் இந்த மாதிரி சிலரை விட்டு
வைத்திருக்கும் இறைவனுக்கு நன்றி….
( news 18 – tamil செய்தி தளத்திற்கும் நன்றி…)



தப்பிப்பிறந்தது அவரல்ல , நாம் ???????????????????????????
வருக அப்பண்ணசுவாமி,
நீண்ட நாட்களாயிற்று. உங்களைக்கண்டு.
இந்த மாதிரி இடுகை எதாவது வந்தால் மட்டும் தான் வருவது என்று தீர்மானித்திருக்கிறீர்கள் போலிருக்கிறது.
எல்லாரும் இவர் மாதிரி இருக்க வேண்டும் என்று நாம் சொல்லப்போனால், இந்த உலகம் நம்மை பைத்தியக்காரன் என்று சொல்ல ஆரம்பித்து விடும்.
அதனால் தான் துவக்கத்திலேயே ஆரம்பித்தேன் – “நிர்வாணிகள் உலகில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்” என்று…!
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Dr. ராமமூர்த்தி ஐயா அவர்கள் நீடுடி வாழ இறைவனிடம் வேண்டுகிறேன். நன்றி டாகடர் ஐயா தங்களது சேவை தொடரட்டும் …
தகவலுக்கு நன்றி ஐயா …
M.Syed
Dubai
இந்த பதிவில் மாயவரம் மருத்துவர் திரு . ராமமூர்த்தி ஐயா பற்றி முழு விவரங்கள் உள்ளன …mayavarathanmgr.blogspot.in/2016/11/blog-post.html?m=1
googleweblight.com/i?u=http://mayavarathanmgr.blogspot.com/2016/11/blog-post.html&grqid=Fn6Q0xxi&hl=en-IN. சரியான லிங்க்…
நன்றி பிரனீஷ்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
இவரைப்பற்றிய முழு விவரங்களை படித்த இடங்கள், உடன் படித்த நண்பர்கள் , அவர்கள் பணிசெய்த இடங்கள் பாேன்ற செய்திகளை
புகைப்படத்துடன் படத்துடன் இடுகையாக வெளியிட்டால் நண்பர்கள் அறியவும் அவர்கள் மூலம் பலரும் அறிய ஒரு வாய்ப்பாகும் …மேலும் தற்பாேது மருத்துவம் பயிலுபவர்களும் , பணியில் உள்ள மருத்துவர்களும் ” நாமும் இவரைப்பாேல இருக்கலாமே ” என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஒரு சிறு சல சலப்பை உண்டாக்கினால் … அதுவே பெரிய வெற்றிதான் திரு ராமமூர்த்தி அய்யா அவர்களுக்கு …செய்வீர்களா ….?
பிரனீஷ் – அவசியம் செய்யலாம்.
நண்பர்களுக்கு –
டாக்டர் ராமமூர்த்தி அவர்களைப்பற்றிய முழு விவரங்களையும் அறிய இதை க்ளிக் செய்யவும்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
salute
வாழ்க அவர் தொண்டு. அரிய தந்தமைக்கு நன்றி.
ஏழைக்கு இலவசமாக எழுத்தறிவித்தவனும், ஏழைகளுக்கு இதுபோல் மருத்துவ சர்வீஸ் செய்பவர்களும் வாழும் கடவுள்கள். யோசித்தால் நாம் ஒன்றுமே கொண்டுவரவில்லை ஒன்றுமே கொண்டுசெல்லப்போவதில்லை. நம் ஐடென்டிட்டியைக் காண்பிக்க நமக்கு 30-40 வருடங்கள் இருந்தாலே அதிகம். அதனை சேவை செய்வதற்கே அர்ப்பணித்துள்ள இவரைப்போன்ற பல மருத்துவர்கள் நோயாளிகளின், சமூகத்தின் வாழும் தெய்வம். கை கூப்பித் தொழுகிறேன்.
எவ்வளவு பணக்காரனாக இருந்தாலும் உடம்பு சரியில்லாமல் டாக்டரைப் பார்க்கப்போகும்போதுதான் நமக்கும் மற்ற எல்லா மனிதர்களுக்கும் வேற்றுமை எதுவும் இல்லை என்பதை உணர்ந்துகொள்ளமுடியும். அப்போது மருத்துவர் நம்மை நன்றாக கவனித்து நம் நலத்துக்காக அக்கறையாக பணி செய்யும்போதுதான் அவர்களைப் பற்றி, அவர்கள் சேவையைப் பற்றி நமக்குத் தெரியவரும், உணர முடியும். வாழ்க சேவை மனத்துடன் வேலை செய்யும் மருத்துவர்கள்.