…

மேற்கண்ட புகைப்படத்தில், குஜராத் முதல்வராக மோடிஜியும், தலைமை செயலாளராக திரு.ஜோதி அவர்களும்…!!!
…
1) இந்தியாவின் தலைமைத் தேர்தல் அதிகாரியானப்பட்ட
திரு.அசல் குமார் ஜோதி – குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்.
2) 23/01/1953 அன்று பிறந்தவர்….
3) கெமிஸ்ட்ரியில் – முதுகலை பட்டம் பெற்றவர்.
4) 1975-ஆம் வருட குஜராத் IAS cadre பிரிவில் பணியில் சேர்ந்தவர்…
5) 2013-ல் பதவியிலிருந்து IAS பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
6) திரு.மோடி அவர்கள் பிரதமர் ஆன பிறகு.. May 8, 2015, அன்று
திரு.ஜோதி தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
6) பிறகு ஜூலை,6, 2017 முதல் தலைமை தேர்தல் கமிஷனராக
நியமிக்கப்பட்டார்….
6) தேர்தல் கமிஷனுக்கு வரும் முன்னர் இவர் குஜராத் மாநிலத்தில்,
இப்போதைய பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், முன்னர் குஜராத்
முதலமைச்சராக இருந்தபோது –
அவரது நிர்வாகத்தின் கீழ், சுமார் 12 ஆண்டுகள் பணியாற்றி
இருக்கிறார். கீழ்க்கண்ட பதவிகளை வகித்திருக்கிறார்….
தலைமைச் செயலாளர் –
கூடுதல் தலைமைச் செயலாளர் –
பிரின்சிபல் செக்ரடரி – நிதியமைச்சகம் –
டைரக்டர் – சர்தார் சரோவர் நர்மதா நிகாம் –
விஜிலன்ஸ் கமிஷனர் –
தொழில் துறை செயலாளர் –
ரெவினியூ துறை செயலாளர் –
கெடா மாவட்டத்தின் (குஜராத்) – மாஜிஸ்டிரேட் மற்றும் கலெக்டர் –
கண்ட்லா துறைமுக ட்ரஸ்டின் தலைவர் –
– தற்போது குஜராத் மற்றும் ஹிமாசல் பிரதேச சட்டமன்ற தேர்தல்கள்
இவரது தலைமையில் நடக்கப்போகின்றன….
அவ்வளவு தான்….!!!
——————————————————————————-
என்ன அநியாயம்…
அவ்வளவு தானா கே.எம்.ஸார் என்று கேட்கிறீர்களா…?
பின்னர், வேறு என்ன எழுதுவேனென்று எதிர்பார்க்கிறீர்கள்…?
எல்லாவற்றையும் நான் எழுத வேண்டுமா என்ன …?
உங்களால் மேற்கொண்டு தெரிந்து கொள்ள முடியாதா,
யூகித்துக் கொள்ள முடியாதா என்ன…?
என் லிமிட் எனக்கு தெரியாதா…? அநாவசியமாக
முக்கியமான பதவிகளில் எல்லாம் வேண்டப்பட்டவரா என்று
கேட்கப்போய் –
முக்கிய பதவிகளில் –
வேண்டப்பட்டவரை நியமிக்காமல்
உங்களைப் போன்ற ஆசாமிகளையா நியமிக்க முடியும்..?
என்று நண்பர் புதியவன் போல யாராவது
பின்னூட்டத்தில் கேட்டாலும் கேட்பார்கள்… 🙂 🙂
எனக்கேன் வம்பு…!!!
எனவே – அவ்வளவு தான்……………………………………. இப்போதைக்கு….. !!!
—————————————————————————————
பின் குறிப்பு –
இன்னும் அட்லீஸ்ட் ஒரு செய்தியையாவது இப்போதைக்கு
சொல்லலாம்…. ஆனாலும், எனக்கு பயமாக இருக்கிறது…!!!
நண்பர் ஆவுடையப்பண்ணாவ் மாதிரி தீவிர பாஜக ஆதரவாளர்கள்
யாராவது வந்து, ” நீ தூக்கில் தொங்கு, ஆவியாக அலைந்து திரி”
என்றெல்லாம் சாபம் கொடுத்து விட்டால் என்ன செய்வது என்று பயம்.
இருந்தாலும் நண்பர்கள் நீங்கள் துணை இருக்கிறீர்கள் என்கிற
நம்பிக்கையில் ஒரே ஒரு செய்தியை சுருக்கமாக சொல்லி விட்டு ஓடியே
போய் விடுகிறேன்.
மேற்கண்டவர், 2013-லேயே குஜராத் அரசு பணியிலிருந்து ஓய்வு
பெற்று விட்டாலும் கூட,
அரசியல் சாசன பதவியான தேர்தல் கமிஷனர்
பொறுப்பை, மே 2015-லேயே ஏற்ற பிறகும் கூட –
அவர் ஓய்வு பெறுவதர்கு முன், குஜராத் அரசு பதவியில் இருந்தபோது, குஜராத் அரசு அவருக்கு ஒதுக்கீடு செய்த அரசு பங்களாவை குறைந்த பட்சம் அக்டோபர் 2016 வரை காலி செய்யவில்லை… (ஓய்வு பெற்று 3 ஆண்டுகளுக்கும் மேலாக….)
டெல்லியில் அவர் குஜராத் பவனில் தங்கிக்கொண்டு, அவரது
குடும்பம் குஜராத்தில் அந்த பங்களாவில் தங்கி வந்ததாக தெரிகிறது.
தான் தொடர்ந்து அந்த பங்களாவை வைத்துக்கொண்டிருக்க
அனுமதிக்குமாறு ( தேர்தல் கமிஷனர் ஆன பிறகும் கூட ) குஜராத்
அரசிடம் விண்ணப்பம் செய்து விசேஷ சலுகை பெற்று, தக்க
வைத்துக் கொண்டிருக்கிறார்… !!!
( பொதுவாக அரசியல் சாசன பதவிகளை வகிப்பவர்கள்,
மாநில அரசிடமோ, மத்திய அரசிடமோ, தனிப்பட்ட சலுகைகள் எதையும்
கோரவோ, பெறவோ – கூடாது என்பது விதி ….!!! )
——————————————————————————————-



K.M.sir,
Your way of writing is unique.
Wonderful style. You are able convey what you want to convey
in a very clear term, seriously and funnily at the same time.
I enjoy reading your articles particularly satirical ones like this.
Thank you for the interest, concern you have on the social set up
and the efforts you are putting in to address them.
அப்போ தலைவர் கிட்ட செயலாளரா இருந்தவர் தான்
இப்போ த.தே.கமிஷனர் – அடேயப்பா தலைவர் கில்லாடி சார்
கே.எம்.சார்,
மறந்துட்டேன் .
ஒங்க எழுத்து ஸ்டைலுக்கு ஒரு பிக் சல்யூட் சார்.
ஐயா
மிக சிறப்பாக எழுதுகிறிர்கள். வாழ்த்துகள்.
ஆனாலும் உங்களுக்கு பேராசைதான். நாளைக்கே அனைத்தும் மாறிவிட வேண்டும் என்று நினைக்கிறிர்கள்.
உண்மைதான். பல குறைகள் உள்ளன. நான் 2017 -ல் பி.ஜே.பி -க்குதான் ஓட்டு போட்டேன்
என்னை பொறுத்தவரை பி.ஜே.பி -க்கு ஓட்டு போடாதிருக்க இது போதாது. மிக விரைவாக சீக்கிரம் குறைகளை
கண்டுபிடித்து மிக ஆவேசமாக எழுதவும். ஏனெனில் 2019 விரைவில் வரவிருக்கிறது..
இதுபோல் எழுதுபவர்களை நீங்கள் மோடி பக்தர் என்று கிண்டல் செய்கிறிர்கள். பரவாயில்லை பெருமை படுத்துவதாகவே
எடுத்துகொள்கிறோம்.
மோடியும் மனிதர்தான். குறைகளுண்டு. ஆனால் என் பார்வைக்கு குறைகளைவிட நிறைகளே தெளிவாக தெரிகின்றன.
வேண்டுமானால் இவரைவிட நல்லவரை நீங்கள் காட்டும்பொழுது ஏற்றுக்கொள்கிறோம்
ஏனெனில் குறைகள் இல்லாத மனிதர்கள் இல்லை. உங்கள் மனவி, மக்களுக்கு நீங்கள் உண்மையாக நடந்திருந்தாலும்
உங்களை குறை சொல்ல சில கரணங்களாவது அவர்களுக்கு இருக்கும்.
உப்புக்கு வரி போட்டதேர்க்கே அன்றைய தலைவர்கள் போராடினார்கள் …இன்று வெட்கமில்லாமல் சாப்பா ட்டுக்கு 12% கொடுத்து விட்டு வருகிறோம் …வங்கியில் குறைந்த பேலன்ஸ் இல்லை என்று லட்சம் கோடிகளில் கொள்ளையடிக்கிறார்கள்…வராக் கடன் என அதே லட்சம் கோடியை தள்ளுபடியும் செய்கிறார்கள் …ஏழைகளிடம் புடுங்கி பணக்காணைக்கு தள்ளுபடியா …இன்னும் கோமணம் மட்டும் தான் பாக்கி …
உண்மைதான்…. இந்தியாவில் ஜனனாயகம் மக்களுக்கானதாக கடந்த 70 ஆண்டுகளாக இல்லை. இதே காலத்தில் சிங்கப்பூர், நியூசிலாந்து போன்ற பல்வேறு நாடுகள் நல்ல நிலையை அடைந்திருக்கின்றன. அதற்கு பெரிய காரணம் நாம், மக்கள். நாம் அறிவீனர்களாக இருப்பதால்தான் இந்திராவிலிருந்து பல்வேறு தலைவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம். தேர்ந்தெடுத்த மறு நாளிலிருந்து குறைகளும் சொல்கிறோம்.
நாம ஏன் கிராமப் பொருளாதாரம், நம் சமூக முன்னேற்றம் என்று சிந்திக்கக்கூடாது? ஏன் ஹோட்டலில் சாப்பிடவேண்டும்? ஏன் எளிமையாக இருக்கக்கூடாது? ஏன் ஆடம்பரத்தை விட்டொழித்து சாதாரணமாக இருக்கக்கூடாது? அப்போது இந்த ஜிஎஸ்டி போன்ற எதுவும் நம்மைத் தாக்காதல்லவா?
தமிழன் சாரின் சூப்பர் அட்வைஸ் :
//ஏன் ஹோட்டலில் சாப்பிடவேண்டும்? ஏன் எளிமையாக இருக்கக்கூடாது? ஏன் ஆடம்பரத்தை விட்டொழித்து சாதாரணமாக இருக்கக்கூடாது? அப்போது இந்த ஜிஎஸ்டி போன்ற எதுவும் நம்மைத் தாக்காதல்லவா?//
அதாவது காலுக்கு தகுந்த செருப்பு கிடைக்காவிட்டாலென்ன ?
ஏன் அநாவசியமா கடைக்காரரை குறை சொல்றீங்க ?
செருப்புக்கு தகுந்த மாதிரி கால் சைசை மாத்திக்குங்க… 🙂
Hello KM sir , you are building up a case even NDTV / India Today and the so called others have not picked up , so I wish you all the best so that these channels and English news paper picks up the story from you ( same way the Mersal team picked up your idea of Singapore , GST, Demonetization ) .. I wish SA. Chandraskehar gives more interviews – .
If a serving officer or holding a position after – occupies a bunglow in Gujarat , you see it as big conspiracy or favour , or that is what you are driving to say. But please note that , in Luyten’s area , so many of your favourite opposition leaders , their families ( one for the leader and another for a divorced wife ) , their cronies occupied bunglows – which was running into 3 digits – ( hundreds of houses )- but after Modi came to power , their number has come down to single digit. This is also one of his achievement to many of his achievements ( I can list the achievement , but then you would say – I am using your blog as propaganda tool – which I don’t want to do ) – you will immediately say I am diverting the issue. You yourself say , he stayed in Gujrat bhavan , so it means if he is entitled for a housing , he used it for a house in Gujarat , It’s a government office ( which you know better how it works , how things are noted , ) , so to keep a house , he must have made the necessary paper works , application – now only he is chief election commissioner , before 2017 , he was working under somebody .
Come on sir , please try hard , try to bring some better allegations of corruption – how much so ever you try hard , you will be able to come out like this kind innuendos only. All the best
கே.எம்.சார்,
எதற்கும் இனி எழுதும் இடுகைகளின் தலைப்பின் அருகிலேயே,
இது “அடிமை” மற்றும் “பக்தர்” களுக்கானது அல்ல.
அவர்கள் தயவு செய்து உள்ளே நுழைய வேண்டாம் என்று
கொட்டை எழுத்தில் போட்டு விடுங்களேன்.
why do you divert the topic , rather than answering to sundar raman.
Please provide some valid data, dont pull your KM.
Elango sir , I respect you also . Please come out with allegation, I will face you with facts – and the people understand what is the allegation, what is the fact and what is the hope ? who can help them to realize their hopes ….
மிஸ்டர் சுந்தர் ராமன்
பித்து பிடித்தவர்களுக்கு தான் உலகம் தெரியாது.
‘மோடிஜிபித்து ‘ பிடித்தவர்களுக்குமா ?
கே.ஏம்.சார் மாங்குமாங்கென்று இவ்வளவு எழுதி இருக்கிறாரே அது எதுவும் குறையாகவே தெரியவில்லையா ? அது என்ன
“Please come out with allegation, I will face you with facts ” ?
நான் வேறு புதுசாக எழுதணுமா ?
ஒன்று செய்யுங்கள் ; முதலில் நீங்கள் தமிழ் கற்றுக்கொண்டு தமிழில்
பின்னூட்டம் எழுதுங்கள். அதன் பிறகு உங்களுக்கு அடுக்கடுக்காக நான் விடுக்கிறேன் சவால்கள். கிண்டாமல் அல்வா திங்க முடியாது என்று
தெரியாதா உங்களுக்கு?
சுந்தர் ராமன்,
சிலருக்கு பார்வையே இருக்காது… பரிதாபத்திற்குரியவர்கள்.
சிலர் தூங்கிக்கொண்டே இருப்பார்கள் – தவறு இல்லை…
இன்னும் சிலர் பார்வை இருந்தும், எதையும் புரிந்துகொள்ளும்
சக்தியற்றவர்களாக இருப்பார்கள்…
சிலர் விழித்திருப்பார்கள்.. ஆனால் கண்களை மூடிக்கொண்டு
தூங்குவது போல் நடிப்பார்கள்…
சிலர் கண்ணெதிரே பார்த்துகொண்டே இருப்பார்கள்.. ஆனாலும்
அந்த காட்சி அவர்களுக்கு பிடிக்கவில்லை என்பதால் –
ஒன்றும் தெரியவில்லையே என்பார்கள்…
யார் எந்த category என்பதை வெளிப்படுத்தாமல் அவர்கள்
மறைத்தாலும்/ஒளித்தாலும், நெருங்கி, தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு புரியும் – அவர் எந்த category என்று.
—————————————
// Hello KM sir , you are building up a case even NDTV / India Today and the so called others have not picked up. so I wish you all the best so that these channels and English news paper picks up the story from you //
-இந்த தொலைக்காட்சிகள் கவனிக்கத் தவறியதை நான்
கவனித்து எழுதுவதில் உங்களுக்கு ஏன் வயிற்றெரிச்சல் ?
// same way the Mersal team picked up your idea of Singapore , GST, Demonetization //
மெர்சல் டீம் என்னிடமிருந்து இந்த ஐடியாவை பெற்றது
என்பது எனக்கு பெருமையா, அல்லது இழிவா…?
// It’s a government office ( which you know better how it works ,
how things are noted , ) , so to keep a house , he must have made the necessary paper works , application –//
அவர் அப்ளிகேஷன் போட்டாரா இல்லையா, தானாக அனுமதி
கிடைத்ததா அல்லது டெல்லியில் உள்ள Boss-யிடமிருந்து உத்திரவு வந்த பிறகு அனுமதி கிடைத்ததா என்பது பற்றி எல்லாம் உங்களுக்கு நிச்சயம் தெரியாது. அவர் தொடர்ந்து ஒரு வருடத்திற்கு மேல் அந்த
பங்களாவை வைத்திருப்பதை பார்த்து, சம்பந்தப்பட்ட இலாகா
அவருக்கு அழுத்தம் கொடுத்த பிறகு தான் அவரிடமிருந்து
அப்ளிகேஷனே போயிருக்கிறது. இந்த இழவுகள் பற்றியெல்லாம்
ஒன்றுமே தெரியாமல் – ஏன் வக்காலத்து வாங்க வருகிறீர்கள்.
//now only he is chief election commissioner , before 2017 , he was working under somebody //
-அடிமைத்தனத்தை தூர விலக்கி வைத்து விட்டு, முதலில் இடுகையை பொறுமையாக படியுங்கள்… பிறகு பின்னூட்டம் எழுத உட்காருங்கள்…
மேலே இடுகையிலேயே சொல்லப்பட்டிருக்கிறது –
” May 8, 2015, அன்று திரு.ஜோதி தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.” என்று….
தேர்தல் கமிஷனர் பதவியே constitutional post தான்.
HE WAS NOT WORKING UNDER ANYBODY….!
// Come on sir , please try hard , try to bring some better allegations of corruption – how much so ever you try hard , you will be able to come out like this kind innuendos only. //
ஒருவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றால், அவர் அதிக பட்சம் எவ்வளவு நாட்களுக்கு அரசு ஒதுக்கிய வீட்டை வைத்துக்கொள்ளலாம் என்பது உங்களுக்கு தெரியுமா…?
அந்த கால கட்டத்தில் அவர் எவ்வளவு வாடகை செலுத்த வேண்டும்
என்பது குறித்து எதாவது தெரியுமா…?
இவர் எப்போது, எவ்வளவு காலம் கழித்து, எப்படி, எவ்வளவு வாடகை செலுத்தினார் என்பது பற்றி உங்களுக்கு எதாவது தெரியுமா…?
போங்க சார்… போய் கொஞ்சம் விவரங்கள் எல்லாம் தெரிந்துகொண்டு,
கொஞ்சம் Homework பண்ணிவிட்டு பிறகு என்னை குறை சொல்ல வாருங்கள்.
பாஜக தீவிர அனுதாபி என்கிற ஒரு தகுதி மட்டும் போதாது.
நான் ஒரு இடுகையை எழுத எடுத்துக்கொள்ளும் முயற்சியில்
பத்தில் ஒரு பங்காவது உழைக்க வேண்டும் – அதில் உண்மையான
குறைகளை கூற முற்படும்போது…
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
KM Sir , some times the so called old people – making comments all the time like – all these politicians are to be asked to stand in a line , and has to be shot or only communists rule is the best ( meaning dictator ship ) ,or they have to be deported to some island , democracy is not good still some people , and some other group of people ( again old ) first decide so and so is bad , and they go find out reasons or assign reasons from their imaginations or make small issues and attribute to those people whom they don’t like . If some has a thinking like மருமகள் உடைத்தால் பொன்குடம் நான் உடைச்சது மண் குடம், you know what will happen. You know which category you belong to … which we as a readers decide, your claim or your statement is not final on that .
You have pre decided – if Modi says he has laid roads for 10,000 KM – you will pick up a road some remote corner or in some important place and say that , this road is bad and nothing has been done. If he says he has electrified 14,600 villages you will say that still 6,000 villages there is no electricity – though 14,600 represents more than 60% in the no of villages electrified in the last 3 years , for 60 years many roads were not build , villages not electrified.
What is the issue here , a IAS officer after retirement has not vacated his residence after retirement – and he got a constitutional position , so he makes a belated application to keep his house and he stays in Gujarat bhavan . What is the big issue here , corruption , nepotism, or accumulated property beyond means ? – he need to pay for the housing which as per you he has done it , although after reminders.
You know , what Karthik chithambram has done in foreign banks , and foreign countries – and you quote chithambram and I remember you even praised him for the knowledge or something I don’t remember . But you praised him, it is a different thing that , Modi still not went out behind PC /Karthik – and at times AJ’s action or inaction is very suspicious .
So be reasonable , fair , and assess the overall picture with choice available – don’t say that , I don’t like so and so , he must go , thought the alternative is more dangerous than the person you are asking to go. It will be a disaster , but still you would say , disaster is fine, but this person must go. I can’t understand the logic
மிஸ்டர் சுந்தர் ராமன்,
தமிழில் எழுதத்தான் வராது. ஆனால் படிக்க வரும் இல்லையா ?
கே.எம்.சார் இத்தனை எழுதி இருக்கிறாரே; உங்களால் ஏன் இது எதற்கும்
பதில் சொல்ல முடியவில்லை….?
//ஒருவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றால், அவர் அதிக பட்சம் எவ்வளவு நாட்களுக்கு அரசு ஒதுக்கிய வீட்டை வைத்துக்கொள்ளலாம் என்பது உங்களுக்கு தெரியுமா…?
அந்த கால கட்டத்தில் அவர் எவ்வளவு வாடகை செலுத்த வேண்டும்
என்பது குறித்து எதாவது தெரியுமா…?
இவர் எப்போது, எவ்வளவு காலம் கழித்து, எப்படி, எவ்வளவு வாடகை செலுத்தினார் என்பது பற்றி உங்களுக்கு எதாவது தெரியுமா…?
போங்க சார்… போய் கொஞ்சம் விவரங்கள் எல்லாம் தெரிந்துகொண்டு,
கொஞ்சம் Homework பண்ணிவிட்டு பிறகு என்னை குறை சொல்ல வாருங்கள்.//
இதைச்செய்ய முடியாதவருக்கு இங்கே வாதம் பண்ண என்ன தகுதி ?
மிஸ்டர் சுந்தர் ராமன்,
// some times the so called old people making comments all the time like –//
கே.எம்.சார் எழுதுவதைப்போல், ஒரே ஒரு இடுகையையாவது எழுத முடியுமா உங்களால் ? இங்கே ஒரு பின்னூட்டம் எழுதுவதற்குள்ளாகவே உங்களுக்கு மூச்சு முட்டுவதை பார்க்கிறோமே.
தமிழர் தானே நீங்கள் ? கொஞ்சம் முயற்சி எடுத்துக்கொண்டால் தமிழில்
பின்னூட்டம் எழுத முடியாதா ? அதைக்கூட செய்ய வக்கில்லாதவர்க்கு,
தெம்பில்லாதவருக்கு, மசாலா இல்லாதவருக்கு இந்த வயதிலும் ஆர்வத்துடன் ஒருவர் உழைப்பதை குறை கூற என்ன தகுதி இருக்கிறது ?
மோடி என்கிற பித்தமும் மோகமும் மண்டையில் ஏறி என்ன எழுதுகிறோம்
என்றே தெரியாத அளவிற்கு உளரச்செய்கிறதா உங்களை ?
முதலில் தமிழில் பின்னூட்டம் எழுத கற்றுக்கொண்டு விட்டு பிறகு
இங்கே வந்து எழுதுங்கள்.
Elango sir , I thought I have covered the question raised by KM sir , meaning yes there was a delay , and as per me ( or by many others ) this is not a big crime, yes he occupied the residence , and he has paid the dues once he was reminded ( or he was warned ) –
I think what we are discussing is not tamil writing skill – KM may be good in tamil but he uses the skill to abuse Modi ( I have noticed even he doesn’t blame BJP – Modi bashing is the main ) – so there must be something terribly wrong – why should you defame a person to such an extend ( only Congress or Mulayam or Yadav will talk about Modi – as they are the real sufferers of his raising popularity ) but why should KM Sir has to have such vengeance – except first you decide so and so is bad and then come up with your reasons, and he works hard to bring up these issues -.
எவ்வளவு ஆழம் என்று தெரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் கால்வைக்கும் கில்லாடி தமிழன் எங்கள் காமை ஐயா அவர்களுக்கு ஒரு மிகப்பெரும் மரியாதை சமர்ப்பணம். உங்கள் எழுத்தை ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக படிப்பவன் என்ற பட்சத்தில் உங்கள் பக்குவம் எங்கோ சென்று விட்டது. இதை நீங்கள் தன்னடக்கத்தால் இல்லை / போதாது என்று சொன்னாலும் சொல்வீர்கள். உங்கள் எழுத்துக்களை மிகவும் நகைச்சுவை உணர்வோடு அழுத்தமான கருத்தை கூறி ஓடி விடுகிறீர்கள். வாழ்க தமிழ்! வாழ்க உங்கள் தமிழ் எழுத்து அறிவு!
மிஸ்டர் சுந்தர் ராமன்,
கே.எம்.சார் ஏன் மோடிஜியை இப்படி எதிர்க்கிறார் என்று கேட்கிறீர்களே,
நீங்கள் ஏன் கண்மூடித்தனமாக மோடிஜியை ஆதரிக்கிறீர்கள் ?
டீமானடைசேஷன் என்கிற பெயரிலும், ஜிஎஸ்டி என்கிற பெயரிலும்
மக்களை வதைத்த கொடுமைகளையும், மதவெறியில் நாட்டின் ஒற்றுமையை
சிதைத்துக் கொண்டிருக்கும் செயல்களையும், பணமுதலைகளுக்கு ஆதரவாகவும்
பாமர மக்களுக்கு எதிராகவும் செய்ல்படுவதை எதிர்த்தும்
அவர் வயதுக்கும், அனுபவத்திற்கும், சிந்தனைக்கும் தோன்றுவதை அவர் செய்கிறார். அதை குறை கூற உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது ?
ஒரு தீவிர மோடிஜி வெறியர் என்பதைத்தவிர ?
உங்கள் மதவெறியும், கட்சி வெறியும் மோடி மோகமும் உங்கள் கண்களைக்கட்டி
இருப்பதற்கு நீங்கள் தான் வெட்கப்பட வேண்டும்.
மீண்டும் கேட்கிறேன் இந்த இடுகையில் பின்னூட்டம் போடவோ, கே.எம்.அவர்களை தனிப்பட்ட முறையில் தாக்கவோ உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. ஒரு பின்னூட்டம் கூட தமிழில் எழுத முடியாத உங்களுக்கு
அற்புதமான இடுகைகளை படைக்கும் ஒருவரை குறை கூற ஒரு தகுதியும் இல்லை.
கே.எம்.சாரின் பெருந்தன்மை உங்கள் பிதற்றல் பின்னூட்டங்களை எல்லாம் இங்கே இன்னமும் அனுமதித்துக் கொண்டிருக்கிறார்.
கே.எம்.சார்.
ப்ளீஸ். இந்த ஆசாமியின் உளரல்களை எல்லாம் இனியும் இங்கே அனுமதிக்காதீர்கள்.
சுந்தரராமன்,
நான் இயன்ற வரை என்னை கட்டுப்படுத்திக்கொண்டு, இதை நாகரிகமாக எழுத முயற்சிக்கிறேன்.
இந்த கட்டுரை தலைமை தேர்தல் கமிஷனர் என்பது ஒரு constitutional post. இதில் நியமிக்கப்படுபவர் நாட்டுக்கு நம்பிக்கையூட்டுபவராகவும், எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் நடுநிலையோடு செயல்படுபவராகவும், எவரைக்கண்டும் அஞ்சாமலும், without fear or favour, எவர் செல்வாக்குக்கும் உட்படாதவராகவும்
இருக்க வேண்டியது அவசியம் என்பதை விளக்கிச் சொல்கிறது.
இதில் பிரதமரின் மாமனையோ, மச்சானையோ கொண்டு வந்து உட்கார வைப்பது போலத்தான், அவருக்கு கீழே, அவரது ஆணைப்படி 12 ஆண்டுகள் வேலை செய்த ஒருவரை கொண்டு வந்து நியமிப்பது. இது முதல் தவறு.
தேர்தல் கமிஷனர் எந்த மாநில அல்லது மத்திய அரசின் தயவையும்
தனது சொந்த காரியங்களுக்காக எந்தவிதத்திலும் எதிர்பார்க்காதவராக
இருக்க வேண்டும். ரிடையர் ஆன இரண்டாவது மாதமே காலி
செய்திருக்க வேண்டிய வீட்டை இவர் 3 வருடங்கள் வைத்துக் கொண்டிருக்கிறார். அதற்கு பதிலாக, தனக்கு அந்த சலுகையை கொடுத்தவருக்கு சாதகமாகத்தானே இவர் நடந்து கொள்ள முடியும் ?
இது இரண்டாவது தவறு.
இந்த விவகாரங்கள் எல்லாம் வெளியே அதிகம் வெளிவராததால்
கே.எம்.சார் அதைப்பற்றீ எல்லாம் விவரமாக விளக்கி இந்த கட்டுரையை எழுதி இருக்கிறார். நீங்கள் இது எதுவும் புரியாத ஒரு மரமண்டையாக இருந்துகொண்டு இங்கு பின்னூட்டம் எழுத வந்தது மூன்றாவது தவறு.
கே.எம்.சாரைப்பற்றி தனிப்பட்ட முறையில் அவமரியாதையாக
எழுதியது அவரை மிகவும் மதிக்கும் எங்களையே அவமதிக்கும் விஷயம். உங்களுக்கு மோடி முக்கியம் என்றால், போய் தெருத்தெருவாக பஜனை பாடுங்கள். இங்கே அதை வைத்துக்கொள்ள வேண்டாம்.
வயதில் மூத்த, மரியாதைக்குரிய ஒரு பெரிய மனிதரை நீங்கள் மிக மோசமான
முறையில் அவமதித்திருக்கிறீர்கள். மதவெறியும், மோடிவெறியும் ஒரு படித்த மனிதனைக்கூட இந்த அளவுக்கு கீழ்மையாக நடக்கச் செய்வது கண்டு வருந்துகிறேன்.
நன்றி திரு இளங்கோ அவர்களே , மற்றும் திரு ராகவேந்திரா அவர்களே , நான் அறிவிலி தான் , மரமண்டை தான் , தமிழில் அவ்ளவாக எழுத தெரியாத மூடன் தான் . உங்களுக்கு மோடி பெரிய வில்லன் , ராட்சஷன் , எனக்கும் மற்றும் பெரும்பான்மையான மக்களுக்கு , ரட்சகன் தான் . உங்கள் கருத்து உங்களுக்கு , என்னோட கருத்து என்மட்டும் . பின்னூட்டம் போடுவது , உங்கள் குற்றச்சாட்டின் தன்மை பற்றியே ( பெரிய குற்றமா , சிறிய குற்றமா , ) அத்ற்கு பதில் எழுதும் பொழுது நீங்களோ அல்லது கா .மை சார் , என் கண்மூடித்தனத்தோயோ, அல்லது அதற்க்கு ஒரு மோட்டிவ் கற்பிக்கப்படும்பொழுது , நானும் அதையே செய்கிறேன் , இந்த செயலில் , கா. மை அவர்களுக்கோ அல்லது உங்களுக்கோ மனம் புண் பட்டு இருந்தால் , பெரிய மனது பண்ணி , என்னை மன்னிக்கவும் .
It is your right to ask K.M sir to refuse to put my comments , and it is perfectly fine for KM sir to accept your demands . As he said, and as lots of people says ….ONLY TIME WILL TELL .
We are surrounded by danger , ( neighbours ) , forces outside India ( to increase weapon sales, they will do any thing and /or destabilize our economic growth ) , and the internal wealthy and rich people ( for money , they can do anything ) , the fourth pillar ( press ) , third pillar court/ justice plus we have youth population quite easily attracted to in wanted things ….. under these circumstances , the task is enormous. And I am happy by the steps taken by PM to face these challenges , you feel he is pushing us to deeper miseries . Time will answer.
சுந்தரராமன்,
இவ்வளவு தூரம் வலியுறுத்திய பிறகு இப்போது தமிழில் எழுதினீர்கள் அல்லவா ? இந்த அளவுசிறிய முயற்சியோ, உழைப்போ கூட எடுக்க தயாராக இல்லாத நீங்கள், தன் சொந்த வலைப்பக்கத்தில் தன் கருத்துகளை எழுதி வரும் ஒரு பெரியவரை வெகு சுலபமாக வாய்க்கு வந்தபடி எல்லாம் தாக்கி எழுதினீர்களே ?
வலையில் எவ்வளவோ இடங்களில் மோடியையும், பாஜகவையும் சகட்டு மேனிக்கு குறை கூறியும், தாக்கியும், எழுதி வருகிறார்களே. அங்கெல்லாம்
உங்கள் பின்னூட்டங்களை காணவில்லையே ஏன் ? பயமா ? பாஜகவை குறை கூறுவதையே தவறு என்று அலையும் நீங்கள் இதை அவசியம் விளக்க வேண்டும்.
Thanks…I don’t put comments to all the blogs..I have been following KM sir for a very long time , I still feel that he would change his onslaught ….The kind of blogs u mentioned even you will not agree with them ( even KM sir )… I will wait for the day , he posts MODI’s achievements …time will answer . Plus I am not very active in blogs .My blog name is Trichisundar Blogspot.com …
சுந்தரராமன்,
கே.எம்.சார் ஏன் மாற வேண்டும் ?
மாற வேண்டியது நீங்களும் உங்களைப்போன்ற
மற்ற கண்மூடித்தனமான மோடிஜி/பாஜக தீவிர ஆதரவாளர்களும் தான்.
திறந்த மனதுடன் அனுபவப்பட்டவர்கள் சொல்வதை கேளுங்கள்,
சுயமாக சிந்தனை செய்து முடிவெடுங்கள்.
Thanks a lot from Mr.Elango and Mr.Raghavendra for supporting our respectful K.M.Sir
கா.மை.சார்… திரு.ஜோதி அவர்களின் பின்னணியைக் குறித்து எழுதியதற்கு பாராட்டுகள். இத்தகைய பின்னணி/முன்னணி கொண்டவரை ஆதரிக்க யாராலும் முடியாது.
ஆனால் இந்திய அரசியல் இந்திரா காந்தி காலத்திலிருந்து மிகவும் தாழ்ந்துவிட்டது. இந்தக் காலகட்டத்தில் நியாயமானவர்கள் என்பவர் அபூர்வம், அவர்களை வைத்துக்கொண்டு ஆட்சி செய்வதும் இயலாது (ஏகப்பட்ட வளைந்து நெளிந்து போகும் தன்மை, அரசியல் ரீதியாகச் செயல்படும் தன்மை போன்றவை நாட்டை வழி நடத்திச் செல்ல வேண்டியிருக்கிறது). இன்றைக்கு ஜோதி அவர்களின் appointment தவறு என்று தோன்றும். ஆனால் பிரதமர்/பாஜக அவர்க்ளுக்கு அவர்களுக்கு ஏற்ற டீம்தான் தேவையாக இருக்கிறது. இதில் எனக்கு பெரிய தவறு ஒன்றும் தோன்றவில்லை.
1993ல், சேஷன் அவர்கள் நியாயமாகச் செயல்பட்டபோது, நியமிக்கப்படுபவர்களுக்கே 2 மணி நேர நோட்டீஸ் கொடுத்து கில் மற்றும் கிருஷ்ணமூர்த்தியை நியமித்தவர்கள் யார்? ஒரு கமிஷனர் என்பதை மூவர் என்று அவசர அவசரமாக ஏன் மாற்றினார்கள். பழைய சிபிஐ தலைவர் என்ன என்ன கோல்மால்களில்ல் ஈடுபட்டார், ஜனாதிபதி பாலகிருஷ்ணன் அவர்கள் குவித்த சொத்துக்கள்…. இதுபோல பலப் பல அதிகாரிகள்/தலைவர்களை வளர்த்தது காங்கிரஸ். அதனால் பாஜக தனக்கு ஏற்ற தனக்கு நம்பிக்கையானவர்களை பதவிக்குக் கொண்டுவருகிறது. இந்திய அரசியலில் இதுதான் சாத்தியம்.
நான் ஒப்பிட்டுக்காட்டவில்லை. ஆனால் ஒப்பீடு செய்ய ஆரம்பித்தால், நீங்கள் மோடி அவர்கள், கடவுளைப்போல பெரிய நியாயவாதியாக இருக்கவேண்டும், மற்ற எல்லாக் கட்சிகளில் உள்ளவர்கள் எவ்வளவு மோசமானவர்களாக இருந்தபோதிலும், எத்தகைய தவறுகளை இத்தனை வருடங்களாகச் செய்துவந்திருந்தபோதிலும், மோடி அவர்கள் மட்டும் கடவுளாக இருக்கவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்பது தெரியவரும்.. எனக்கு அந்த எதிர்பார்ப்பு இல்லாததால் இவையெல்லாம் பெரிய ஏமாற்றங்களாகத் தெரியவில்லை.
இருந்தாலும், இத்தகைய பணி நியமனத்தை நேர்மையானவர்கள் (அப்படி இருப்பவர்கள் வெகு வெகு சிலர்) ஜஸ்டிஃபை செய்ய இயலாது.
புதியவன்,
//இன்றைக்கு ஜோதி அவர்களின் appointment தவறு என்று தோன்றும். ஆனால் பிரதமர்/பாஜக அவர்க்ளுக்கு அவர்களுக்கு ஏற்ற டீம்தான் தேவையாக இருக்கிறது. இதில் எனக்கு பெரிய தவறு ஒன்றும் தோன்றவில்லை.//
புதியவன், நீங்கள் இன்னும் ஒரு வார்த்தையும் சேர்த்திருக்கலாம்.
“சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை கூட மோடிஜி தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால், அவருக்கு ஏற்ற டீம் தான் தேவையாக இருக்கிறது.”
-first class justification.
உங்கள் தேவைக்கேற்ப நியாயத்தை கூட வளைத்துக் கொள்வீர்கள் – சரி தானே…?
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
வேண்டப்பட்டவரை நியமிக்காமல் உங்களைப் போன்ற ஆசாமிகளையா நியமிக்க முடியும்..? என்று நண்பர் புதியவன் போல யாராவது
பின்னூட்டத்தில் கேட்டாலும் கேட்பார்கள்…”
சார்… இந்த இடுகை மோடியைப் பற்றியது என்பதால் மாற்றுக்கட்சி, மாற்று எண்ணம் கொண்டவர்கள் கடுமையாக ஆதரிப்பர். ஆனால் மாற்றுக் கட்சிகள் ஆட்சிக்கு வரும்போது இதைவிட மோசமானவர்களை நியமிப்பார்கள். இதுதான் அவர்களின் கடந்தகால வரலாறு.
‘அமைச்சர்கள்’, ‘அதிகாரிகள்’ என்பதற்கான உண்மையான விளக்கமெல்லாம் நடைமுறையில் 60 ஆண்டுகளுக்கு மேலாக இல்லை.
நமக்கு பிடித்தவர் என்பதற்காக –
பதவியில் இருப்பவர் செய்யும் தவறுகளை
கண்களை மூடிக்கொண்டு ஆதரிக்க வேண்டிய அவசியம் நியாயமாக
நடுநிலையில் நின்று யோசிக்க வேண்டியவர்களுக்கு இல்லை.
அது இந்திராஜியாக இருந்தாலென்ன மோடிஜியாக இருந்தாலென்ன..?
Definitely people have not elected Modi and his team to follow the foot steps of the Congress Government. But the last three years we feel there is no much of differences between these two parties, and on top of that we have a cranky dictator announcing policies on the fly without even any protocols and there is a huge group to call him the one and only Nation’s Savior. Now itself, we started getting WhatsApp messages mentioning that if he is not getting his next term, for next 100 years no one will save India from its current mess. They comfortably forget the situation was not that worst even during the so called inefficient PM – Dr. MMS (2005 ~ 2014). Sorry to type in English but my tries to install the Tamil fonts are never successful and will soon get success and will write my posts in Tamil.