…
…

…
எதேச்சையாக சீன சர்க்கஸ் கலைஞர்களின் சாகசங்களை பிரமாதமான ஒரு வீடியோவில் பார்த்தேன்…
யூ ட்யூபில் ஏற்றினால் தான், வொர்ட் பிரஸ் ஏற்றுக் கொள்கிறது என்பதால், அதை யூ ட்யூபில் பதிவேற்ற என்னால் இயன்ற வரை முயற்சித்தேன்… ஊஹூம் – கூடவில்லை…!
இருந்தாலும், ஒரு முயற்சியை துவங்கிய பிறகு, அப்படியே விட்டுவிட்டு போய் விட மனம் வரவில்லை.
கீழே ஒரு அற்புதமான ரஷ்ய அக்ரோபாட் நிகழ்ச்சியை பாருங்கள் –
…
…
வீடியோவை பார்க்கும்போது, நம்ம ஊர் சர்க்கஸ் நிகழ்ச்சிகள் நினைவிற்கு வந்தன. 10-15 வருடங்கள் முன்பு வரை கூட இந்தியாவில் புகழ்பெற்ற சர்க்கஸ் கம்பெனிகள் பல இருந்தன. கமலா 3 ரிங் சர்க்கஸ், ஜெமினி சர்க்கஸ், பாரத் சர்க்கஸ் என்று நிறைய கம்பெனிகள்…
பெரிய ஊர்களில் எல்லாம் வருடத்திற்கு ஒருமுறையாவது சர்க்கஸ் கம்பெனிகள் வந்து ‘டேரா’ போடும்.. குழந்தைகளை முன்னிட்டு, பெரியவர்களும், கூட்டம் கூட்டமாக சென்று பார்ப்பார்கள்.
ஒரு ஊரில் இரண்டு, மூன்று மாதங்கள் கூட அவை தங்கும். குழந்தைகளுடன் சேர்ந்து சர்க்கஸ் பார்ப்பது ஒரு ஆனந்தமான அனுபவம்.
பபூன்கள் செய்யும் சேஷ்டைகள், ஒருவரையொருவர் காலை வாரும் கோமாளித்தனங்கள், மிருகங்களின் சாகசங்கள் –
நிமிடத்திற்கு நிமிடம் த்ரில், சிரிப்பு – ஒரே ஆரவாரமாக இருக்கும்…
இத்தகைய த்ரில் அனுபவங்களை சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் மட்டும் தான்
நேரிடையாக அனுபவிக்க முடியும்.
முட்டாள்தனமாக மத்திய அரசு (இப்போதைய பாஜக அரசு அல்ல… )
விலங்கினம் வதைக்கப்படுவதாகச் சொல்லி, ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை
விதித்ததாலும், பொதுமக்களிடமிருந்து போதுமான ஆதரவு
கிடைக்காததாலும், இந்திய சர்க்கஸ் கம்பெனிகள் கிட்டத்தட்ட அழிவு
நிலைக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டன…..
சர்க்கஸ் கலைஞர்கள் ஊக்கப்படுத்தப்பட வேண்டியவர்கள்.
மிகக்கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, மிகுந்த மனோதைரியத்துடன், உயிருக்கு ஆபத்தான பல நிகழ்ச்சிகளை நடத்தி –
கடினமான சூழ்நிலைகளில், குறைந்த வருமானத்தில் வாழும் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது நமது கடமை.
நான் எந்த ஊரில் இருந்தாலும், எந்த சர்க்கஸ் கம்பெனி முகாம்
இட்டாலும், குடும்பத்தில் உள்ள அத்தனை பேரையும் அழைத்துகொண்டு
போய், உயர்வகுப்பு டிக்கெட் வாங்கி, நம்மாலான ஆதரவை அவர்களுக்கு அளிப்பது வழக்கம். வயதில் மூத்த பல நண்பர்களுக்கும் இத்தகைய அனுபவம் இருக்கும் என்று நம்புகிறேன். ….!
முந்தைய தலைமுறையை சேர்ந்த நண்பர்கள் அனைவருக்கும் நிச்சயம்
ஜெமினி எஸ்.எஸ்.வாசன் அவர்களின் பிரம்மாண்டமான தயாரிப்பான
“சந்திரலேகா”வில் வரும் சர்க்கஸ் காட்சிகளை பார்த்த அனுபவம்
இருக்கும்…. பிரம்மாண்டமான முரசு நடனமும், சர்க்கஸ் காட்சிகளும்
சேர்ந்து, ஜெமினி நிறுவனத்தை நாடு முழுவதும் பிரபலப்படுத்திய
படம் அது.
…

…
நான்கு வருடங்களுக்கு முன் ரிலீசான திரு.ஆமீர்கான் நடித்த “தூம்-3” ஹிந்தி திரைப்படத்தில் சர்க்கஸ் காட்சிகள் மிக அற்புதமாக எடுக்கப்பட்டிருந்தன. கதை அமெரிக்காவில் நடப்பதாக சித்தரிக்கப்பட்டிருந்தது. எனவே, கிட்டத்தட்ட முழு படமும் அமெரிக்காவிலேயே எடுக்கப்பட்டது.
சிகாகோ நகரில் பல முக்கிய ஸ்டண்ட் காட்சிகளை வெளிப்புற படப்பிடிப்பில் எடுத்தார்கள். யாஷ் சோப்ரா அவர்களின் கம்பெனி மிகுந்த பொருட்செலவில் எடுத்த படம்.
அதன் படப்பிடிப்பு நேர்த்தியை மீண்டும் அனுபவிக்க விரும்பி, ( அடுத்த நாளே வெளியூர் போக வேண்டியிருந்ததாலும், அந்த அனுபவத்தை தவற விட விரும்பாததாலும் ) ஒரே வாரத்திற்குள் இரண்டாம் முறையும்அந்த படத்தை ஒரு பெரிய திரையரங்கத்தில் பார்த்தேன் நான்.
தூம்-3 படத்திலிருந்து சர்க்கஸ் அனுபவத்துடன் கூடிய ஒரு பாடல் நிகழ்ச்சியும், சிகாகோ நகரில் படம் எடுக்கப்பட்ட “making of the film” வீடியோவும் நீங்கள் ரசிக்க கீழே பதிவேற்றி இருக்கிறேன். –
…
…



சர்க்கஸ் என்ற வார்த்தை அப்பாேதெல்லாம் ஒரு ஆர்வத்தையும் சாகசங்களை காணவேண்டும் என்ற துடிப்பையும் அனைவருக்கும் ஏற்படுத்தும் ….பெரியடெண்ட் .. மிருகங்களை ஏற்றி வரும் கூண்டு வண்டிகள் .. கூடாரம் அமைக்கபடும் பாேதே வேடிக்கை பார்க்கும் மக்கள் .. ஊர்திகளில் விளம்பரங்கள் என்று களைக்கட்ட தாெடங்கி விடும் …
இரவில் கூடாரத்தில் ஒளிரும் விளக்குகள் … பக்கத்து ஊர்களில் உள்ளவர்கள் அறிந்துக் காெள்ள இரவில் காட்சி ஆரம்பிக்கும் முன் பல கி.மீ . தூரத்திற்கு வானில் ஒளிரும்படி அடிக்கப்படும் லைட்டின் வெளிச்சம் … ஆகா .. அனுபவித்தவர்களுக்கு தான் அது புரியும் …
சந்திரலேகா தவிர ” சிவாஜியின் குலமகள் ராதை … எம் .ஜி.ஆரின் பறக்கும் பாவை … கமலின் அபூர்வ சகாேதரர்கள் ” பாேன்ற தமிழ் சினிமாக்களிலும் … சர்க்கஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன ….
இன்று இந்தி திரையுலகில் முன்னனி நடிகராக உள்ள ” திரு . ஷாருக்கான் ஆரம்பக் காலங்களில் டி.வி. தாெடர்களில் நடிக்கும பாேது 1989 ல் அவர் நடித்த ” சர்க்கஸ் ” என்ற தாெடர் மிகவும் பிரபலம் … தூர்தர்ஷனில் இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பானது … இளம் வயது ஷாருக்கானை அனைவரும் அறிய உதவியது … தற்பாேது பலவித கெடுபிடிகளுக்கு உள்ளாகி சர்க்கஸ் காணாமல் பாேவது …வேதனையான … ஒன்று ….!!! நாங்கள் குடும்பத்தாேடு 2015 ல் புதுச்சேரியில் ” நியூ பாம்பே சர்க்கஸ் ” பாரத்தாேம் …மேலேயுள்ள தகவல்கள் எனது தந்தை திரு . பாமரன்செல்வராஜனின் மூலம் அறிந்தவை …!!!
மலரும் நினைவுகள்! கமலா த்ரி ரிங் சர்க்கஸ், ஈஸ்டர்ன் 4 போல் சர்க்கஸ், ஜெமினி சர்க்கஸ் இவை நான் பார்த்த பெரிய சர்க்கஸ் கம்பெனிகள்… மூர்மார்க்கெட் திடலில் ஆண்டுதோறும் பொங்கல் சமயம் நடக்கும்.. சிறப்பான பதிவு .
அகரம் http://agharam.wordpress.com
fantabulous