…
…
ஒரு இடுகைக்கான பின்னூட்டத்தில் நண்பர் புதியவன் அவர்கள்
எழுதி இருந்தார்…
// உங்களுடைய இடுகைகளில் மோடியைப் பற்றிய கருத்துக்கள்
பலவற்றை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.
‘நன்மையை மட்டும் கருதித்தான் அந்த முடிவை எடுத்திருக்கிறார்’
என்று நான் நம்புவதால்.
காலம்தான் எது சரி எது தவறு என்று காட்டும் என நினைக்கிறேன்.
அதுபோல, சில ‘மதச்சார்பற்ற சம்பந்தமான’ கருத்துக்களையும் நான்
ஏற்றுக்கொள்ளவில்லை.
———————————————————————————-
அவரது கருத்தும், அவருக்கு நான் தந்த விளக்கமும்
ஒரு பழைய இடுகையின் பின்னால் போய் விட்டதால், நிறைய
வாசக நண்பர்களின் பார்வைக்கு அது போய்ச்சேரவில்லை
என்பது தெரிகிறது. அந்த கருத்துகள் இன்னும் அதிகம் பேரின்
பார்வைக்கு செல்ல வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.
எனவே, அந்த விளக்கத்தை, அவசியமான, சில மாற்றங்களுடன் கீழே
தருகிறேன்….
இவை என்னுடைய சிந்தனைகள் மட்டும் தான். இவற்றை நான் எவர்
மீதும் சுமத்தவில்லை…இவையும் விவாதத்திற்கு உட்பட்டவை தான்…
நண்பர்கள் வழக்கம் போல் – இதன் மீதும் தங்கள்
கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம் / விவாதிக்கலாம்.
———————————————————————————
புதியவன்,
உங்கள் பின்னூட்ட கருத்துகளுக்கு நன்றி.
– நாம் எங்கே, ஏன் மாறுபடுகிறோம்
என்பது உங்களுக்கு தெரிகிறதா…?
என் பார்வையில் –
1) மோடிஜியின் முதலும், முக்கியமானதுமான குறிக்கோள்,
” தன்னையும், தன் கட்சியையும் promote செய்வது.
பாஜகவின் ஆதிக்கத்தை நாடு முழுவதும் விஸ்தரிப்பது –
அந்த கட்சியில் தன்னுடைய இருப்பை பிரதானமாக்கி
இருத்திக் கொள்வது. ”
இதற்குப் பிறகு தான் –
நாடு, நாட்டின் வளர்ச்சி, மக்களின் முன்னேற்றம்
எல்லாமே…. அதெல்லாம் குறிக்கோள் அல்ல என்று
சொல்ல மாட்டேன் – ஆனால்,
மற்ற எல்லாமே இரண்டாம் பட்சம் தான்.
தன் குறிக்கோளை அடைய அவர் பயன்படுத்திக் கொள்வது,
வளர்ச்சி நிரம்பிய செயல்பாடுகளை /சாதனைகளை என்றால் அதில்
கவலைப்பட அதிகம் இல்லை…
ஆனால், தன் குறிக்கோளை அடைய
அவர் பயன்படுத்திகொள்வது மக்களின் மத உணர்வுகளை…
அவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடிய விஷயங்களை…!
2) பல சமயங்களில் அவர் செயற்கையாக பேசுகிறார்…
தன் உரைகளில் நாடக பாவத்தோடு ஒரு உணர்ச்சி வசப்படுதலை
உருவாக்கிக் கொள்கிறார். இது இயற்கையானது அல்ல.
எதிரே இருப்பவர்களை வசப்படுத்த அவர் பயன்படுத்தும்
ஒரு tactics – தந்திரம்.
ஹிந்தி மொழி தெரிந்த,
ஆனால், பாஜக ஆதரவு நிலையில் இல்லாத –
பொது மனிதர்கள் தொடர்ந்து கவனித்தால்,
இதை புரிந்து கொள்ள முடியும்.
உங்களுக்கு ஹிந்தி தெரியாது என்பதால்,
அவர் உரைகள் எதையும் உங்களால் நேரடியாக புரிந்துகொள்ள
இயலாது என்பதால் – அவரை சரியாக எடைபோடும் திறனில் –
சிறிது குறை இருக்கலாம்.
அவரது வேடத்தை உணர்ந்து கொள்ள முடியாதவர்கள்
( உண்மையில் அவர்கள் தான் மெஜாரிடியினர்…) –
அவரது தேசபக்தியை பாராட்டி, இந்த தேசத்தை உய்விக்க
“வாராது வந்த மாமணி” என்று பரவசம் கொள்வார்கள்.
முந்தாநாள் அவர் குஜராத்தில் ஆற்றிய உரையை நான் live ஆக
பார்த்தேன். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களைப்போல்
மேடையில் நடித்துக் காண்பித்தார்… பேசிக் காண்பித்தார்…
ஒரு முறை அல்ல… இரண்டு முறை.
அதே போல் 26 ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்து விட்ட
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியையும் ‘இமிடேட்’ செய்து பேசிக்
காண்பித்தார்.
இரண்டு முன்னாள் பிரதமர்களையும் இவர் மேடையில்
ஏளனப்படுத்தினார்… அவமதித்தார்…
ஒருவரை குறை கூறுவது வேறு…. அவமதிப்பது வேறு..
நீங்கள் இந்த வித்தியாசத்தை நிச்சயம் அறிவீர்கள்…
இந்த நாட்டின் பிரதமர் –
பொது மேடையில் இவ்வாறு நடந்துகொள்வது
மிக மிகக் கேவலமான செயல்.
குஜராத் தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக,
எத்தகைய கீழ்நிலைக்கும் செல்லும்
அவரது செயலைக்கண்டு –
தீவிர பாஜக/மோடிஜி ஆதரவாளர்களைத் தவிர
மற்ற அனைவரும் அருவருக்கவே செய்வார்கள்.
3) குஜராத் பிரச்சாரத்தில் முந்தாநாள் சொன்னார்…
“நான் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது எனது பல
திட்டங்களுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
காரணம் குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லை…”
மே 2014-ல் இவர் பிரதமராக பொறுப்பேற்று 15 நாட்களுக்குள்ளாக,
நர்மதா நதியில் சர்தார் சரோவர் அணையின் உயரத்தை
அதிகரித்துக் கொள்ள மத்திய அரசின் அனுமதியை வழங்கினார்.
இதில் நான் தவறு எதையும் காணவில்லை.
ஆனால், இவர் தமிழ்நாட்டின் பிரச்சினையில் என்ன செய்தார்…?
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை ஆனால்,
கர்நாடகாவில் வரவிருக்கும் தேர்தலில் அந்த வாய்ப்பு இருக்கிறது என்பதால் –
கோர்ட்டில் விஷயம் நிலுவையில் இருப்பதால்
மத்திய அரசு தலையிடுவதற்கில்லை என்று முதலில் சொன்னவர்கள்,
சுப்ரீம் கோர்ட்டே காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும்படி
உத்திரவிட்டபோது –
இதில் உத்திரவிட சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை.
அந்த அதிகாரம் பாராளுமன்றத்திற்கு தான் இருக்கிறது என்று சொல்லி
முட்டுக்கட்டை போட்டார்.
-இதில் நியாயம் எங்கே இருக்கிறது…?
நல்ல நோக்கம் எங்கே இருக்கிறது…?
4) நான் – மனிதர்களை படிப்பதை (study of human behaviour )
ஒரு வகை ஆர்வத்துடன், பல வருடங்களாக மேற்கொண்டு
வருகிறேன்.
(இது face reading மாதிரி அல்ல..
வெவ்வேறு இடங்களில்,
வெவ்வேறு
சந்தர்ப்பங்களில்,
வெவ்வேறு சூழ்நிலைகளில், வெவ்வேறு மனிதர்களுடன் ஒருவர்
நடந்து கொள்ளும் விதத்தை ஆராய்வது …)
என்னால் இவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை…
இவர் காமராஜரை போலவோ,
லால் பகதூர் சாஸ்திரியை போலவோ
ஒரிஜினல் அல்ல…. இவர் ஒரு “போலி” என்பது என் கருத்து.
தான் உள்ள அளவும்,
டில்லியில் தன் அதிகாரம் கொடிகட்டிப் பறக்க வேண்டும்.
இந்தியா முழுவதும் –
அனைத்து மாநிலங்களிலும்
தன் பேச்சை சிரமேற்கொண்டு நிறைவேற்றக்கூடிய மாநில
தலைமைகள் இருக்க வேண்டும் –
இது தான் அவரது விருப்பம், லட்சியம் – குறிக்கோள் எல்லாமே…!
இதற்காக அவர் எந்த நிலைக்கும் போகக்கூடும்…
எதையும் செய்யக்கூடும்…
எப்போதும் அவர் பேசுவதை மட்டுமே பிறர் கேட்க வேண்டும்…
அவரை யாரும் கேள்வி கேட்பதையோ, விவாதத்திற்கு
அழைப்பதையோ விரும்ப மாட்டார் – அனுமதிக்க மாட்டார்.
இதற்கான தந்திரம் – பொதுக்கூட்டங்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும்
மட்டுமே பேசுவது… தனிப்பட்ட மீடியா சந்திப்புகளை, பேட்டிகளை
தவிர்ப்பது…! வெளியில் இவ்வளவு பேசும் ஒருவர், கடந்த
மூன்றரை ஆண்டுகளில், பாராளுமன்றத்தில் எவ்வளவு மணி நேரங்கள்
பேசி இருக்கிறார்… எத்தனை தடவை தொலைக்காட்சிகளுக்கோ,
நாளிதழ்களுக்கோ – பேட்டி கொடுத்திருக்கிறார்….?
இவையெல்லாம் எதை நோக்கி இட்டுச்செல்கின்றன…?
சரித்திரத்தை கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் –
ஜெர்மனியில் ஃபாசிஸ்ட் இயக்கம் எப்படி வளர்ந்தது என்பதை
பார்த்தால் – சரித்திரம் திரும்புகிறதோ என்கிற உணர்வு
ஏற்படத்தானே செய்யும்…?
இவற்றில் நல்ல நோக்கம் இருக்கிறதா…?
மோடிஜியின் செயல்பாடுகளின் விளைவை நான் கடந்த இரண்டரை
வருடங்களுக்கு மேலாக விமரிசித்து வருகிறேன். அநேகமாக, அந்த
பதிமூன்றரை லட்ச ரூபாய், சுயபெயர் பொறிக்கப்பட்ட கோட்டு, சூட்டை
அவர் பொது நிகழ்ச்சியில் அணிந்துகொண்டதில் துவங்கியதாக
இருக்கலாம்.
500-1000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக்கப்பட்ட போது,
நான் இதே தளத்தில் எழுதினேன்… இதன் உண்மையான நோக்கம்
பொதுநலத்திற்காக என்பதை விட …
உத்திர பிரதேச தேர்தல் வருகிறது. பாஜகவின் பணத்தை
பாதுகாத்துக் கொண்டு, எதிர்க்கட்சிகளின்
முதுகெலும்பான பணபலத்தை உடைப்பதற்காக என்று.
துவக்கத்தில் நீங்கள் உட்பட பலர்,
என் விமரிசனங்களை கடுமையாக எதிர்த்தனர்.
ஆனால், காலம் செல்ல செல்ல இப்போது,
அதில் பலர் உண்மையை உணர்ந்து ஒப்புக்கொண்டும்,
வெளிப்படையாக பேசிக்கொண்டும், எழுதிக்கொண்டும் வருகின்றனர்.
உங்கள் பின்னூட்டங்களினூடேயே கூட
சில சமயங்களில் நான் அதைப் பார்க்க முடிகிறது.
எனக்கு மட்டுமல்ல, என்னைப்போன்ற கட்சிசார்பற்ற பலருக்கும் –
இந்த தேசத்தின் வளர்ச்சியும், ஜனநாயகத்தின் தொடர்ச்சியும்,
மக்களின் நிம்மதியான வாழ்வும் தான் முக்கியம்.
அது எந்த கட்சியாக இருந்தாலென்ன…?
எந்த தலைவராக இருந்தாலென்ன…?
யாருடைய சுயநலத்திற்காகவோ –
நாம் ஏன் எவருக்கும், எந்த குறிப்பிட்ட கட்சிக்கும்
அடிமையாக இருக்க வேண்டும்…?
இந்த நாட்டின் நலனில் அக்கறை இருப்பவர்களுக்கு –
தலைவரோ, கட்சியோ – அது யாராக இருந்தாலும்,
எதாக இருந்தாலும் முக்கியம் இல்லை.
நாட்டுக்கு உண்மையாக உழைப்பவர்கள் தான் தேவை.
இந்த நாடு என்பது குஜராத் மட்டுமல்ல….
மத்திய அரசில், தேர்தல் கமிஷன், சிபிஐ, பி.எம்.ஓ. என்று
பல முக்கியமான இடங்களில் குஜராத்தியரை கொண்டு
நிரப்புவது ஏன்…? இது எதைக்குறிக்கிறது…?
இவற்றில் எல்லாம் நீங்கள் சொல்லும்
அந்த “நல்ல நோக்கம்” இருக்கிறதா…?
—————————————————————————–

…
// சில ‘மதச்சார்பற்ற சம்பந்தமான’ கருத்துக்களையும் நான்
ஏற்றுக்கொள்ளவில்லை. //
இதில் என் கருத்து –
” மதங்களுக்கிடையே போர் மூண்டால்
அதற்கு முடிவே இருக்காது….
நாம் கடந்து வந்த பாதையே, சரித்திரமே அதற்கு சான்று…
மதவெறியால் ஏற்படும் கடுமையான விளைவுகளை
ஒன்றுமறியாத அப்பாவி மக்களே அனுபவிக்க நேரிடுகிறது….
எல்லையற்ற துன்பங்களை
பெண்களும், குழந்தைகளும் எதிர்கொள்ள நேரிடுகிறது.
என் பார்வையில்-
” என் மதம் தான் உசத்தி – உன் மதம் மட்டம் ”
என்று சொல்பவர்கள் -ஒன்று மூர்க்கர்கள் அல்லது சுயநலவாதிகள்.
உலகில் அமைதியும், சமாதானமும் நிலவ ஒரே வழி,
அவரவர் சார்ந்த மதங்களில்,
அவரவர் விரும்பும் பாதையில் போக
அனைவரையும் அனுமதிக்க வேண்டும்.
ஆயிரம் மதங்கள் கூட
இங்கு பிணக்கு இல்லாமல் நிச்சயம் வாழ முடியும்.
அதற்கான மனம் இருந்தால் போதும்.
அதற்கு – மக்கள் மனதை விஷமாக்கும் அரசியல்வாதிகளையும்,
மத வெறியர்களையும் தனியே அடையாளம் கண்டு –
ஒதுக்க வேண்டும்… அவர்களை அடக்க வேண்டும்.
மத விஷயங்களில் அரசியல்வாதிகளின் தலையீடு,
அது எந்த மதமாக இருந்தாலும் சரி – அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்.
மதவாதிகள் என்பவர்கள் –
தங்களது மதம் சார்ந்து செயல்படுபவர்கள்.
வெவ்வேறு மதங்கள் காட்டும் வழியும்,
பயணிக்கும் பாதைகளும் –
வெவ்வேறாக இருந்தாலும் கூட
அனைவருக்கும் சேர்த்து –
இறைவன் ஒருவனாகத்தான் இருக்க முடியும்.
அனைவரின் குறிக்கோளும், பயணமும் அவனை நோக்கியே –
என்கிற நிலையில் இருப்பவர்களை ஆன்மிகவாதி என்று சொல்வர்.
நான் இந்து மதத்தை சேர்ந்தவன் தான் …
ஆனால், நான் மதவாதி அல்ல… ஆன்மிகவாதி.
என்னால் எல்லா மதங்களையும்,
எல்லா மதங்களை சேர்ந்தவர்களையும்
நேசிக்க முடியும், முடிகிறது.
எவ்வளவுக்கெவ்வளவு அதிகம் பேர் இத்தகைய நிலைக்கு
வருகிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு, உலகில் அமைதியும்,
சமாதானமும் நிலவும்.
அவசரமே இல்லை.
நிதானமாக யோசித்துப் பாருங்கள்…அதன் பிறகும்,
நான் சொல்வதில் உங்களுக்கு ஏற்பில்லை என்றால் –
விட்டு விடுங்கள்….. காலம் மாறும்…!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்



அன்புள்ள கா.மை. சார்…
உங்கள் விளக்கத்தை அங்கு படித்தேன். இங்கு இன்னமும் விரிவாக எழுதியிருக்கிறீர்கள்.
1. “எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடிய விஷயங்களை” – இருக்கலாம். அதில் நான் பெரிய தவறினைக் காணவில்லை. நான் ஒருவரை மட்டும் பார்க்கவில்லை. அந்தத் தளத்தில் மற்ற எல்லா அரசியல்வாதிகளும் எப்படி இருந்தார்கள், அவர்களுக்குக் கிடைத்த ஆதரவு என்ன என்பதையும் பார்க்கிறேன். தமிழகத்தில் ‘விஷக் கிருமிகள்’ என்று அழைக்கப்பட்டவர்கள் உபயோகப்படுத்தின ஆயுதம்தானே. இந்திய அரசியல், கட்சியைவிட, தனிப்பட்ட தலைவருக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து இயங்கியிருக்கிறது.
2. “இரண்டு முன்னாள் பிரதமர்களையும் இவர் மேடையில் ஏளனப்படுத்தினார்… அவமதித்தார்…” – இதைப் பார்த்ததில்லை (கேட்டதில்லை) ஆனால் படித்திருக்கிறேன். இதேபோல் அமெரிக்காவிலும் ராகுல் காந்தியைப் பற்றி ஏளனமாகப் பேசினார் என்றும் படித்தேன். இது தலைவருக்கான குணம் அல்ல. மோடி அவர்கள் தேர்தல் களங்களைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் பாரதத்தின் பிரதமர். தேர்தல் களங்களிலும் அவர் ‘பிரதமர்’ என்ற நிலையிலிருப்பதை மறக்கக்கூடாது. இந்த மாதிரி ஏளனப்பேச்சை யாரும் விரும்பமாட்டார்கள். ரசிக்கவும் மாட்டார்கள். மோடி அவர்களின் ஸ்டேடஸுக்கு இது உகந்தது அல்ல. உங்கள் கருத்தை ஏற்கிறேன். ‘மோடி’ என்பவரை, மற்ற சாதாரண அரசியல்வாதிகள் போல், மக்கள் நினைக்கவில்லை என்பதால், அவர் இதில் மாறவேண்டும். (சாதாரண அரசியல்வாதிகளில் மன்மோகன் சிங், கருணானிதி, ராகும் போன்றவர்களுக்கு நிச்சயம் இடம் உண்டு)
3. “தமிழ்நாட்டின் பிரச்சினையில் என்ன செய்தார்…?” – குறிப்பிடத்தக்க விதமாக எதுவுமே அவர் செய்யவில்லை. TANGIBLEஆ எதுவுமே செய்யலை. மோடி அவர்கள் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். கருணானிதி எந்த மானிலத்தைச் சேர்ந்தவர்? ஜெ. அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது 2009ல் அவருக்கு எந்த உதவியும், மின்சார உதவி முதற்கொண்டு, வரவிடாமல் செய்தவர் அல்லவா? அதற்கு காங்கிரஸும், அதற்கு முன்னால் வாஜ்பாயும் துணைபோனார்களே. சரி… காங்கிரஸ் தமிழகத்துக்கு என்ன செய்தது? கடைசியாக இந்திரா அவர்கள் சேலம் உருக்காலை அமைத்ததற்கு அப்புறம் காங்கிரஸ், நமக்கு என்ன செய்தது? அதனால் 3 வருடங்களுக்குள் மோடி தமிழகத்துக்கு மட்டும் ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்வது சரியான கருத்தாக இருக்காது. அதே சமயம், 50 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகம் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுகிறது, தமிழகத்துக்கு நியாயம் எதிலுமே கிடைக்கவில்லை என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இதற்கான பங்களிப்பை பெரும்பாலும் (தமிழகத்துக்கு நீதி கிடைக்காததற்கான) திமுகவும்/கருணானிதியும்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
4. PARLIAMENTARY ACCOUNTABILITY -நீங்கள் சொல்வது சரிதான். மோடி அவர்கள் முக்கியமான எந்தப் பிரச்சனையிலும் தன்னுடைய கருத்தை ஓங்கி ஒலிக்கவில்லை. வெளிப்படைத் தன்மையும் இல்லை. இதற்கு நான் பல உதாரணங்களைக் கொடுக்கமுடியும். மோடி அவர்களின் எண்ணம் என்ன என்பது எதிலுமே வெளிப்படவில்லை. OWNERSHIP OF DECISIONம் நான் அறிந்தவரையில் அவர் எடுத்துக்கொள்ளவில்லை.
“முக்கியமான இடங்களில் குஜராத்தியரை கொண்டு நிரப்புவது ஏன்” – தன்னுடைய நம்பிக்கையைப் பெற்றவர்களைக் கொண்டு அவர் அரசை நடத்த முற்படுகிறார். கடந்த 15-20 ஆண்டுகளுக்குமேல் காங்கிரஸ் பார்வை கொண்டவர்கள் ஆக்கிரமித்த முக்கியப் பதவிகளைத் தன்னுடைய நம்பிக்கைக்குரியவர்களாகக் கருதுபவர்களைக்கொண்டு நிரப்புகிறார். இது பிறகு மாறும் என்று நினைக்கிறேன். இதில் நான் பெரிய தவறேதும் காணவில்லை. மற்றவர்கள் எல்லோரும் இப்படி நடந்துகொண்டதற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் சொல்லமுடியும்.
5.”மதவெறியால் ஏற்படும் கடுமையான விளைவுகளை
ஒன்றுமறியாத அப்பாவி மக்களே அனுபவிக்க நேரிடுகிறது” – இதில் உங்கள் கருத்து முற்றிலும் உண்மை. அதற்கு மாற்றாக எழுதமுடியாது. IDEAL SITUATIONல் உங்கள் கருத்தே என்னுடைய கருத்தும்.
ஆனால், இப்போதைய இந்தியாவில், இப்போது நடப்பதை நான் கொஞ்சம் அதிகமாக அறிந்திருக்கிறேன் என நினைக்கிறேன். இதைப் பற்றி வெளிப்படையாக எழுதுதல் கடினம். ஆனால், நான் மோடி/பாஜக செல்லும் பாதையை முற்றிலுமாக ஆதரிக்கிறேன். அதே சமயம், மூடத்தனமான ஓவாயிஸ் போன்ற தீக்கங்குகளை உதிர்க்கும் பலரின் (ஹெச்.ராஜா, உ.பி மானில அரசியல்வாதிகள் போன்றோர்) கருத்துக்களை வெறுக்கிறேன். இந்துக்களைப் பாதுகாப்பது என்பதற்கு அர்த்தம், அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதும், மதத்தின் பெயரால் நடக்கும் அநியாயங்களைக் களைய முயற்சிப்பதும், ‘இந்து’ மதம் அழியாமல் காப்பதும்தான், மற்ற மதத்தினரைப் பற்றி வெறுப்புணர்வு கொள்ளச் செய்யும் பேச்சல்ல என்பதைத்தான் நான் நம்புகிறேன். இந்திய அரசியல் ‘மத’ அரசியலாகி பலப் பல வருடங்களாகிவிட்டன (60-70 வருடங்கள்). அதனால் ‘இந்து மதம்’ என்று பேசுவது தவறு என்று சொல்வதைத்தான் தவறென நினைக்கிறேன். அதே சமயம், மக்களுக்க அத்தியாவசியம், ‘உணவு/உடை’, ‘நிம்மதியான வாழ்வு’, அதற்கு அப்புறம்தான் மதம். இதனை பாஜக/மோடி அவர்கள் உணர்ந்திருப்பார் என நினைக்கிறேன்.
நீங்கள் இதனைத் தனி இடுகையாகப் போட்டுள்ளது எனக்கு மகிழ்ச்சிதான். வளர்க உங்கள் நோக்கம்.
// மோடி அவர்கள் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். கருணானிதி எந்த மானிலத்தைச் சேர்ந்தவர்? ஜெ. அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது 2009ல் அவருக்கு எந்த உதவியும், மின்சார உதவி முதற்கொண்டு, வரவிடாமல் செய்தவர் அல்லவா? //
– மோடிஜி, கருணாநிதிஜியுடன் ஒப்பிடும் அளவிற்கு தான் செயல்பட்டார் என்றால், அவரிடம் எந்த “நல்ல நோக்கத்தை” கண்டு தலைமேல் தூக்கிக்கொண்டு ஆடுகிறார்கள்…?
தானாகத்தான் எந்த உதவியையும் செய்யவில்லை சரி….
தமிழகத்திற்கான தன் கடமையை செய்ய வேண்டிய நேரம் வந்தபோது கூட
தட்டிக்கழித்ததை எதில் சேர்ப்பீர்கள்…?
பல வருடங்களாக தமிழகத்திற்கு நியாயம் கிடைக்காமல் இழுத்தடித்துக்கொண்டு வந்த காவிரி பிரச்சினையில், ஒருவழியாக சுப்ரீம் கோர்ட்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்லி உத்திரவு
போட்டபோது, கர்நாடகாவில் தன் கட்சி ஜெயிக்க வேண்டும் என்பதற்காக, பிரதமர் பதவியில் இருந்தவர் எல்லாருக்கும் பொதுவாக நின்று நியாயம் செய்ய வேண்டியது தன் கடமை என்று நினைக்காமல், சுயநலம் காரணமாக தமிழகத்திற்கு துரோகம் செய்தவரின் செயலில் என்ன “நல்ல நோக்கத்தை” கண்டீர்கள்…?
“தலைமேல் தூக்கிக்கொண்டு ஆடுகிறார்கள்…?” – நான் ஆடவில்லை. ஆனால் இந்தியாவில் ‘கருத்துச் சுதந்திரம்’ இருப்பதால், ஒவ்வொருவருக்கும் ‘ஆதரவுத் தளம், அதிலும் பல அரசியல்வாதிகளுக்கு கண்மூடித்தனமாக ஆதரிக்கும் ஆதரவுத் தளம்’ உண்டு. அவர்களால் உண்மையை அறிய முடியாது. அவர்கள் தான் நம்புவதே உண்மை என்று எண்ணுபவர்கள்.
“சுயநலம் காரணமாக தமிழகத்திற்கு துரோகம் செய்தவரின் செயலில்” – செய்யாத ஒரே ஒருவர் இராமகிருஷ்ண ஹெக்டே அவர்கள். எம்ஜியார் அவரைச் சந்தித்துப் பேசியதும், பிறருக்குத் தெரியாமல் தண்ணீர் திறந்துவிட்டார்.
எந்த அரசியல்வாதியும், எந்தக் காலத்திலும் ‘காவிரி’ விஷயத்தில் தமிழகத்துக்கு நியாயம் செய்ய முடியாது. இதை நீங்கள் கல்வெட்டில் பொறித்துக்கொள்ளலாம். தமிழகம் முழுமையாக காங்கிரஸ் தளமாகவோ அல்லது பாஜக தளமாகவோ ஆனாலொழிய, எந்த மத்திய அரசும் ‘நடிக்குமே’ தவிர, தமிழகத்துக்கு நியாயம் வழங்காது. இதில் மோடி, சோனியா என்ன யாருமே ஒன்றும் செய்ய இயலாது.
இதைப் பற்றி வெளிப்படையாக எழுதுதல் கடினம். ஆனால், நான் மோடி/பாஜக செல்லும் பாதையை முற்றிலுமாக ஆதரிக்கிறேன். -> வெளிப்படையா எழுத எது தடுக்கிறது ??
மேகாவிராஜ் – எழுதுதல் இயலாது. Sorry. ஆனால் உண்மையாக நடக்கிறது.
அய்யா …! இன்றைய இடுகையை படித்தேன் — எப்போதோ வந்திருக்க வேண்டியது – கால தாமதமாக வந்தாலும் – உங்களின் ” உள்மனம் ” உண்மையை எடுத்தியம்பியதற்கு எனது பணிவான வணக்கங்கள் …. நாட்டு நலனில் அக்க்கறையுள்ளவர்களுக்கு உங்களை போன்ற ” நாடு நிலையான ” பார்வை … ஆனால் மதம் — தலைவன் என்று ஒரே பார்வையில் இருப்பவர்களுக்கு எவ்வளவு சொன்னாலும் – புரியாது — புரிந்து – தெரிந்துக் கொள்ளும் விருப்பமும் அவர்களுக்கு இருக்காது ….
விருப்பமான மதம் — ஜாதி — தலைவன் — அவரது அரசால் தான் ஆளப்படுவது – தனக்கு ஒரு பாதுகாப்பும் – மகிழ்ச்சியும் அளிக்கிறது என்று எண்ணுகிற ஒரு வாக்கு வங்கி கூட்டம் இருக்கும்வரை அரசியல்வாதிகள் – அமைச்சர்கள் போன்றவர்களுக்கு எந்த கவலையும் இல்லை என்பதுதான் நிதர்சன உண்மை …..
ஆரம்பத்தில் ஒருகட்சி என்று நிலைப்பாடு கொள்ளும் போது — அந்தக்கட்சிக்காக பலவித போராட்டம் – கிளர்ச்சி – கைது – மக்கள் பிரச்னை பற்றி மாய்ந்து – மாய்ந்து பரப்புரை என்று திரிபவர்களுக்கு — ஆட்சி , அதிகாரம் , பதவி என்று கிடைத்தவுடன் …..
தன்னை அவமதித்த அதிகாரிகள் தற்போது கைகட்டி – வாய் பொத்தி அடிபணிவது , தன் கட்டளையை சிரமேற்கொண்டு செய்ய காத்துக்கிடப்பது போன்றவை ஏற்படுத்தும் ” பதவி போதை ” — அது தலைக்கேறி ஒரு மயக்கத்தையும் — அகங்காரத்தையும் கொடுத்து ” தான் தான் அனைத்தும் ” என்ற எண்ணத்தை பெற்று , மக்கள் விரோத போக்கில் செலுத்துகிறது என்பது தான் — நடைமுறை இதில் யாரும் விதி விலக்கல்ல … எதார்த்தத்தை எடுத்துக் கொள்வதிலும் — ஒருவித வேற்றுமையை காட்டும் நபர்களுக்கு என்ன சொல்லி என்ன ஆகப்போகிறது ….
நேற்றைய எனது பின்னூட்டத்தில் : — //அவதாரங்களில் மிகச் சிறந்தவராகிய பகவான் ஸ்ரீகிருஷ்ணர் செல்கிறார்.:– “எந்த மனிதரிடமாவது அசாதாரண ஆன்மீக சக்தி வெளிப்படுமானால் அங்கே நான் இருக்கிறேன் என்பதை அறிந்து கொள்” // என்று …. இதைவிட மத நல்லிணக்கத்திற்கு வேறு யாரால் கூற முடியும் …. ! ஸ்ரீ கிருஷ்ணர் கூறுவதை தற்காலத்தில் கடைபிடித்தால் வேற்றுமைகள் களையப்படும் …. !!! பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியதை அடிப்படையாக கொண்டு தாங்கள் கூறியுள்ள : — // நான் இந்து மதத்தை சேர்ந்தவன் தான் …
ஆனால், நான் மதவாதி அல்ல… ஆன்மிகவாதி.
என்னால் எல்லா மதங்களையும்,
எல்லா மதங்களை சேர்ந்தவர்களையும்
நேசிக்க முடியும், முடிகிறது. // என்பதுதான் ” மத நல்லிணக்கம் — மனிதநேயம் ” …. எது எப்படியோ ” என் கடன் பணி செய்து கிடப்பதே ” என்கின்ற உங்களின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது – என்பதில் சந்தேகமில்லை …. !!!
….
ஐயா ,
மோடி அதை சாதித்தார், இதை சாதித்தார் என்று பொய் விளம்பரம் தான் நடக்கிறது. நான் குஜராத்துடன் 1981 முதல் தொடர்பில் இருப்பவன் . அங்கு அவர் வருவதற்குமுன் நடந்த வேலைகளை எல்லாம் அவர்தான் செய்தார் என்று பொய் விளம்பரம் செய்கிறார்கள்
அதற்கு உதாரணமாக இன்றைய classroom2007 blogspot . com பார்க்கவும் .அதற்கு என் எதிர் கருத்தை தெரியப்படுத்த முயற்ச்சித்தேன் . ஆனால் முடியவில்லை .
அதற்கு நான் இட இருந்த எதிர் கருத்தை கீளே கொடுத்து உள்ளேன் . மன்னிக்கவும்
“இது முழுக்க பொய்யான தகவல். அணையின் ஆரம்பகால திடடத்தை விட ஒரு அடி உயரம் கூட மோடி வந்த பிறகு கூட்டவில்லை. அணையினால் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு முழு நிவாரணம் வழங்காமலும் அவர்களுக்கு மாற்று இடம் வழங்காமலும் அணையை ஒரு குறிப்பிடட உயரத்திற்கு ( அதாவது மதகு அமைக்கும் உயரத்திற்கு ) மேல் கட்டக்கூடாது என்பது தான் நீதிமன்றத்தின் உத்தரவு. மோடி பதவிக்கு வருவதற்கு முன் 99 % வேலைகள் முடிந்துவிட்ட்து. கெனால் வேலைகள் 100 % முடிந்துவிட்டது . அணையில் மதகுகள் அமைப்பது மட்டும் தான் பாக்கி இருந்தது. இதற்காக மோடி முதல்வராக இருந்தவரை எது உம் செய்ய வில்லை.
வாத்தியாரே நீங்கள் மோடியின் பக்தராக இருக்கலாம் அதற்காக பிஜேபி யின் ஸ்லீப்பர் செல் வேலையை அதுவும் பொய்யான செய்தியை உங்கள் தளத்தில் பிரசுரம் செய்து ஏன் மதச்சாயம் பூசிக்கொள்கிறீர்கள். நான் 1994 வரை நர்மதா அணையில் வேலை செய்தவன். மீண்டும் இப்பொழுதும் அதனோடு பலவகையில் சம்பந்தப்பட்டவன். எவனோ பெற்ற பிள்ளைக்கு மோடி அப்பா முறை கொண்டாடுவது அசிங்கமாக இல்லையா . மதகின் அளவு 18 .3 மீட்டர் அகலம் 17 .௦ மீட்டர் உயரம் . அப்படி 30 மதகுகள் உள்ளது இது சம்பந்தமாக யாருடன் வேண்டுமானாலும் விவாதிக்க தயாராக உள்ளேன்:
KM sir , If you OK , I can give a long reply …otherwise also I am fine
சுந்தர் ராமன்,
மேலே இடுகையில் எழுப்பப்பட்டுள்ள பிரச்சினைகளைப்பற்றி
மட்டும் விவாதிப்பதாக இருந்தால் –
நீங்கள் எவ்வளவு நீளமாக வேண்டுமானாலும் தாராளமாக எழுதலாம்.
ஆனால், நீங்கள் இதை திசை திருப்பி, மற்ற விஷயங்களை உள்ளே கொண்டு வந்து – இந்த தளத்தை பாஜகவுக்கான
பிரச்சார மேடையாக மாற்ற விரும்பினால் –
அது ஏற்புடையதாக இருக்காது என்பதை அறியவும்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Thank you KM Sir , I think I have explained point by point – and I have taken care not to use it as a propaganda …
It is natural that any party which is ruling in Delhi would like to spread it to other places – your comment almost makes an impression that Modi is not spending time in governance and he spend his time in elections . You raised a question what he has to spread and conclude that he had used religion is the most – that’s your opinion , may be it is opinion of delhi based TV stations also , but people think otherwise , and please see this in the context of opposition members and so called leaders associating themselves with Ifthar dinner and their ridiculous comments about hindu religion . If there is going to be minority appeasement, there will be reaction. Remember MM Sing famous comment, minorities has the basic right of the resources .
How he speaks , he moves hands – again this is opinion, you might say there is no truth, people believe that he is genuine – in the age of 21st century , any one in public life, one can not just carry on with talk only, he talks and follow up with work. What you feel or what you think does not matter, the work is there for everyone to see – be it is CM ( 3 times ) or other state elections , National election, he promises before the people, people see his talk , compares with work .And to conclude that you are the genuine reader of a leader , every body else is bakth is a very arrogant statement . You are saying only what you are saying is correct , not giving any benefit of doubt for a different belief .
Further you said , he spoke like MM singh and Rajeev Gandhi – you conveniently forget corruption , his silence during the PM ship , coalition dharma – so when Modi brings this to people’s attention you expect Modi to behave like a yogi ( not UP CM but a real yogi) – u expect Modi not to talk of MM failures , Modi is a leader of a national party, as a prime minister due to his vision, he visualise many program, implement it , see that there is no correction, in addition he fights election also.
Well you must have been a good HR professional , but to take that in to giving a character certificates like he is not like Shastri and Kamaraj – is stretching it too far , In fact you even say that you get a doubt Germany kind of situation … what you have started as his speech is not good , action is not good and now from analysis of person to international expert and concluding many things . You have every right to form an opinion I am not saying he is better than them , only time will tell what he has done or he has failed to do .
You also complaining about the suit with his name , you sound more like a AAP person rather than a HR expert , Modi has made KHADI as a house hold name, find out the sales figures before and after Modi , all his message and meetings he propagate KHADI, where as you see only the suit . So you have the right to see the suit and I see Khadi also.
So You are OK if opposition uses money ( un accounted / corruption money) , your cry wolf for the same. It was the most best kept secret ( even AJ didn’t know , as they say ) . You still think that they lost because of demonetization , Akilesh Yadav rule was bad , that is why they lost election, Mayawathi , was a spent force , congress was not in the picture at all . That’s the reason why they lost election not the demonetization.
I also like all religion, like you . However have you read any high school history books, In my school days I read the history in tamil , and that is about 38 years ago , I happened to read 9th std history books to teach my daughter – I suggest you teach history to your grand daughter or grandson with the help of present day history books . I am sure it will make you a very sober person than what you are .
– but people think otherwise -> which people sir ??
– people believe that he is genuine – in the age of 21st century -> 🙂 again which people??
– in addition, he fights election also. -> Is it so? I thought he is always thinking about Nation.
– only time will tell what he has done or he has failed to do. -> Is 3 years a less time? at the end of 5 years what will you say?
Ok, lets come to the points a. what happened to smart city project and other promised projects?
b. what is the outcome of swatch Bharat ?
c. How is Kashmir now? Who is responsible for present-day situation?
d. what is the state of farmers in the last three years?
– you have the right to see the suit and I see Khadi also. -> 🙂 🙂 you see what you want to see
– you teach history to your grand-daughter or grandson with the help of present-day history books. -> Sir, Why don’t you just tell what you learned from History book directly ??
modi govt will be for next 50 years …shame you must sucied
ஆவுடையப்பண்ணாவ், (?)
நீங்கள் வேண்டி விரும்புவது போல், ஆட்சி அவ்வளவு காலம் நீடித்தால்
மக்கள் suicide பண்ணிக்கொள்ள வேண்டிய அவசியமே இருக்காதே… !!!
ஆசிர்வாதம் செய்வதையாவது உருப்படியாகச் செய்யுங்களேன்…!!!
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
ஆவுடையப்பன் – ஏன் இப்படி எழுதவேண்டும்? மோடி அவர்களே இப்படி பதில் எழுதத் துணியமாட்டாரே? ‘கோபம்’ என்பது இயலாமையின் விளைவு. நான் மோடி அவர்களின் அரசை, நிறைய தவறுகள் இருந்தபோதும், ஆதரிக்கிறேன். நிச்சயமாக நான் 2020ல் அதனை பரிசீலனை செய்வேன். ஏனென்றால், 6-7 வருடங்களில் ஒரு அரசு மக்கள் உணரும்படியான நன்மை செய்ய முடியவில்லை என்றால், அது 60-70 வருடங்களானாலும் செய்ய இயலாது.
sorry for my commend
அய்யா எனக்கு ஒரு சந்தேகம்….திரு.மோடி அவர்கள் வருடா வருடம் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவதை பார்த்தால் ராணுவத்தின் துணையுடன் தனிமனித ஆட்சியை கொண்டுவர விரும்புகின்றாரோ….?
கூடுதல் தகவல்: இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் (55%) மிலிட்டரி அல்லது சர்வாதிகார ஆட்சியைத்தான் விரும்புகின்றனர் என PEW poll கூறுகிறது. ஆசியாவில் அதிக சர்வாதிகாரத்தினை நம்பும் மக்கள் இந்தியாவில் தான் அதிகம். மேலும் 85% மக்கள் மத்திய அரசின் மீது ( மோடி நிர்வாகம் மட்டும் அல்ல) நம்பிக்கை வைத்துள்ளார்கள். இணைய சோசியல் மீடியா மக்களை பிரதிபலிப்பது கிடையாது, அதற்கு பொழுதுபோக்கினை தாண்டி வேறு வேல்யூ கிடையாது.
KM, earlier, I must admit that you were anti-Modi. But, after the implementation of demonetization, Aadhar and GST, I tend to agree with your line of assessment. Having said that, I still reckon that BJP’s is better than Congress rule. That is the bane of Indian democracy also – lack of better alternative for the people to choose from. This applies to Tamil Nadu scenario also when people had to choose between DMK and AIADMK all through sixty years. And so, we keep fingers crossed and hope that “இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா?”
Small correction in first sentence. I must admit that I thought that you were anti-Modi.