இன்னும் இரண்டு கிச்சன் மெஷின்கள் ..

முந்தாநாள் இடுகையில் இரண்டு தோசை மெஷின்கள் பற்றிய
வீடியோவை வெளியிட்டிருந்தேன். நிறைய பேர் ஆர்வமாக
பார்த்திருக்கின்றனர். ஆனால் பொதுவான கமெண்ட் –

“இது போன்ற மெஷின்கள் வீட்டு சமையலறைக்கு ஒத்து வராது…
ஓட்டல்களுக்கு தான் லாயக்கு…”

விலை தெரிந்தவுடன் சொல்கிறேன் என்று சொல்லி இருந்தேன்.
ஒன்றின் விலை தெரிய வந்துள்ளது…

Automatic Table top dosa making machine (NEW) by Mukunda Foods –
விலை 1,80,000 ரூபாய் ( ஒரு லட்சத்து எண்பதாயிரம்…)

ஏதோ ஒரு ஆர்வம்; இன்னும் சில மெஷின்களை பார்த்தேன்.
அடுத்த தலைப்பிற்கு போகும் முன்னர், நீங்களும் பார்த்து விடுங்களேன்…!!!
“யான் பெற்ற இன்பம் பெறுக நீங்களும் ” –

automatic vadai machine –

Sowbaghya Automatic Dosa Machine

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to இன்னும் இரண்டு கிச்சன் மெஷின்கள் ..

  1. siva's avatar siva சொல்கிறார்:

    நம்மூரில் கல்யாணத்தின் போதே ஒரு ஆல் இன்-ஒன் கிச்சன் & லாண்டரி மிசின் கிடைக்குதே அது பத்தாதா என்ன?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      சிவா,

      உங்கள் வீட்டில், உங்கள் better half -க்கு உங்களின் இந்த பதிலை
      காட்டுங்கள். அப்புறம் என்ன கிடைத்தது என்பதையும் இங்கே எழுதுங்களேன்… 🙂 🙂

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • siva's avatar siva சொல்கிறார்:

        நீங்க ஜோக்கை மாத்தி புரிந்து கொண்டீர்கள் போலிருக்கிறது. இது பெண்களுக்கான பதிவு என்பதால் நான் குறிப்பிட்டது தற்கால புருசன்மார்களைத்தான்! 🙂

  2. bandhu's avatar bandhu சொல்கிறார்:

    இதே போல் சப்பாத்தி செய்யும் மெஷின் வந்துள்ளது. கோதுமை மாவும் தண்ணீர் மட்டும் போதும். சப்பாத்தி தயார். விலை $999 (Rs 65000) தெரிந்தவர் வீட்டில் உபயோகப் படுத்தியதில் நன்றாகவே இருந்தது!
    https://rotimatic.com/

  3. தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

    பெரும்பாலானவர்களுக்கு சமையல் அறையில் நடப்பது என்ன, வீட்டு வேலைகள் என்றால் என்ன என்பது தெரியாது (ஆண்களுக்கு). ஏதோ தான் சம்பாதிக்கிறோம், பணம் வருகிறது என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நான் சமையல் அறையை ஆக்கிரமிக்கும்வரை எனக்கும் இதுபற்றி பெரிதான எண்ணம் இருந்ததில்லை. ஏன் பல தடவை, நேரத்துக்கு சாப்பாடு வரவில்லை என்று குறைப்பட்டிருக்கிறேன்.

    மூன்று வேளைகள் சமையல் செய்வது, அதுவும் 330 நாட்களும் செய்வது என்பது, கிட்டத்தட்ட ராட்சசத்தனமான வேலை. ஆண்களுக்கு ஒரு வாரம் சமையல் செய்தாலே அதனுடைய கஷ்டம் தெரியும். ஒவ்வொரு வேளையும் என்ன செய்வது, என்ன டிபன், என்ன சாம்பார்/கறி, இரவுக்கு என்ன, நாளை என்ன செய்வது/அதற்கான பொருட்களை எப்போ தயார் செய்வது, எது குறைந்துள்ளது/வாங்கவேண்டியிருக்கிறது என்றெல்லாம் யோசித்துச் செய்வது, பின்பு பாத்திரங்கள் அலம்பி வைப்பது போன்றவைகளில் உள்ள கஷ்டம் ஆண்கள் கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும். என்றைக்காவது ஒரு நாள், நானும் ‘பிரியாணி’ செய்கிறேன் என்று அடுக்களையில் புகுந்தால் கஷ்டம் தெரியாது. இது தவிர துணி தோய்ப்பது (மெஷின் இருந்தாலும், அதில் போடுவது, பின்பு உலர்த்துவது, அப்புறம் எடுத்துவைப்பது… இது ஒவ்வொரு நாளும் தொடரும்) போன்ற பலப் பல வேலைகளால் பெண்களை கிட்டத்தட்ட அடிமையாக்கிக் கொண்டுள்ளோம். அன்றைக்கு சாப்பிடும்போது எத்தனை முறை, ‘இது நல்லா இருந்தது, இது இன்னும் பெட்டரா இப்படிச் செய்திருக்கலாம்’ என்று நாம் சொல்கிறோம்? சாப்பிடும்போது, எவ்வளவு இருக்கிறது, ஒவ்வொருவருக்கும் சரியான அளவு இருக்கிறதா என்று எத்தனை தடவைகள் நாம் பார்த்திருக்கிறோம்? சில சமயம், எனக்கு ‘ரசம்’ அட்டஹாசமா இருக்குன்னு இரண்டு தடவை சாப்பிட்டுவிடுவேன், பிறகு மனைவிக்கு குறைவாக இருப்பது தெரியும். 5-6 வருடங்களுக்கு முன்பு நான் அடுக்களையில் புகுந்து வேலை செய்யும்போதுதான் இந்த மாதிரி எண்ணங்கள் எனக்கு வந்திருக்கின்றன.

    இன்றைக்கு ஏதோ நிறைய மெஷின்/வசதி வந்துவிட்டது என்று நினைக்கவேண்டாம் (மிக்சி, கிரைண்டர், அவன், கேஸ் அடுப்பு , கிச்சனில் குழாய், நல்ல தண்ணீர் போன்று). இவைகள் இல்லாதபோது யாரும் 3 வேளை சமையல் செய்ததில்லை. செய்ததெல்லாம் சோறு, குழம்பு, ஒரு கறி. காலையில் மோர் சாதம். எப்பவாவது இட்லி தோசை போன்றவைகள். பூரி, ரோஸ்ட் என்பவைகள் எப்போதாவது அபூர்வமாக ஹோட்டல்களில் சாப்பிடுவது. அதேபோல் நாம் ஆற்றிலோ குளத்திலோ நமது துணிகளைத் தோய்ப்போம். அயர்ன் செய்வதே அபூர்வம். வேண்டுமென்றால் தோய்க்கும் தொழிலாளியிடம் போடுவோம். அப்போ மெஷின் வசதி வர வர, நம் தேவைகள் மிகவும் அதிகரித்திருக்கிறது. வேலைகளும் அதிகரித்திருக்கிறது. ஆனால் வேலைப் பகிர்வு என்பது பெரும்பாலும் நடப்பதேயில்லை.

    இதை ஏதோ கருத்து சொல்வதற்காக எழுதவில்லை. நான் உணருவதை உங்களுக்குச் சொல்கிறேன். ‘பெண்கள் உண்மையாகவே நம் வீட்டின் நடமாடும் தெய்வம்’.

    கா.மை சார்.. நான் இந்த ஆட்டமேடிக் வடையும் சாப்பிட்டிருக்கிறேன். சௌபாக்யா தோசை மேக்கரையும் பார்த்திருக்கிறேன். இவைகள் வீட்டு உபயோகத்துக்கானவைகள் அல்ல. சாதாரண வீடுகளில் ( நான் சொல்வது Upper Middle Class) உபயோகப்படுத்தக்கூடியனவைகள் அல்ல. அது PRACTICALம் கிடையாது. இதேபோல், லட்டு மேக்கர் (உருட்டும் இயந்திரம்) பெரிய இனிப்பு கடைகளில் உபயோகப்படுத்துகிறார்கள் (BRANDED கடைகளில்). ஆனாலும் நான் இனிப்பு செய்யும் இடங்களில் இரண்டு கைகளாலும் பூந்தியை எடுத்து உருட்டி உருட்டி ஒரு நாளைக்கு ஆயிரம் லட்டுக்களுக்கு மேல் செய்பவர்களையும் பார்த்துப் பரிதாபப்பட்டிருக்கிறேன். வீட்டுக்கு இத்தகைய மெஷின்களால் ஒரு உபயோகமும் கிடையாது. இதற்குப் பதிலாக, half cooked stageல் அல்லது வெட்டிய காய்கறிகள் போன்ற வகைகளில் உணவுப்பொருட்கள் தரமாகக் கிடைத்தால் பெண்களுக்கு உபயோகமாக இருக்கும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.