…

…
ஸ்பேஸ் எக்ஸ் தொழிலதிபரும், தனது அற்புதமான
சாதனைகளால் உலகையே வியப்பூட்டிக் கொண்டிருக்கும்
விஞ்ஞானியுமான எலான் மஸ்க் பிரமிப்பூட்டும் புதிய செய்தி
ஒன்றை வெளியிட்டுள்ளார்….
அண்மையில் ஆஸ்திரேலியா, அடிலெய்டில் நிகழ்ந்த
International Astronautical Congress (IAC) கூட்டத்தில் இந்த
அறிவிப்பையும், கூடவே ஒரு காணோளியையும்
வெளியிட்டிருக்கிறார்.
செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் அனுப்பக்கூடிய அதே
விண்வெளி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, உலகில் எந்த
மூலையிலிருந்தும், எந்த மூலைக்கு வேண்டுமானாலும்,
ஒரு மணி நேரத்துக்குள்ளாக பயணிகளை
ஏற்றிச்செல்லக்கூடிய திட்டம் ஒன்றை தான் உருவாக்கிக்
கொண்டிருப்பதாக…..!!!
உலகில் ஒரு இடத்திலிருந்து கிளம்பி, புவியீர்ப்பு சக்திக்கு வெளியில் உந்தப்பட்டு, மணிக்கு 27,000 கி.மீ. வேகத்தில் பறக்கக்கூடிய இந்த ராக்கெட் மீண்டும் பூமியின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் தரையிறக்கப்படும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
2022-ல் செவ்வாய் கிரகத்திற்கு பயணிகளை இட்டுச்செல்ல
கூடிய சாதனங்களை தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக
ஈடுபட்டிருக்கும் இவரது நிறுவனம் –
இந்த புதிய திட்டத்தை விளக்கும் விதமாக
வெளியிட்டிருக்கும் வீடியோ வியப்பூட்டுகிறது…
இந்த வீடியோவில், நியூயார்க் துறைமுகத்தில் தயாராக
நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் BFR ராக்கெட் பயணிகளை
ஏற்றிக்கொண்டு சீறிப்பாய்வதையும், குறிப்பிட்ட தூரம்
சென்ற பிறகு, முன் பகுதியை உந்தித்தள்ளி விட்டு,
பின் பகுதி மீண்டும் குறிப்பிட்ட இடத்திற்கே வந்து
இறங்குவதையும் காட்டுகிறது.
சாதாரணமாக இத்தகைய ஒரு திட்டத்தை வேறு யாராவது
சொன்னால் நாம் நிச்சயமாக நம்ப மாட்டோம். ஆனால்,
மணிக்கு 1200 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடிய
ஹைபர்லூப் திட்டத்தை ஏற்கெனவே வெற்றிகரமாக
செயல்படுத்திக் காட்டி விட்டதால், எலான் மஸ்க் சொல்வது
வியப்பாக இருந்தாலும், இதை இவர் செய்யக்கூடியவர் தான்
என்று நினைக்கத்தோன்றுகிறது….
செய்தியில் சொல்லப்படும் வீடியோ கீழே –
…
கீழேயுள்ள வீடியோ, எலான் மஸ்க்கின் செவ்வாய் கிரக
பயணத் திட்டத்தை விளக்குவது –



நல்லா தான் இருக்கு. ஆனா பயமா இருக்கே.
எவ்வளவு பேர் துணிஞ்சு ஏறுவாங்க சார் ?
Remember people feared to board bus when it was launched.