…
…
மத்திய ஆளும் கட்சித் தலைவரின் மகனைப்பற்றிய கட்டுரை
the wire செய்தித்தளத்தில் வெளிவந்தது அக்டோபர்
8-ந்தேதி தான்….
ஆனால், அது குறித்த தனியார் வழக்கான
மான நஷ்டவழக்கை –
மத்திய அரசின் வக்கீலாகிய – தான்
ஏற்று நடத்த தேவைப்படும்
மத்திய சட்ட அமைச்சரவையின்
விதிவிலக்கு ஒப்புதலை –
…

…
செய்தி வெளிவருவதற்கும் இரண்டு நாட்களுக்கு முன்னரே,
அதாவது அக்டோபர் 6-ந்தேதியே வாங்கி விட்டாராம்
திரு.ஜெய் ஷாவுக்காக ஆஜராகும் இந்திய அரசின் கூடுதல்
சொலிசிட்டர் ஜெனரல் திரு.துஷார் மேத்தா – அவர்கள்…
குப்புற விழுந்து யோசித்தாலும் புரியவில்லை – இது
எப்படி சாத்தியமாகும் என்று…!!!
( இந்த மாதிரி வயர் செய்தி தளத்தில் ஒரு கட்டுரை
வரப்போகிறது என்று முன் கூட்டியே கண்டு பிடித்து – அதை
பாஜக தலைவருக்கு சொல்வதும் உளவுத்துறையின்
வேலை தானே என்று சொல்கிறீர்களா…?
உளவுத்துறை மோப்பம் பிடித்து,
அதை மத்திய அரசுத்தலைமைக்கு தெரிவித்து,
அவர் அதை பாஜக தலைவருக்கு தெரியப்படுத்தி,
அவர் அதன் பிறகு இந்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் தான் வேண்டும் என்று கேட்டு,
அந்த கூடுதல் சொலிசிடர் ஜெனரல்,
மத்திய சட்ட அமைச்சரிடம் பேசி,
அவர்களது அனுமதியை எழுத்து மூலம் வாங்கி –
(அப்பாடா – மூச்சு வாங்குகிறது…!!! )
இது அத்தனையும் தி வயர் தளத்தில் செய்திக்கட்டுரை வெளிவருவதற்கு 2 நாட்களுக்கு முன்னரே செய்து முடிக்கப்பட்டிருக்கிறது….. அப்பாடா என்ன வேகமாகவும் திறமையாகவும் வேலை செய்கிறார்கள்….!!! )
அதென்னவோ இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம்
எப்படி நடக்கிறது என்று
எனக்கு புரியவே மாட்டேனென்கிறது….
பாஜக அன்பர்கள் யாருக்காவது புரிந்தால், தெரிந்தால் –
தயவுசெய்து சொல்லுங்களேன்…!!!
————————————————————–
பிபிசி செய்தியிலிருந்து –
பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷாவின் மகன்
ஜெய் ஷா, தி வயர் டாட்காம் இணையதளத்தின்
ஆசிரியர்களுக்கு எதிராக தொடந்துள்ள அவதூறு வழக்கில்,
ஜெய் ஷாவின் வழக்குரைஞராக இந்தியாவின் கூடுதல்
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகப் போகிறார்.
2002 கலவர வழக்குகளிலும், என்கவுண்ட்டர் வழக்குகளிலும்
குஜராத் அரசு வழக்குரைஞராக ஆஜர் ஆகி இருக்கிறார்
மேத்தா.
என்.டி.டி.வி-க்கு அளித்த நேர்காணலில் மேத்தா, தான்
அக்டோபர் 6-ஆம் தேதியே மத்திய சட்ட அமைச்சகத்திடம்
அனுமதி பெற்றுவிட்டதாக கூறியுள்ளார்.
அப்படியானால், thewire இணையதளத்தில் அந்த கட்டுரை
வெளியாவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பே மேத்தா
மத்திய சட்ட அமைச்சகத்திடம் அனுமதி பெற்று இருக்கிறார்.
(நன்றி – http://www.bbc.com/tamil/india-41578840 )
————————————————————–



Sir, if you have decided already ( pre-conceived notion) nothing can be done sir. The wire had sent a questionnaire before publishing – to Shah’s office , for their comments and feedback. Shah’s lawyer has warned them not to go ahead with the allegations . That’s the reason why Shah team has prepared before the publishing of story . They feel they have a strong case and that is why they have filed a 100 cr defamation.
Shah and BJP could have kept quiet on the allegation – instead they took the bulls by horn , prepared before the publishing of story , filed defamation.
If you are selective , and if you have made a decision not to see /look at the defence – go ahead . People will see through .
Mr. Sundar Raman,
What evidence have you got for that ”The wire had sent a questionnaire before publishing– to Shah’s office”?
Would you please publish here?
https://thewire.in/185512/amit-shah-narendra-modi-jay-shah-bjp/
That was published in 8th Oct Sunday
The Wire sent a questionnaire to Jay Shah on Thursday seeking details about the shifting fortunes of Temple Enterprise and his other business ventures, as obtained from RoC filings, which he said he could not immediately respond to as he was travelling. On Friday, however, Shah’s lawyer, Manik Dogra, sent in a response with a warning that criminal and civil defamation proceedings would be launched in the event of “any slant or imputation which alleges or suggests any impropriety on his part.”
The above quote is from that article – it is clear that they have sent a questionnaire on Thursday , 5th Oct – The lawyer took internal permission on 6th .
Sundar raman,
So questionnaire was sent on Thursday 5th October.
Within 24 hours, they have engaged such a Senior Lawyer of
Addl.Solicitor General’s status. He has also applied for permission
from the Law Ministry and got its approval on the VERY SAME DAY.
(6th October)
WONDEFOOL Justification.
Sundar rajan – if you have decided already ( pre-conceived notion)
nothing can be done sir.
If you are selective , and if you have made a decision not to see /look at the fact – go ahead . People will see through .
I don’t know what to say, this article by KM sir alleged that how come a lawyer is engaged before the article is published . I said the wire had informed of their intention to Shah , some one else asked for link . I provide the same ..now you ask me how come within 24 hours . The so called lawyer is known to Shah family, they must be having some comfort levels . As long as the prior permission or intimation is done , whether it is within one day or few hours doesn’t matter.
Understand that Shah could have kept quite – instead filed a defamation case, unless the facts are favourable to Shah, he wouldn’t have gone for this option, because , in a defamation case , Shah has to be cross examined . Unless he feel he is right , he can not stand . He is ready to stand in the court – due to strength of the facts . Now I close my arguments , you can write what ever you want to.
// Understand that Shah could have kept quite – instead filed a defamation case, unless the facts are favourable to Shah, he wouldn’t have gone for this option, because , in a defamation case , Shah has to be cross examined . //
உங்களைப்போன்றோரின் இத்தகைய கண்மூடித்தனமான நம்பிக்கை தான் அவர்களது பலம், முதலீடு எல்லாமே…!
இந்த வழக்கு சீரியசாக முன்னெடுத்துச் செல்லப்படும் என்று நம்புகிறீர்களே…!
சும்மா மீடியாக்களை மிரட்டி, விவாதங்களை தவிர்ப்பதற்காக தொடுக்கப்பட்டதை எல்லாம் நிஜமென்று எடுத்துக் கொள்கிறீர்களே…!
சம்பந்தப்பட்டவர்கள் – உங்களை விட, என்னை விட – அதிபுத்திசாலிகள்……!!!
அவர்களுக்குத் தெரியாதா – விஷயம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டால், என்னென்ன விவரங்கள் கேட்கப்படும் என்று…?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்