…
…
ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பின்னால் மன்னார்குடி
குடும்பத்தின் கையில் அதிமுக போய் விடக்கூடாது என்று
தொடக்க முதலே (டிசம்பர்,2016) திரு.குருமூர்த்தி அவர்கள்
துக்ளக் இதழில் வெளிப்படையாக எழுதி வந்தார்.
பின்னர், ஓபிஎஸ், எடப்பாடி அணிகளுக்கிடையே பிணக்கு
ஏற்பட்டபோது, இரண்டு அணிகளும் ஒன்றுபட்டாலொழிய,
கட்சியும், ஆட்சியும் மன்னார்குடி குடும்பத்தின் கையில் போய்
விடும்… அது அதிமுகவுக்கும் சரி, தமிழகத்திற்கும் சரி –
பெரும் தீங்காக முடியும்… என்று பல தடவை திரு.குருமூர்த்தி
அவர்கள் – துக்ளக் இதழில் வெளிப்படையாக எழுதி
இருக்கிறார்….
பாஜக தலைமையும்,OPS மற்றும் EPS ஆகியோர் ஒன்றிணைந்து
அதிமுக, பாஜகவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று
விரும்பியது…
தமிழக அரசியலை கவனித்து வருபவர்களுக்கு இது நன்றாகவே
தெரியும்…
இந்த நிலையில், திரு.ஸ்டாலின் அவர்கள் ஏதோ தான்
புதிதாக மறைந்திருந்த மர்மம் ஒன்றை கண்டுபிடித்து விட்டது
போல் பேசிய செய்தி ஒன்று முரசொலியில் வந்தது….
————————————-
திரு.ஸ்டாலின் அவர்கள் 21.08.2017 அன்று பேசியதாக
முரசொலியில் வெளிவந்த செய்தி –
“திரைப்படத்தின் ஏதோ ஒருஇடத்தில், இயக்கியவர்கள்
வெளிப்படுவது போல் –
இணைப்புக்கு ஏற்பட்ட திடீர் சிக்கலின்போது, ஆபத்பாந்தவராக
அவதாரம் எடுத்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகரும், பிரதமர் உள்பட
பாஜக தலைவர்களிடம், செல்வாக்கு உள்ளவருமான ஆடிட்டர்
குருமூர்த்தி வீட்டில், அதிமுகவின் இரு தரப்பினரும் ஓடோடிச்
சென்று ஆலோசனை நடத்தி, பதவி – அதிகாரங்களை உறுதி
செய்துகொண்டதில், இணைப்புக்கு முகமூடியாக இருந்த செயல்
அம்பலப்பட்டு விட்டது.
——————————————————
தமிழக அரசியலை அறிந்திருக்கும் எவருக்கும் இந்த விஷயம்
புதியதல்ல…. மறைந்திருந்த மர்மமும் அல்ல..
ஆனால், எதிர்பாராதவிதமாக, மறைந்திருந்த புதிய மர்மம் ஒன்று
இப்போது வெளியாகி இருக்கிறது….!!!
திரு.ஸ்டாலின், திரு.குருமூர்த்தி அவர்களை சந்தித்து
ஆலோசனை நடத்திய மர்மம்…! திரு.ஸ்டாலின் தன்னை
சந்தித்து பேசினார் என்று திரு.குருமூர்த்தி அவர்களே உறுதி
செய்திருக்கிறார்…
ஸ்டாலின் அவர்களின் அதிருஷ்டம் – திரு.குருமூர்த்தி அவர்கள்
பெருந்தன்மையுடன், எதற்காக திரு.ஸ்டாலின் தன்னை
சந்தித்தார், என்ன வேண்டுகோள் வைத்தார் என்பதை
எல்லாம் வெளிப்படுத்தவில்லை…
பாஜக தலைமையிடம் செல்வாக்குடையவர்,
ஆர்.எஸ்.எஸ். முக்கியஸ்தர் – என்று தன்னாலேயே
வர்ணிக்கப்படுகிற ஒருவரை திரு.ஸ்டாலின் ரகசியமாக
சந்தித்தது ஏன்…? ( முக்கியத்துவம் மிகுந்த இந்த சந்திப்பு குறித்த
செய்தி, எந்த ஊடகத்திலும் வெளிவரவில்லை… அப்படியானால்
அது ரகசிய சந்திப்பு தானே…? )
திரு.குருமூர்த்தி அவர்களிடம் திரு.ஸ்டாலின் போனது ஏன்…?
திமுகவின் எதிர்காலம், வளர்ச்சி பற்றி அவருடன்
விவாதிக்கவோ, ஆலோசனை பெறவோ போயிருக்க
முடியாது….!
ஒருவேளை பாஜகவுடன் திமுக கூட்டணி வைப்பது குறித்து
பேசப்போனாரோ…!!! – சான்சே இல்லை…
மண்டை குழம்புகிறதே… வேறு எதற்காகத்தான்
போயிருப்பார்…?
ஊஹூம்…..என்னால் யூகிக்க முடியவில்லை…
திரு.ஸ்டாலின் அவர்களே சொன்னால் தான் உண்டு…!!!

…
நண்பர்களே, உங்களுக்கு எதாவது தோன்றுகிறதா…?
——————————————————————-



2 G தீர்ப்பு வர உள்ளது,
எல்லாம் அந்த 2G தான். இதில் ஏதாவது பேரம் நடந்து , தப்பிக்க விட்டால் – மன்னிக்க முடியாத குற்றமாகிவிடும். நிச்சயமாக ஜெகன் ரெட்டி , மாறன் , பாலு ,பவார் , பி. படேல் , ராஜா , கனிமொழி, அழகிரி, சிதம்பரம், கார்த்தி , … போன்றோரின் மீது சட்டம் தன கடமையை செய்ய வேண்டும் . சேகர் ரெட்டி , தினகரன், திவாகரன் ,நடராஜன் வகையறாக்கள் மீதும் நடவடிக்கை வேண்டும் . இதை எல்லாம் செய்ய தவறினால் , எந்த கடவுளும் மன்னிக்க மாட்டார்கள் .
பா ஜா க , வெற்றி பெற வேண்டுமானால் , கருப்பு பண நடவடிக்கை மட்டுமே போறாது , சில அல்ல பல பேருக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் . நீதிபதிகளின் , நீதிமன்றத்தின் உதவி பெரிதும் தேவை .
இந்தியாவின் முன்னணி மாநிலமான தமிழ் நாட்டையே சரியாக கவனிக்க தவறி விட்டார்கள் , 10,000 கோடி கடன் தள்ளுபடி செய்வது விட – ஒரு ஆயிரம் கோடி நீர் நிலைகளை உயர்த்த , ஆழப்படுத்த , கரை கட்ட , சொட்டு நீர் பாசனத்திற்கு மானியம் , எங்கும் குப்பைகளை உபயோக படுத்தி மரம் வளர்த்தல் போன்றவைகளை செய்யலாம் . இதை தமிழ் நாடு சர்க்கார் மூலம் தான் செய்ய வேண்டும் என்றில்லை . மத்திய சர்க்கார் நேரடியாகவே செய்யலாம் .
‘நிச்சயம், திமுகவினர், தமிழக நலன் சார்ந்த விஷயங்களுக்காக இந்த மாதிரி எந்தச் சந்திப்பும் நடத்தியமாதிரி அவர்கள் வரலாறிலேயே இல்லை.
கருணானிதியும், தமிழகத்துக்காக, எங்கும் பிரயாணப்பட்டதில்லை, திகார் வாசலில் கனிமொழியைப் பார்ப்பதற்காக தவமிருந்ததைத் தவிர.
ஸ்டாலினுக்கு, செல்வியும், கேடி பிரதர்சும் மிகவும் வேண்டியவர்கள் (அழகிரி வேண்டியவர் அல்லர்). தன் குடும்ப நலனுக்காகத் தவிர வேறு எதற்குப் போயிருப்பார்?
ஸ்டாலினிடம் இப்போது யாராவது ‘நீட்’ என்றால் என்ன, எதற்காகப் போராடுகிறீர்கள் என்று கேட்டால், ‘மக்கள் சுத்தமாக இருப்பதுதானே நீட், அதற்காகத்தான் போராடுகிறேன்’ என்று சொன்னாலும் சொல்லுவார். ‘மீத்தேன்’ எடுப்பது, ‘தேன்’ சம்பந்தப்பட்ட செயல் என்று நினைத்து கையெழுத்துப் போட்டேன் என்று சொன்னவரல்லவா அவர்?
கே.எம்.சார்,
// நண்பர்களே, உங்களுக்கு எதாவது தோன்றுகிறதா…? //
புகைப்படத்தை பார்த்தவுடனேயே தோன்றுகிறதே.
காரணம் இல்லாமலா இந்த புகைப்படத்தை போட்டிருப்பீர்கள் 🙂
நீங்கள் நினைத்த அதே Mr.தயாநிதி மாறன் சம்பந்தப்பட்ட தொலைதொடர்பு- சன் டிவி கனெக்ஷன் வழக்கு நினைவிற்கு வருகிறதே. குருமூர்த்தி சார் தானே அந்த
வழக்கை மேலெடுத்துச் சென்றவர் ?
திரு.குருமூர்த்தி அவர்கள் பில்டர் காப்பி கொடுத்து உபசரித்து விட்டு, போயிட்டு வாங்க ஸ்டாலின் என்று வாசலை காட்டி இருப்பார் 🙂
இவரும் அசடு வழிய திரும்பி வந்திருப்பார். அந்த கடுப்பை தான் இப்போது
வேறு வழியில் காட்டுகிறார் போலிருக்கிறது.
முன்பு சு . ச … இப்பாே … கு.மூ …? வழக்கு… சமரசம் … பதவி…!!! பா.ஜ.க.வுக்கு ” இடைத்தரகர்கள் ” அதிகமாே…?
Brokers or power brokers in BJP , that is what you implied I think. Can you tell me what they have gained in their past dealings ( money , fame , or people ) – Subramanya swami fought many cases and most of them he argued well, put the facts, and got judgement for people . He is not corrupt , some people always compares him to Nakeeran gopal , and terms him as extortionist, which is very unfair , not factual at all.
Gurumurthy – also leads a normal life , neither he has made money ( from politics) , nor he influences people ( for getting things done) – Both has an ego ( that comes along with their ability to argue , understand things, have strong likes and dislikes ) – and lastly for their age , both have the good health , clean habits .
செல்வராஜன்,
தயவுசெய்து தீயசக்தி சு.சா.வை இங்கே கொண்டு வராதீர்கள். அவர் ரகமே வேறு… embodiment of all evils என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே – அது அவருக்கு முற்றிலுமாகப் பொருந்தும்.
திரு.குருமூர்த்தி அவர்களை நான் மிகவும் மதிக்கிறேன். 35-40 வருடங்களுக்கும் முன்னால் Indian Express ஆங்கில நாளிதழில், அவர் இந்திரா காந்தி / காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்களை எல்லாம் தோலுரித்து காட்டிய காலத்திலிருந்தே, நான் அவர் கட்டுரைகளை விரும்பி படிக்கத் துவங்கினேன்.
எந்தவித அச்சுறுத்தலுக்கும் பணியாமல், துணிந்து ரிலையன்ஸ் திருபாய் அம்பானி அவர்களின் “ஊழல் மலை”யை வெளியுலகிற்கு காட்டியவர் அவர்.
உலக மயமாக்கலை எதிர்த்து தீவிரமாக செயல்படுபவர். “சுதேசி ஜாக்ரண் மன்ச்” என்கிற சுதேசி இயக்கத்தை தீவிர ஈடுபாட்டுடன் உருவாக்கி, முன்னெடுத்துச் சென்றவர்களில் அவரும் ஒருவர்.
அறிவாளி. பண்பாக பழகக்கூடியவர். ஆதாரங்களுடன் ஆணித்தரமாக தன் வாதங்களை
அழுத்தமாக எடுத்து சொல்லக்கூடியவர்…
நான் பலமுறை, பல நிகழ்ச்சிகளில், அவரை வெகு அருகில் நெருங்கியிருந்து கவனித்திருக்கிறேன்….(ஆனால், நான் அவருக்கு அறிமுகம் ஆனவன் இல்லை..)
எல்லாவற்றிற்கும் மேலாக, தேர்தல் அரசியலில் ஈடுபட மாட்டேன், எந்தவித அரசியல் பதவியையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று காஞ்சி பெரியவருக்கு சத்தியம் செய்து கொடுத்திருப்பவர்.
அவர் பாஜகவை ஆதரிப்பவர், அதை வளர்க்க உதவுகிறார் என்பது தனி விஷயம்.
பாஜகவின் சில கொள்கைகள், செயல்பாடுகள் – நமக்கு ஏற்புடையதாக இல்லை.., நாம்
அவற்றை எதிர்க்கிறோம் என்பதும் உண்மை.. ஆனால், அவர் பாஜகவை ஆதரிப்பவர் என்கிற காரணத்தால், அவரது தகுதியை, உயர்வை – எந்த விதத்திலும் குறைத்து மதிப்பது சரி அல்ல.
நான் இந்த வலைத்தளத்தில் எழுதும் சில இடுகைகளில் நீங்கள் வேறுபாட்டை காண நேர்ந்தால், அதற்கு நான் தனிப்பட அவர் மீது கொண்டுள்ள மதிப்பு தான் காரணம்.
ஆசிரியர் “சோ” அவர்களை நமக்கு மிகவும் பிடிக்கும்… இருந்தாலும், அவரையே கூட பல சமயங்களில் இங்கே விமரிசித்திருக்கிறோமே..
அது போல, இவரது அரசியல் செயல்பாடுகளையும் நாம் வழக்கம்போல் தாராளமாக விமரிசிக்கலாம்…
மறக்காமல், அவரது சிறப்புகளையும் மனதில் இருத்திக்கொண்டு…!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
அய்யா ….! // இணைப்புக்கு ஏற்பட்ட திடீர் சிக்கலின்போது, ஆபத்பாந்தவராக
அவதாரம் எடுத்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகரும், பிரதமர் உள்பட
பாஜக தலைவர்களிடம், செல்வாக்கு உள்ளவருமான ஆடிட்டர்
குருமூர்த்தி வீட்டில், அதிமுகவின் இரு தரப்பினரும் ஓடோடிச்
சென்று ஆலோசனை நடத்தி, பதவி – அதிகாரங்களை உறுதி
செய்துகொண்டதில், இணைப்புக்கு முகமூடியாக இருந்த செயல்
அம்பலப்பட்டு விட்டது. // என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளதற்கும் ….
சென்ற சட்டமன்ற தேர்ந்தலின் பாேது சு. சா ஸ்டாலினுக்காக எப்படியெல்லாம் செயல் பட்டார் … என்பதெற்கெலாம் என்ன பெயர் என்று தரம் பிரிக்க தெரியாத நிலையில் ” தரகர்கள் ” என்று நான் கூறியது தங்களுக்கும் … மற்ற நண்பர்களுக்கும் தவறாக தெரிந்தால் எனது ” பின்னூட்டத்தை ” நீக்கி விடுங்கள் …
சு .ச .வும் உங்கள் நண்பரும் பா .ஜ .க . வுக்காகத்தான் பாடுபடுகிறார்கள் என்கின்ற பாேது இருவரையும் பிரித்துப் பார்க்கதெரியாத அறிவு சூன்யம் … நான் …. அதனால்தான் தரகர்கள் என்று கூறம்படிநேர்ந்து விட்டது … மழுப்பலான பின்னூட்டங்கள் இட தகுதியற்றவன் நான் … என்பதை உணர்ந்து விட்டேன் …. !!!
ஸ்டாலின், குருமூர்த்தியைச் சந்தித்தார் என்பதற்கு ஆதாரம் என்ன? குருமூர்த்தியே துக்ளக்கில் சொல்லியிருக்கிறாரா? தயவு செய்து விளக்கவும்.
திரு வெங்கட்ராமன் அம்பி,
// ஆதாரம் என்ன ? திரு.குருமூர்த்தி அவர்கள் “துக்ளக்”கில்
சொல்லி இருக்கிறாரா..? //
ஆம்.துக்ளக்’கில் சொல்லி இருக்கிறார்.
(இப்போதைக்கு இவ்வளவு விவரம் போதுமானது..!!!)
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Mr.Subramanya swamy only exposed Jaya and Sasi. No one did it. Hence he is not bad element. If he is bad element how about others in DMK and ADMK?