…
இது ஏப்ரல் மாத கிருஷ்ணராஜ சாகர் அணையின் நிலை…

இது இப்போதைய நிலை….

ஒரேயடியாக மகிழ்ந்து கொண்டாட முடியாவிட்டாலும்,
கர்நாடகாவில் நீர் நிலவரம் இப்போது ஓரளவு தேவலை என்று தெரிகிறது..! மழைக்காலம் இன்னும் தொடர்கிறது…
இன்னமும் நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது…!!!
கர்நாடகாவில் காவிரியில் கட்டப்பட்டுள்ள அணைகளில்
இன்றைய நீர் மட்டம் – நிலவரம் –
ஹரங்கி அணை – முழு உயரம் 2859.00 அடி.
இன்று காலை 10 மணி நிலவரம் – 2853.48 அடி.
அணை கிட்டத்தட்ட நிரம்பி விட்டது.
இனி வரும் தண்ணீர் முழுவதும் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு
திறந்து விடப்படும்…. 🙂 🙂
கபினி அணை – முழு உயரம் – 2284 அடி.
இன்று காலை நிலவரம் – 2271 அடி.
அணைக்கு விநாடிக்கு சுமார் 17,000 க்யூசெக் நீர் வந்து
கொண்டிருப்பதால், 3-4 நாட்களில் அணை நிரம்பி விடும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது… 🙂 🙂
இதன் உபரி நீர், கர்நாடகாவிற்கும், தமிழகத்திற்கும்
சேர்த்தே திறந்து விடப்படுகிறது… 🙂 🙂
ஹேமாவதி – சரியான நிலவரம் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆனால் முழு கொள்ளளவில் 40 % நிரம்பி இருப்பதாக
தெரிகிறது….
KRS – கிருஷ்ணராஜ சாகர் அணை –
முழு உயரம் – 124.80 அடி.
நீர் மட்டம் இன்று 100 அடியைத் தொட்டது.
ஆனால் முழு கொள்ளளவில் இது சுமார் 45 % தான்…
(இன்று காலை நிலவரம்- 99.65 அடி…
நீர் வரத்து – இன்று காலை -12,233 க்யூசெக்…
நீர் வெளியேற்றம் – 8090 க்யூசெக்…
( தமிழ்நாட்டிற்கும், கர்நாடகா பயன்பாட்டிற்கும்
சேர்த்தே – தண்ணீர் திறந்து விடப்படுகிறது. )
கர்நாடகத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் இன்னும் நிறைய மழை
பெய்ய இயற்கையை வேண்டுவோம்… 🙂 🙂 🙂
கன்னட மக்களும் வாழ்க வளமுடன்…!!!



அங்கங்கே ” ஸ்மெலி ” பாேட்டு // கன்னட மக்களும் வாழ்க வளமுடன்…!!! // என்று கூறும் உங்களுக்கு … நல்ல மனது … ! கன்னட மக்களும் என்று அழுத்தமாக கூறுவதில் தான் ” ஏதாே ஒரு ஏக்கம் ” தாெக்கியிருப்பது தெரிகிறது…. உண்மைதானே…?
நியாயமான இடுகை. இருந்தபோதும், கர்னாடகா, காவிரி நீரை நியாயமாகப் பகிர்ந்துகொள்வதில்லை.
“கர்நாடகத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் இன்னும் நிறைய மழை
பெய்ய இயற்கையை வேண்டுவோம்…” – இதில் நீங்க சொல்லாதது…. மழை அளவுக்கு அதிகமாகப் பெய்யாவிட்டால், தமிழ்னாட்டுக்குத் தண்ணீர் வராது. அங்கு மிகுதியாக இருக்கும் தண்ணீர்தான் இப்போ தமிழ்னாட்டுக்கு வருகிறது.
அதே சமயம், தமிழர்களுக்கு தண்ணீரை, ஆறுகளை மதிக்கத் தெரியாது என்பதும் உண்மைதான். ஆறுகளை மாசுபடுத்துவதிலும், மணல் கொள்ளையடிப்பதிலும் தமிழர்கள்தான் உலகத்தில் நம்பர் ஒன். (அரசியல்வாதிகள், தோல் தொழிற்சாலைக் கொள்ளையர் என்று தப்பிக்கவேண்டாம். அதே அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுப்பதும் காவிரி நீர்ப்படுகை மக்கள்தானே)