…
…

…
இசைச்சித்தர் C.S.ஜெயராமன் …தமிழ்த் திரையுலகில்
வித்தியாசமான ஒரு இசைக்கலைஞர், இசையமைப்பாளர்…
(சில மிகப்பழைய படங்களில் நடித்தும் இருக்கிறார்…)
(அவர் தந்தை சிதம்பரம் சுந்தரம் பிள்ளை அவர்களும் கர்நாடக
இசையில் புகழ் பெற்றவர்… திமுக தலைவர் கலைஞர்
கருணாநிதி அவர்களின் மைத்துனர் CSJ என்பது அவருக்கான
இன்னொரு அறிமுகம் … ). 1950-60 களில் வெளியான தமிழ்த்
திரைப்படங்களில் இவரது பங்களிப்பு அதிகம்.
மிகவும் வித்தியாசமான தனிக்குரல்…
வெகு சுலபமாக அடையாளம் கண்டு விடலாம்…
அவரது பாடல்களில் ஒருவித உருக்கத்தையும், உணர்வையும்,
அழுத்தமான தமிழ் உச்சரிப்பையும் உணர முடியும்…
இன்றைய என் விருப்பமாக திரு.சி.எஸ்.ஜெயராமன் அவர்களின்
பாடல்கள் சில –
அன்பாலே தேடிய என் –
இது தான் உலகமடா – பாசவலை –
விண்ணோடும் முகிலோடும் –
நெஞ்சு பொறுக்குதில்லையே –
தன்னை தானே நம்பாதது சந்தேகம் –
அன்பினாலே உண்டாகும் பாசவலை –
ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் வரும் இந்த பாடலின்
புகழுக்கு காரணம் எம்.ஆர்.ராதா அவர்களின் குரலா…
சி.எஸ்.ஜெயராமன் அவர்களின் குரலா…? அல்லது காட்சியமைப்பா…?
(இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளரும் சி.எஸ்.ஜெ. தான்..)
குற்றம் புரிந்தவன் –
இன்ப தேனோடும் தமிழ் நாடோடும் –
சோகப்பாடல்களில் இவர் குரல் நெஞ்சைப் பிழியும்…
1955-ல் வெளியான (பழைய) நீதிபதி படத்தில்
அத்தகைய ஒரு உச்சகட்ட சோகப்பாடல்…..
(படத்தில் 3 முறை பகுதி, பகுதியாக வரும்…)
தாயும் சேயும் பிரிந்ததை பார்-
இன்றைய தலைமுறை இதுபோன்ற ஒரு பாடலை இதுவரை கேட்டிராது…!!!
பின் சேர்க்கை –
நேயர் விருப்பம்…. 🙂 🙂
உள்ளம் ரெண்டும் ஒண்ணு – புதுமைப்பித்தன்
வெல்க நாடு வெல்க நாடு – காஞ்சி தலைவன்



கே.எம்.சார்,
அற்புதமான செலக்ஷன்.
ஒவ்வொன்றும் ஒரு ஜெம்.
“.வெல்க நாடு ..வெல்க நாடு ” என்ற காஞ்சித்தலைவன் பட பாடலும் …. “.உள்ளம்ரெண்டும் ஒன்று .. நம் உருவந்தானே இரண்டு ” என்ற புதுமைப்பித்தன் பட பாடலும் கேட்டு ரசிக்க தக்கவை தானே ….!!!
செல்வராஜன்,
உற்ற நண்பர்.. உங்களுக்கு நான் குறை வைக்கலாமா…?
இப்போது இடுகையை பாருங்கள்…!!!
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
நன்றி … அய்யா … ! ” வெல்க நாடு வெல்க நாடுபாடலில் ” …… // குழலைப் போலை மழலை பேசும் குழந்தைகளின் முத்தம்
கொஞ்சுகின்ற அஞ்சுகத்தின் கோல மொழி சத்தம் // …. என்கிற வரிகளில் தனது அன்னையாரின் பெயரை இணைத்தும்
// கட்டளைக்குக் காத்திருக்கும் வல்லவனே
களம் நோக்கிப் புறப்படடா வல்லவனே// … என்கிற வரிகளில் அன்றைய தன் கட்சியினருக்கு கூறுவது போலவும் … திரு கலைஞர் அவர்கள் எழுதியிருப்பது உற்று நோக்க தக்கது …
” உள்ளம் ரெண்டும் ஒன்று “…. என்கிற பாடல் காட்சியமைப்பு — இருந்ததை வைத்தே ” வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ” என்பதற்கிணங்க இன்றைய தொழில் நுட்ப்பத்திற்கே சவால் விடுவது போன்று அமைக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது ….!!!
Thanks, KM, for writing on C.S. Jayaraman. I remember that he was a Carnatic musician like Sirkazhi. Many of CSJ’s songs were melodious, very nice to hear, grounded on popular ragas. Some sort of a magic he brought in his singing e.g. two of his melodies which you also mentioned: ‘Anbale Thedi and Vinnodum’. You left out another of his song, ‘Vanna Thamizh Pennoruthi’ (Pavai Vilakku). Incidentally, I thought that the novel by Akilan was far more interesting than the movie. Particularly M.N. Rajam’s role was not brought out as best as in the novel.
Aside from this topic, I have been listening to the series of musical lectures on “Kalangalil Aval Vasantham” Kannadasanai Kondoduvom” organized by Isaikkavi Ramanan. When I was in the US recently, I spent many nights enjoying every one of this series – Ramanan with G.S. Mani, YGP, Parveen Sultana (I admire her deep knowledge on cine music too), Suki Sivam, and Veeramani Raju. In my opinion, people who love the 60s cine music must not miss such programs.Yesterday, I stumbled upon another episode, this time the guest being the versatile speaker Bharathi Bhaskar. During the proceedings, it was a pleasant surprise for me that Ramanan was looking for “Kaviri Mainthan” in the audience. Apparently, you were in the audience. Kavithalaya Krishnan also spoke beautifully in English in one session. First time, I knew he too was one of Sivaji’s core fans.
நண்ப சந்திரமௌலி,
1) வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி – எனக்கும் பிடித்த பாடல் தான். முதலில் சேர்த்திருந்தேன்.
பிறகு மிகவும் அதிக எண்ணிக்கை ஆகி விடும் என்று தோன்றியது. பலர் பார்க்காமலே போய் விடுவர் என்று எடுத்து விட்டேன்.
2) பாவை விளக்கு மாதிரியே, பல நல்ல நாவல்களை, திரைப்படமாக்கும்போது, பாத்திர வடிவம் பல சமயங்களில் சிதைந்து போய்விடுகிறது.. நாம் கற்பனையில் உருவகப்படுத்தியிருந்த பாத்திரத்துடன் ஒன்றிப்போவதில்லை என்பதால் நாம் ஏமாற்றம் அடைகிறோம். கல்கியின் கள்வனின் காதலி மட்டும் இதற்கு விதிவிலக்கு. கதையை அற்புதமாக திரையில் வடித்திருந்தார்கள்…!
3)”கண்ணதாசனை கொண்டாடுவோம்” – நீங்கள் கொடுத்து வைத்தவர்… எல்லா நிகழ்ச்சிகளையும்
பார்த்திருக்கிறீர்கள்… பாரதீய வித்யா பவன் அருகிலேயே வசிக்கிறீர்களா…?
4) திரு.ரமணன் அவர்களுக்கு என்னை தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.
எந்தவிதத்தில் “காவிரிமைந்தன்” அங்கே நினைவுகூறப்பட்டார் சொல்ல முடியுமா…?
இந்த தளத்திற்கு வரும் பல நண்பர்களுக்கு சில விஷயங்களில் ஒரே மாதிரி ரசனை இருப்பது
எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Dear KM
I live in Jakarta. So, I’ve no way of attending musical programs in Chennai. I watched all Isaikkavi Ramanan’s performances on Kannadasan, along with different guest speakers on Youtube only in marathon sessions over several days when I was on a holiday in the US in July last and later, also in Jakarta. The program where Ramanan called out your name was held sometime in August and the guest speaker was Bharathi Bhaskar. The way he waved his hands I thought he might have spotted you among the audience. For sure, he mentioned your name. Our tastes probably match due to our being in the same age group as also holding similar value systems in life. I don’t miss any of your daily blogs and I mostly agree with your thoughts on various matters.
பிங்குபாக்: இசைச்சித்தர் C.S.ஜெயராமன் … என் விருப்பம் – 13 — வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் – தமிழ்பண்ணை.நெட் www