…
…
முன்னாள் சட்டிஸ்கர் முதலமைச்சரும், சட்டிஸ்கர் ஜனதா
காங்கிரசின் தலைவருமான திரு.அஜித் ஜோகி, திரு.ப.சிதம்பரம்
அவர்களை பாதிக்கக்கூடிய ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார்.

முன்னாள் மத்திய நிதியமைச்சரும், தற்போதைய காங்கிரஸ்
கட்சி சார்பிலான ராஜ்ய சபா உறுப்பினருமாகிய திரு.ப.சிதம்பரம்
அவர்களின் மனைவி திருமதி நளினி சிதம்பரம் அவர்களுக்கு
ஒடிஷாவைச் சேர்ந்த பிஜு ஜனதா தள எம்.பி. யான
திரு.பைஜ்யந்த் பாண்டா என்பவரின் குடும்பத்துக்குச் சொந்தமான
Indian Metals and Ferro Alloys Limited (IMFA) நிறுவனத்தில் சில
பங்குகள் ( shares ) இருக்கின்றன என்றும்,

…
திரு.ப.சி.அவர்கள் தேர்தலில் போட்டியிடும் சமயத்தில்,
தேர்தல் கமிஷனுக்கு அளித்திருக்கும், சொத்து சம்பந்தமான
வாக்குமூலத்தில் (affidavit) தன் மனைவி வைத்திருக்கும்
இந்த கம்பெனி ஷேர்களைப்பற்றிய விவரங்களை தராமல்
மறைத்து விட்டார் என்றும் –
சொத்து சம்பந்தமான அபிடவிட்டில் உண்மைகளை மறைத்த
காரணத்தால், திரு.ப.சிதம்பரம் அவர்களின் தேர்தலை ரத்து
செய்ய வேண்டும் என்றும் அவரை ராஜ்ய சபா
எம்.பி.பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்றும்
திரு.அஜித் ஜோகி, தேர்தல் கமிஷனிடம் புகார் செய்திருக்கிறார்.
நானறிந்த வரையில், இந்த ஷேர்களின் விவரங்களை
அபிடவிட்டில் தருவதால், திரு.ப.சி அவர்களுக்கு எந்தவித
பாதகமும் இல்லை. எனவே, தந்திருக்க வேண்டும்..
ஆனால், தராமல் மறைத்தால், பொய்யான தகவலை தேர்தல்
கமிஷனுக்கு அளித்ததாக நிச்சயமாக பிரச்சினை எழும்.
ஆனாலும், இது ஏன் நடந்தது என்பது தெரியவில்லை.
திரு.ப.சி. அவர்கள் எதாவது விளக்கம் கொடுத்தால் தான்
தெரியவரும்.



சொன்னது கை மண் அளவு
சொல்லாதது உலகளவு