திரு.ஸ்டாலின் அவர்களே – இது தகுமோ, இது முறையோ, இது தருமந்தானோ….???



நேற்று திருச்செங்கோட்டில் திமுக தலைவர் கருணாநிதியின்
94-வது பிறந்த நாள் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:

தர்ம யுத்தம் நடத்துவதாக கூறிய ஓபிஎஸ்-க்கு துணை முதல்வர்
பதவி தர்மமாக கிடைத்திருக்கிறது. ஓபிஎஸ், ஈபிஎஸ்
இருவரையும் சேர்த்து வைத்த ஆளுநரின் செயல்பாடு
கேள்விக்குறியதாக இருக்கிறது.

தமிழகத்தில் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் முதல்வர்தான்
செயல்படுகிறார். தற்போதைய தகவலின் படி எடப்பாடிக்கு 26
எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சட்டசபையில் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்தால்
எடப்பாடிக்கு 83 எம்.எல்.ஏக்கள்தான் ஆதரவு தெரிவிப்பர்.

முதல்வர் எடப்பாடிக்கு எதிராக 150 எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பர்.

( http://tamil.oneindia.com/news/tamilnadu/83-mlas-only-support-cm-eps-says-mk-stalin/articlecontent-pf260536-294521.html)

————————————

தமிழகத்தில் சில நாட்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும்….
எப்படி என்பது சஸ்பென்ஸ்- ஸ்டாலின்
Thursday, August 31, 2017, 12:13

திமுகவிடம் 89 எம்.எல்.ஏக்கள் எனும் பந்து இருக்கிறது.
திமுகவிடம் இருக்கும் பந்தை என்ன செய்யப் போகிறோம்
என்பது சஸ்பென்ஸ். ஜனநாயக முறையில் மக்களின்
வாக்குகளைப் பெற்றே ஆட்சி அமைப்போம். திமுக கூட்டணியின்
98 எம்.எல்.ஏக்கள் என்பது 117 ஆகாதா? 200 ஆகவும் மாறும்
என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆட்சி மாற்றம் வரும் என்று
கூறும் ஸ்டாலின் அதை எப்படி ஏற்படுத்துவோம் என்று
கூறாமல் சஸ்பென்ஸ் ஆக வைத்து விட்டு சென்றுவிட்டார்.

(http://tamil.oneindia.com/news/tamilnadu/assembly-poll-tamil-nadu-
soon-mk-stalin-294453.html)
—————————

சேலத்தில் இன்று (ஆகஸ்ட்-31) நடைபெற்ற திருமண விழாவில்
கலந்துகொண்டு பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின் –

இன்னும் சில நாட்கள் காத்திருங்கள். நான் சில வருடங்கள்,
சில மாதங்கள் என்று சொல்லவில்லை. சில நாட்கள் என்றுதான்
கூறுகிறேன். விரைவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த மக்கள்
தயாராக உள்ளனர். அதற்கான சூழ்நிலையை திமுக உருவாக்கித்
தரும்” என்று தெரிவித்துள்ளார்.

———————————————————-

இப்போதே “நம்பிக்கை இல்லா தீர்மானம்” வந்தாலும்,
எடப்பாடி அரசுக்கு எதிராக 150 எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பர்
என்று சொல்லி விட்டு –

இந்த அவலம் எப்போது முடிவிற்கு வருமென்று – இன்று
தூக்கம் வராமல், பைத்தியம் பிடித்து அலைந்து கொண்டிருக்கும் தமிழக மக்களை பற்றி கவலைப்படாமல் –

திரு.ஸ்டாலின் அவர்கள் இப்படி க்ளைமாக்ஸில் சஸ்பென்ஸ்
வைத்து, இழுத்தடித்து – மக்களை வதைப்பது சரியா …?
இது தகுமோ, இது முறையோ, இது தருமந்தானோ….???

மக்கள் இவரைத்தானே அடுத்த கதாநாயகன் என்று நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள்….!

ஆனால், இவர் க்ளைமாக்ஸை முடிப்பதற்கு வேறு யாரிடமிருந்தோ “சிக்னலை” எதிர்பார்த்தால் எப்படி…???

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to திரு.ஸ்டாலின் அவர்களே – இது தகுமோ, இது முறையோ, இது தருமந்தானோ….???

  1. Sudhagar's avatar Sudhagar சொல்கிறார்:

    People are not of the opinion that he is the Hero. Please do not make an opinion among innocents by stating so.

  2. உண்மைவிளம்பி's avatar உண்மைவிளம்பி சொல்கிறார்:

    அரசியல் என்பது கலை. Born culprits will do far better. கருணாநிதி, செத்த வீட்டிலும், இறந்தவரைவிட பெயர் பெற்றுவிடும், தன்னை முன்னிலைப்படுத்தும் திறமை பெற்றவர். “எனக்கு அந்த பொம்மை வேணும், அந்த அங்கிள்டேர்ந்து வாங்கித்தா ம் ம்ம் ம்ம்ம்” என்று அடம் பிடிக்கும் குழந்தையைவிட மோசமான நிலைமை ஸ்டாலினுக்கு. அரசயலில் இல்லாத எனக்கே, ஆட்சியைக் கவிழ்க்கணும்னா என்ன செய்யணும் இப்போ, சட்டப்படி என்ன செய்யலாம் என்று தெரியும். இத்தனை வழக்கறிஞர்கள், அரசியல் ஆலோசகர்கள் இருந்து என்ன பிரயோசனம். கைப்புள்ள வடிவேல் நிலைமையில் இருக்கிறாரே தளபதி!!!

    • இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

      வடிவேலு தேவலையே அய்யா; அவர் வேட்டி கட்டிக்கொண்டு கிரிக்கெட்
      ஆட மாட்டாரே 🙂 🙂

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        இளங்கோ- நம்ம ஆள், ஷூ போட்டுக்கிட்டு விவசாயம் பண்ணுவார், டிபன் பாக்சுல வீட்டுலேர்ந்து சாப்பாடு எடுத்துட்டுப் போய், ஹோட்டல்ல உட்கார்ந்து சாப்பிடுறமாதிரி போஸ் கொடுப்பார். ‘சட்டம் சட்டம்’ என்று பேசிக்கொண்டே ஆட்டோவில் நின்றுகொண்டு பிரயாணம் செய்வார். அவருக்கு வேட்டி கட்டி கிரிக்கெட் விளையாடுவதா பிரமாதம்? நான், எப்படி இவர், சரியாக கிரிக்கெட் பேட் வைத்து கிரிக்கெட் விளையாடணும்னு தெரிஞ்சுவைத்திருக்கிறார் என்று யோசிக்கிறேன்.

        65 வயசாச்சு. எப்படி இளைஞரைக் கவரணும்னு இன்னும் அவருக்கு சரியா பிடிபடலை.

  3. paamaranselvarajan's avatar paamaranselvarajan சொல்கிறார்:

    // மக்கள் இவரைத்தானே அடுத்த கதாநாயகன் என்று நினைத்துக்
    கொண்டிருக்கிறார்கள்….! // சினிமாவில் என்றால் மகன் காேபித்துக் காெள்ள பாேகிறார் …! அதுக்கெல்லாம் இவர் சரிப்பட்டு வருவாரா …?

  4. இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

    // இன்னும் சில நாட்கள் காத்திருங்கள். நான் சில வருடங்கள்,
    சில மாதங்கள் என்று சொல்லவில்லை. சில நாட்கள் என்றுதான்
    கூறுகிறேன். விரைவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த மக்கள்
    தயாராக உள்ளனர். அதற்கான சூழ்நிலையை திமுக உருவாக்கித்
    தரும்” என்று தெரிவித்துள்ளார்.//

    கனவு காண்கிறார் எம்கேஎஸ். எடப்பாடி அரசாங்கம் கவிழ்ந்தாலும் கூட தேர்தல் இப்போதைக்கு இருக்காது என்பது இவருக்கு புரியாவிட்டாலும் நமக்கு புரிகிறதே.

    • தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

      தளபதி கனவு காண்பது, தன்னிடம் 98 (அல்லது 89). தினகரன் வெளியிலிருந்து ஆதரவு 30. போதுமே முதல்வராக. (பீகாரை மனதில் வைத்து)

      ஆனால், பின்புலத்தில் இருப்பது பாஜக. அதனால் கவர்னருக்கு விஷயத்தை ஆறப்போடவோ, அல்லது தேர்தல் கமிஷன்மூலம் தினகரனுக்கு குடைச்சல் கொடுக்கவோ அல்லது தினகரனின் வழக்குகளை சூடுபிடிக்க வைக்கவோ எவ்வளவு நேரம் ஆகும்?

      தினகரன்-மன்னார்குடி கும்பலுக்கு ஆட்சி தேவையில்லை. கட்சிதான் முக்கியம். அதுதான் காசு உற்பத்தி செய்யும் தொழில். தேர்தல் கமிஷன், சசிகலா பொதுச்செயலாளரானது செல்லாது என்று சொல்லிவிட்டால் போதும். அதுக்கு காலம் தாழ்த்தினால், தினகரன் எல்லா போஸ்டுகளுக்கும் த்ங்கள் ஆட்களைக் கொண்டுவந்து வாக்கெடுப்பு நடத்தி தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்ளுவார்.

  5. paamaranselvarajan's avatar paamaranselvarajan சொல்கிறார்:

    ஒரு வருந்ததக்க செய்தி … +2 தேர்வில் 1176 மார்க் எடுத்து இருந்தும் .. நீட் என்கிற அட்டூழியத்தால் .. மருத்துவர் படிப்பு சீட் கிடைக்காததால் .. அரியலூர் மாணவி தற்காெலை செய்துக் காெண்டார் என்ற செய்தி வேதனை அளிக்கிறது. … எவ்வளவு கேடு கெட்ட அரசுகளின் பிடியில் நாம் சிக்கி காெண்டு இருக்கிறாேம் என்பதை அனைவரும் உணரவேண்டும் … !!!

    • உண்மைவிளம்பி's avatar உண்மைவிளம்பி சொல்கிறார்:

      செல்வராஜன் சார் – எனக்கு இதுல மாற்றுக்கருத்து உண்டு. ஸ்டேட் போர்டுல எப்படி மார்க் போடறாங்கன்னு எல்லாருக்கும் தெரியும். நீட் தேர்வு காங்கிரஸ், திமுக ஆட்சியில் ஆரம்பித்த கதை. ஒரு வருடத்துக்கு முன்னாலேயே நீட் தேர்வு பற்றி செய்திகள் வந்தாச்சு. புரிந்து படிக்காமல், வெறும் மனப்பாடக் கல்விதான் தமிழ்நாட்டுல, கல்லூரி வரை இருக்கு. PG படிக்கறவங்கள்ல 100க்கு 90 பேர் மனப்பாடம் செய்வதுதான் பாஸாகிறார்கள். அதே மனப்பாடத்தை வச்சு நீட் தேர்வோ அல்லது எந்த காம்பெடிடிவ் தேர்வோ எழுதமுடியாது. ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகமுடியாது. ப்ரொஃபஷனலாக ஆவது கடினம்.

      ரெண்டாவது, ஏழை எளிய குடும்பங்கள் என்ற பஞ்சப்பாட்டு நீட் தேர்வுக்குமட்டும் கிடையாது. சென்னைல இருக்கற மாணவனோடு, நகரத்தில் இருக்கற மாணவனோடு, எல்லா கிராம்ப்புற பின்னணி உள்ள மாணவர்கள் போட்டியிடமுடியாது. நாமக்கல் கோழிப்பண்ணைப் பள்ளிகளோடு எந்த கிராமப்புற அல்லது மற்ற சாதாரணப் பள்ளிகளில் படிக்கும் மாணவர் போட்டிபோடமுடியும்? அதைப்பற்றி யார் இதுவரை பேசியிருக்கிறார்கள்? ஏழை மாணவர்கள், டியூஷன், உணவு மற்ற சௌகரியங்கள் இல்லாதவர்கள் எப்படி மற்றவர்களோடு சரிசம்மாகப் போட்டியிட முடியும்?

      மருத்துவம் படிப்பதற்கு, மற்றவர்கள் உடல் நோய் அனலைஸ் செய்ய தகுந்த மனத்திண்மை வேண்டும். மருத்துவத்தின் பல்வேறு பிரிவுகளைப் படிக்க எந்தச் சூழ்நிலையையும் மேனேஜ் பண்ணும் திறமையும் வேண்டும். அந்த மாணவியின் தற்கொலைக்கு அனுதாப்ப்படுகிறேன். பாவம், அறியாப் பெண், அவரைச் சுற்றி இருந்தவர்களும், கல்வி கற்பித்தவர்களும் அவருக்கு பாடத்தை மனப்பாடம் செய்வதைத் தவிர வேறு எதுவும் சொல்லிக்கொடுக்கவில்லை போலிருக்கிறது. அவருக்கு மருத்துவ சீட்டிற்கு தகுதி இருப்பதுபோல் எனக்குத் தெரியவில்லை.

      இப்போது அரசியல்வாதிகளுக்கு ரொம்பக் கொண்டாட்டம். அந்த மரணத்தை வைத்து அரசியல் வாழ்வு சில வாரங்களுக்கு ஓடும் (மது போராளி சசி பெருமாள் மரணத்தை வைத்து அரசியல் செய்துவிட்டு இப்போ பார் முதலாளிகளாகவும், அனுதினமும் மது குடிப்பவர்களாகவும், சாராயத் தொழிற்சாலை நடத்தும் அரசியல்வாதிகளாகவும் இருக்கிறார்கள்)

  6. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    மிகவும் வருத்தமாக இருக்கிறது.
    என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

    கல்வியிலும் அரசியல்..
    அரசியல்வாதிகளின் கையில் சிக்கிக்கொண்டு
    இந்த நாடே சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது.

    ஆனால்,1176 மார்க் எடுக்கும் அளவுக்கு புத்திசாலியாக
    இருந்த அந்த பெண், இப்படி தன்னம்பிக்கையே இல்லாதவராக
    போனது எப்படி என்று தான் புரியவில்லை.

    மெடிகல் சீட் இல்லை சரி.. ஆனால், தன்னை நம்பியிருக்கும் தாய்,தந்தை,
    மற்றும் குடும்பத்தை தன்னுடைய பிரிவு எத்தகைய சோகத்தில் ஆழ்த்திவிடும்
    என்பதை அந்த பெண் எப்படி உணராமல் போனாள்..?

    மெடிகல் இல்லையென்றால் என்ன..
    மெடிகலோடு வாழ்க்கை முடிந்து விட்டதா என்ன…?

    இன்னும் ஆயிரம் படிப்புகள், தேர்வுகள்…
    வாழ்க்கையில் முன்னேற …

    அவளை சுற்றியுள்ளவர்கள்,
    அவளது வழிகாட்டிகள்,
    இந்த நம்பிக்கையை அவளுக்கு ஊட்டி இருக்க வேண்டும்…

    அவளது இந்த மோசமான முடிவிற்கு அவளைச்சுற்றி இருப்பவர்களும்
    ஒரு முக்கிய காரணம். மெடிகல் சீட் கிடைப்பதில் இருக்கும்
    நிலையற்ற, நிச்சயமற்ற தன்மையை – ஏற்கெனவே அவர்கள் அவளுக்கு எடுத்துச்சொல்லி அவள் மனதை பக்குவப்படுத்தி இருக்க வேண்டும்.

    -காவிரிமைந்தன்

  7. paamaranselvarajan's avatar paamaranselvarajan சொல்கிறார்:

    இந்தியா முழுக்க பள்ளிகளில் ஒரே பாடத்திட்டம் என்பதை அமல் படுத்திய பின் இது பாேன்ற தேர்வுகளை புகுத்தியிருந்தால் +2 தேர்வில 98 சதவீத மதிப்பெண் பெற்ற அனிதாவால் எளிதாக எதிர்க் காெண்டு இருக்க முடியும் … ஒரு மருத்துவ கல்வி பயில பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் இவர்பெற்ற மதிப்பெண்களை
    விட வேறு என்ன தகுதி வேண்டும் ….?

    இவரும் பல விதங்களில் பாேராடி பார்த்தும் … அரசுகளும் … நீதித்துறையும் கை விரித்து விட்ட நிலையில் … மருத்துவராக வேண்டும் என்ற கனவுகள் சிதைந்தால் அவர் இந்த முடிவுக்கு வந்தள்ளது அனைவரும் அறிந்த ஒன்று … அரசுகளை குறை கூற கூச்சப்படும்… பயப்படும் … பலரும் பலவித சப்பைக்கட்டுகளை கட்டுவது வாடிக்கையான ஒன்று …

    இனியாவது இது பாேன்ற உயிரிழைப்புகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க ” காேமாளிகளின் அரசும் .. இவர்களை தலையாட்டி பாெம்மைகளாக ” மாற்றியுள்ளவர்களும் ஆவன செய்வார்களா….?

  8. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    மாநிலங்களின் பட்டியலில் இருந்த கல்வியை
    மத்திய அரசு தன் கையில் எடுத்துக் கொண்டது இந்த இழப்பின் அடிப்படைக் காரணமாக அமைந்தது என்று கூட சொல்லலாம்.

    கல்வி முழுக்க முழுக்க மாநில மக்கள் சம்பந்தப்பட்ட விஷயம்..
    மாநில உணர்வுகளோடு இழைந்த விஷயம்…
    அதிலும் மத்திய அரசின் தலையீடு ஏன்…?

    -காவிரிமைந்தன்

  9. Dhamodharan Subramaniam's avatar Dhamodharan Subramaniam சொல்கிறார்:

    BJP government has systematically interfered in institutions like RBI, Election Commission and other institutions. PM Modi is always in Poll Mode. He used Demo to BJP benefit. Reduced GDP by 1.5% in 3 years time even when Petrol prices were less, no external factors like war etc. Now we have seen around 10 ministers resigning from cabinet so that they can concentrate on 2019 elections. We need to tame this dragon by not giving full majority in next elections. ( because i believe opposition cannot win).

  10. MANI's avatar MANI சொல்கிறார்:

    In 2019 elections BJP should not get the brutal majority it got in 2014 elections, Thereby it has to
    depend on some regional parties .Then only they can be tamed and their aggressive programmes
    like demonetisation(which i think is a failure) aadhaar enrolling education policies financial policies
    and de nationalisation of public sector for the benefit of corporates will not take place,
    An umbrella of regional parties and other national parties should be
    formed to fight the election in 2019

  11. இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

    ’’இந்நேரம் தமிழ்நாடு முதலமைச்சராக ஜெயலலிதா இருந்திருந்தால் அனிதா தற்கொலை செய்துகொள்ளும் சூழல் ஏற்பட்டிருக்காது. உறுதியான முடிவெடுத்து தமிழகத்துக்கு நீட் தேர்வுக்கு விலக்கு வாங்கிக் கொடுத்திருப்பார்’’

    என்று, தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் சகோதரரான அறிவுநீதி கண் கலங்கியபடியே கூறினார்.

    • தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

      ஜெ செய்திருப்பார். இதில் மட்டுமல்ல இன்னும் பலவற்றில் தைரியமாக நின்றிருப்பார். கருணாநிதி ஸ்டாலின் போன்று தங்கள் குடும்ப நலனே முக்கியம் என்று வெற்று அரசியல் செய்திருக்கமாட்டார்கள்.

      ஆனாலும் இந்த ஹோல் எபிசோடும் டிராமாதான். கிராமத்துப் பெண்ணிற்கு கோர்ட்டுக்குப் போகத் தெரிகிறது. ஆனால் தற்கொலை செய்துகொள்கிறார். மார்க் வாங்கினாலும், கல்வி அவருக்கு ஒன்றும் கற்றுக்கொடுக்கவில்லை. இன்னொரு கேசில் அம்மா தற்கொலை. இதற்கும் சசிபெருமாள் எவ்வளவு ஒற்றுமை. களவாணிகள (காரணமானவர்களே) அரசியல் செய்வது. கக்கன்ஜி, ஜீவா போன்றோருக்கு அப்புறம் ஒரு அரசியல்வாதி அரசு மருத்துவமனைக்குப் போனதைக் காட்டுங்கள். இதோ… அரசியல் முடிந்ததும் ஸ்டாலின் லண்டன் சென்று ஆரியர்களிடம் மருத்துவம் பார்க்கச் சென்றுவிடுவார்.

  12. N S. Raman's avatar N S. Raman சொல்கிறார்:

    NEET is an initiative from Supreme Court to regulate the admission process
    Where is the question of state sentiments in medical education when
    85 percentage state quota filed by Tamil Nadu students.

    SC provided interim relief to Tamil Nadu last year and our cheap politician want show as their success. This includes BJP ministers.

    This year they defeated in front of judiciary

    When SC giving favourable judgement beneficiaries supporting judiciary if the same is against to them they want to follow social justice.

    All political parties running medical collegs why they can’t accommodate such affected students without fees.

    Tamil Nadu leaders why they are running to private hospital and calling doctors from London and this shows their confidence on our system.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.