…
…

…
நடந்த ஊழல் அத்தனைக்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது
என்கிறார் திருமதி சசிகலாவின் சகோதரர்,
திருவாளர் தினகரனின் தாய்மாமன் –
திருவாளர் திவாகரன்…!
ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர்
பேசியதிலிருந்து ஒரு பகுதி –
——————————————
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான
ஆட்சியின் ஆயுட்காலம் எண்ணப்பட்டு வருகிறது…
பொதுப்பணித் துறை, சமூக நலத் துறை, வனத் துறை என
ஆட்சியின் பல்வேறு துறைகளிலும் ஊழல் நிறைந்திருக்கிறது.
எங்களுடைய ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் முதல்வருக்குக்
கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்கிக்கொண்டார்கள். அதற்கு
கவர்னர் என்ன செய்ய வேண்டும்? சட்டமன்ற உறுப்பினர்களைக்
கூட்டி புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்க உத்தரவிட வேண்டும்.
ஆனால், உட்கட்சி பிரச்னை என்று முறையற்ற பதிலை
கவர்னர் சொல்லுகிறார். எங்களது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள்
19 பேர் மட்டும் இல்லை. எங்களுக்கு 48 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு
தெரிவித்து இருக்கிறார்கள். முதலமைச்சர் மீது நம்பிக்கை
இழந்துவிட்டதாக 19 பேர் கவர்னரிடம் கடிதம் கொடுத்தது
போதும், 48 பேரும் கடிதம் கொடுக்க வேண்டாம் என்று
நாங்கள்தான் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
கொங்கு மண்டலத்தில் 4 எம்.எல்.ஏ-க்கள் எங்களுக்கு ஆதரவு
தெரிவித்து இருக்கிறார்கள். அவர்களைத் தவிர நிறைய பேர்
என்னிடம் நேற்று போனில் பேசினார்கள். “அண்ணா நாங்கள்
கல்யாணத்துக்குச் சென்றுவிட்டதால் உங்களைச் சந்திக்க
முடியவில்லை” என்று கூறினார்கள்.
சுறுசுறுப்பான ஆட்சியாக, ஊழல் இல்லாத ஆட்சியாக இயங்க
வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி
அண்ணன் தோல்வி அடைந்துவிட்டார். கட்சியையும்,
ஆட்சியையும் அவர் இழந்துவிட்டார்.
ஆயிரக்கணக்கான பேரிடம் தட்கல் கனெக்ஷன் என்று சொல்லி
ஒவ்வொருவரிடமும் ரூ.3 லட்சம் வசூலித்து இருக்கிறார்கள்.
ஊழல் புகார் என ஏதாவது ஒன்று, இரண்டு இருந்தால்
சொல்லலாம். ஆனால் எல்லாவற்றிலும் ஊழலாக இருக்கிறது
தற்போது அரசு கான்ட்ராக்ட் வேலைகளுக்கு 24 சதவிகிதம்
லஞ்சம் வாங்குகிறார்கள். சத்துணவு ஆயா வேலைக்கு
ரூ.2 லட்சமும், வனத்துறை டி.எஃப்.ஓ.,க்கு கீழ் இருக்கும்
ஊழியர்களுக்கு ரூ.5 லட்சமும், டி.எஃப்.ஓ.,மாறுதலுக்கு
ரூ.10 லட்சமும் வாங்குகிறார்கள். இதற்கெல்லாம் ஆதாரங்கள்
எங்களிடம் இருக்கிறது.
——————————————–
தினகரன் அவர்களின் தாய்மாமன் திவாகரன் அவர்களே
சொல்லி விட்டார் சகல ஊழல்களுக்கும் தன்னிடம் ஆதாரம்
இருப்பதாக…!!!
கூடவே இருந்தவர் தானே,
இவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
பிறகென்ன, சிபிஐ – லஞ்ச ஊழல்களுக்கான ஆதாரங்களை
தேடி எங்கெங்கோ அலைவானேன்… தாய்மாமன் திவாகரன்
வீட்டில் ஒரு ரெய்டு விட்டால் சகல ஆதாரங்களும்
ஒரே இடத்தில் கிடைத்து விடுமே….
ஒரே கல்லுல…. ஏகப்பட்ட மாங்கா…!!!
திவாகரன் அவர்கள் தானாகவே முன்வந்து
ஏற்படுத்திக்கொடுக்கும் இந்த வாய்ப்பை சிபிஐ, அமலாக்கப்பிரிவு
போன்ற புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்திக் கொள்ளுமா…?



இரண்டு கட்சிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. திமுக முழுக்க முழுக்க ஊழல் கட்சி. குடும்ப நலனுக்காகவே இருக்கும் கட்சி. ஊர் நாட்டாமைகளைத் தவிர மற்ற எல்லோரும் அங்கு…