பித்து பிடித்த சுவாமியார்…!!!




இவருக்கு என்ன தான் ஆயிற்று ….???
இவர் சொல்வதை தமிழ்நாட்டில் யார் கேட்கிறார்கள்…?
பிறகு ஏன் திரும்ப திரும்ப சம்மன் இல்லாமலே ஆஜராகிறார்
சுவாமியார்… ?

திமுக, காங்கிரஸ் கட்சித்தலைவர்கள் இன்று காலையில்,
ஜனாதிபதியை சந்தித்து எடப்பாடியார் ஆட்சி தமிழகத்தில்
நம்பிக்கை ஓட்டு பெற – தமிழக கவர்னருக்கு
உத்திரவிட வேண்டுமென்று கோரிக்கை வைத்து விட்டு
வந்த உடனேயே –

சுவாமியார் ஜனாதிபதியை போய் பார்த்திருக்கிறார்….தமிழக
அரசியல் நிலையில் எத்தகைய மேல் நடவடிக்கை எடுக்க
வேண்டுமென்று ஜனாதிபதிக்கு “அட்வைஸ்” செய்து விட்டு
வந்திருக்கிறார்…!!! ட்வீட் கீழே –

——————

Subramanian Swamy‏

As a nominated MP (by the President) I paid a courtesy call to Rashtrapati Bhavan just now. I apprised him of the political scene in TN.

12:36 AM – 31 Aug 2017

———————–

அடுத்து எடப்பாடியாருக்கு அட்வைஸ்….
அதிமுகவின் ஒற்றுமைக்காக, அவர் முதலமைச்சர் பதவியை
தியாகம் செய்ய வேண்டுமாம்…

செய்து விட்டு…..?

தினகரன் குழுவினரின் விருப்பப்படி, சபாநாயகர் தனபால்
அவர்களை சி.எம். ஆக்க வேண்டுமாம். ட்வீட் கீழே –

——————————-

Subramanian Swamy‏

Stalin has erred. He has brought on board Congis Commies Jihadis etc. Now EPS must sacrifice for ADMK unity by resigning. Speaker be made CM

12:50 AM – 31 Aug 2017

————————————-

நம் தமிழக மக்களை விடுங்கள்…
அவர்களுக்கு இதெல்லாம் சகஜம்.

ஆனால், சுவாமியாரின் சித்தம் மேலும் கலங்காதிருக்கவாவது,
தமிழக அரசியல் அவலம் சீக்கிரமாக ஒரு முடிவிற்கு வந்தால்
தேவலை… 🙂 🙂 🙂

என்ன, எடப்பாடியார் தியாகத்திற்கு தயாராக வேண்டும்..!!!
கட்சிக்காக எவ்வளவோ செய்திருக்கிறார்…!!!
இதைச் செய்ய மாட்டாரா என்ன… 🙂

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to பித்து பிடித்த சுவாமியார்…!!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    ஏற்கனவே எழுதியதுதான். ‘பித்து பிடித்தல்ல’ அதைவிட Insane என்று சொல்வது இன்னும் strong ஆக இருப்பதுபோல் தெரிகிறது. இவரைப் போல் ‘நன்றி கெட்டவர்’ பலரைப் பார்த்து, அரசியல்வாதிகள் என்றாலே வெறுப்பு வருகிறது. இத்தகைய மக்கள் அரசியலில் வேறு வளர்ந்த தேசத்தில் இருந்தால் என்றைக்கோ வெளியேற்றப்பட்டிருப்பார்கள்.

    ஒருவன் கடைசி காலத்தில், அவனை மற்றவர்கள் நல்லவிதத்தில் நினைவுகூறுமாறு வைக்கவேண்டும். சு.சுவாமி நிச்சயம் ஒரு வீணாய்ப்போன அரசியல்வியாதி.

  2. paamaranselvarajan's avatar paamaranselvarajan சொல்கிறார்:

    படம் அருமை ….! ” விசுவாசத்தை ” காட்டுகிற …. நாய் …?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.