நழுவுவது கவர்னரா அல்லது திருவாளர் ஸ்டாலின் அவர்களா…?



திருவாளர் ஸ்டாலினில் துவங்கி எதிர்க்கட்சிகள்
அனைத்துமே, திரும்ப திரும்ப – எடப்பாடி அவர்களின் அரசு
” நம்பிக்கை வாக்கெடுப்பை ” நடத்த வேண்டுமென்று
வலியுறுத்தி கொண்டிருக்கிறார்கள். இதைச் செய்யும்படி
வலியுறுத்த தவறுவதன் மூலம் கவர்னர் தன் பொறுப்பிலிருந்து நழுவுகிறார் என்று கவர்னர் மீது குற்றம் சாட்டுகிறார்கள்.

இன்று காலையில் கவர்னரை சந்தித்து விட்டு வெளியே வந்த
திரு.திருமாவளவன் –



19 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அந்த கட்சியிலேயே இன்னும்
தொடர்கிற நிலையில் தான் செய்வதற்கு எதுவும் இல்லை
என்றும்,

அவர்கள் கட்சியை விட்டு வெளியேறினாலோ, அல்லது
கட்சி அவர்களை வெளியேற்றினாலோ தான் – கவர்னர்
தலையிடக்கூடிய சூழ்நிலை உருவாகும் என்றும்,

தற்போது நிகழ்ந்து கொண்டிருப்பது முழுக்க முழுக்க அதிமுக
வுக்குள்ளாகவே நிகழ்ந்து கொண்டிருக்கும் உட்கட்சி பிரச்சினை
தான் என்றும் –

சட்டபூர்வமாக கவர்னர் இதில் தலையிட எதுவும் இல்லை
என்றும் கவர்னர் அவர்கள் தெரிவித்ததாக கூறி இருக்கிறார்.

சட்டபூர்வமாக, கவர்னர் கூறுவது நூற்றுக்கு நூறு சரியே.
இதில் திரும்ப திரும்ப கவர்னரையே குறை
கூறிக்கொண்டிருப்பது மக்களை திசை திருப்பும் வேலை.

இப்படி சொன்னால் இன்னும் அழுத்தமாக புரியும்…
ஒரு உதாரணத்திற்கு –

ஒரு பத்து திமுக எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்து, திரு ஸ்டாலின்
அவர்களின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்து,
எதிர்க்கட்சித்தலைவராக ஸ்டாலின் அவர்கள் தொடர்வதில்
தங்களுக்கு சம்மதம் இல்லையென்றும், ஸ்டாலினுக்கு மாற்றாக

ஒரு புதிய எதிர்க்கட்சித்தலைவரை தேர்ந்தெடுக்க கவர்னர்
உத்திரவிட வேண்டும் என்றும், கவர்னரிடம் மனு கொடுத்தால் எப்படி இருக்கும்…?

படு முட்டாள்தனமாக இருக்கும் அல்லவா…?

அதே போலத்தான், சட்டமன்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள்
அனைவரும் கூடிய கூட்டத்தில் தான் எடப்பாடி அவர்கள்
சட்டமன்ற அதிமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு,
முதலமைச்சராக பதவி ஏற்றார்….

அவரை மாற்றி விட்டு, வேறு புதிய அதிமுக முதலமைச்சரை
கொண்டு வர வேண்டுமானால், அதற்கான இடம் கவர்னரின்
ராஜ்பவன் அல்ல…. சட்டமன்ற அதிமுக கட்சிக் கூட்டம்…!

135 எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக
பொறுப்பேற்ற ஒருவரை – வெறும் 19 எம்.எல்.ஏ.க்களுக்கு
பிடிக்கவில்லை என்பதால், வெளியேற்றி விட முடியுமா…?

இது தான் கவர்னரின் வேலையா…?

இதை செய்யத்தவறினால், கவர்னர் தன் பொறுப்பிலிருந்து
நழுவுகிறார் என்று குறை கூறுவதா…?

உண்மையில் யார் நழுவுகிறார்கள்…?
வெண்ணையை கையில் வைத்துக் கொண்டு நெய்க்கு
அலைவது போல் நடிப்பது யார்…?

ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தயாரித்து, அதில்
24 திமுக எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்து போட்டு சபாநாயகரிடம் கொடுத்தால், அவர் தானாகவே சட்டமன்ற கூட்டத்தை கூட்டப்போகிறார். பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டதாக இவர்களால் சொல்லப்படுகிற எடப்பாடி அவர்களின் மீது சட்டமன்றத்தில் “நம்பிக்கை இல்லா தீர்மானத்தை” நிறைவேற்ற வேண்டியது தானே…?

யார் இவர்களை தடுக்கிறார்கள்…?
இதைச் செய்வதை விட்டு, கவர்னரை போய் பார்ப்பதும்,
ஜனாதிபதியை போய் பார்ப்பதும், கோர்ட்டுக்கு போவோம் –
சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று சவால் விடுவதும்
யாரை ஏமாற்ற…?

பொது மக்கள் அத்தனை பேரும் முட்டாள்கள் என்று
எதிர்க்கட்சித் தலைவர் நினைத்துக் கொண்டிருக்கிறாரா…?

ஆளும் கட்சி ஒருவிதத்தில் மக்களை மடையராக்கி வைத்திருக்கிறது. வெவ்வேறு அணிகளாக பிரிந்து மேலும் ஏமாற்றுகிறது. இன்னொரு புறம் எதிர்க்கட்சியும் மக்களை முட்டாள்களாக்க முயற்சி செய்கிறது…!

திரு.திருமா உட்பட மற்ற எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் –

– சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான திரு.ஸ்டாலின்
அவர்களை “எடப்பாடி அவர்களின் அரசின் மீது
நம்பிக்கை இல்லா தீர்மானம் ” கொண்டு வரும்படி
வலியுறுத்தாதது ஏன்…? அதைப்பற்றி பேச்சு, மூச்சே காணோம்…?

அரசியல்வாதிகள் அனைவருமே, அவரவர் வசதிக்கு, அவர்களுக்கு தோதான வகையில் நாடகம் ஆடுகிறார்கள்….
சரி…காசு செலவழிக்காமல் வேடிக்கை பார்ப்பதில் நமக்கு
ஆட்சேபணை ஏதும் இல்லை…

ஆனால், வேடிக்கை பார்ப்பவர்களை ஒன்றுமறியாத முட்டாள்கள் என்று யாராவது நினைத்து செயல்பட்டால் – இறுதியில் அவர்களே………
ஆவார்கள் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ள
வேண்டும்…!!!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to நழுவுவது கவர்னரா அல்லது திருவாளர் ஸ்டாலின் அவர்களா…?

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    நல்ல அலசல். சரியான கருத்து கா மை சார். இப்போ பிரச்சனை ரெண்டு விதம்.

    1. எடப்பாடி தொடர்ந்தால், அது ஒரு வழிப்பாதை. கட்சியை அவர்கள் ஆக்கிரமிப்பதில் கொண்டுபோய்விடும். (ஆட்சி அவங்க கிட்ட இருக்கு). இதை மன்னார்குடி ஜீரணிக்க முடியாது. அதனால்தான் கருத்து வேறுபாடு இருந்தபோதும் மன்னார்குடி கும்பல் ஒன்று சேர்கிறது. அதுபோல் அவர்கள், அவர்களுடைய சாதியினரின் ஆதரவைப் பெற முயற்சிக்கிறார்கள் (செந்தில், தங்க தமிழ்ச்செல்வன் போன்றோர்). மற்றவர்களைக் காசு கொடுத்து வளைக்கிறார்கள். இப்போதுள்ள எடப்பாடி/ஓபிஎஸ் அதிமுக, பாஜக சார்பானது என்பதனால், பாஜக பிடிக்காத பலரும் தினகரனை ஆதரிக்கிறார்கள் (திருமா, கி.வீரமணி போன்ற பல அல்லக்கைகளுக்கு இதுதான் வேலை).

    2. ஸ்டாலின் அவர்களுக்கு முதலமைச்சர் பதவியில் உட்கார்ந்துவிட அவ்வளவு அவசரம். ஏதாவது நடந்துவிடாதா என்று தினமும் எதிர்பார்க்கிறார். அவருக்கு தினகரன் அதிமுக கட்சியைப் பிடிப்பது இன்னும் நல்லது (மன்னார்குடி கும்பலுக்கு அவ்வளவு நல்ல பெயர்). அதனால், கம்பேரிடிவ்லி, மக்கள் தன்னை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை.

    இதுல, தினகரனுக்கு, மத்திய அரசின் ஆதரவு இல்லாதது பெரிய பிரச்சனை. இப்போ ஆட்சி கவிழ்ந்தா அதைப் பற்றி தினகரனுக்குக் கவலை இல்லை. கட்சி தங்கள்ட இருக்கும், ரெட்டை இலை கிடைக்கலாம். தங்கள் சாராய மற்றும் பல தொழில்கள் சிறப்பா நடக்கும். ஸ்டாலினால் தொந்தரவு வராது (ஏன்னா, அவருக்கும் இவரது ஆதரவு வேண்டும். திரைத்துறையில் இருவரும் சேர்ந்தால் உதயனிதிக்கு அது நல்லது)

    ஒருவேளை, ஆட்சி கவிழ்ந்து, எடப்பாடி/ஓபிஎஸ் கையில் கட்சி போகுமாறு செய்து இரட்டை இலை கிடைத்தால், ஓரளவு எம்.எல்.ஏக்கள் அதிமுகவுக்குக் கிட்டும் (திமுக ஆட்சி அமைத்தாலும்). அது பிற்காலத்தில் திமுகவுக்கு மாற்றாக அவர்களைக் கொண்டுசெல்லும்.

    ஆனாலும், ‘இந்துத்துவா’ என்ற வழியைத் தவிர, தமிழகத்தில் பாஜக வளர வேறு வாய்ப்பே இல்லை. கூட்டணிலாம் வச்சு அவர்கள் கட்சியை தமிழகத்தில் வளர்க்கமுடியாது.

    பார்ப்போம்… நிலைமை எப்படிப் போகிறது என்று.

  2. ramanujam's avatar ramanujam சொல்கிறார்:

    உங் கருத்து சரியே!

  3. MANI's avatar MANI சொல்கிறார்:

    ஸ்டாலின் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து
    அப்போது ஆட்சி போகக்கூடாது என்ற நிலை எடுத்து
    அனைத்து அதிமுக உறுப்பினர்களும் ஆதரவாக
    வாக்களித்து விட்டால் தீர்மானம் தோற்கடிக்கப்படும்.
    தான் எந்த முயற்சியும் எடுக்காமல் பழம் நழுவி பாலில்
    விழும் என்று அவரது தந்தை விஜயகாந்த் கூட்டணிக்கு
    எதிர்பார்த்தது போல் காத்து இருக்கிறார்.

  4. Prakash P's avatar Prakash P சொல்கிறார்:

    These drama’s are to hide NEET issue, state goverment silently closed the medical counselling.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.