…
…

1862-ல் வேப்பேரியில்
ஒரு பள்ளிக்கூடம்…!!!
பிரிட்டிஷ் ஆட்சியில், 1871-ல் எடுக்கப்பட்ட சென்சஸ் புள்ளி
விவரங்களை தற்போது பார்க்கும்போது பிரமிப்பு உண்டாகிறது…!
அதிலிருந்து – சில சுவாரஸ்யமான தகவல்கள் –
கல்கத்தா, பம்பாய் ஆகிய நகரங்களை விட மெட்ராஸ்(சென்னை) நவீனமாக இருந்ததாக கருதப்பட்டுள்ளது.
மெட்ராஸ் ராஜதானியில் அப்போது 50,000 -க்கு மேல் மக்கள்
தொகையை கொண்ட நகரங்கள் இவை மட்டுமே –
மெட்ராஸ் நகரம் – 4,05,848
திருச்சினாப்பள்ளி நகரம் – 84,449
தஞ்சாவூர் – 54,745
மதுரை – 73,807
கும்பகோணம் – 50,098
நாகப்பட்டினம் – 53,855
சைதாப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டத்தின் தலநகரமாக
இருந்தது. அதன் மொத்த ஜனத்தொகை அப்போது 4017 மட்டுமே.
1865-ல் பிரிட்டிஷ் அரசால், முதல் மாடல் விவசாயப்பண்ணை
சைதையில் அமைக்கப்பட்டது. கூடவே ஒரு
விவசாயக்கல்லூரியும், மிருக வைத்தியசாலையும்
அமைக்கப்பட்டன…!!!
அதில் 30 மாணவர்கள் / விவசாயிகள் சேர்த்துக்
கொள்ளப்பட்டனர். அதிலும் 9 பேர் பம்பாய்
மாகாணத்திலிருந்து….!!!
1883-84-ல் இந்த பண்ணையிலிருந்து வருமானம் 4546
பவுண்டாகவும், செலவு 9221 பவுண்டாகவும், நஷ்டம் 4675
பவுண்டாகவும் இருந்தது…!!!
மேற்படி சென்சஸ் புள்ளி விவரங்களைத் தரும்
புத்தக பக்கங்கள் …
…

..

..




Very interesting info.
இப்போவும் அதே நிலைதானே..568 தெருக்கள் ஒவ்வொரு தெருவிலும் 4017 பேர்கள்
🙂 🙂 🙂
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்