இயற்கைக்கு தெரியுமா இது அமெரிக்காவென்று….?



இயற்கையை, மனிதரால் வெற்றி கொள்ள இயலுமா…?
முடியாது என்று நிரூபித்துக் காட்ட தான் வந்ததோ இப்புயல்…?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to இயற்கைக்கு தெரியுமா இது அமெரிக்காவென்று….?

  1. Ramesh's avatar Ramesh சொல்கிறார்:

    எவ்வளவு பெரிய வல்லரசாக இருந்தாலும்,
    இயற்கையை பல சமயங்களில் நம்மால் எதிர்கொள்ள முடியவில்லை
    என்பது தான் உண்மை.

  2. S M Kumar Swamy's avatar S M Kumar Swamy சொல்கிறார்:

    Juatification for Chennai floods????????????!!!!!!!!!!!!!!!!

  3. தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

    இந்த இடுகைக்குக் கருத்துக்கூறுமுன், கனடாவில் வாழும் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் ‘கடவுள் தொடங்கிய இடம்’ என்ற நாவலில் அவர் எழுதுகிறார். (கீழே உள்ள பகுதி ரஷ்யாவில் நடக்கிறது)

    // 50 வயது மதிக்கத்தக்க பெண்ணொருத்தி, கருப்பு நிற மேலங்கி, தொப்பி கையுறை ஆகியவற்றை அணிந்துகொண்டு சாலையைக் கடந்ததை அவன் பார்த்தான். திடீரென்று ஒரு கார் குறுக்காக வந்து அந்தப் பெண்ணை இடித்ததும், அவள் அந்தரத்தில் சில வினாடிகள் பறந்து பொத் என்று சாலையில் விழுந்தாள். பக்கத்திலே நின்ற சந்திரா மாமி ‘ஐயோ’ என்று கத்தினார். அந்தக் காட்சி ராட்சதப் பறவை ஒன்று தன் சிறகுகளை விரித்து எழுந்து பறந்ததுபோல் இருந்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து சில வினாடிகள் அவனால் மீள முடியவில்லை. மூளை நின்றுவிட்டது. சனங்கள் சுற்றிலும் சூழ்ந்துவிட்டதால் ஒன்றும் தெரியவில்லை.

    அடுத்து நடந்ததுதான் இன்னும் ஆச்சர்யமானது. இரண்டே நிமிடங்களில் பெரும் ஒலி எழுப்பி அவசர சிகிச்சை வண்டி வந்து, அந்தப் பெண்ணை ஏற்றிக்கொண்டு பறந்தது. சாலை பழையபடி ஆனது. சனங்கள் தங்கள் பாட்டுக்குப் போனார்கள். ஒரு விபத்து அங்கே நடந்தது என்பதற்கான தடயம் கிடையாது. அந்தன் பின்னர் வந்த பல வருஷங்கள், மாஸ்கோ பற்றி நினைக்கும்போது நிஷாந்துக்கு அந்தக் காட்சியே வந்துபோகும்.

    ஆரவாரம் முடிந்து அடங்கிய பின்னர் அம்பிகாபதி மாஸ்டர் சொன்னார். ‘ஓர் அரசாங்கம் நன்றாகச் செயல்படுகிறதா இல்லையா என்று அறிய, பேப்பர் படிக்கத் தேவை இல்லை, ரேடியோவும் டிவியும் கூட அவசியம் இல்லை. இப்படியான ஒரு காட்சி போதும்’.//

    இயற்கைச் சீற்றங்களை கணிப்பதும் கடினம், அதிலிருந்து முழுமையாகப் பாதுகாத்துக்கொள்வதும் ஓரளவு கடினம். இருந்தபோதும் அத்தகைய சீற்றங்கள் ஏற்பட்டபோதும், குறைந்த அளவு உயிரிழப்போடு இருப்பதும், சீற்றத்தின்போது மக்களைப் பாதுகாக்க அரசு இயந்திரங்கள் உடனே முடுக்கிவிடப்பட்டு, மக்களுக்கான ஏற்பாடுகள் செய்வதிலும், அத்தகைய சீற்றங்களின்போது மக்களும் அரசாங்கத்தோடு முழுமையாக ஒத்துழைப்பதிலும், எவ்வளவு சீக்கிரத்தில் அந்தச் சீற்றத்திலிருந்து அந்தப் பகுதியையும், அதில் வசிக்கும் மக்களையும் மீண்டும் பழைய நிலைமைக்குக் கொண்டுவருவதிலும்தான், ஒரு நாட்டின் அரசாங்கமும் மக்களும் எப்படிச் செயல்படுகிறார்கள் என்று தெரியும். இதனை நாம், மற்ற பல வளர்ந்த நாடுகளில் (ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகள்) கண்கூடாகப் பார்க்கமுடியும்.

    ஜப்பானில், சமீபத்தில் (ஓரிரு வருடங்களுக்கு முன்) சுனாமி ஏற்பட்டபோது, மக்களை அவர்கள் எப்படி மீட்டார்கள், மக்களும் எப்படி ஒழுங்காக நடந்துகொண்டார்கள் (Standing in queue, வெள்ளைத் துணியை ஆட்டி, இங்கு நாங்கள் இருக்கிறோம் என்பதை ரெஸ்கியூ டீமிற்குத் தெரிவிப்பது போன்று) என்பதையெல்லாம் எல்லோரும் காணொளியில் பார்த்திருப்போம்.

    நம்ம நாட்டைக் குறை சொல்லவில்லை. இங்கும் தன்னார்வலர்கள் உண்டு. ஆனால் அரசாங்கம், அதனுடைய வேலையைச் செய்வதில்லை. அரசாங்கத்தை நடத்தும் அரசியல்வாதிகள், ‘சம்பாதிப்பதற்கு’ அரசியலுக்கு வந்திருக்கிறார்களே தவிர மக்களுக்கு உழைப்பதற்கு, அதன்மூலம் தனக்கு நல்ல பெயர் வருவதற்காக வரவில்லை. இதனால்தான், ‘வேலையில் ரொம்ப பிரஷர், அதனால் எம்.பி வேலையை விட்டுவிட்டு டிரைவர் வேலையில் இருக்கிறேன்’, ‘குழந்தைகளுடன் இருக்கவேண்டியிருந்தது. அதனால் அரசியலுக்கு 12 வருடம் இடைவெளி கொடுத்துவிட்டு, குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களானதும் மீண்டும் அரசியலுக்கு வந்திருக்கிறேன்’ என்றெல்லாம் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடப்பதைக் கேள்விப்படும்போது அந்த அரசியல்வாதிகளை மெச்சுவதா, அல்லது அந்த மக்களை மெச்சுவதா என்றே எனக்குத் தோன்றுகிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.