…
…
…

…
ஒரு பொறுக்கி, ரவுடி, கற்பழிப்பாளன் – தன்னை பெரிய
சாமியாராக உருவாக்கிக் கொண்டு, மெஸ்மெரிசம் செய்து
எக்கச்சக்கமான பக்தகோடிகளை உண்டாக்கிக் கொண்டு,
அடங்காப்பிடாரித்தனம் செய்து வருகிறான்
ஹரியானாவில்,ஓரளவு பஞ்சாபிலும், டெல்லியிலும் கூட…
இவன் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகின்றன சம்பந்தப்பட்ட
அரசுகள். காரணம் …. ஒவ்வொரு தேர்தலில் ஒவ்வொரு
கட்சிக்கு ஆதரவு கொடுத்து, முக்கிய கட்சிகளை அவனுக்கு
ஆதரவாக இயங்கச் செய்திருக்கிறான். தேர்தல் சமயத்தில்
இவனிடமிருந்து பணமும், ஆதரவும் பெற்ற கட்சிகள் இவனுக்கு
எதிராக எப்படி நடவடிக்கை எடுக்கும்…? (கடைசியாக
2014-பாராளுமன்ற தேர்தலில் இவன் பாஜகவுக்கு ஆதரவு
அளித்திருந்தான்…)
ஏகப்பட்ட புகார்கள்.. இவன் பேரில்…மோசடி, கற்பழிப்பு என்று….
ஏகப்பட்ட கோடிகள் பணம், சொத்துக்களை சேர்த்து
வைத்திருக்கிறான்… இவன் பின்னால் ஒரு பெரிய தொண்டர்
அடியா(ள்)ர் திருக்கூட்டம்…. நம் நாட்டில் தான்
இளிச்சவாயர்களுக்கும், பஞ்சமில்லை; பொறுக்கிகளுக்கும்
பஞ்சமில்லையே…?
1999-ல் இவன் மீது பதியப்பட்ட ஒரு கற்பழிப்பு புகார்…
இரண்டு பக்தைகளை பலவந்தப்படுத்தி கற்பழித்ததாக..
அப்படி இப்படியென்று 18 ஆண்டுகளில், ஒருவழியாக வழக்கு
முடிக்கப்பட்டு, நீதிமன்றம் இன்று இவனை குற்றவாளி என்று
தீர்ப்பளித்து விட்டது.
விளைவு – இன்று மதியத்திலிருந்து மாலைக்குள்ளாக –
ஹரியானாவில் நிகழ்ந்த கலவரங்களில் 31 பேர் இதுவரை
கொல்லப்பட்டிருக்கிறார்கள். 200-க்கும் மேற்பட்டவர்கள்
பலத்த காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு
இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இவனுக்கு ஆதரவாக திருவாளர் சு.சுவாமி
ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

…
ஏற்கெனவே மற்றொரு கற்பழிப்பு சாமியாரான
ஆசாராம் பாபுவிற்கு ஆதரவாக திருவாளர் சு.சுவாமி சுப்ரீம்
கோர்ட் வரை சென்று வாதாடியது தெரிந்ததே…
இப்போது இந்த பொறுக்கிக்கு ஆதரவாகவும்,
நாளை ஆஜரானால் அதிசயப்படுவதற்கில்லை …
வழக்கம்போல், பாஜக தலைமை,
இது சு.சு.வின் சொந்தக்கருத்து – சட்டம் தன் கடமையை
செய்யும் என்று சொல்லி விடும் என்று நம்பலாம்.
இத்தகைய பொறுக்கி, போலி சாமியார்களையும் சரி,
அவர்களின் ஆதரவாளர்களையும் சரி – எந்தவித தயவு,
தாட்சண்யமும் இன்றி, சு.சு. போன்ற அரசியல்வாதிகளின்
தலையீட்டை தூரம் தள்ளிவிட்டு, சம்பந்தப்பட்ட அரசுகள்,
கடுமையான நடவடிக்கை எடுத்து அடக்க வேண்டியது
அவசியம்.
——————————————————————-



கற்பழிப்பு புகாரில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இந்த பொறுக்கிக்கு
ஹரியானா கவர்ன்மெண்ட், தனி ஏசி அறை, பெண் கம்பானியன், மினரல் வாட்டர்
அனைத்தும் அளித்திருக்கிறது. “குட் ஸோல்” என்று கூறி பாஜகவில் இதுவரை இவனை ஆதரித்து தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஹரியானா மந்திரிகள்
எல்லாரும் இவன் கால்களில் விழுந்துஎழுவதை டிவியில் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அடிமைகள் எப்படி அவன் மீது நடவடிக்கை எடுப்பார்கள் ? ஓட்டுக்காக இந்த அரசியல்வாதிகள் எந்த பன்றியின் கால்களிலும் விழுவார்கள் போலிருக்கிறது.
“அரசியல்வாதிகளின் தலையீட்டை தூரம் தள்ளிவிட்டு, சம்பந்தப்பட்ட அரசுகள், கடுமையான நடவடிக்கை எடுத்து அடக்க வேண்டியது
அவசியம்.” – முழுமையாக வரவேற்கத்தக்க கருத்து. ‘தவறு செய்தவர்களை’, அதுவும் சமூகத்தில் தவறு செய்பவர்களை நிச்சயம் தண்டிக்கவேண்டும். நீதிமன்றம் தீர்ப்புசொன்னபிறகு நடைபெற்ற கலவரங்களுக்கு அந்த அரசே முழுமையான காரணம். ‘இந்துத்துவா’வுக்கு ஆதரவு என்பது வேறு, சமூகக்களைகளுக்கு எதிரான நடவடிக்கை என்பது வேறு. இந்துத்துவாவுக்கு ஆதரவாக இருக்கவேண்டும், ஆனால் ‘தவறு செய்தவர்களை’, ‘இந்துத்துவா’ முகமூடி போட்டு ஆதரவளிப்பது அயோக்கியத்தனம்.
சுப்ரமணியம் சுவாமி போன்ற படித்தவர்கள் மலிவு அரசியலில் ஈடுபடுவதை ஜீரணிக்கவே முடியவில்லை. இத்தகைய தேவையில்லாத ஆதரவுகளால் சுப்ரமணியம் சுவாமி, அவருடைய காலத்துக்குப் பின், மிக மோசமாக நினைவுகூரப்படுவார்.
‘Threat to Sadhus’ – எவ்வளவு மோசமான ட்வீட். சாட்டர்ஜி அவர்களில் பதில் ட்வீட், நியாயமாகச் சிந்திப்பவர்கள் இன்னும் தைரியமாக தங்கள் கருத்தை வெளிப்படுத்தத் தயங்குவதில்லை என்பதைச் சொல்லுகிறது. ‘படித்தவன் சூதும் வாதும் செய்தால் அய்யோ என்று போவான்’