…
…
தம்படி, காலணா, அரையணா, ஒரணா,
இரண்டணா,
நாலணா, எட்டணா, அரை ரூபாய் –
இன்றைய தலைமுறையினர் பலபேர்
இவற்றை எல்லாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
என் பேத்திக்கு இதைப்பற்றி எல்லாம் கொஞ்சம்
சொல்லிக் கொடுக்கலாம் என்றெண்ணி
வலைத்தளத்தில் புகைப்படங்களுக்காகத் தேடினேன்.
கூடவே கிடைத்தது அருமையான புதையலாக,
கிழக்கிந்திய கம்பெனியில் துவங்கி பல அரிய நாணயங்களின் புகைப்படங்கள்.
கொஞ்சம் extra efforts ..! இங்கே போட்டால் –
நீங்களும், உங்கள் வீட்டுக்குழந்தைகளும் கூட
அவற்றை பார்க்கலாமே என்று இங்கேயும் பதிவிட்டிருக்கிறேன்.
இன்றைய இந்திய நாணயங்கள் – ஒரு
ரசனையற்ற, உணர்வற்ற அதிகார வர்க்கத்தின் அலட்சியப் படைப்பு.
நாணயங்களுக்கிடையே வித்தியாசமே இல்லாமல்
யந்திரத்தனமாக அச்சிடுகிறார்கள்.
அரை ரூபாயா ஐந்து ரூபாயா,
ஒரு ரூபாயா இரண்டு ரூபாயா என்று
மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள
வேண்டியிருக்கிறது.
கிழக்கிந்திய கம்பெனிக்கும், பிரிட்டிஷ் இந்திய
அரசுக்கும் இருந்த கலை உணர்வோ, ரசனையோ – நிகழ்கால அரசுகளுக்கு இல்லை என்பதை இந்த நாணயங்கள் நன்கு உணர்த்துகின்றன.
இனி நாணயங்கள் உங்கள் பார்வைக்கு –
———————————-
முதலில் தம்படி –
அரையணா –
ஹைதராபாத் சமஸ்தான நாணயம்
கிழக்கிந்திய கம்பெனி ஆப்பிரிக்க
வியாபாரத்திற்காக
அச்சடித்த 22 காரட் தங்கக் காசு (மொஹர் )

கிழக்கிந்திய கம்பெனி காலத்திய நாணயங்கள் –
ராமர்,சீதை,லட்சுமணன், அனுமார்
அடங்கிய
1818 -வருடத்து நாணயம்
அனுமார் நாணயம்
ராதா கிருஷ்ணர் நாணயம்
லட்சுமி நாராயணர் நாணயம்
(மறுபதிவு)


























நவம்பர் 20 — 2013 அன்று வெளியிட்ட இடுகையின் ” மறுபதிப்பு ” வரவேற்கவேண்டிய ஒன்று … மீண்டும் பலரும் அறிந்துக் காெள்ள அறிய வாய்ப்பு …
அன்றை நாணயங்கள் … நாணயமாக நம்ப தக்க வகையில் ” அசல் செ ம்பு மற்றும் வெள்ளி ” யில் இருந்தன … ஆனால் தற்பாேது ….
கண்டுகொண்டேன் .நன்றி.