…
…
ஒருவர் கோவா, அருணாசல பிரதேசம் சட்டமன்ற
தேர்தல்களுக்கும், குஜராத் சட்டமன்ற உறுப்பினர்களின்
மூலம் நடந்த ராஜ்ய சபா தேர்தலுக்கும் பொறுப்பேற்றுக்
கொண்டார்.
அருணாசல், கோவா ஆபரேஷன்கள் வெற்றிகரமாக
நிகழ்ந்தன. என்ன – கொஞ்சம் செலவு, சில பதவி
விநியோகங்கள் செய்ய வேண்டி வந்தன.
அடுத்து குஜராத்தில் – எதிர்த்தரப்பு ஓரளவு alert’ ஆக
இருந்ததால், மிகுந்த சிரமங்களை எதிர்நோக்க வேண்டி
இருந்தது…
அத்தனை முயன்றும் கடைசியில் எதிர்பார்த்தது
நடக்கவில்லை… வெற்றி கிடைக்கவில்லை… கட்சியின்
பெயர் கொஞ்சம் ரிப்பேர் ஆனது தான் மிச்சம்.
இன்னொருவர், பீஹாரை கையில் எடுத்துக் கொண்டார்.
சில ரெய்டுகள், சில FIR-கள். அவ்வளவு தான்…. காரியம்
முடிந்தது. ஆட்சியே கை மாறியது. நேர்மையாளர் என்று
கருதப்பட்ட முதல்வரே – மானம், அவமானத்தை பற்றி
கவலைப்படாமல், side மாறி விட்டார்… ஆக மொத்தம்
முழு வெற்றி.
அடுத்தது தமிழ்நாடு…. இங்கு அஞ்சு காசு செலவில்லை…
கொடுக்க வேண்டிய பதவிகளும் எதுவுமில்லை.
என்ன – எதிரும் புதிருமாக இருந்தவர்களை வழிக்கு
கொண்டு வர வேண்டி இருந்தது….
சாம, பேத, தான, தண்டங்கள் எதையுமே
பிரயோகிக்கவில்லை…. just .. சில ஆயுதங்கள்,
அஸ்திரங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன….
ஒன்றிரண்டு ஒத்திகைகள் நிகழ்த்தப்பட்டு காட்டப்பட்டன …
( trial run – demonstrations…… !!! ).
அம்புட்டு தான்… அதுவே போதுமானதாக இருந்தது.
பத்து காசு செலவில்லாமல், ஒன்றரை கோடி உறுப்பினர்கள்
(மைனஸ் சில மன்னார்குடிகள்…!!! ) கொண்ட ஒரு கட்சி,
சொன்னதைக் கேட்கும் கட்சியாக, சொல்வதைச் செய்யும்
ஆட்சியாக முழு கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டது….!!!
முதலில் சொல்லப்பட்டவரை விட, இரண்டாமவர்
எவ்வளவு கெட்டிக்காரர் என்பது சொல்லாமலே புரியும்….!!!
அரசியலில் வெற்றி பெறுவது, அதிகாரத்தை விரிவு
படுத்துவது இவற்றிற்கெல்லாம் தேவை – சத்தியம், நேர்மை,
அறநெறி, வெளிப்படைத்தன்மை என்று நினைப்பவர்களை
ஒன்றும் தெரியாத “மக்கு”கள் என்று தான் சொல்ல
வேண்டும்.
…

…
அது தான் தேவை என்றால், சுதந்திர இந்தியாவின்
முதல் பிரதமராக மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்கிற ஒரு
அரை நிர்வாண பக்கிரி அல்லவா இருந்திருப்பார்….?



அருமையான இடுகை.
உங்கள் மிகச்சிறந்த இடுகைகளில் ஒன்றாக இதைச் சொல்லலாம்.
“தீரன்”
“இவற்றிற்கெல்லாம் தேவை – சத்தியம், நேர்மை, அறநெறி, வெளிப்படைத்தன்மை” – அப்படீன்னு யாரு சொன்னா? நீங்களாகவே நினைத்துக்கொண்டால் ஆச்சா? நாம தலைவர்களைக் குறை சொல்வதைவிட, சில-அதாவது வெற்றியைத் தீர்மானித்துவிடும் சில- மக்களைக் குறை சொல்வதுதான் தகும். அந்த மூடர்கள்தான் காமராஜரைத் தோற்கடித்தவர்கள், காசை வாங்கிக்கொண்டு ஓட்டுப்போட்டு சில கெட்டவர்கள் தேர்வாக வழிவகுப்பவர்கள், தேர்தலில் நிற்கும் நல்லவர்களுக்கு ஒரு தொகுதிக்கு ஆயிரம் வாக்குகளுக்குக் குறைவாகப் பெற்று புறமுதுகிட்டு ஓடும்படி செய்பவர்கள். மக்களுக்கு ஏற்ற, அவர்களின் குணங்களைப் பெற்ற தலைவர்கள்தான் இப்போது எல்லா அரசியல்கட்சிகளிலும். அன்றைக்கு ‘சத்யம்’ என்பதையே கொண்டிருந்த காந்தி அவர்கள் சொன்னால் கேட்டுக்கொள்ள, பெருவாரியான மக்கள் இருந்தனர் (ஏனென்றால், காந்தி பேசியதை அவர் முதலில் கடைபிடித்தார்). நல்லவேளை, காந்தி தற்போதைய தேர்தலில் நிற்கும் தவறைச் செய்யவிடாமல் காலன் அபகரித்துக்கொண்டான்.
பத்து காசு செலவில்லாமல், ஒன்றரை கோடி உறுப்பினர்கள்
(மைனஸ் சில மன்னார்குடிகள்…!!! ) கொண்ட ஒரு கட்சி,
சொன்னதைக் கேட்கும் கட்சியாக – வார்த்தைகளை சரியாக உபயோகப்படுத்தியிருக்கிறீர்கள். ‘சொன்னதைக் கேட்கும் கட்சி’ – ‘சொன்னதைக் கேட்கும் தொண்டர்கள்’ இல்லை. ஜெ. அவர்கள் எது தமிழகத்துக்குச் சரியோ, அதைச் செய்ததினால்தான் அவரது VOTE BANK அதிகமாகப் பெருகிக்கொண்டே சென்றது. தொண்டர்கள் அதிகரித்ததும் அதனால்தான். தொண்டர்கள் இருப்பது எம்ஜியார், ஜெ, ரெட்டை இலை. எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்தால், எடப்பாடியோ ஓபிஎஸ்ஸோ காணாமல்போகவேண்டியதுதான். அதுமட்டுமல்ல, அதிமுகவை உபயோகப்படுத்தி பாஜக தமிழகத்தில் வளர வாய்ப்பே இல்லை. அது தன்னுடைய கொள்கைகளை (அது எப்படிப்பட்டதாக இருந்தாலும், விமரிசனத்துக்கு உரியதாக இருந்தாலும்) முன்னே எடுத்துச் சென்றுதான் தமிழகத்தில் வளர முடியும். இல்லையென்றால், காங்கிரஸ் கோஷ்டிகானம் போல் பாஜக கோஷ்டிகானம் மட்டும்தான் நடக்கும்.
என்னுடைய வருத்தம், வெற்றிவேல், நாஞ்சில் சம்பத் போன்ற அட்டைக்கத்திகள், வாடகை மனிதர்கள், அதிமுக சார்பாக பேசும் நிலையை காலம் ஏற்படுத்திவிட்டதே என்பதுதான். இப்போ தாமரைக்கனி இருந்தால், அவரது முத்திரை மோதிரம் எத்தனை எத்தனை வாடகை மனிதர்களின் கன்னத்தைப் பதம் பார்த்திருக்கும்.
இணைப்பு..இணைந்தது..வாழ்த்து..பதவி..பதவியேற்பு..அஞ்சலி.. வெடிவெடிப்பு… யாருக்கும்வெட்கமில்லை…? காேமாளிகளா .. லும்பன்களா…?
செல்வராஜன்,
அவர்கள் “அமாவாசையன்று, அம்மாவின் ஆசை நிறைவேற்றப்பட்டது”
என்று ரைமிங்காக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்…. நீங்கள் என்னவென்றால்
இப்படி வெடிக்கிறீர்களே… 🙂
– வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
செல்வராஜன் சார்-நம்ம அரசியல்வாதிகள்ல, 0.00001% ஆவது, மக்களுக்குச் சேவை செய்வதற்காக வந்திருக்கிறோம் என்று நடந்துகொண்டாலே ஆச்சர்யம். இன்றைய அரசியலில், கோடீஸ்வரனாக இல்லாத ஒரு அரசியல்வாதியையாவது நாம் பார்க்க முடியுமா? இதில் யாருமே விதிவிலக்காகத் தெரியவில்லை.
அப்போ, நாம அவங்கள்ட குறைந்தபட்ச மனுஷத் தன்மையை எப்படி எதிர்பார்க்கமுடியும்? இதில் கருணானிதி ஸ்டாலின் கும்பலிலிருந்து ஒரு அரசியல்வாதியும், அது ராமதாசோ, திருமாவோ யாராக இருந்தாலும் விலக்கு இல்லை. இதுல, யாரை ‘கோமாளிகள்/லும்பங்கள்’ என்று அடையாளம் காட்டுவது?
எல்லா அரசியல்வாதிகளும் நம்புவது ஒன்றே ஒன்றுதான். ‘காசுக்கு வாலாட்டும் நாய்கள்’-இது யார் என்று நம் எல்லோருக்கும் தெரியும்.