…
…
உங்களால் ஒரு 10 நிமிடம் ஒதுக்க முடியும் என்றால்,
500-1000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக ஆகியதன்
விளைவுகளைப் பற்றிய ஒரு சில உண்மைகளை –
NDTV -யின் இந்த காட்சியிலிருந்து தெரிந்து கொள்ளலாம்….
NDTV-யா என்று சந்தேகம் எழுகிறதா…?
நியாயமான சந்தேகம் தான்…
ஆனால், இந்த புள்ளி விவரங்களை தந்திருப்பது
அரசு தான்… தொலைக்காட்சி அல்ல…!!!
ஒரு ஒன்பதரை நிமிட காட்சி கீழே…
இதில் பேசப்படும் விஷயத்தை விட,
…

…

…

…
அதில் காட்டப்படும்
புள்ளிவிவரங்கள் தான் முக்கியமானவை… !!!
…
…



Demonetization இமாலய வெற்றி என்று சொல்லிக்கொள்ள
அரசு தலைகீழாக நின்று முயற்சிசெய்கிறது. ஆனால், உண்மை அதற்கு நேரெதிர்
என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
“கீரன்”
மத்திய அரசு நினைத்ததுபோல் டிமானிடைசேஷன் பயன் தந்ததுபோல் தெரியவில்லை. இதுல ரெண்டே நிகழ்வுதான் குறிப்பிடத்தக்கது. மக்கள் எல்லோரும் ஏடிஎம் எங்கு எங்கு இருக்கிறது என்பதைத் துல்லியமாக அறிந்துகொண்டு, தினமும் சேரில் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்ப்பதற்குப் பதில் வரிசையில் நின்றதும், எல்லோருக்கும் செலவு செய்ய பணம் இருக்குமா என்ற சந்தேகம் வந்ததும், பலர் ஆபீஸ் வேலையை விட்டுவிட்டு பணம் வாங்கப் புறப்பட்டதுமான மக்களிடையே பதட்டம் ஏற்படுத்தியது, இரண்டாவது, உ.பி. போன்ற தேர்தலில் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தியது (பாசிடிவ் அல்ல, எதிர்க் கட்சிகளை ஸ்தம்பிக்கச் செய்தது).
யாரேனும், டிமானிடைசேஷனினால், அது சாதித்தோம் இதைச் சாதித்தோம் என்று சொன்னால் அவரை (அவனை என்றுதான் சொல்ல நினைத்தேன்) என்னிடம் கூட்டிவாருங்கள். ‘பளார்’ என்று அறைந்து, சேலத்தில் பிடித்த பாஜக பிரமுகர், கர்னாடக மந்திரி, ரெட்டி போன்றோரிடம் இருந்த கோடிக்கணக்கான புது 2000ரூபாய் தாளைக் கண்டுபிடித்தபின் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேட்கணும். (நானெல்லாம், 3 இரண்டாயிரம் ரூபாய் தாளுக்காக 1 மணி நேரம் வரிசையில் ஏர்போர்ட்டில் நின்று, அதுவும் இதுதான் சாக்குன்னு ஏகப்பட்ட கமிஷன் செலுத்தி வாங்கவேண்டியிருந்தது. கேட்டால் அரசு இன்னும் நோட்டை அடித்து முடிக்கலையாம். ஆனால் இந்த மூன்று பேரிடம் மட்டும் ஆயிரம் கோடிக்குமேல் புது 2000 ரூபாய் நோட்டுக்கள். நிச்சயம் ஒரு ‘பளார்’ போதாது)
// டெல்-அவிவ் கூட்டத்தில்….கருப்பு ஆடு….!!!
Posted on ஜூலை 6, 2017 by vimarisanam – kavirimainthan //
இந்த இடுகையில் திரு. புதியவன் அவர்கள் இட்ட பின்னூட்டத்தில்,
”ஆனா, டிமானிடைசேஷன் – தோல்வியா வெற்றியா என்பது தெரியவில்லை…”
என்ற கருத்திற்கு,
திரு. கா.மை. அவர்கள்,
//ஆனா, டிமானிடைசேஷன் – தோல்வியா வெற்றியா என்பது தெரியவில்லை. //
விழித்துக்கொண்டிருப்பவர்களுக்கு தெரியும்…
தோல்வியை பார்ப்பது எனக்கு பிடிக்காது…
பார்க்க மாட்டேன் என்று
பிடிவாதமாக கண்களை மூடிக்கொண்டிருப்பவர்களுக்கு
உலகில் நடப்பது எப்படி தெரியும்..?
இடுகையில் எழுப்பப்பட்டிருந்த விஷயத்தின் சாராம்சம் –
” மீதி அத்தனை சாதனைகளையும் பேசியவர்கள்,
இதைப்பற்றி பேசாமல் விட்டதற்கு என்ன காரணம்..?
அது தோல்வியில் முடிந்தது என்பதை அவர்களே
உணர்ந்திருந்தது தானே…? ”
இடுகையில் எழுப்பப்படும் கேள்வியை தொடாமலே,
விவரமாக பதிலளிக்கும் திறமை அபூர்வம் – அது வெகு சிலருக்கே கைவரப்பெறுகிறது…… 🙂 🙂 🙂 //
என்று பதில் கொடுத்தார்கள்.
இன்னும் தொடர்ந்து பல பின்னூட்டங்களில் புதியவன் டிமானிடைசேஷனை ஆதரித்தேவந்துள்ளார்.
என்று அவருக்கு தெறிந்தது டிமானிடைசேஷன் தோல்வி என்று?
என்று தன் நிலையை மாற்றிக்கொண்டார்?
இதுவரை தன் நிலையை வெளிப்படுத்தாமல்,
//யாரேனும், டிமானிடைசேஷனினால், அது சாதித்தோம் இதைச் சாதித்தோம் என்று சொன்னால் அவரை (அவனை என்றுதான் சொல்ல நினைத்தேன்) என்னிடம் கூட்டிவாருங்கள். ‘பளார்’ என்று அறைந்து…//
என்று சொல்லும் இவரை… புதியவன் அதாவது உங்களை என்ன செய்துகொள்ள போகிறீர்கள்.
“என்று சொல்லும் இவரை… புதியவன் அதாவது உங்களை என்ன செய்துகொள்ள போகிறீர்கள்” – அறிவழகு – உங்களிடம் இருப்பது ஆத்திரம், விமரிசனம் அல்ல. ‘இன்றைக்கு செவ்வாய்க் கிழமை’ இதற்குக் காரணம் மோடி அரசு, அது தொலைந்துபோகவேண்டும் என்று எழுதுவது ஆத்திரத்தின் விளைவு. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
1. டிமானிடைசேஷன் தவறு என்பது என் எண்ணமல்ல. டிமானிடைசேஷனால் ‘அது நடந்தது இது நடந்தது’ என்று மத்திய அமைச்சர்கள், குறிப்பாக ஜேட்லி அவர்கள் சொல்வதுதான் எரிச்சல் உண்டாக்குகிறது.
2. டிமானிடைசேஷன் சமயத்தில் மக்களுக்குத் துன்பம் (எனக்கும்தான்). அது ஏற்றுக்கொள்ளக்கூடியது. மோடி அவர்கள் ரிஸ்க் எடுத்து இதனைச் செய்தார். கஷ்டம்தான், ஆனால் ஏற்றுக்கொள்ளும் மனனிலை என்னிடம் இருந்தது. எல்லோரும் ஜன’நாயகத்தில் அக்கவுன்டபிள் (வருமானத்துக்கு, வரிக்கு). அதில் சந்தேகம் இல்லை.
3. எனக்குத் தெரிந்து 3 கள்ளர்களைக் கையும் களவுமாகப் பிடித்தார்கள். என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? டிமானிடைசேஷனுக்குக் காரணமே கள்ளப்பண ஒழிப்புதான். அப்படி இருக்கும்போது, யாருக்குத் தேவையோ (பொதுமக்களுக்கு) அவர்களுக்குக் கிடைக்காத 500,2000 ரூ நோட்டுக்கள் (எனக்கு எஸ்.பி.ஐ யில் நான் போய்ப் பேசின பிறகு கிடைத்தது-20,000 ரூக்கு.. அதற்குக் காரணம் உண்டு, ஆனால் நான் சுற்றுலாவில் இருந்தபோது, ஒரு நாளைக்கு 2000 ரூ நோட்டு ஒன்றுதான் நான் எடுக்கமுடிந்தது. நான் இங்கு குறிப்பிடுவது சாதாரண மத்திய தரவர்க்கத்துக்குக் கீழ் இருப்பவர்கள் கஷ்டப்பட்டதை), எப்படி இந்த 3 கள்ளர்களுக்குக் கிடைத்தது? அரசு கொண்டுவந்த திட்டம், இப்படிக் கள்ளர்கள் பிடிபட்டவுடன், உடனே மக்களுக்குப் போய்ச் சேரும்படியான தண்டனை கொடுத்திருந்தால், ‘கள்ளப்பணத்தையும் கள்ளர்களையும்’ ஒழிக்கவந்த திட்டம் என்பதில் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். இத்தனை நாள் கழிந்தும் ஒரு நடவடிக்கை இல்லை. அதுபோல் வெளிப்படையாகத் தெரியுமாறு எனக்குத் தெரிந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்படி இருக்கும்பட்சத்தில் யாராவது என்னிடம் வந்து ‘டிமானிடைசேஷன்’ கொண்டுவந்ததால் கள்ளப்பணத்தைக் கட்டுப் படுத்திவிட்டேன் என்று சொன்னால், நிச்சயம் ‘பளார்’ ‘பளார்’தான். என் அப்போதைய கருத்திலும் மாற்றமில்லை, இப்போதுள்ள கருத்திலும் மாற்றமில்லை.
4. மோடி அவர்கள், டிமானிடைசேஷன் நல்ல மாற்றங்கள் கொண்டுவரும் என்று நம்பியிருக்கலாம். அதனால் ரிஸ்க் எடுத்திருக்கலாம். அது நினைத்த அளவு ‘பயன் தராமல்’ போயிருக்கலாம் (வாய்ப்பு உண்டு). அதனால் அந்தத் திட்டம் தவறு என்று நான் எண்ணவில்லை. ‘நாட்டின் தலைவர்’ முடிவு எடுத்திருக்கிறார். நல்ல எண்ணத்தில் செய்தது, நடக்கவில்லை என்று நினைத்துக்கொள்ளவேண்டியதுதான் (அப்படி ஒரு பயனுமே ஏற்படவில்லை என்றால்)
ஒரு நிகழ்வுக்குப் பிறகு, பழைய கருத்துக்களில் தற்போது கொஞ்சம் மாற்றம் ஏற்படலாம் அது இயல்புதான். ஆனால், கண்ணை மூடிக்கொண்டு, மோடி அவர்கள் எதைச் செய்தாலும் அதில் 60-70 வருடங்களாக இல்லாத குறைகள் உடனே ஏற்பட்டுவிட்டது என்று என்னால் சொல்ல இயலாது. எனக்கு ‘மோடிக் காய்ச்சல்’ இல்லை.
Each Task will provide different benefit/ results. for us it is not beneficial as on now. but we do not know who else got benefited, they will say ” it is success”.
சேஷன்,
// for us it is not beneficial as on now //
இந்த ஒப்புதல் போதுமானது.
———————
நீங்கள் சு.சுவாமியின் நீண்ட பிரச்சாரப்படத்தை
இங்கே போட்டிருக்க வேண்டாம். Just waste of time.
நான் ஏற்கெனவே இடுகையில் எழுதி இருக்கிறேனே –
// NDTV-யா என்று சந்தேகம் எழுகிறதா…?
நியாயமான சந்தேகம் தான்…
ஆனால், இந்த புள்ளி விவரங்களை தந்திருப்பது
அரசு தான்… தொலைக்காட்சி அல்ல…!!! //
கவனிக்கவில்லையா…?
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்