…
…
இது ரிசர்வ் வங்கியின் defenition –
According to RBI –
A wilful default occurs when a defaulting borrower –
– doesn’t honour an obligation,
– despite having the capacity to pay,
or – siphoning off funds and disposing of assets
without the knowledge of the bank…..
…..
கீழே இருப்பது செய்தி மட்டுமே…
நமது விமரிசனம் எதுவும் இல்லை…!!!
————

…
2016-17 நிதியாண்டின் முடிவில் (மார்ச் வரை)
சுமார் 9,000 பேர் கடனைத் திருப்பிச் செலுத்தத் திறனிருந்தும்
ரூ.92,000 கோடிக்கு மேல்
திருப்பிச் செலுத்தாமல் இருந்துள்ளதாக மத்திய
நிதியமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
2016ஆம் ஆண்டின் மார்ச் மாதம் வரையில் கடனைத்
திருப்பிச் செலுத்தத் திறனிருந்தும் திருப்பிச்
செலுத்தாதவர்களின் மொத்த வங்கிக் கடன் பாக்கி ரூ.76,685
கோடியாக இருந்தது.
2017ஆம் ஆண்டின் மார்ச் மாதம் அக்கடன் தொகை ரூ.92,376
கோடியாக அதிகரித்துள்ளது.
இது 20.4 சதவிகித உயர்வு.
2016ஆம் ஆண்டில் கடனைத் திருப்பிச் செலுத்தாதோர்
எண்ணிக்கை 8,167. அது 2017இல் 8,915 ஆக உயர்ந்துள்ளது.
எஸ்.பி.ஐ. வங்கியும் எர்ஸ்ட்வைல் அசோசியேட் நிதி
நிறுவனமும் கடந்த 2017ஆம் நிதியாண்டில் சுமார் ரூ.27,574
கோடியாக வாராக் கடனாக தங்களது கணக்கிலிருந்து
நீக்கியுள்ளன.
எஸ்.பி.ஐ. வங்கியைப் பொறுத்தவரையில் அதன் ஐந்து
துணை வங்கிகளையும் தன்னுடன் இணைத்தப்பிறகு அதன்
வாராக் கடன் அளவு ரூ.6.41 லட்சம் கோடியாக
உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய 2016ஆம் நிதியாண்டில்
வாராக் கடன் அளவு ரூ.5.02 கோடியாக இருந்தது.
( https://minnambalam.com/k/2017/08/16/1502821821 )
——————————————–
டெக்கான் ஹெரால்டு – செய்தியிலிருந்து –
(http://www.deccanchronicle.com/business/economy/150817/wilful-
defaulters-owe-rs-92000-crore-to-psu-banks.html )
———-
The outstanding loans by wilful defaulters rose to Rs 92,376 crore at the end of financial year 2016-17, as against Rs 76,685 crore at the end of March 2016, registering a jump of 20.4 per cent.
At the same time, there has been close to 10 per cent increase in
number of wilful defaulters on annual basis. The number of wilful
defaulters increased to 8,915 at the end of March as against 8,167 in the previous fiscal, according to data collated by the Finance Ministry.
Out of 8,915 cases of wilful defaults, banks have filed FIR (First
Information Report) in 1,914 cases with outstanding loans of Rs
32,484 crore.
During 2016-17, 27 public sector banks, including SBI and its five
associates have written off Rs 81,683 crore, the highest in the last five fiscals.
The amount was 41 per cent higher than that in the previous fiscal.
SBI and its erstwhile associates alone have written off Rs 27,574
crore non-performing assets (NPAs) in 2016-17, according to the RBI
data on “write offs” done by public sector banks.
SBI merged its five associate banks with itself from April 1 2017.
Gross NPAs of the public sector banks rose to Rs 6.41 lakh crore at
the end of March 2017 as against Rs 5.02 lakh crore a year ago.
…….
…….
பின் குறிப்பு –
இந்த செய்திக்கு, நான் விமரிசனம் எழுதுவதை விட –
வாசக நண்பர்கள் எழுதுவதை பார்க்கவே விரும்புகிறேன்.
விமரிசன பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன…!!!



இதற்கும் , ஒரு கடும் நடவடிக்கை தேவை . வங்கியிலிருந்து கடன் வாங்கியவர்கள் ஒன்றும் வேற்று கிரக வாசிகள் இல்லை , அவர்கள் முகுமூடியை கிழிப்பது கொஞ்சம் கடினம் , ஆனால் நடக்க கூடிய காரியம் தான் .
பூஷன் ஸ்டீல் என்ற கம்பெனி தான் பெரிய தொகை என்று சொல்வார்கள் , பெப்பர் ஸ்பிரே ரெட்டியும் இதில் உண்டு , டெக்கான் கார்னிக்ள் இதில் உண்டு . தவ்லீன் சிங்கின் கூடி வாழும் பாட்னரும் உண்டு . இவர்கள் எல்லாருமே நல்ல இடத்தில வீடு , வாகனம் இத்தியாதி உட்பட வசதியாக தான் இருக்கிறார்கள் . கோர்ட் தான் கை கொடுக்க வேண்டும் .
கொஞ்ச நாள் முன்பு – வாட்ஸ் ஆப் செய்தி , மோடியின் கடும் நடவடிக்கையினால் மித்தல் , டாடா , வீடியோகான் போன்ற பெரும் தனவந்தர்கள் , வெளிநாட்டில் உள்ள நிலம் , வீடு , சொத்து எல்லாத்தையும் வித்து , வங்கிகளில் கடனை திருப்பி கொடுக்கிறார்கள் என கேள்வி.
ஓன்று , இந்த கடன்கள் ஒன்றும் இப்போ கொடுக்கப்படவில்லை , எல்லாருமே இதில் உண்டு ( தமிழக ப .ஜ .க தலைவர்கள் கூட உண்டுன்னு சொல்றாங்க ) .
ஜப்தி , ஜெயில் , அவமானம் ஓன்று தான் இதன் தீர்வு .
Sundar Raman அவர்களின் கவனத்திற்கு :
// இந்த கடன்கள் ஒன்றும்
இப்போ கொடுக்கப்படவில்லை//
2016ஆம் ஆண்டின் மார்ச் மாதம் –
மொத்த வங்கிக் கடன் பாக்கி ரூ.76,685
கோடியாக இருந்தது.
2017ஆம் ஆண்டின் மார்ச் மாதம் அக்கடன் தொகை
ரூ.92,376 கோடியாக அதிகரித்துள்ளது.
இது 20.4 சதவிகித உயர்வு.
2016ஆம் ஆண்டில் கடனைத் திருப்பிச்
செலுத்தாதோர் எண்ணிக்கை 8,167.
அது 2017இல் 8,915 ஆக உயர்ந்துள்ளது.
“கீரன்”
ஒரு கடன் கொடுத்து அது NPA இல் சேர்வதற்கு சில வருஷங்கள் ஆகும் . இந்த NPA வில் உள்ள கடன்கள் மோடி ஆட்சியில் கொடுத்ததாக இருக்க முடியாது என்ற அர்த்தத்தில் சொன்னேன். கடனை வசூலிப்பதற்கும் வங்கிகளும் , RBI , மற்றும் அரசும் கடமை பட்டுள்ளது . வசூல் சரியில்லை என்றால் நிச்சயம் NPA கூடும் . இது சம்மந்தமாக , RBI தற்பொழுது கூடுதல் வேகம் காட்டுகிறது ( எஸ்ஸார் வழக்கு ) . ரொம்ப கடுமையான நடவடிக்கையும் , தொழில் சக்கரத்தை முடக்க கூடும் , அதுவும் பொருளாதாரத்துக்கு நல்லது அல்ல .
நானும் குறிப்பிட மறந்து விட்டேன் – முத்ரா கடன்கள் மூலம் – நிறைய கடன்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது , 2 லட்சம் கோடியோ இல்லை அதற்கும் மேலாக , இந்த கடன்கள் சிறு குறு வியாபாரிகள் , தொழில் முனைவோர்கள் என நிறைய மக்களுக்கு போய் சேர்ந்துஇருக்கிறது.
எத்தனையோ போலி கம்பெனிகள் முடக்கப்பட்டிருக்கிறது , GST , ரூபாய் நோட்டு புழக்கம் கூட – கடன் வசூலிப்பதில் ஒரு முன்னேற்றம் கொண்டு வரும் , ஏனனில் , எல்லா பணமும் கணக்கில் வரும் , வங்கியை ஏமாற்ற முடியாது . ஆனால் சில இடங்களில் வங்கியே நம்மை ஏமாற்றுகிறது
சுந்தர் ராமன் சார் ,
வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் முகமூடியை கிழிப்பது ஏன் கடினம்.
ரூபாய் 10 ஆயிரம் கடன் வாங்குவதற்கே எல்லா முகவரியையும் சரி பார்த்து தானே கொடுக்கிறார்கள். அப்படி இருக்கையில் கோடிகளில் கடன் வாங்குபவர்கள் முகவரிகள் வங்கிகளில் இல்லையா என்ன ?.
இந்த கடனே தொழில் நிறுவனர் ,அரசியல் வாதி மற்றும் வாங்கி அதிகாரி ஆகியோரின் கூட்டு திருட்டு. ஆகையால் எந்த விவரத்தையும் வெளியே விட மாட்டார்கள். இந்த கடனை வசூலிப்பதற்கு நீதி மன்றம் எப்படி கை கொடுக்கும். நீதி பதிகளும் மனிதர்கள் தானே . அவர்களுக்கும் ஓயுவிற்கு பின்பு கவர்னர் போன்ற பதவிகள் தேவைதானே.
ஏன் சார் பிஜேபி யின் ஸ்லீப்பர் செல்லினால் பரப்பப்படும் whatsapp மெசேஜ் எப்பிடி இருக்கும் . மோடி யின் கடும் நடவடிக்கை எல்லார் மேலேயும் அல்லவா இருக்கவேண்டும் . அது என்ன குறிப்பிட்ட சிலர் மீது மட்டும் . எல்லாம் பொய் . அப்பிடி வெளி நாடுகளில் உள்ள சொத்துக்களை விற்று கடனை கட்டினால் இந்த தொகை குறைந்து அல்லவா இருக்கவேண்டும் . ஏமாற்றுபவர்கள் எண்ணிக்கையும் குறைந்து அல்லவா இருக்கவேண்டும் . இரண்டும் கூடியது ஏன் .
சுந்தர் ராமன் சார் கொஞ்சம் விளக்குங்களேன்
நான் திரும்ப விளக்கமாக சொல்கிறேன் , இந்த NPA வில் உள்ள , வாரா கடன் , மோடி ஆட்சியில் கொடுத்து ( 2014 அல்லது 2015 அல்லது 2016 இல் ) 2017 இல் , NPA வில் வந்துவிட்டது என்று சொல்ல முடியாது . UPA அரசு விட்டு சென்ற மிக பெரிய டைம் பாம் இந்த NPA பிரச்சனை . அது கூடுவது , 2012இல் உள்ள ஒரு கடன் , இப்போது தான் இதற்குள் வந்திருக்கும் .
மிக பெரிய தொகை , ஸ்டீல் தொழில்களிலும் மற்றும் , கோல் – நிலக்கரி உபயோகித்து மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழிலிலும் தான் என்று தெரிகிறது . இப்போ , சூரிய ஒளி மின்சாரம் நல்ல விலையில் உற்பத்தி செய்யும் தொழில் நுட்பாங்கள் வந்து விட்டது .
நான் குறிப்பிட்ட தோழி அதிபர்கள் ( மித்தல் , டாடா ) – மிக பெரிய அதிபர்கள் , அவர்களின் கடன் வாரா கடனில் போகவில்லை , ஆனால் அவர்களுக்கு வெளிநாட்டு சொத்து அதிகம் – செய்தி உண்மையா இல்லையா என்று தெரிய அவர்களை தான் கேட்கணும் . இப்போதெல்லாம் இந்த தொழில் அதிபர்கள் அனாவசியமாக அரசு அலுவகங்களில் சுற்றுவதில்லை . எது இருந்தாலும் எல்லாமே மிகவும் நேர்மை என்று சிலர் அல்ல பலர் அல்ல , எல்லாருமே சொல்கிறார்கள் .
நீங்கள் மோடி எதிர்ப்பு என்ற கண்ணாடி அணிந்து பார்த்தல் , குறைகள் மட்டுமே தெரியும் . நீங்கள் சொல்வீர்கள் நாங்கள் நிறைகளை மட்டுமே பார்க்கிறோம் என்று . உண்மை என்ன என்பதை காலம் தான் சொல்லும் .அடுத்த தேர்தல் சொல்லும் என எதிர்பார்ப்போம் . நீங்கள் சொல்லும் மக்களை கஷ்டப்படுத்திய திட்டமே ( பணப்புழக்கம்) அவர் தேர்தலில் ஜெயிகிறது என்றால் , மக்களுக்கு உதவும் திட்டம் எந்த அளவுக்கு வெற்றிக்கு உதவும் .
மிக கடுமையான நடவடிக்கை எடுத்தால் என்போல் அல்லது உங்களை போல் உள்ள ஆசாமிகள் குதுகூலம் அடையலாம் , ஆனால் நாட்டுக்கு அது எப்படி போகும் என்று வல்லுநர்கள் தான் கூற வேண்டும் . சக்கரம் சுழல வேண்டும் , நிற்க கூடாது .
இப்போ ‘மோ’ என்ற எழுத்தையே ‘டி’ என்று முடித்து விடுகிறார்கள்.மேற்கண்ட பதிவில் யார் மோடிதான் இடஹ்ர்கு காரணம் என்று சொன்னது? இது காங்கிரஸ் அரசால் ஏற்பட்ட பிரச்னை என்று தெரிந்துதானே இதை சரி செய்ய பிஜேபி அரசை மக்கள் கொண்டுவந்தனர்.அவர்கள் எதை கேட்டாலும் காங்கிரஸ்தான் இதற்கு காரணம் என்று சொல்லி என்ன பயன்? இப்போ நம்ம குழப்பமே ,”மன்மோகன் எதுவும் செய்யலேன்னு என்றாவது தெரிஞ்சுது.மோடி என்ன செய்யறார்னே தெரியல!” நமக்கு விடிமோட்சம் இருக்கான்னே தெரியல!
கண்பத்,
நீங்கள் சொன்ன வார்த்தையை பயன்படுத்தாமலே எழுதப் பார்க்கிறேன்…!!!
பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகாவது, வாராக்கடன்கள் விவகாரம்
ஒரு முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,
அது குறையவில்லை என்பதோடு, அதிகரித்திருப்பதும் தெரிகிறது.
அதை ஒழிக்க -அல்ல – குறைந்த பட்சம் கட்டுப்படுத்தக்கூட முயற்சிகள்
இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
இது திறமையின்மை காரணமாக – என்று நான் சொல்ல மாட்டேன்..
வேண்டப்பட்டவர்களின் மீது,
அவசரம் ஆபத்துக்கு,
தேர்தல் நேரங்களில் நிதி வசதிக்கு –
உதவுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது, யாருக்கும்
தர்மசங்கடமான விஷயம் தானே…!!!
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
//மோடி என்ன செய்யறார்னே தெரியல!”// Really ?