…
…

ஊழல் பெருச்சாளி லாலுவுக்கு அழைப்பு….
முன்பின் தெரியாத மமதாவுக்கு அழைப்பு …
பாஷையே புரியாத பட்நாயக் அவர்களுக்கும் அழைப்பு …
ஆனால், பக்கத்திலேயே இருக்கும் திரு.திருமாவளவன் அவர்களை கலைஞரின் வைர விழாவிற்கு திரு.ஸ்டாலின் அழைக்காதது ஏன்…?
இத்தனைக்கும் திருமா அவர்கள், கலைஞரை எப்போதுமே போற்றி பாராட்டுபவர்.. ஸ்டாலினுக்கு எதிராகவும் அண்மைக்காலங்களில் எதையும் சொன்னதில்லை… நல்ல நட்புறவுடன் இருப்பவர்….எதிரணியில் இருந்தபோது கூட – இதுவரை திருமா கலைஞருக்கு எதிராக எந்த விமரிசனத்தையும் முன்வைத்ததில்லை.
இத்தனைக்கும் திருமா அவர்கள் செய்தியாளர்களிடம் வெளிப்படையாகவே, என்னை /விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை யாரும் “வைர விழா”விற்கு அழைக்கவில்லை என்று சொன்ன பிறகும் கூட –
ஏன் இந்த பாராமுகம்….யாருக்காவது விளங்குகிறதா….???
தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்….



Simple logic.
திருமா’வின் கடந்த தேர்தலின்போது “ஆட்சியில் பங்கு” டிமாண்டையும்,
விஜய்காந்த், வைகோவுடனான “மக்கள் நல கூட்டணி”யையும்
ஸ்டாலின் மறக்கவே இல்லை. இனி என்றும் திருமாவுடன் அவர்
தேர்தல் கூட்டணி வைக்க மாட்டார். திருமா, கலைஞருக்கு தான்
வேண்டப்பட்டவரேயன்றி, ஸ்டாலினுக்கு அல்லவே.
ஸ்டாலினுக்கு எப்போதுமே திருமாவை பிடிக்காது.
கலைஞர் ஆக்டிவ்வாக இருந்தபோது வேறு வழியில்லாமல்
பொறுத்துக் கொண்டிருந்தார். இப்போது – இவரே ராஜா
நினைத்ததை செய்யலாம்; அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.
திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கும் அழைப்பு இல்லையே…ஏன் என்ன ஆச்சு ?
திருமாவளவன், வீரமணி ஆகிய இருவரும் பச்சோந்திகள். வெறும் ஆதாயத்துக்காகவே நட்புடன் இருப்பவர்கள். திருமாவுடன், கூடுதல் ஒட்டுறவோடு இருப்பது, மற்ற சமூக வாக்குகளைப் பாதிக்கும். நாளைக்குத் தேவை ஏற்பட்டால், பாமக, திருமாவை விட பெட்டர் சாய்ஸ். திருமாவளவனோடு கூட்டணி வைத்தால், வட தமிழகத்தில், பாமகவுக்கு பட்டுக்கம்பளம் விரித்ததுபோல் ஆகிவிடும் (திமுக சார்பு வன்னியர்கள், திருமாவைப் பிடிக்காமல், பாமகவுக்கு வாக்களிப்பர்).
நாளைக்குத் தேவை என்றால், யாரும், எந்த சமயமும் ஒரு கேரட்டைக் காண்பித்தால் (ஆதாயம் கோடிகாட்டினால்), திருமா தவ்வுவதற்கு அஞ்சாத கொள்கையில்லாதவர். அதனால்தான் ஸ்டாலின் அலட்டிக்கொள்ளவில்லை.
(ராஜபக்ஷே, இலங்கை அரசைக் கடுமையாக எதிர்க்கும் திருமா, கனிமொழியோடு சென்று ராஜபக்ஷேவைப் பார்த்து நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, பரிசில் பெற்றுக்கொண்டு வந்தார். அதிமுகவினால் கிடைத்த 6+ எம்.எல்.ஏக்களோடு, தேர்தல் முடிந்ததும், கருணானிதிக்கு ஆதரவு தெரிவித்தார். ஆரம்பத்தில் எதிர்த்த விஜயகாந்தை, முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு வாக்கு சேகரித்தார். முதல் ஆளாக அப்பல்லோ போய், ஜெ. சுகமாக இருக்கிறார் என்று காசு வாங்கிக்கொண்டு புளுகினார். இதுதான் திருமாவின் கொள்ளைப் பிடிப்பு)