…
…
கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக, தொடர்ந்து ஆடிட்டர் திரு.எஸ்.குருமூர்த்தி அவர்கள் திருவாளர் கார்த்தி ப.சிதம்பரம் மற்றும் அவரது தந்தை திரு.ப.சி. மீது இண்டியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் மூலமாக புகார்களை கூறி / எழுதி வருகிறார்…. துவக்க காலத்தில், இனியும் என்னைப்பற்றி எழுதுவீர்களேயானால், உங்களை கோர்ட்டில் சந்திப்பேன் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் திரு.ப.சி.
இப்போது திரு.குருமூர்த்தியின் turn. சிபிஐ ரெய்டு முடிந்த இந்த நேரத்தில் இவர் பதிலுக்கு சவால் விடுகிறார் … “இப்போது கோர்ட்டுக்கு போவீர்களா…? ”

…
நேற்று வெளியான துக்ளக் இதழின் தலையங்கத்தில் தனது புதிய பொறுப்பில் துக்ளக் ஆசிரியராக விவரமாக விளக்குகிறார் திரு.குருமூர்த்தி அவர்கள்.
தந்தை மற்றும் தனயன் மீதான ஊழல் புகார்கள் பற்றிய முழு விவரங்களும் இதில் அடங்கியிருப்பதால் –
நண்பர்கள் இது குறித்த விவரங்களை முழுமையாக அறிய அதை இங்கே பதிப்பிக்கிறேன் –
…





தந்தையை மிஞ்சிய தனயன் ?
சேரிடம் அறிந்து சேர்
துஷ்டரைக் கண்டால் தூர விலகு
பன்றியோடு சேர்ந்த கன்னுக்குட்டியும்……….
இந்தப் பழமொழிகளுக்கும்,
1. ‘கருத்து’ தளத்தை இணைந்து நடத்திய திகார் புகழ் கனிமொழி, கார்த்தி சிதம்பரம்
2. ப.சிதம்பரம் வந்து பலமுறை சந்தித்த கருணானிதியை,, ‘லஞ்ச் டயம் ஆயிடுச்சு” என்று சொன்னவுடன் அண்ணா சமாதியில் பெட் ரூம் உருவாக்கி ஏர் கூலர், மனைவி, துணைவியோடு படுத்திருந்த கருணானிதி, ஆச்சு நேரமாச்சு என்று துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று வீட்டுக்கு (எந்த வீட்டுக்கு என்று ஞாபகம் இல்லை) சென்றுவிட்டு, ‘மழை விட்டாலும் தூவானம் விடாது’ என்று சொன்னதற்கும்
ஏதேனும் தொடர்பு உள்ளதா? ப.சி.யின் 2009 கால கட்டங்களில்தான் கார்த்திக் சிதம்பரம் உலகப் பணக்காரர்களில் ஒருவராக திடீரென்று உயர்ந்தது. ஒருவேளை, ஆசியாவின் முதன்மைப் பணக்காரரான கருணானிதி கும்பலின் சேர்த்தி, அவரையும் பணக்காரராக்கிவிட்டதா? அந்த லாஜிக்கில், திகாரில் இடம் கிடைக்குமா?
லண்டனிலிருந்து திரும்ப வந்தால் தானே
திஹாரை பற்றி எல்லாம் யோசிப்பதற்கு ?
பாேடலாம் …. ஆனால் ” மாறன் சகாேதரர்களின் வழக்கு … திரு . குருமூர்த்தி அவர்களுக்கு இதில் திருபதிதானா? என்று ஏப்ரல்4 2017 அன்று ஒரு இடுகை பதிவிட்டீர்களே … அது பாேல இந்த வழக்குக்கும் …ஒரு பதிவு பிற்காலத்தில் பாேடும்படி ஆகாமல் இருக்குமா? ஆரம்ப விறுவிறுப்பு … அப்புறம் …பிசுபிசுப்ப ….?
செல்வராஜன்,
குருமூர்த்தி அவர்களின் வீச்சும், வேகமும், பாஜக / மோடிஜி ஆட்சிக்கு வந்த பிறகு மழுங்கி விட்டது என்றே தோன்றுகிறது.
மோடிஜிக்கு விருப்பம் இல்லையென்றால், இதையும் கைகழுவத்தயாராக இருப்பார் என்கிற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை.
மாறன் சகோதரர்கள் விஷயத்தில் – முன்பு ஐக்கிய முன்னணி (காங்கிரஸ் கூட்டணி) அரசு அதிகாரத்தில் இருந்ததால், அதன் தோழமைக்கட்சிக்காரர் என்கிற முறையில், சிபிஐ நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியது என்று திரு.குருமூர்த்தி அவர்களே குற்றம் சாட்டி இருந்தார்……
ஆனால், தற்போது நடப்பது பா.ஜ.க.வின் ஆட்சி. இப்போது, அந்த வழக்கு மழுங்க அடிக்கப்பட்டு, நீர்த்துப்போய்
ஏனோ தானோ என்று நடத்தப்படுகிறது…. காரணகர்த்தா திரு.ரவிஷங்கர் பிரசாத் என்றும் சொல்லப்படுகிறது.
மாறன் சகோதரர்களின் செல்வாக்கு ரவிஷங்கர் பிரசாத் அவர்களுடன் நின்று விட்டதா அல்லது பாஜக தலைமை வரைக்கும் ஊடுருவிப்போய் விட்டதா என்று தெரியவில்லை.
400 கோடி ரூபாய் மோசடி என்கிற வழக்கு இப்போது வெறும் 1.78 கோடி பில் செலுத்தவில்லை என்கிற அளவிற்கு
அரசு தரப்பிலிருந்தே நீர்த்து போக வைக்கப்பட்டிருக்கிறது.
குருமூர்த்தி சார் – பார்த்துக் கொண்டு சும்மா தான் இருக்கிறார். அவரது நேர்மையையும், மனசாட்சியையும்
கட்சிப்பாசம் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது போலும்…
மாறன் சகோதரர்கள் மீதான வழக்கு, திரு.குருமூர்த்தி அவர்களின் மனசாட்சிக்கு ஒரு சவால்… பொறுத்திருந்து பார்ப்போம் என்ன செய்யப்போகிறாரென்று…
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
திரு.ரவிசங்கர் பிரசாத் இதன் பின்ணணியில் இருக்கிறார் என்றால், இதைவிடக் கேவலம் பாஜகவுக்கு இல்லை. அதற்கு அவர்கள் ஏன் பாஜக நடத்தவேண்டும்? காங்கிரஸ் கொள்ளைக்கும்பலே பரவாயில்லையே. இதே மாறன், சோனியா அவர்களின் வீட்டில் (இந்திரா வீடு), அவர் காலில், ‘மேடம் என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கதறியதாக அப்போது செய்திகளில் அடிபட்டதே. அதனால்தான் அவர்மீது எந்த விதமான வழக்குகளும், தொந்தரவும் வரவில்லை என்றும் அறிந்தேன். இப்போது ரவிசங்கர் பிரசாத்தும் கொள்ளைக்கும்பலுக்குத் துணைபோகிறார் என்றால், பேசாமல் பாஜகவை விட்டு விலகி, திகார் ஜெயிலில் இருப்பவர்களுக்குத் தலைவனாகிவிடலாம். வெட்கம். வெட்கம்.