…
…

…
கேரளாவில் நடந்த ஒரு சம்பவத்தை அநேகமாக எல்லா தொலைகாட்சிகளும் விலாவாரியாக விவரித்து, ஒரு பெண் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளலாமா ? இது சரியா, தவறா..? என்று கேட்டு, விவாதம் நடத்தி, ஓட்டுக்கு விட்டு, வியாபாரத்தை பெருக்கும் வழியை பார்க்கின்றனர்…
கேரள முதலமைச்சர் இதை வரவேற்றதை பற்றி, ஒரு முதலமைச்சர் சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கலாமா என்று தனியாக இன்னொரு விவாதம் வேறு…!
(அநேகமாக) மீடியாக்கள் எதுவுமே இதை மானக்கேடாகவோ, ஒரு சமூக அவலமாகவோ கருதி, இதற்கு தீர்வு காணும் வகைகளை யோசிக்க முயற்சிப்பதில்லை. தங்கள் வியாபாரத்தையும், TRP -யையும் அதிகரித்துக் கொள்ளவே பயன்படுத்த
முயற்சிக்கின்றன…சூடு, சொரணை இல்லாத மக்கள்… !
இந்த மீடியாக்களாலேயே, இந்தியாவில் இந்த அவலம் பெரிதுபடுத்தப்படுகிறது.இதைப் பார்க்கும் உலகம் – இந்தியர்கள் அத்தனை பேரும் காமக்கொடூரன்கள் என்று நினைக்க மட்டும் தான் இந்த மீடியாக்கள் உதவுகின்றன,
இந்த அவலங்கள் தொடர என்ன காரணம்…?
1) சுயகட்டுப்பாடு இல்லாத சில மனித மிருகங்கள்…. ரவுடிகளை கட்டுப்படுத்தாத போலீஸ், அரசு, – பணம் இருந்தால் எதையும் சாதித்துக் கொள்ளலாம் என்கிற திமிர்…
2) குற்றங்களை தடுப்பதிலோ, தண்டிப்பதிலோ – அக்கரையில்லாத காவல்துறை…அதிலேயே காசுக்கு விலை போகும் கருப்பு ஆடுகள்.
3) வருடக்கணக்கில் விசாரணை நடத்தும் நீதிமன்றங்கள்… விசாரணை முடிந்த பிறகும், பல பேர் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி வெளியே வந்து விடும் அவலம்…
மிகக்கடுமையான தண்டனை –
அதுவும் உடனடியாக –
நிச்சயம் உண்டு என்கிற பயம் இருந்தால்,
இத்தகையை இழிசெயல்களில் எவ்வளவு பேர் ஈடுபடுவார்கள்… ?
இந்த நாயை செய்தது போல், நறுக்கி கையில் கொடுத்து புகைப்படம் எடுத்து வெளியிட்டால் அப்புறம் செய்யத்துணிவார்களா…?

சாமியார் வேடம் போட்ட ஒரு பொறுக்கி நாய்

…
ஒரு பத்து பேருக்கு இத்தகைய தண்டனைகள் கிடைக்கட்டும் – வெட்டப்பட்டவன்களை இந்த மீடியாக்கள் பேட்டி எடுத்து போடட்டும்… அதற்கு அதிகபட்சம் விளம்பரம் கொடுக்கட்டும்… பிறகு பார்ப்போம் – தன்னாலேயே குற்றங்களின் எண்ணிக்கை குறைகிறதா இல்லையா என்று…!!!
என்னைக்கேட்டால், அந்த கேரள பெண் கொடுத்தது மாதிரியான தண்டனையை வழங்கும் பெண்களுக்கு எல்லாவித சட்ட பாதுகாப்புகளும் கொடுக்கப்பட வேண்டும்…தற்காப்புக்காக வினை புரிந்த அவர்கள் மீது எந்த வழக்கும் பதியக்கூடாது….
அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தப்படாமல், கேஷ் அவார்டு கூட கொடுக்கலாம்.
காவல்துறையும், அரசும் ஒரு பக்கம் இருந்தாலும் –
இத்தகைய குற்றங்களை தடுப்பதில் சமூகத்திற்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. பெண்கள் இல்லாத வீடு ஏது….?
ஒவ்வொருவர் வீட்டிலும், பெண்கள் இருக்கிறார்கள்… தாயார், மனைவி, சகோதரி என்று….
எனவே பெண்களுக்கு எதிராக – அது எந்த பெண்ணாக இருந்தாலும் சரி – நடக்கும் கொடுமைகளை தடுப்பதில் சமூகம் தீவிர முயற்சி எடுத்துக் கொண்டு முன் வரவேண்டும், அதிக அக்கரை கொள்ள வேண்டும்… பெண்களை பாதுகாப்பது என் முதல் கடமை என்று ஒவ்வொரு ஆண்மகனும் மனதில் உறுதி கொள்ள வேண்டும்.
பெண்களின் மீது யார் கை வைத்தாலும், தட்டிக்கேட்பது உன் முதல் கடமை என்று ஒவ்வொரு சிறுவனுக்கும்
இளம் வயது முதல் மனதில் பதிய வைக்கப்பட வேண்டும்.
அண்மையில் ஒரு வீடியோ பார்த்தேன். இதை உருவாகியவர் யாரென்று தெரியவில்லை… யாராக இருந்தாலும் அவருக்கு நாம் அனைவரும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம்….. மிக அருமையான வீடியோ –
வசனங்களே இல்லாத இந்த வீடியோ உணர்த்துகிறது நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை –
https://videopress.com/v/xyUCJrOT



சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். இது ஒரு சமூகப்பொறுப்பு.
இன்று அந்த பெண்ணுக்கு நடந்தது நாளை நம் வீட்டு பெண்ணுக்கு நடந்தால்
என்ன ஆகும் என்று ஒவ்வொரு ஆண்மகனும் பதறவேண்டும்.
பெண்ணுக்கு எதிராக எங்கே தவறு நடந்தாலும், அங்கே இருக்கும் ஆண்கள்
யாராக இருந்தாலும், பொறுப்பேற்றுக் கொண்டு, துணிந்து செயல்பட வேண்டும்.
இந்த அவசியம், பண்பாடு, பழக்கம், சிறுவயதிலிருந்தே பிள்ளைகளுக்கு
சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும். தட்டிக்கேட்பவன் தாண்டா ஆண்பிள்ளை
என்று அவர்களை சிறுவயதிலிருந்தே உணர வைக்க வேண்டும்.
நல்ல பயனுள்ள ஒரு இடுகை. கூடவே பொருத்தமான வீடியோ.
பாராட்டுகள் காவிரிமைந்தன்.
கற்பளிப்புக்கு ஒரே தண்டனை குறி நறுக்கல் என்பது உறுதி
செய்யப்படவேண்டும்
சகோதரர் காவிரிமைந்தனுக்கு,
சில நாட்களுக்கு முன்னர் ஒரு தோழியின் மூலம்
” பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி” ..கட்டுரையை படித்து விட்டு,
உங்கள் வலைத்தளத்தை தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். நிறைய
அக்கறையுடன் சமூகத்தை பாதிக்கும் பல விஷயங்களைப்பற்றியும் எழுதுகிறீர்கள்.
அரசியலில் எனக்கு அதிகம் ஈடுபாடு கிடையாது. இருந்தாலும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று படிப்பேன். அரசியலுடன் கூடவே பெண்களை பாதிக்கின்ற விஷயங்களை சரியாக தேர்ந்தெடுத்து வரிசையாக எழுதுகிறீர்கள். பொழுதுபோக்க
பல வலைத்தளங்கள் இருக்கின்றன; பயனுள்ள விஷயங்களை பொறுப்புடன்
எடுத்துச் சொல்வதை நீங்கள் வழக்கமாக கொண்டிருப்பதை பாராட்டுகிறேன்.
இந்த மாதிரி நிறைய விஷயங்களை நீங்கள் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
நன்றி சகோதரி யமுனா மஹாதேவன்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
பசுத்தோல் போர்த்திய புலிகள். பல வருடங்களாக அடிமைப்பட்டுக் கிடந்து சீறிய பெண். அதுவரை அவளைக் காக்க அருகில் ஆண்மகன் இல்லையே.
“பெண்களின் மீது யார் கை வைத்தாலும், தட்டிக்கேட்பது உன் முதல் கடமை என்று ஒவ்வொரு சிறுவனுக்கும் இளம் வயது முதல் மனதில் பதிய வைக்கப்பட வேண்டும்.” – ரொம்ப முக்கியமான அறிவுரை.
சரியான சமயத்தில் எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.