…
…
இரண்டு கார்ட்டூன்கள் கீழே…
கார்ட்டூனிஸ்ட் கேசவ் அவர்களுடையது ….
இவற்றிற்கு சுவையான, பொருத்தமான – விளக்கங்களை நண்பர்களிடமிருந்து வரவேற்கிறேன் …
பின்னூட்டங்களின் மூலம் –

…
கீழேயுள்ள கார்ட்டூனில் ஒரு சின்ன மாறுதலை கற்பனை செய்துகொண்டு விளக்கம் அளிக்க வேண்டும்… திருவாளர் நவாப் ஷரிஃப் அவர்களின் இடத்தில் திரு.ராஜ்நாத் சிங் அவர்களை பொருத்திக் கொள்ள வேண்டும். (கார்ட்டூனில் ஏற்கெனவே உருவப்பொருத்தம் இருக்கிறது….!!! )




முதல் கார்ட்டூன் உண்மை நிலையை உணரவைத்தது. (எனக்கு இப்போதைய எம்.எல்.ஏக்கள், எடப்பாடி & Co. மேல் வருத்தம். உண்மை நிலையைப் புரிந்து, ஓ.பி.எஸ் அவர்களை முதல்வராக்கி, அவர் கீழ் பணியாற்றி, தமிழக மக்களுக்கு நன்மை செய்தால் (ஆளுமையோடு, சும்மா, அம்மா மாதிரி அதைப் பண்றேன் இது இலவசம் என்று சொல்லக்கூடாது. அம்மா சொல்லும்போது அதைச் செய்யும் ஆளுமையும் அவர்களுக்கு ஒரு மரியாதையும் இருந்தது. இப்போதுள்ளவர்கள்மீது எடுபிடி என்பதற்குமேல் ஒரு மரியாதையும் இல்லை. ஓ.பி.எஸ் அவர்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. அனுபவம் உள்ளவர். நன்றாகச் செய்வார். ஆனால் இந்தப் பதவிப் பித்துள்ளவர்களால், அதிமுக சிதறடிக்கப்படுகிறதே. சேர்ந்திருந்தால்தானே சிங்கத்தை விரட்ட முடியும். உங்களுக்குத்தானே, பிரிந்திருந்த எருதுகள், சிங்கம் கதை 1ம் வகுப்பில் சொல்லித்தரப்படுகிறது.
பாஜக, காங்கிரஸ் செய்த அதே மாபெரும் தவறைச் செய்கிறது. சொந்தமாக நின்று வாக்கு வங்கியை இப்போதில்லாவிட்டாலும் இன்னும் 5 வருடங்களுக்குள்ளாகப் பெருக்கமுடியும். அப்படி இல்லாமல், குறுகிய கால லாபத்துக்காக அதிமுகவின்மேல் அமர்ந்து 10 எம்.எல்.ஏக்களைப் பெறலாம் என்றால் அது, அதிமுகவின் அழிவிலும், பாஜகவின் அழிவிலும் கொண்டுபோய்விடும்… அப்புறம் தமிழகத்தின் அழிவிலும்தான். ஏனென்றால் கொள்ளைக்கும்பலல்லவா ஆட்சியைப் பிடித்துவிடும். ‘குருவி’ படம் 1000 கோடி வசூல் என்று கூசாமல் சொல்லக்கூடிய கும்பலல்லவா அது. காங்கிரஸ் மட்டுமா, தேதிமுக, கம்யூனிஸ்டுகள் என்று எல்லாக் கட்சிகளும் செய்த தவறல்லவா? (தெரியாதவர்களுக்காக. தமிழகத்தில் இரண்டு பெரிய கட்சிகள் 64க்கு முன்னால் இருந்தன. அவை கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ். வேறு யாருக்கும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஆதரவில்லை)
இரண்டாம் கார்ட்டூனில், உங்கள் கற்பனையைச் சேர்த்தவுடன் இன்னும் Aptஆக இருந்தது. சமயத்தில் ஒருவர் அதீதமாக முன்னெடுக்கும்போது (Lead செய்யும்போது), மற்ற எல்லோரும் டம்மியாகிவிடுவார்கள். Collective Leadership அங்கு இல்லாமல்போகும்.) ஒரு சமயத்தில், Leader செய்யும் தவறைச் சுட்டிக்காட்ட யாரும் இருக்கமாட்டார்கள். சுற்றிவர ஜால்ரா கும்பல்களே ஆக்கிரமித்துக்கொள்ளும். மோடி அவர்கள் இதை அறியாதவராக இருக்க மாட்டார் என்றே நம்புகிறேன்.
தமிழன்,
உங்கள் comments பிரணமாதம்…!!!
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
தமிழ் நாடு என்னும் முரட்டு குதிரையில் பழக்கப்பட்ட பழனிச்சாமி என்னும் குழந்தை அமர்ந்தாலும் முரட்டு குதிரை சும்மா இருக்கும் ஆனால் பிஜேபி என்னும் பழக்கமில்லாதவர் ஏற நினைத்தால் முரட்டு குதிரை ஒரு ஓதை விடும் பாருங்கள் அப்ப தெரியும் குதிரையைப் பற்றி .
M. செய்யது
Dubai