…
…
தமிழ்நாட்டின் கேபினட் அமைச்சர் ஒருவரைப்பற்றிய செய்தி ஒன்று கீழே தரப்பட்டுள்ளது. இதுவரை 4 கேபினட் அமைச்சர்களின் மீது வெவ்வேறு காரணங்களுக்காக, அவர்கள் அமைச்சராக இருக்கும்போதே கிரிமினல் வழக்குகள்
பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
பதவியிலிருக்கும் அமைச்சர் ஒருவர் மீது FIR பதிவு செய்யப்பட்டால், விசாரணை ஒழுங்காக, நேர்மையான முறையில், எந்தவித அழுத்தமும் இன்றி நடைபெற உதவியாக – சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பது
நியதி.
அவராக விலகா விட்டால், அவரை டிஸ்மிஸ் செய்து கவர்னர் உத்திரவிடலாம். தமிழக கவர்னர் தொலை தூரத்தில் உறக்கத்தில் இருக்கிறாரோ இல்லை டெல்லி மேலிடத்தின் உத்திரவு காரணமாக “கண்டு கொள்ளாமல்” இருக்கிறாரோ
தெரியவில்லை….
ஜூலை மாதம் ஜனாதிபதி தேர்தல் முடியும் வரையில், பாஜகவுக்கு ஒவ்வொரு ஓட்டும் முக்கியம்… தப்பித்தவறி மந்திரி “உள்ளே” போய் விட்டால் – அந்த ஒரு ஓட்டு கிடைக்காமல் போய் விடுமே…!!! எனவே, என்ன நடந்தாலும் கண்டு கொள்ள வேண்டாம் என்று கவர்னருக்கு மத்தியிலிருந்து உத்திரவு போயிருக்கலாம்… !
வழக்கை தலையில் சுமந்து கொண்டிருக்கும்போது, அமைச்சர் பதவியில் தொடர வேண்டாம் என்று சொல்ல
அந்த கட்சிக்கும் துப்பு இல்லை, தைரியம் இல்லை…. சொன்னால் – அவர் முறைத்துக் கொண்டால்,
கூட பத்து பேரை சேர்த்துக்கொண்டால், ஆட்சியே கவிழ்ந்து விடுமே….!!!
“இங்கு யாருக்கும், எந்த கட்சிக்கும் – வெட்கமில்லை – மானம் இல்லை, மனசாட்சி இல்லை – ஒழுங்கு, பண்பாடு பற்றிய கவலை இல்லை “…
பதவி முக்கியம், தேர்தலில் வெற்றி முக்கியம், பணம் முக்கியம் – மற்றபடி தேசமே நாசமாகப் போனாலும் கவலை இல்லை….
——————





முதலில் இவர் பெயரை கம்பல்சரியாக மாற்ற வேண்டும்
எஃப்.ஐ.ஆர், ஃப்ராடு, கொள்ளை இந்த மாதிரி செய்தில வரலைனா இவங்களையெல்லாம் யாருக்குத் தெரியும், ஞாபகம் இருக்கும்.? எத்தனை மந்தி(ரி)களைப் பார்த்திருப்போம் கடந்த 30 வருடமா. ஒருத்தராவது நினைவில் இருக்காங்களா (குற்றம் சம்பந்தமில்லாமல்)? வரலாறு ஒரு ‘காமராஜர்’ஐத்தான் நினைவு கொள்ளும். அதனால் பதர்களுக்கு இருக்கிற பெயரைப் பற்றிக் கவலையில்லை. கவலைப்படவும் வேண்டாம்.
யார்தான் பதவியில் இருப்பது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. அமைச்சர் என்பவர் முதலமைச்சருக்கு ஆலோசனை சொல்லும் நிலையில், அறிவானவராவரும், விவரமானவராவரும், அனுபஸ்தராகவும் இருக்கவேண்டும். அப்படி இருக்கும்போதுதான், முதலமைச்சருக்கு உண்மை நிலையைச் சரியாகச் சொல்லி மக்கள் பணி ஆற்றமுடியும்.
இங்க மந்திரியாக இருப்பவர்களின் குவாலிபிகேஷன் என்ன? வெறும் சாதிப்பின்புலம். வேறு ஒன்றும் கிடையாது. இவர்களை மக்கள் புறக்கணித்தால், ரோடு பெருக்கக்கூட லாயக்கில்லாதவர்கள் என்று பலர் நினைத்தால் அதில் எனக்குத் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.
போற போக்கைப்பார்த்தால், பலர் உள்ளே போய், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அவசியமில்லாமல் ஆட்சி கவிழ்ந்துவிடும் போலிருக்கிறதே. ஜெ. வைத்துவிட்டுப்போன கட்சியை, குரங்குகள் பூமாலையைப் பிய்ப்பதுபோல் பிய்க்காமல் போய்த்தொலையமாட்டார்கள் போலிருக்கிறது.
பொறுக்கிகளும், ரவுடிகளும் அமைச்சரவையில் தொடர்வது எப்படி ?
FIR போடப்பட்டவர்களை இன்னமும் தனது அமைச்சரவையில்
முதலமைச்சர் வைத்திருப்பது எப்படி ?
விசாரணையில் உள்ள அமைச்சர்களை விலக்க முதலமைச்சர் கவர்னருக்கு
பரிந்துரை செய்ய வேண்டும். செய்ய மறூத்தால் கவர்னரே டிஸ்மிஸ்
செய்ய வேண்டும். போதும் இந்த மானக்கேடு. இனியும் இது தொடரக்கூடாது