…
…


…
எல்லாம் தெரிஞ்ச பேரறிஞ்சர் சுப்ரமணியன் சுவாமி….!!!
டேஞ்சரான அறிஞர் (டாக்டர்…!) என்பதால் –
பேரறிஞ்சர்….. சரிதானே…?
அகில இந்திய அரசியலில் சல்லடை போட்டு தேடினாலும்
இவருக்கு இணையாக லஞ்சம், ஊழல், கருப்புப்பணத்திற்கு
எதிராக போராடும் நேர் நிகரில்லாத ஒருதீர்க்கமான
போராளியை பார்க்கவே முடியாது என்று புளகாங்கிதம்
அடைகிறார்கள் சு.சுவாமியின் பக்தர்கள்…
கற்பழிப்பு சாமியார் ஆசாராம் பாபு, ஐபிஎல் கிரிக்கெட்
கொள்ளை சீனுவாசன் ஆகியோருக்காக அயராது
போராடிய –
லஞ்ச ஊழல், கருப்புப்பணம், ஆகியவற்றை எதிர்த்து
தன் வாழ்நாள் முழுவதும் அயராது போராடும் –
பாஜகவின் ஒப்புயர்வற்ற தலைவர் சு.சுவாமியின்
லேடஸ்ட் கஸ்டமர் –
– திருவாளர் தினகரன்….
திரு.தினகரன் விஷயமாக அவர் அளித்திருக்கும் பேட்டி –
————-
தினகரன் வழக்குக்கு ஆதாரமில்லை :
சுப்பிரமணியன் சுவாமி …
இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்ததாக
தினகரன் மீது தொடரப்பட்டுள்ள வழக்குக்கு ஆதாரம்
ஏதுமில்லை என, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்
சுவாமி தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 18ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில்
செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை உறுப்பினர்
சுப்பிரமணியன் சுவாமி, ‘தினகரன் மீது டெல்லி போலீசார்
இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்ததாக
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
யார் குற்றம் சாட்டினாலும் முதல் தகவல் அறிக்கை
பதிவு செய்யலாம்.
அதன்பிறகு விசாரணை நடத்தி ‘சார்ஜ் ஷீட் ‘பதிவு செய்த
பிறகுதான் வழக்கு என்று அர்த்தம். எனவே, தினகரன் மீதான
வழக்குக்கு எவ்வித ஆதாரமுமில்லை.
( ஒருவேளை திரு.ப.சி.அண்ட் சன் விவகாரத்திற்கும்
இதுவே தான் விளக்கமா என்று நல்ல வேளையாக
யாரும் கேட்கவில்லை…!)
அதிமுக-வில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சசிகலா
அணியில் உள்ளனர். பன்னீர்செல்வம் அதிமுக-விலிருந்து
நீக்கப்பட்ட ஒரு வெறும் எம்.எல்.ஏ. மட்டுமே.
செய்தி இப்படி இருக்கையில், தேர்தல் ஆணையம் எப்படி
இரட்டை இலைச் சின்னத்தை முடக்கியதென
தெரியவில்லை. இது ஒரு தவறான தீர்ப்பு, சசிகலா அணிக்கு
எதிராகவே இது உள்ளது.
பன்னீர் பின்னணியில் பாஜக இருக்கிறதென்பதில்
உண்மையில்லை. கட்சியில் யாராவது சிலர் இருக்கலாம்.
நான் முன்பே கூறியதுபோல டெல்லியில் 2 அமைச்சர்கள்
இதன் பின்னணியில் உள்ளனர்.
மேலும் பன்னீர்செல்வம் ஒரு தனிநபர். அவரிடம் எத்தனை
எம்.எல்.ஏ.க்கள் இருகிறார்கள் என்பதை கவர்னரிடம் அவர்
காட்டவிலையே. ஆனால் சசிகலா அணிக்குத்தான்
சட்டசபையில் மெஜாரிட்டி உள்ளது.
எனவே அவர்களுக்குத்தான் இரட்டை இலை சொந்தம்.
————————
பேரறிஞ்சர் ஜட்ஜ்மெண்டே கொடுத்து விட்டார் –
தினகரன் சார் இரட்டை இலையை உடனடியாக
எடுத்துக் கொள்ளலாம்…!
——————
கூடுதல் தகவல் –
முன்னதாக, டெல்லி க்ரைம் பிரான்சிலிருந்து
வெளியிடப்பட்ட செய்தியில் தங்கள் வசம், தினகரன்-சுகேஷ்
இடையே 40 நிமிடங்களுக்கு நடைபெற்ற தொலைபேசி
உரையாடலின் பதிவு ஆதாரமாக இருக்கிறது என்று மட்டும்
சொல்லப்பட்டிருந்தது….
இன்று வெளிவந்துள்ள காமெடி ந்யூஸ் என்னவென்றால் –
அந்த உரையாடலை டிஸ்க்கில் பதிவு பண்ணி
வைத்திருந்ததே அந்த சுகேஷ் தானாம்….!
திருவாளர் தினகரனுடன் தான் பேசியதை, பிற்பாடு
எந்த விதத்திலாவது தனக்கு (…? )உதவும் என்று கருதி
அவன் ரெக்கார்டு பண்ணி வைத்திருந்தது –
போலீஸ் அவன் அறையை சோதனை செய்தபோது
அவர்கள் கையில் சிக்கி இருக்கிறது……
இப்படியாகத்தானே – திருவாளர் தினகரன் சொந்தக்காசில்
சூது வைத்துக் கொண்டிருக்கிறார்…..
பேரறிஞ்சர் சு.சுவாமி –
கற்பழிப்பு சாமியார் ஆசாராம் வழக்கிலும்,
ஐபிஎல் கொள்ளை சீனிவாசன் வழக்கிலும் –
பெற்றுக் கொடுத்த வெற்றியை –
திருவாளர் தினகரன் வழக்கிலும் பெற்றுக் கொடுப்பாராக…!!!
இன்று தமிழக கவர்னர் எதாவது முக்கியமான
முடிவுகளை எடுக்கக்கூடும்….
இதில், அடுத்ததாக பேரறிஞ்சர் யாருக்கு வக்காலத்து
வாங்கப்போகிறார் என்பதைக் காண ஆவலுடன்
காத்திருப்போமாக…!!!



AIMLESS POLITICIAN என்றால் அது சு.சுவாமிதான். கட்ஜு அறிக்கைகளுக்கும் .சுவாமி அறிக்கைகளுக்கும் நிறைய சமயத்தில் வேறுபாடு காண இயலவில்லை. அப்போ, படிப்பறிவிக்கும் REASONABLE கருத்துச் சொல்வதற்கும் கொஞ்சம்கூடப் பொருத்தமில்லை போலிருக்கிறது. (அதனால்தான் படிப்பறிவில்லாத காமராஜர் எட்டிய உயரத்தை, மெத்தப்படித்த மேதாவிகள்-சு.சுவாமி, ப.சி போன்ற பலர்- ஏன் அவரது முழங்கால் உயரம்கூட எட்டமுடியவில்லை).
சு.சுவாமி நிச்சயமாக சங்ககாலத்தில் பிறப்பெடுத்திருக்கவேண்டும். அவரைப் பார்த்துத்தான், ‘பாம்புக்குப் பல்லில் விடம்.. மனிதனுக்கு உடம்பெல்லாம் விடம்’ என்று சொல்லியிருப்பார்கள்.
சு.சா என்றுமே ஒரு நம்பகத்தன்மை அற்ற பிளாக் மெயிலர், பணத்திற்க்காகவோ, பதவி வெறிக்காகவோ, தான் ஒரு அறிவாளி என நம்ப வைப்பதற்காகவோ பல கீழ்மைகளை செய்தவர், செய்து கொண்டிருப்பவர், செய்யப்போகிறவர்.தவறி சில நல்லவைகளையும் செய்திருக்க வாய்ப்பிருக்கிறது.மகாபாரதத்திலே சகுனியின் அமைச்சரான கணிகர் பற்றிய அறிமுகத்தில் அவரை சொன்னவுடன் மனதில் ஒரு கருமை தோன்றும். கீழ்மையை மட்டும் செய்ய முடிந்த பாதாள லோகத்து பிரதினிதி என்று தோன்றும். அப்படி ஒரு முழு தீமை சுப்ரமணிய சாமி. இப்போது தினகரனை , சசிகலாவை ஆதரிக்கும் இதே சு சா , சுந்தர் ராமன் கொலைவழக்கில் கண் மூடித்தனமாக ஜெயேந்திரரையும் ஆதரித்தார். என்றும் குற்ற வாளிகள், கயவர்களை மட்டுமே ஆதரித்து தன் அறிவை நிலை நாட்ட வேண்டும் என விழைபவர் சுசா. ராஜீவ் கொலைவழக்கில் சர்வ நிச்சயமாய் சம்பந்தப்பட்டு விசாரணை வளையத்திற்குள் தப்பி, சமாளிக்கும் அளவிற்கு திறமையும் அந்நிய உதவியும் கூடியவர் சுசா. இந்திய அரசியலில் கருணா நிதி, லாலு,முலாயம் , சோனியா , ராபர்ட் வதேரா, கேடி சகோதரர்கள் இவர்களுக்கும் பல படிகள் கீழே இன்னும் ஒரு உருப்படி , ஏழாம் உலக பிரதிநிதி…