…
…
தமிழகம் தழுவிய முழு அடைப்பு –
அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவெடுத்து விட்டாகி
விட்டது ….
பாமக,
தேமுதிக
தமாகா – அழைக்கப்பட்டும் பங்கேற்கவில்லை…
அதிமுக, பாஜக –
-விற்கு அழைப்பே இல்லை.. ஆளும் கட்சிகள்
அதனால் அழைப்பு கிடையாது என்று சொல்லி
விட்டார்கள்.
சரி,
நாம்தமிழர்,
மதிமுக,
பல விவசாய அமைப்புகள், ஆகியவற்றையும்
கூப்பிடவில்லையே ஏன்…?
ஓ – திருவாளர் ஸ்டாலினுக்கு –
அவர்களை பிடிக்காதா …? சரி…சரி….
ஆனால் இது எப்படி அனைத்துக்கட்சி கூட்டமாகும்…?
வீரமணி அய்யாவுக்கு கூட அழைப்பு இல்லை…
ஓ – இப்போதெல்லாம் அவரையும் பிடிக்காதா…?

ஆனால் ஆர்.எம்.வீ. க்கு அழைப்பு போய் –
அவரும் பட்டுச்சட்டையுடன் கூட்டத்திற்கு வந்து
மாப்பிள்ளைத்தோழர் மாதிரி பக்கத்தில் அமர்ந்திருக்கிறாரே…
அவர் என்ன பெயரில் கட்சி வைத்திருக்கிறார் என்பது
அவருக்காவது தெரிந்திருக்குமா……!
ஆக மொத்தம் – இது திமுக செயல்தலைவருக்கு பிடித்த
தலைவர்களின் / கட்சிகளின் கூட்டம் என்று
வைத்துக் கொள்ளலாமா…?
அப்படியானால், தலைப்பையும்
அப்படியே போட்டிருக்கலாமே…!!!
” காவிரி மேலாண்மை வாரியம்,
ஒழுங்காற்று குழு அமைக்கப்பட வேண்டும் ”
“ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் ரத்து செய்யப்பட
வேண்டும்…”
” தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள
விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும்..”
“முல்லைப்பெரியாறு அணையின் உயரத்தை
152 அடியாக உயர்த்த வேண்டும் ”
இவை சில முக்கிய கோரிக்கைகள்….
இவற்றை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும்,
அதிகாரமும் யாரிடம் இருக்கிறது…?
தமிழ்நாட்டில் ஒரு நாள் – 9 மணி முதல் 6 மணி வரை
கடையடைப்பு செய்தால் என்ன நடக்கும்…?
பத்தோடு பதினொன்று …
அத்தோடு இதுவும் ஒன்று…
இதுவரை எத்தனை கடையடைப்பு நடந்திருக்கிறது…
என்ன விளைவுகள், என்ன பலன்கள் கிடைத்தன…?
தமிழ்நாட்டில்
ஒரு நாள்,
ஒரே ஒரு நாள் – அரைகடையடைப்போ,
முக்கால் கடையடைப்போ,
முழு கடையடைப்போ –
செய்தால் மத்திய அரசுக்கு என்ன நஷ்டம்…?
அது மத்திய அரசை எந்த விதத்தில் பாதிக்கும்…?
டெல்லியை விழித்துக் கொள்ளச்செய்ய –
மசிய வைக்க –
வேறு ஒரு வழியும் கிடையாதா…? தெரியாதா…?
ஏனிந்த முட்டாள்தனம்…?
மக்களை ஏமாற்றுகிறார்களா… அல்லது
டெல்லியில் நடைப்பிணமாக, அரைநிர்வாணமாக,
அம்மணமாக போராடிக் கொண்டிருக்கிறார்களே –
அந்த விவசாயிகளை ஏமாற்றுகிறார்களா…?


இத்தனை பேர்,
இவ்வளவு விளம்பரங்களுடன் ஒன்றுகூடியது –
இதற்காகத்தானா…?
தமிழர்கள் தலையில் மிளகாய் அரைப்பது என்றால்
இந்த அரசியல்வாதிகளுக்கு
அவ்வளவு சுலபமா…?
இவர்களே இப்படி ஏமாற்றினால் இன்னும்
டெல்லிக்காரர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள்… ????



ஸ்டாலின் அவர்கள், தான் ஒரு தலைவர் என்று காண்பித்துக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம்.இப்போ தமிழகத்துல, தினகரன் அதிமுக, ஓபிஎஸ் அதிமுக என்று அரசியல் சுழல்வது ஸ்டாலினுக்கு கொஞ்சம் UNCOMFORTABLEஆக உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எந்தக் கட்சியோடு கூட்டு போடவேண்டிவரும் என்பது இன்னும் நிச்சயமாகத் தெரியவில்லை. திருமாவளவனை யார் கூப்பிட்டாலும் உடனே சென்று கலந்துகொள்வார். அது, ராஜபக்ஷேயைப் பார்த்து டிபன் சாப்பிட்டு பரிசு வாங்கவேண்டுமானாலும் சரி, ஜெ.வைப் பார்க்காமலேயே, எல்லாம் சரியாக நடக்கிறது என்று ‘ஆமாம்சாமி’ போடவேண்டுமானாலும் சரி, ‘ரெட்டி சுருட்டிய பணத்தில் கொஞ்சம் பெற்றுக்கொள்வதானாலும் சரி’. அவருக்கும் கொள்கைக்கும் சம்பந்தமேயில்லை.
சுப.வீ, கி.வீரமணி போன்றோர் இப்போதைக்கு ஜால்ரா கூட்டத்தில் (மன்னிக்கவும்.அனைத்துக்கட்சி கூட்டத்தில்) இல்லை. ஒரு எக்ஸ்ட்ரா சேர் இருந்ததனால் ஆர்.எம்.வீக்கு அழைப்பு.
பாவம். மீத்தேன் என்பது, ‘மலர்களிலிருந்து தேன் எடுக்கும் திட்டம்’ என்று தவறுதலாகப் புரிந்துகொண்டதால், ஸ்டாலின் அதற்கு ஒப்புதல் கொடுத்துவிட்டார். உண்மையில் விவசாயிகளின்மேல் அக்கறை இருந்தால், திமுக சுருட்டிய அனைத்து விவசாய நிலங்களையும் விவசாயிகளுக்குக் கொடுப்பதே ஸ்டாலின் செய்யவேண்டிய உருப்படியான வேலையாயிருக்கும்.
விவசாயிகளை வெளியே தள்ளி, விவசாயிகளுக்காக ஸ்டாலின் கூட்டம் நடத்துவதை நேற்றே தினமலர் கார்ட்டூன் மூலமாகச் சொல்லிவிட்டது.
“ஒரு நாள் கடையடைப்பு” – இதன் காரணத்தை நீங்கள் புரிந்துகொள்ள வில்லை. ஸ்டாலின் குடும்பங்கள், RETAIL கடைகள் வைத்திருந்தால். இந்த மாதிரி கடையடைப்பு நடக்காது. ஸ்டாலினுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், ‘ஒரு நாள் தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பு நிறுத்தம்’ செய்யவேண்டியதுதானே. அல்லது, ஒரு மாதம், ‘அறிவாலய திருமண மண்டபங்களை இலவசமாக வழங்குகிறோம்’ அல்லது ‘மூடுகிறோம்’ என்று சொல்லவேண்டியதுதானே. அல்லது, திமுகவினரின் சாராய ஆலைகளை ‘ஒரு நாள்’ மூடுகிறோம் அல்லது உதய’நிதி ‘ஒரு நாள்’ படப்பிடிப்பை நடத்தமாட்டார், ‘பவுலிங்க்’ கடையை ஒரு நாள் மூடுகிறோம், ‘சரவணபவனை ஒரு நாள் மூடுகிறோம்’ (மாறனுக்குச் சொந்தமான) அல்லது ‘ஸ்பைஸ் ஜெட்’ ஒரு நாள் பறக்காது என்று சொல்லவேண்டியதுதானே. அதைச் செய்யமாட்டார். அவருக்கு வந்தால் ‘ரத்தம்’, மற்ற எவருக்கோ நஷ்டம் என்றால் ‘தக்காளிச்சட்டினி’.
சபாஷ் தமிழன்….
அடித்து, துவைத்து, அலசி, பிழிந்து, உதறி –
தொங்கப்போட்டு விட்டீர்கள்…!!!
நல்ல பின்னூட்டம்…!!!
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Supper reply Mr Tamilan, I am now your fan ! Best they can do is visit villages and help them to get water for drinking. Form groups to re dig ponds and water bodies in small way. This will bring back votes !! not drama
இன்னுமா இந்த ஊரு நம்பளை நம்புது ? செயல் தலைவர் கேட்க்கும் கேள்வி
இது வரை எத்தனை காலம் ஆட்சி நடத்தினர் , எவ்வளவு ஊழல் , கூவம் , வீராணம் ஆரம்பித்து தற்போதைய அறிவாலயம் வரை …ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமே இவர்கள் தான் , ஆனால் இவர்கள் அந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் .
நம்மிடம் உள்ள கோயம்புத்தூர் விவசாய பல்கலை கழகம் மூலம் , எத்தனை எத்தனை செய்து இருக்கலாம். உழவர் சந்தை நல்ல ஒரு அமைப்பு தான் , ஆனால் வேறு பல தொலை நோக்கு திட்டங்கள் எதுவும் இல்லாமல் , வெறும் வார்த்தை ஜாலங்களில் மக்களை முட்டாள் ஆக்கி , ஊழல் மூலம், கணக்கில் அடங்கா செல்வத்தை சுரண்டினார்கள் .
காவேரி பிரச்னை – மத்திய அரசு இதில் என்ன செய்ய முடியம் – உச்ச நீதி மந்திரத்தை தீர்ப்புக்கே , 40 பஸ் எரித்தார்கள் , நம் மக்கள் நிறைய பேர் அங்கு வாழ்கிறார்கள் , தண்ணீர் இருந்தால் தானே திறக்க முடியும் . இனி வரும் காலங்களில் , பெரிய நகர மக்கள் , கடல் தண்ணீர் சுத்தகரிப்பு , நீர் சுழற்சி மூலம் தான் சமாளிக்க வேண்டும் , முக்கியமாக தண்ணீருக்கு நல்ல விலை கொடுக்க வேண்டும் ,
விவிசாயிகள் கேட்கிறார்கள் என நெல் விலை உயர்த்தினால் , பெரும்பாலான மக்களுக்கு பாதிப்பில்லையா ? விலைவாசி உயராதா ? எப்படி ஜார்கண்ட் போன்ற பிரதேசத்தில் , விவசாயிகள் இந்த விலையிலேயே லாபம் பார்க்கிறார்கள் . டெல்டா விவசாயிகள் , இது வரை செய்து வந்தது ஓகே , இனிமேலும் நாங்கள் மாறமாட்டோம் , இப்படி தான் , நிறைய தண்ணீர் உபயோகித்து ( அல்லது விரைத்து ) , அளவில்லா உரம் போட்டு , பூச்சி மருந்து தெளித்து , அடிக்கடி போராட்டம் செய்வோம் என்றால் , யார் தான் அவர்களை காப்பற்ற முடியும் .
மத்திய அரசு 2022க்குள் அல்லது 2025க்குள் , விவசாயிகளின் வருமானம் இரு மடங்காக்க , என்னவெல்லாம் செய்ய முடியுமோ , அதை செய்து வருகிறார்கள் . முக்கியம் , மின்சாரம் , அதன் உற்பத்தியை உயர்த்தி, எல்லாருக்கும் எப்பொழுதும் வழங்க முயற்சி எடுத்து வருகிறார்கள் . உரம், , யூரியா நீம் கோட் செய்தவன் மூலம் , பதுக்கல் பெருமளவு குறைந்துள்ளது . மண் தரத்தை டெஸ்ட் செய்ய தொடங்கி இருக்கிறார்கள் . நாம் அனுப்பிய சாட்டிலைட்கள் , விவசாயத்திற்கு பெருமளவு நன்மை செய்ய போகிறது , முத்ரா கடன் மூலம் சிறு , தொழில் தொடங்க கடன் ( திருப்பி கட்டலேனா திருப்பியும் லோன் எப்படி கொடுப்பார்கள் ) . கூடிய சீக்கரம் இஸ்ரேல் விசிட் மூலம் நல்ல தொழில் நுட்ப்பம் கிடைக்க வாய்ப்புண்டு . 150 நாள் வேலை திட்டம் .
மணல் கொள்ளை , உரம் தாறு மாறாக உபயோகிப்பது , பூச்சி மருந்து , நீர் ஆதாரத்தை விரிவு படுத்தாமல் இருப்பது , கால்நடை இல்லாமல் ஒரு மாற்று வருமானம் இல்லாமல் இருப்பது , வேலை செய்ய ஆட்கள் கிடையாது , மது , டாஸ்மாக் , சினிமா , முக்கியமாக 60க்கு மேல் உள்ளவர்கள் தான் விவசாயம் செய்வது, இளைஞர்கள் சுத்தமாக இதில் ஈடுபடுவது எல்லை, எங்கெல்லாம் இளைஞர்கள் உள்ளாரோ நன்றாகவே செய்கிறார்கள் .
மீத்தனோ அல்லது ஹைட்றோ கார்பன் – திட்டம் , நிறைய விவாதித்தாச்சு , நிச்சயம் இது தமிழ் நாடு விவசாயிகளுக்கு நல்லது இல்லை என தான் தோன்றுகிறது , அதன் ரிஷி மூலம் என்னவோ ? எனக்கு தெரியவில்லை .