மோடிஜியின் – ஒரு good road show …!!! ( நல்ல சாலைக் காட்சி…..? )

( முன் குறிப்பு –
இந்த வீடியோவை எல்லாம் பெருமளவில்
பகிர்ந்து கொண்டு, பொது மக்களிடையே எடுத்துச் செல்லுமாறு பாஜக வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த ஒரு விஷயத்திலாவது அவர்கள் சொல்வதை
கேட்போமே என்று நானும் இங்கு நமது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…!!! )

————-

இது இந்நாட்டின் பிரதமர், அவரது கட்சியின் தேசிய அளவிலான கூட்டத்திற்கு இன்று ஒடிஷாவிற்கு வருகை தந்தபோது, அவரைக்காணும் ஆவலில் முந்திக்கொண்டு
வரும் ஒரு தொண்டர்…..

பாவம் – மாற்றுத்திறனாளியான அவரை – தூக்கிக் கொண்டு வருகிறார்களா அல்லது இழுத்துக் கொண்டு வருகிறார்களா-
என்று தான் தெரியவில்லை…

https://youtu.be/iamQQAIMSqY

கீழே உள்ள வீடியோவை பாருங்கள்…
ஒடிஷா பாஜக வினருக்கு கொஞ்சம் கூட இரக்கமே
இல்லையா…?

என்ன கொடுமை இது…?

பாவம் ஒன்பது கிலோமீட்டர் தூரம் பிரதமரை
இப்படி காரில் தொத்திக் கொண்டு வரச்செய்கிறார்களே…!!!

ஒரு திறந்த காரில் அல்லது ஜீப்பில் அழைத்து வரக்கூட
அவர்களுக்கு தோன்றவில்லையா…?

https://youtu.be/LohmGfn1GzE

பின் குறிப்பு (1)

வர்ணனை வேண்டாம் என்று பாஜக
வேண்டுகோள் விடுக்காததால்,
எனக்குத் தெரிந்த அளவில் வர்ணனை….!!!

பின் குறிப்பு (2)

பாஜகவினர், தங்கள் பாப்புலாரிடியை நிரூபிக்க
சென்னையில் கூட இந்த மாதிரி
ஒரு ரோடு ஷோ விற்கு முயற்சிக்கலாம்…
தமிழ்நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலையில் அதற்கு
எக்கச்சக்கமான வரவேற்பு இருக்கலாம்….!!!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to மோடிஜியின் – ஒரு good road show …!!! ( நல்ல சாலைக் காட்சி…..? )

  1. குமார்'s avatar குமார் சொல்கிறார்:

    யெஸ் – நல்ல யொசனை –

  2. Sundararaman's avatar Sundararaman சொல்கிறார்:

    He is different… He is more youth than the youth leaders ( including the seyal (padaatha) thalaivar.)

    • இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

      ஆ…ஆ…ஆ… அப்படியே புல்லரிக்குது சார்.

      • இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

        ஒரு சந்தேகம் –

        காரின் ஒரு பக்கத்தில் (அதாவது இடப்பக்கத்தில்)
        தொத்திக் கொண்டு நின்றால், ரோட்டில் இன்னொரு பக்கத்தில்
        (அதாவது வலப்பக்கத்தில்) நின்று கொண்டிருக்கும் மக்கள்
        எப்படி தலைவரை தரிசனம் செய்வது ?

        ஒரு ஐடியா –

        இதைவிட காரின் டாப்’பில் ஏறி நின்று கொண்டு விட்டால்,
        360 டிகிரியிலும் தரிசனம் பண்ணலாமே

  3. Raghuraman's avatar Raghuraman சொல்கிறார்:

    I remember even S D Somasundaram (SDS) of AIADMK already did this long back in Tamilnadu – after joining back JJ.

    Whatever we say ( or see ) now, most of them were already seen in Tamilnadu.

    And mingling with general public stunt – Rajiv did much more than this.

    So, Modi bhakthas cannot claim any credit for these gimmicks.

  4. selvarajan's avatar selvarajan சொல்கிறார்:

    தொத்திக்கொண்டு செல்வது — தொங்கிக்கொண்டு செல்வது — வாசற்படியில் நின்றுகொண்டு செல்வது என்று பல வித சர்க்கஸ் வித்தைகள் நாட்டிலுண்டு … ! உட்கார இடம் இல்லாமல் — தொத்துவது … பிறரை கவர– தொங்குவது … காரின் திறந்த கதவை பிடித்து நின்றுகொண்டு செல்வது — தலைவர்கள் பாணியோ … ? ” நமக்கு நாமே “வில் செயல் தலைவர் ஆட்டோவில் காட்டினார் — பிரதமர் காரில் காட்டினார் … மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கு …?….

    அய்யா … ! ஒரு மனவருத்தம் குடைந்துகொண்டே இருக்கிறது — நீங்களாவது ” நிலவரம் ” ஏதாவது குறித்து கூறுங்களேன் : செயல் தலைவரைப்பற்றி தினமும் அறிய ஏதாவது செய்திகள் கிடைக்கின்றன — ” {செயலிழந்த } தானைத்தலைவரைப்பற்றி ஒரு செய்தியும் காணோமே … ஏன் .. ? காவேரி மருத்துவமனையில் இருந்து வீடு சென்றவரைப்பற்றி — பிறகு எந்த ஒரு தகவலும் ஊடகங்களில் கேட்க — படிக்க — காண முடியவில்லையே — இருட்டடிப்பு ஏன் ..? ஜெயாவைப்பற்றி ” மணி நேர ” செய்திகளை மாய்ந்து – மாய்ந்து காட்டியவர்கள் — மெளனமாக இருப்பது ஏன் … ? …
    மூத்த அரசியல்வாதி — சாணக்கியர் — தேர்ந்த பேச்சாளர் — வசனகர்த்தா — ஞாபகம் வைத்திருப்பதில் புலி — என்றெல்லாம் பவனி வந்தவரின் தற்போதைய நிலை என்ன என்பதைப்பற்றி யாருக்குமே கவலையில்லாமல் போனதேனோ … ?

  5. தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

    அரசியல்வாதிகள், நாட்டு நலனைவிட தங்களுடைய நலனையே முழுவதுமாகக் கவனிப்பவர்கள். தற்போது பாஜக அரசியல்வாதிகளுக்கு அகப்பட்ட ‘வாக்கு கவரும் தலைவர்’ மோடி அவர்கள். அதனால் முடிந்தவரை அவரை உபயோகப்படுத்திக்கொள்ளவே பார்ப்பார்கள். நாளை வேறு ஒருவர் அகப்பட்டால், மொத்த கும்பலும் அவரை நோக்கிப்போய்விடும்.

    இதைத்தானே ராஜீவ்காந்தி, சோனியா, ஜெ., போன்றவர்கள் காலத்தில் பார்த்தோம்.

    @செல்வராஜன் – கருணானிதி அவர்கள் கடுமையான முதுமையில், காவிரி மருத்துவமனை அனுபவத்தாலும் (தொண்டையில் குழாய்), மறதி’நோய் கடுமையாகத் தாக்கியுள்ளதாலும் அவதிப்படுகிறார். வெகு சிலரையே (OFCOURSE குடும்ப உறுப்பினர்களை) ஞாபகப்படுத்தி புன்னகையோ கண்ணீரோ வருகிறது, பேசுவதில்லை. மாலை, முன்னேற்பாடுகள் செய்து நாற்காலியில் மஞ்சள் துண்டு அணிவித்து போட்டோவுக்காக ரெடி செய்கிறார்கள். மற்றபடி மீண்டு வரும் வாய்ப்பு இல்லைபோல் தெரிகிறது. மேலே சொன்னதுபோல, அரசியல்வாதிகள் அடுத்த ‘வாக்கு கவரும்’ தலைவரை நோக்கிச் செல்வதால், பழைய தலைவருக்கு மரியாதையும் குறைவு, நேரமும் இருப்பதில்லை.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      தமிழன்,

      // அரசியல்வாதிகள், நாட்டு நலனைவிட
      தங்களுடைய நலனையே முழுவதுமாகக்
      கவனிப்பவர்கள். //

      உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன்.

      இவர் வித்தியாசமானவர்…
      இவரை நம்பலாம் என்று –
      ஒவ்வொருவரையாக நம்பி நம்பி ஏமாறுகிறோம்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      பின் குறிப்பு – இந்த பின்னூட்டத்தில் ஏற்பட்ட ஒரு பிழையை
      திருத்திக்கொள்ள உதவிய நண்பர் சிவா’விற்கு நன்றி.

  6. D. Chandramouli's avatar D. Chandramouli சொல்கிறார்:

    A periodic update on Mr Karunanidhi’s health status is absolutely necessary.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.