விமானப்படையில் சேர்ந்து பயிற்சி பெறும் கழுகுகள்….

eagle-drone-1

french-army-eagle-1

eagle-done-2

பெரிய்ய கழுகுகள்…
மிகப்பெரிய கழுகுகள்…உளவு ட்ரோன்களை தாக்கி
அழிக்க / பிடிக்க கழுகுகளுக்கு பயிற்சி ….!!!

ஆளில்லாத உளவு ட்ரோன்களை பிடித்து வரவும்,
தாக்கி அழிக்கவும் கழுகுகளை பயன்படுத்தும் ஒரு புதிய
முறையை பிரான்ஸ் ராணுவம் மேற்கொண்டு வருவதாக
ஒரு செய்தியை பார்த்தேன்….

சில தீவிரவாத இயக்கங்கள் மற்றும் சமூக விரோத
செயல்களில் ஈடுபடும் குழுக்கள் தங்கள் நாட்டு எல்லைக்குள்
உலவ விடும் ஆளில்லாத உளவு விமானங்களை தாக்கி
அழிப்பதற்காக பிரான்ஸ் நாட்டு விமானப் படையினர்
கழுகுகளுக்கு தீவிர பயிற்சி அளித்து வருன்றனர் என்றும்,

பிரான்ஸ் விமானப் படையால் கடந்த ஆண்டு
4 கழுகுக் குஞ்சுகள் வாங்கப்பட்டு, உளவு ட்ரோன்களை கழுகின்
கால்களால் பிடித்து நொறுக்கி வீழ்த்துவதற்காக
பயிற்சி அளிக்கப்படுவதாகவும், விரைவில் இந்தக் கழுகுகள்
களத்தில் இறக்கப்பட்டு ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்படும்
என்றும் அந்த செய்தி கூறுகிறது.

ஆளுயர புற்களில் ட்ரோன்கள் மறைந்திருந்தாலும் கூட
இந்த கழுகுகள் குறிவைத்து கண்டு பிடித்து விடுமாம்.

அது சம்பந்தமாக வீடியோ எதாவது கிடைக்கிறதா
என்று தேடினேன்….. கிடைத்தது….!

கீழே –

( ஞாயிற்றுக்கிழமை- வீட்டில் இருந்தால், குழந்தைகளுக்கும்
காட்டுங்கள்.. நண்பர்களின் குழந்தைகளுக்கும் அனுப்புங்கள் –
ரசித்து பார்ப்பார்கள்…!!! )

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to விமானப்படையில் சேர்ந்து பயிற்சி பெறும் கழுகுகள்….

  1. இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

    நல்ல ஐடியா.
    முயற்சி செய்தால் எதை வேண்டுமானாலும்
    பயிற்சி செய்யலாம் போலிருக்கிறதே.

  2. selvarajan's avatar selvarajan சொல்கிறார்:

    அய்யா … ” கழுகுகளுக்கு பயிற்சி கொடுப்பது ” — நாட்டைக்காக்க – நல்ல செய்தி … தேவையான ஒன்றும் கூட … ! ஆனால் நம்நாட்டின் மக்களை ” அரசியல்வாத கழுகுகளிடம் ” —- இருந்து காப்பாற்ற என்ன செய்யப்போகிறோம் …. ?

    இந்த ” ஓட்டரசியலை ” வைத்துக்கொண்டு … ஆட்சியில் உள்ளவர்கள் ஆடுகிற ஆட்டத்திற்கெல்லாம் — வாக்களித்து பதில் சொல்லுவார்கள் மக்கள் என்பதே — ஒரு வினோதமான கருத்தாக தெரியவில்லையா …. ?

    பெட்ரோல், டீசல் விலையை மாதத்தில் 2 முறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து உயர்த்தி வருவது போதாது என்று தமிழக ” எடப்பாடி அரசு ” திடீர் என வாட் வரியாக பெட்ரோல், டீசல் மீதான விலையை உயர்த்தியுள்ளது ….. வேதனையின் உச்சக்கட்டம் ….

    தமிழகத்தில் தனியார்கள் பால் விலையை உயர்த்தி அவர்கள் வேற பயம் காட்டி போட்டுத்தள்ளுகிறார்கள் … இதன் மூலம் குடிக்கிற டீ – காபி பால் பொருட்களின் விலை விலை உயரும் …. இப்போது பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதால் ஆட்டோ கட்டணம் முதல் அனைத்து அத்தியாவசியமான பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது…. என்னய்யா … பொழப்பு இந்த சாமானிய மக்களுக்கு … ?

    ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு நாம் கொடுக்கும் வரி மற்றும் விற்பவர்கள் கமிஷன் மட்டும் ரூ . 45 .66 அதாவது 161% வசூலிக்கப்படுகிறது…. { டீசல் கணக்கு தனி } ஓடுகிற வண்டிகளின் என்ணிக்கை எவ்வளவு என்றும் — நம்மிடம் இருந்து எவ்வளவு தொகையை சுரண்டுகிறார்கள் என்பதையும் கணக்கிட்டு கொள்ளலாம் — ” சாதனை அரசுகளின் லட்சணம் ” இதுதான் ….!!

    விவசாயத்தையும் ஒழித்துக்கட்டி — வேலைவாய்ப்பும் இல்லாத நிலையை உருவாக்கி — வீணாப்போன வெங்காய பரிவர்த்தனை என்று தொழில்களையும் — வணிகத்தையும் முடக்கிப்போட்டு … ஐயோ .. அதெல்லாம் போதாது என்று வரிகளை உயர்த்தி – இந்த அரசாங்கம் கொடுக்கிற அவஸ்தைகளை எப்படித்தான் … தங்குவது … ?

    மக்களைப்பற்றி — மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் … சிந்திக்கிறார்களா … சிந்திக்க மறுக்கிறார்களா … ? எதை செய்ததாலும் — ” இலவசங்களை காட்டி ” மக்களை எளிதாக ஏமாற்றி — மீண்டும் – மீண்டும் ஆட்சியை நடத்தலாம் என்கிற எத்தர்களின் எண்ணங்கள் தான் ஈடேறிக்கொண்டே இருக்குமா …. ?

  3. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    ‘வித்தியாசமான செய்திதான்.

    இதைவிட, தேனீ போன்றவற்றில், சிப் வைத்து வேவு பார்க்கும் முயற்சியில் (அந்த டெக்னாலஜியில்) பல வளர்ந்த நாடுகள் முயன்றுகொண்டிருக்கின்றனர். வெறும் காக்காய்தானே பறக்கிறது என்று நினைக்கமுடியாது. அது வேவு பார்க்கும் காக்காயாக இருக்கலாம். எப்படி கூகுள் மேப், நமக்குப் பல்வேறுவகையில் உபயோகமாக இருக்கிறதோ அதேபோன்று, தீவிரவாதிகளுக்கும், அன்னிய நாடுகள் உளவுபார்க்கவும் மிக உபயோகமாக இருக்கும்.

  4. chandramouly venkatasubramanian's avatar chandramouly venkatasubramanian சொல்கிறார்:

    GARUDAZHVAR THUNAI

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.