…
…
” என் தலை மேல துப்பாக்கி வெச்சு மெரட்டினாங்க….
சீக்ரெட் சேம்பர்னு எல்லாம் சொன்னாங்க….கடைசீல
என் வீட்டுல என்ன கெடெச்சுது தெரியுமா…?
ஜஸ்ட் ஒன் லாக் ட்வென்டி எய்ட் தௌசண்ட் ருபீஸ்….”
டெல்லி ஆங்கில சேனல்கள் எல்லாம் திகைத்தன…
ஒரு லட்சத்து சொச்சத்துக்காகவா இத்தனை அமர்க்களம்…..?
செக்ரடேரியட்டில் எல்லாம் ரெய்டு….?
வீட்டில் press conference கூப்பிட்டு, வீராவேசமாக
ரிப்போர்ட் கொடுத்தாரே, தமிழ்நாட்டின் டாப் அதிகாரி….
அவரது பிள்ளை தான் விவேக் பாப்பிசெட்டி….!!!
எவ்வளவுக்கெவ்வளவு படிக்கிறார்களோ,
எவ்வளவுக்கெவ்வளவு உயர்ந்த இடத்தில் இருக்கிறார்களோ –
அவ்வளவுக்கவ்வளவு கிரிமினல் மூளையும் பிரமாதமாக வேலை செய்யும்….
மாட்டிக்கொள்ளாமல் தப்பு செய்வது எப்படி என்று
பல புத்தகங்கள் எழுதும் அளவிற்கு அறிவும் அனுபவமும் கொண்டவர்கள்
அவர்கள்… அதனால் தான் அவ்வளவு ஆவேசமாக குரல் எழுப்ப முடிந்தது….
கொள்ளைகளை எல்லாம் தன் வீட்டிலேயே வைத்துக் கொள்ள
முட்டாள்களா அவர்கள்…?
அவர் சார்பாக நிகழ்த்தப்பட்ட அத்தனை கொள்ளைகளுக்கும்
புகலிடமாக அதான் இருக்கிறாரே ஒரு பிள்ளையோ, பிள்ளை….
திருவாளர் விவேக் பாப்பி செட்டி…..!!
என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் – அச்சிலேயே பாருங்களேன்…!!!
…





திருட்டுப்பயல்கள் .
இவர்களை எல்லாம்
இன்னமும் வெளியே விட்டு வைத்திருக்கிறார்களே – எப்படி ?
கே.எம்.சார்,
அதிமுகவின் புதிய தலைமைக்கும், பாஜகவுக்கும்
இடையே உடன்பாடு ஏற்பட்டு விட்டதால், இனிமேல்
இந்த வழக்கில் தீவிரம் காட்டப்பட மாட்டாது என்று
சொல்லப்படுகிறதே – இது உண்மையா ?
சீனியாரிட்டியில் இருந்த 16 மூத்த அதிகாரிகளை ஒதுக்கிவிட்டு ராம் மோகன் ராவை தலமைசெயலராக நியமித்தது உங்க உடன்பிறவா சகோதரி ஜெயலலிதா அவர்கள் என்கிறார்களே இது உண்மையா சார்?
கொள்ளையர்கள் ஆந்திராவுக்கு ஓடி விட்டனர் . இது முன்னாள் முதல்
அமைச்சரின் பாப்புலர் ஸ்லோகன். ஆனால் கொள்ளையர்கள் எங்கும்
ஓடவில்லை. சேகர் ரெட்டி ,ராம் மோஹன ராவ் விவேக் பாப்பிசெட்டி
என்ற ரூபங்களில் தமிழ்நாட்டில் இந்த ஆந்திரர்கள் மணல் மாபியா
அமைத்து கோடிக்கணக்கான ரூபாய்களை கொள்ளை அடித்துள்ளனர்.
இந்த வழக்கு மேலும் தொடருமா அல்லது அமுக்கப்படுமா ? அந்த
ஆண்டவனுக்கே தெரியும்.
படிக்கப் படிக்க வயிறு எரிவதுதான் மிச்சம். வெட்டியா படிப்பை முடித்துவிட்டு, எவனுக்கேனும் (எந்தக் கம்பெனிக்கேனும்) வேலைபார்த்து ஆயுள் முழுவதும் சம்பாதித்தாலும் ஒரு வீடு வாங்கி, குடும்பத்தை நடத்துவதே பெரிய சாதனையாக பெரும்பாலான மத்தியதர வர்க்கத்திற்கு இருக்கிறது. ஆனால், அரசியல்வாதிகள், அதிகாரிகளின் பையன்/பெண், ஆயிரக்கணக்கான கோடிகளையும் பலவித கம்பெனிகளையும் நடத்த முடிகிறது. கார்த்திக் சிதம்பரம், பாப்பிசெட்டி, மற்ற அரசியல்வாதிகளின் பிள்ளைகள், பேரன்கள் (பெயரை வேறு சொல்லணுமா?) போன்ற கொள்ளையர்கள் இருப்பது, நமது நாட்டின் சாபக்கேடு. இவர்களுக்கும் கசாப் போன்றவர்களுக்கும் என்ன வித்தியாசம்? எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.