
” சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொள்வது ” தெரிந்ததே..!!
கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இங்கு திமுக
முன்னாள் அமைச்சர் பொன்முடி ” தன் காசில் ”
தலைவர் கலைஞருக்கே சூன்யம் வைத்த கதை ….
தமிழகத்தைப் பொருத்தவரையில், திமுக தரப்பு
மிகவும் பலவீனமாக உள்ள விஷயங்களில் ஒன்று
“கச்சத்தீவு” விவகாரம். இது அனைவரும் அறிந்ததே…
நேற்று சட்டமன்றத்தில்
விவாதம் துவங்கியவுடன், திருவாளர் பொன்முடி,
“1991-லேயே கச்சத்தீவை மீட்டுக் கொண்டு வரப்போவதாக
அறிவித்த முதல்வர் ஜெ. மீட்டுக் கொண்டு வந்து விட்டாரா ..?”
என்கிற மாதிரி ஒரு கேள்வியை எழுப்பினார்.
பல வருடங்கள் அமைச்சராக இருந்தவரும், சீனியர்
கட்சித்தலைவர்களில் ஒருவருமான இவர், இந்த
பிரச்சினையை சுயமாகக் கிளப்பியதை படுமுட்டாள்தனம்
என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது என்று
தெரியவில்லை.
ஆனால், இதன் விளைவை – இவர் அனுபவிக்கவில்லை…
முன்னாள் முதல்வர் கலைஞர் தான் அனுபவிக்க நேரிட்டது.
கலைஞர் எங்கெங்கே தவறினார், எங்கெங்கே குழப்பினார்,
எங்கெங்கே சறுக்கினார் – என்றெல்லாம் முதல்வர் ஜெ.
புள்ளி விவரங்களை அள்ளி வீசி, கலைஞரின் தவறுகளை
ஆதாரங்களோடு விளக்கினார்.
கலைஞரின் மாறுபட்ட, குழப்பமான பேச்சுக்களை
எடுத்துக் காட்டி, இதில் எது உண்மை, எது சரி – என்று
எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் அவர்கள் தான் விளக்க
வேண்டுமென்று ஜெ. அவர்கள் கூறியதற்கு ஸ்டாலின்
அவர்களால், மவுனம் சாதிப்பதைத்தவிர வேறு ஒன்றும்
செய்ய முடியாமல் போயிற்று.
துரதிருஷ்டவசமாக, சட்டமன்றத்தில், மூத்த உறுப்பினர்
பொன்முடியின் பொறுப்பற்றதனத்தின் விளைவை,
அவர் அனுபவிக்கவில்லை. சட்டமன்றத்தில் இல்லாத
கலைஞர் எக்கச்சக்கமாக வாங்கி கட்டிக் கொள்ள
வேண்டியதாகி விட்டது.
பொன்முடி செய்த தவறுக்கு கலைஞர் அவதிப்படுவது
என்ன நியாயம் ….? எனவே, கலைஞர்,
நேற்றே திருவாளர் பொன்முடிக்கு ” அழைப்பு ”
அனுப்பி, நேரில் வரவழைத்து, ” தகுந்த முறையில் ” “சன்மானம்” கொடுத்திருப்பார் என்று நம்பலாம்…!!!
ஒருவேளை இதுவரை அப்படி “மரியாதை” எதுவும் நடக்கவில்லையென்றால்,
கலைஞர் மறந்து விடாமல் அதைச்செய்ய வேண்டுமென்று
கேட்டுக் கொள்கிறோம்….!!!



இப்போது நடப்பது கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கும் போர்.
தேர்தலில் தி மு கா ஜெயித்திருந்தால் கருணாநிதி முதல்வராகியிருப்பார். அதை தடுக்கத் தான் தே தி மு கா உடன் கூட்டணி ஏற்படுவதை ஸ்டாலின் தடுத்திருக்கக் கூடும். இந்த முறை முதல்வராக முடியாவிட்டால், அடுத்த தேர்தலில் கருணாநிதிக்கு மிகவும் வயதாகி இருக்கும். எனவே விருப்பப் பட்டாலும், முதல்வர் வேட்பாளராக தேர்தலை சந்திக்க முடியாது. அப்போது ஸ்டாலின் தான் முதல்வர் வேட்பாளராக இருப்பார்.
இப்போது சட்ட சபையில் கேள்வி எழுப்பியிருக்கும் பொன்முடி ஸ்டாலினின் தீவிர ஆதரவாளராக அறியப்படுபவர். அப்பாவியாக இந்தக் கேள்வியை கேட்டிருப்பார் என்றா நினைக்கிறீர்கள்?
இதில் ஜெவும் உடன்பட்டிருக்கிறார் என நினைக்கிறேன். ஸ்டாலினிடம் காட்டும் கனிவை கருணாவிடம் காட்டுவதில்லை.
பார்க்கலாம். இன்னும் என்ன என்ன நடக்கப் போகிறதோ!
what a different view. But truly possible
JI jeya ji it seems is not really interested to adjust with the opposition party dmk
when jeya ji had announced that aiadmk abd dmk would work together
the tamil nadu people were shocked
jeya ji should scrupulosly work for the development of tamilnadu
and should uproot the EVIL DMK once for ever
sarkaria commission report= katcha theevu,those days everyone know this fact