
பொதுப்பணித்துறை அமைச்சர் – ஐந்து ஆண்டுகள்
விவசாயத்துறை அமைச்சர் – ஒன்றரை ஆண்டுகள்
உள்துறை அமைச்சர் – மூன்றரை ஆண்டுகள்
இப்படி பத்து ஆண்டுகள் தமிழக அமைச்சரவையில்
முக்கிய பொறுப்புகளை வகித்திருந்தும்,
நினைத்திருந்தால் –
எவ்வளவோ வசதிகளுடன் வாழ வாய்ப்புகள்
இருந்திருந்தும் – எதையும் சம்பாதிக்காமல்,
சேர்த்து வைக்காமல் –
இறுதிக்காலத்தில் நோய்வாய்ப்பட்டபோது,
அரசு மருத்துவமனையில். கட்டில்கள் காலியாக இல்லாத
காரணத்தால், வராண்டாவில் பாயில் படுத்திருந்து
சிகித்சை பெற்ற –
இறுதிவரை, தன்னலம் கருதாமலும்,
மிக மிக எளிமையாகவும் வாழ்ந்த –
திரு.கக்கன் அவர்களின் பிறந்த நாளான இன்று,
அவரை சில புகைப்படங்களுடன் நினைவுகூர்ந்து,
மரியாதை செலுத்துவோம்…..





அய்யா … ! ஒரு நேர்மையானவர் — எளியவர் — கை சுத்தம் மிக்கவர் — நாட்டிற்கு தேவையானதை செய்தவரைப் பற்றி நினைவு கூர்ந்து பதிவிட்டதற்கு நன்றி … !! ஆனால் … இவரைப் போன்றவர்களை பற்றி அறிந்துக் கொள்ளவோ — தெரிந்துக் கொள்ளவோ — படிக்கவோ — ஓ .. அப்படிப் பட்டவரா … என்று ஒரு ஆச்சர்யம் காட்டவோ … தற்போதையவர்களுக்கு … ஒரு ஆர்வம் இல்லாமல் போனது … ஏனோ … ?
செல்வராஜன்,
நல்லவரைப் பற்றிய செய்திகளில்-
ப ர ப ர ப் பு –
வி ரு வி ரு ப் பு – இல்லையே ….
பரபரப்பான,
விருவிருப்பான,
திகைப்பூட்டும் – செய்திகளுக்கே –
இன்றைய சமுதாயத்தில் முக்கியத்துவம்
கொடுக்கப்படுகிறது.
அதனால் தான், நான் எழுத நினைக்கும்,
பல விஷயங்கள் கூட இந்த வலைத்தளத்தில்
எழுத முடியாமல் தள்ளிப்போடப்படுகின்றன….!!!
நீங்கள் ஒருவராவது –
இந்த குறையை சுட்டிக்காட்டியதில் –
எனக்கு மகிழ்ச்சியே…
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
திருவாளர்கள்… கக்கன், ஜீவா, காமராஜர் (‘நிறைய பலர் இருந்தார்கள், கம்யூனிஸ்ட் தலைவர்கள் உட்பட) இவர்களுடைய வாழ்க்கை வரலாறும் அவர்கள் எவ்வளவு எளிமையாக பணம் கொஞ்சம்கூட லவட்டாம (சேர்க்காம என்று சொன்னால், சம்பாதித்ததையெல்லாம் செலவழித்தார்கள் என்ற அர்த்தம் தொனித்துவிடும்) சாதாரண மனிதனைப்போல் வாழ்ந்தார்கள் என்பதுதான் குழந்தைகள் பாடப்புத்தகங்களில் இருக்க வேண்டும். ஆனால் அதைப் போட்டால், இருக்கின்ற அரசியல்வாதிகளின் தரமும், மக்களின் தரமும் பல்லிளித்துவிடும்.
பழைய தலைவர்களைப் புகழ்வதும் அவர்தம் வரலாற்றை ‘நினைவுகூறுவதும் நன்று. அதேபோன்று, வாழுகின்ற மேலேகூறியவர்களின் தரத்திற்கு நிகராகக் கூறக்கூடிய நல்லக்கண்ணு போன்றவர்களையும் கட்டாயம் நினைவு கூறவேண்டும். தலைவர்களின் கொள்கைகள் அல்லது அவர்கள் வெளிவைக்கும் வாதங்கள் நமக்கு ஏற்புடையவையாக இருக்கலாம். ஆனால் அவர்கள் நமக்குத்தான் பாடுபடுகிறார்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது. பெரும்பாலும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் மிகவும் சாதாரண மனிதர்களைப்போல்தான் வாழ்கிறார்கள் பழகுகிறார்கள். அவர்கள் எல்லோரும் பாராட்டப்பட வேண்டியவர்களே..
செல்வராஜன் அவர்கள் கூறியது சிந்திக்கத்தகுந்தது. இளையவர்களுக்கு இவர்களை எடுத்துக்காட்டாகக் கற்றுக்கொடுக்காதது அரசாங்கத்தின் தவறுதான்.