.
.
சட்டமன்றத்தில் கலைஞருக்கு இருக்கை ஒதுக்கிய
விஷயத்தில் திரு.ஸ்டாலின் அவர்களுக்கு
அதிமுக தலைமை பேருதவி செய்திருக்கிறது
என்றே சொல்ல வேண்டும்….
அதை வெளிப்படையாக காட்டிக் கொள்ள முடியாத
ஸ்டாலின் மனதிற்குள் பெருமகிழ்ச்சி அடைந்திருப்பார்
என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்க முடியாது.
தற்போது கலைஞருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடம்
ஸ்டாலினுக்கு அருகே, பின் வரிசையில் முதலில்
இருக்கிறது. இங்கு வீல்சேரை கொண்டு வர
இயலாது என்பது சரியான காரணம் அல்ல.
ஏனென்றால்,
கடந்த 5 வருடங்களாக இருக்கை வசதி இல்லை
என்பதை காரணம் காட்டி மன்றத்திற்குள்ளே வராத
கலைஞர் , சட்டமன்ற உறுப்பினர்கள்
பதவியேற்கும் நாளன்று,
இருக்கை எதுவும் ஒதுக்கப்படாத நிலையில்,
தானாகவே தீர்மானம் செய்து கொண்டு,
முதல் வரிசையில்,
ஸ்டாலின் அருகே
ஆனால் ஸ்டாலினுக்கும் முன்னதாக,
தனது வீல்சேரை கொண்டு வந்து நிறுத்திக் கொண்டு –
அதே இடத்தில் தான் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

எனவே, அந்த இடத்திற்கு வீல்சேரை கொண்டு வர
முடியாது என்பது சரி அல்ல. ஏற்கெனவே அன்று
கொண்டு வரப்பட்டிருக்கிறது. இப்போது
ஒதுக்கப்பட்டிருக்கும் இடம்
just ஒரு அடி பின்னால் – அவ்வளவு தான்.
(அந்த ஒரு அடி பின்னால் – என்னும் விஷயம் தான்
கலைஞரை படுத்துகிறது….!!! )
அவரே தீர்மானித்துக்கொண்ட –
அதே இடத்தை கொடுங்கள்
என்பது தான் கலைஞரின் டிமாண்ட்.
இப்போது கிட்டத்தட்ட அதே இடத்தில் தான்,
ஆனால் ஒரு அடி பின்னால் – அதாவது
முதல் வரிசைக்கு பதிலாக இரண்டாம் வரிசையில்,
ஸ்டாலின் இருக்கைக்கு பின்னால் உள்ள இடம்
காலியாக ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கே வீல்சேரை
கொண்டுவந்து நிறுத்திக்கொண்டு, அதிலேயே
அமர்ந்து கொண்டு மன்ற நடவடிக்கைகளில் கலந்து
கொள்ள அனுமதி / வசதி செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.
அப்படி இருந்தும், கலைஞருக்கு சரியான இடம்
கொடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுவது ஏன்….?
ஸ்டாலினுக்கு முன்னால் –
அல்லது குறைந்தபட்சம் அவருக்கு அருகே,
இணையாகவாவது தான் உட்கார வேண்டும்
என்பது கலைஞரின் நினைப்பு.
தான் இருக்கும்போது,
ஸ்டாலின் தனக்கு முன் வரிசையில்
அமர அவர் ஒப்புக் கொள்வாரா…?
( ” தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல் – ”
என்கிற குறளுக்கு அவர் விளக்கம் எழுதியது
உண்மை தான். ஆனால், இதற்கெல்லாம்
திருக்குறளை கடைபிடித்தால் -கலைஞரின்
position பறி போய் விடுமே….!!!)
சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவராக
தான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு –
தன் பக்கத்தில்,
அல்லது தனக்கு முன்பாக கலைஞர்
உட்காருவதை ஸ்டாலின் நிச்சயம் விரும்ப மாட்டார்…!
ஆனால் அதை தடுக்க ஸ்டாலினால் இயலாது.
அதை தற்போது அதிமுக தலைமை ஏற்பாடு செய்து
கொடுத்திருக்கிறது….( ஸ்டாலின் இதை வரவேற்பார்
என்பதும் அதிமுக தலைமைக்கு தெரியும்…)
ஆனால், இதற்காக வெளிப்படையாக
முதல்வருக்கு நன்றியா சொல்ல முடியும்….?
லேசாக எதிர்ப்பு காட்டிவிட்டு,
மனதுக்குள் உதவிக்கு நன்றி சொல்லிவிட்டு,
ஒதுங்கும் வழியையே ஸ்டாலின்
பின்பற்றுவாரென்று உறுதியாக நம்பலாம்….!!!
( ஆனால், கலைஞர் அவ்வளவு லேசாக
இதை விட்டு விடுவாரா….?
தன் மகனே ஆனாலும், தனக்கு முன்வரிசையில்
உட்கார அனுமதிப்பாரா….???
பொறுத்திருந்து பார்ப்போம் வேடிக்கையை…. )
இது just துவக்கம் தான்….
இன்னும் நிறைய காமெடிகளை பார்க்கலாம்….!!!



தெறி
வழி மொழிகிறேன்.
திரு.ஸ்டாலின் சட்டமன்றத்தில் கொடுத்துள்ள திமுக உறுப்பினர்கள் அறிக்கையில் மு.க பெயர் இல்லை.திமுக கொறடா கோரிக்கையின் படி திரு.மு.க அவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது —–ஓ.பன்னீர்செல்வம்.(டிவி செய்தி)
கா.மைஜி
அவை முன்னவர் அளித்துள்ள இந்த விளக்கம் போதுமா இவர்களுக்கு?
https://scontent-sit4-1.xx.fbcdn.net/v/t1.0-9/13393975_1649263195392810_5791683768352529795_n.jpg?oh=dcaf36c981cbc2ffc57cd48734f8c006&oe=57CA1DD9
https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/13450071_1649263198726143_4096461675916236328_n.jpg?oh=cc95a50fc68a718cbfcd150a6236cbb9&oe=57C7C08C&__gda__=1473049820_9ef0992a70338b4f466e3631d05ae0bd
https://scontent-sit4-1.xx.fbcdn.net/v/t1.0-9/13412935_1649263308726132_7223884249926126954_n.jpg?oh=6a4e9770a4914f0c2b72cb89914d40d6&oe=57CD9A05
நண்ப டுடேஅண்ட்மீ,
முழு விவரங்களையும் கொடுத்திருக்கிறீர்கள்.
விஷயங்களை இன்னும்தெளிவாக தெரிந்து கொள்ள
இது உதவுகிறது…
மிக்க நன்றி.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
இந்த அழகிலே பிரதான எதிர்க்கட்சியான இவர்கள் இருக்கை விஷயத்தில் இரண்டுநாள் கெடுவை பேரவைத்தலைவருக்கு விதிக்கிறார்களாம்.
திமுகவைப் பொறுத்தவரை
மு கருணாநிதியைப் பொறுத்தவரை
ஸ்டாலினைப் பொறுத்தவரை
நேற்று இன்று நாளை
எல்லாமே
“இருக்கை” தான்.
சேவை, இடியாப்பம் எல்லாம் பின்னர்தான்.
அதுகூட இல்லை. எப்போதுமே இல்லை.
நண்ப டுடேஅண்ட்மீ,
நேற்றிரவு, திரு ஓபிஎஸ் அவர்களின் அறிக்கை
வெளிவரும் முன்னரே நான் எழுதிய இடுகை இது.,
எனவே, எங்கேயாவது முரண்பாடுகள் இருக்கக்கூடும்.
ஓபிஎஸ் அவர்களின் அறிக்கை வெளியான பிறகு,
இந்த விஷயம் ஒரு புதிய கோணத்தில் பயணிக்கிறது….
இன்னும் வேறு சில திருப்பங்கள் வரக்கூடும்.
பொறுத்திருந்து பார்ப்போம்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
உள்ளும் – புறமும் – – தன்னலத்திற்காக ” இருக்கை ” போட்டி நடத்தும் தந்தை — மகனும் ” மனிதர்கள் ” தான் ….! அதுவே தன்னலம் கருதாது – மக்கள் நலனையே குறிக்கோளாகக் கொண்டு தனது பதவியை அதற்காக பயன்படுத்தி — ” மேட்டூர் — வைகை ” அணைகள் … மற்றும் இரண்டு ” விவசாயப் பல்கலைக் கழகங்கள் ” ஏற்பட காரணமாக இருந்தவரும் — தன் குடும்பத்திற்கென எதையும் சேர்த்து வைக்காத முன்னாள் அமைச்சர் ” திரு கக்கன்ஜி ” அவர்களின் 108 – வது பிறந்த தினம் இன்று — அவரும் ” மனிதர் ” தான் … !! முடிந்தால் நினைவு கொள்ளுங்கள் … மற்றவர்களுக்கும் நினைவுப் படுத்துங்கள் … !!!
நன்றி செல்வராஜன்.
“இருக்கை” விவகாரமே சில விஷயங்களை
வெளிக்கொண்டு வரும் என்று தோன்றுகிறது.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
JI as usual the morose looking team of mlas surrounding stalin
in the corridor of the assembly …….
with heavy dye on their heads……….
wickedness in their faces……
is too much for the tamil nadu people………