பாவாடை, தாவணி அணிந்து, சீன இளம்பெண்கள் – தமிழில் பாடி, ஆடினால் எப்படி இருக்கும் …?

.

.

அழுந்த வாரிப் பின்னிய கூந்தல்-ஜடை,
நெத்திச்சுட்டி, தலை நிறைய பூ, நெற்றியில் பொட்டு,
பாவாடை, தாவணி, –
இந்த தோற்றங்களுடன் சீன இளம்பெண்கள்
தமிழ்ப்பாட்டு பாடி, நடனமாடினால் எப்படி இருக்கும்….?

“சின்னக்குட்டி” யின் தளத்தில் ஒரு வீடியோவை பார்த்தேன்…
( நன்றி சின்னக்குட்டி ). சீனப்பெண்கள், சீன accent -ல்
தமிழை உச்சரித்து பாடிக்கொண்டே ஆடிய –

” பிருந்தாவனமும், நந்தகுமாரனும்
யாவருக்கும் பொது செல்வமன்றோ ”
(அந்த காலத்தில் புகழ்பெற்ற மிஸ்ஸியம்மா படப்பாடல்…)

” குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச் சொல் கேளாதோர் ”

என்கிற குறள் இந்த இடத்தில்
வேறு பொருளில் நினைவுகூறச் செய்கிறது.

நம் தமிழை, நம் நாட்டிலேயே வேற்று மொழிக்காரர்கள்
உச்சரித்து கேட்பதே
ஒரு தனி ஆனந்தம் ….

அதிலும் வேற்று நாட்டவர் என்றால்…?

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்…
நமது வலைத்தள நண்பர்களும் கண்டு மகிழ –

கீழே – முதலில் நமது ஒரிஜினல் பாடல் –
(கருப்பு வெள்ளை – இங்கே கலராகி விட்டது….)

பின்னர் சீனப்பெண்களின் அழகு பாடல், நடன காட்சி –

https://youtu.be/qXTMB4UFHP8

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to பாவாடை, தாவணி அணிந்து, சீன இளம்பெண்கள் – தமிழில் பாடி, ஆடினால் எப்படி இருக்கும் …?

  1. நெல்லைத் தமிழன்'s avatar நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    நல்லாருக்கு. அங்கே தமிழில் ரேடியோ சேனல் இருக்கிறது. எனக்கெல்லாம், எங்கேயாவது தமிழில் பேசும் குரல் கேட்டால், திரும்பிப் பார்க்கத் தோணும். அதிலயும், நெல்லைத் தமிழ் கேட்டால், நானே போய் அவர்களிடம் எந்த ஊர் என்று கேட்டுவிடுவேன். (‘நான் வெளி நாட்டில் 23 வருடத்துக்குமேல் இருக்கிறேன்)

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நெல்லைத்தமிழன்,

      ஆச்சரியமாக இருக்கிறது…

      வெளிநாட்டில் 23 ஆண்டுகளாக இருந்துகொண்டே
      தமிழ்நாட்டின் அரசியல் பற்றி இவ்வளவு uptodate ஆக
      இருக்கிறீர்களே…

      நானே உங்களிடம் கேட்டுவிட வேண்டும் போல் இருக்கிறது –
      எந்த நாட்டில் இருக்கிறீர்களென்று….!
      கேட்பது அநாகரிகமோ என்று கேட்காமல் விடுகிறேன்…!!!

      பல ஆண்டுகள் தமிழ்நாட்டிற்கு வெளியே பணிபுரிந்தவன்
      என்பதால், எனக்கு உங்கள் நிலை நன்றாகவே புரிகிறது.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  2. selvarajan's avatar selvarajan சொல்கிறார்:

    பாடலுக்கேற்ற ” காட்சி அமைப்பு ” … ! ” யார்தான் அழகால் மயங்காதவரோ ” — ” புல்லாங்குழல் இசை இனிமையினாலே – உள்ளமே ஜில்லென துள்ளாதா ” — போன்ற டி.என் . ராமையாதாஸ் அவர்களின் வரிகளுக்கு ஏற்ப … சீன இளம் பெண்களின் நாட்டியம் … அருமை — இங்கே காணாமல் போனது — அங்கே கிடைக்கிறது … !!!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      செல்வராஜன்,

      // இங்கே காணாமல் போனது — அங்கே கிடைக்கிறது … !!! //

      உண்மை தான். விசேட நாட்களிலாவது காணக்கிடைத்தால்,
      மனதிற்கு திருப்தியாக இருக்கும்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • paamaranselvarajan's avatar paamaranselvarajan சொல்கிறார்:

        அய்யா…! ஒன்று கூற நினைத்து விடுபட்டு விட்டது… அது: அந்த ” சின்னக்குட்டியின் ” ரசனைக்கு என்னுடைய பாராட்டும் .. வாழ்த்தும் ….!!!

  3. LVISS's avatar LVISS சொல்கிறார்:

    A very nice video — Even the dance movements are good —

  4. srimalaiyappan's avatar srimalaiyappan சொல்கிறார்:

    அருமை

  5. D. Chandramouli's avatar D. Chandramouli சொல்கிறார்:

    Lovely and ever-green song. I thoroughly enjoyed it, sung by Chinese girls. Beautiful.

  6. chandramouly venkatasubramanian's avatar chandramouly venkatasubramanian சொல்கிறார்:

    Everything Nice

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.