
” இப்படிப்பட்ட தேர்தல் ஆணையங்கள்
இருக்கின்ற வரை
நியாயம் கிடைக்காது,
வெற்றி கிடைக்காது,
நீதி கிடைக்காது,
நீதியே நீ இன்னும் இருக்கின்றாயா?
நீயும் அந்தக் கொலைக் களத்திலே விழுந்து மாண்டு விட்டாயா..? ”
இவை கலைஞரின் நேற்றைய அறிக்கையின் கடைசி வார்த்தைகள்.
மிகவும் உணர்ச்சி பொங்க கலைஞர் அறிக்கை வடித்திருக்கிறார்.
நீண்ட காலமாக சினிமா வசனம் எழுத வாய்ப்பு கிடைக்காத
காரணத்தால் –
இப்போது கிடைத்த சந்தர்ப்பத்தில் தன் வார்த்தை ஜாலங்களை
எல்லாம் அள்ளித் தெறித்திருக்கிறார்….
கலைஞரின் ( மிக மிக ) விரிவான அறிக்கையில், தேர்தலின் போது,
பணம் புகுந்து விளையாடியது பற்றி விரிவாக எடுத்துரைத்திருக்கிறார்.
கலைஞரின் அறிக்கையில் நிறைய உண்மைகள் இருக்கின்றன…..
ஆனால், அதில் உள்ள குறைபாடு என்னவென்றால்,
உண்மைகள் முழுமை பெறவில்லை.
அது ஒரு பக்கத்தை மட்டுமே காட்டுகிறது.
இன்னொரு பக்கத்தை அவர் கம்பளி போட்டு மூடி விட்டார்..
அவர் எதிர்க்கட்சியின் சார்பில் நிகழ்ந்த பணப்பரிமாற்றங்களைப் பற்றி
மட்டுமே சொல்லி இருக்கிறார்.
இதே மாதிரி திமுகவின் தரப்பிலும் நிகழ்ந்ததை
வசதியாக சொல்லாமலே விட்டு விட்டார்…… !!!
இந்த தேர்தலுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தே,
நான் பல இடங்களில் இருந்த என் நண்பர்களிடம்
சொல்லி வைத்திருந்தேன்.
அவர்கள் ஏரியாவில் பணப்பட்டுவாடா இருந்தால் –
அது பற்றிய விவரங்களை
எனக்கு தெரிவிக்கும்படியும் கேட்டுக் கொண்டிருந்தேன்.
நிறைய தகவல்கள் கிடைத்தன.
இரண்டு கட்சிகளும், நிறைய தொகுதிகளில்
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தன என்பது நிஜமே.
அதிமுக கொடுத்த அளவிற்கு இல்லையென்றாலும்,
கிட்டத்தட்ட அதற்கு இணையாகவே திமுகவும்
கொடுத்திருக்கிறது.
தொகுதியின் முக்கியத்துவம்,
வேட்பாளரின் முக்கியத்துவம்,
அவரவர் நிதி வசதி ஆகியவற்றை பொறுத்து,
ஒரு ஓட்டுக்கு 250 லிருந்து 1000 வரை போயிருக்கிறது.
இரண்டு தொகுதிகளில் இதை நானே நேரில்
உறுதி செய்து கொள்ள முடிந்தது.
திருவாளர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமான
மகேஷ் பொய்யாமொழி
( அன்பில் தர்மலிங்கம் அவர்களின் பேரன் )
தொகுதியில் இரண்டு கட்சிகளுமே
ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுத்தன.
இரண்டு கட்சிகளிலிருந்தும் பணம் கிடைத்த நண்பர்
அதனை நேரடியாக என்னிடம் கொண்டு வந்து காட்டினார்.
நான் வசிக்கும் தொகுதியில், எங்கள் வீட்டிற்கு வழக்கமாக
பூ கொடுக்கும் பெண்மணி, அவர்கள் வசிக்கும் குடிசைப்பகுதியில்
இரண்டு கட்சியினரும் ஒரு ஓட்டுக்கு 250 ரூபாய் வீதம்
பணம் கொடுத்ததை என்னிடம்
நேரில் பணத்தை காட்டி உறுதிப்படுத்தினார்.
அவர்கள் வீட்டில் 4 ஓட்டு.
மொத்தம் 2000 வசூலை என்னிடம் நேரில் காட்டினார்.
(அவரது தொகுதியில், முதல் கட்சி பட்டுவாடாவை
முழுவதுமாக முடித்து விட்டது. இரண்டாவது கட்சி
சுமார் 80 சதவீதம் பேரை “கவர்” செய்து விட்ட சமயத்தில்,
யாரோ தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பி,
அங்கே போலீஸ் வந்ததில், மீதி இருக்கும் பணத்தை கீழே
போட்டு விட்டு, டெலிவரி ஆட்கள் தப்பி ஓடி விட்டிருக்கிறார்கள்….!!!)
இதில் வேடிக்கை என்னவென்றால், இரண்டு கட்சிகளிலிருந்தும்
பணம் கிடைத்தவர்கள் – தானாக வீடுதேடி வந்த பணத்தை வாங்கிக்
கொண்டனர். ஆனால், தாங்கள் ஏற்கெனவே என்ன முடிவு செய்திருந்தனரோ,
அதன்படியே வாக்களித்தனர்.
நான் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறேன். எங்கள் பகுதியில்
பணப்பட்டுவாடா எதுவும் நடைபெறவில்லை….
இரண்டு கட்சிகளும் பணப்பட்டுவாடா விஷயத்தில்
தாராளமாகவே இருந்திருக்கின்றன என்பது உண்மை.
ஆனால், அதே சமயத்தில், அதனால், ஓட்டு போடுபவர்கள்
கட்சி மாறி ஓட்டுப் போடவில்லை என்பதும் உண்மை.
யார் யார்,
எந்தெந்த வேட்பாளர்,
எந்தெந்த கட்சி, எந்தெந்த இடத்தில் –
எப்படி பணம் கொடுத்தன –
என்பது பற்றிய முழு விவரங்களும் –
கண்டுபிடிக்கப்பட்டு, வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டு –
சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு
(முடிந்தால்….!!! ) தண்டனையும் வாங்கிக் கொடுக்கப்பட வேண்டும்
என்பது ஜனநாயகத்தில் ஆர்வம் உள்ள
அனைவரும் விரும்பும் விஷயம்….!
இன்றைக்கு ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்பதில்
கலைஞரை விட அதிக ஆர்வமும், தீவிரமும் உள்ளவர்கள்
வேறு யாரும் இருக்க முடியாது என்பது கலைஞரின் மேற்படி
அறிக்கையை காணும்போதே புரிகிறது.
எனவே, வெறுமனே அறிக்கையோடு நில்லாமல் –
கலைஞர் உடனடியாக, உயர்நீதிமன்றத்தில் –
தேர்தலில் பணப்பட்டுவாடா நடந்தது குறித்த உண்மைகளை
விசாரித்து நடவடிக்கை எடுக்க –
சிபிஐ விசாரணைக்கு உத்திரவிட கோரி
வழக்கு போட வேண்டும்.
கலைஞருக்கு தெரிந்த பாதி உண்மைகளிலேயே இவ்வளவு
“சமாச்சாரங்கள்” இருக்கின்றனவே…
மீதியும் வெளிவர வேண்டாமா…?
தமிழகத்தின் மிக மூத்த 93 வயது தலைவர் இப்படி –
“நீதியே நீ இன்னும் இருக்கின்றாயா?
நீயும் அந்தக் கொலைக் களத்திலே விழுந்து மாண்டு விட்டாயா..? ”
என்று புலம்புவதை காண நமக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.
கலைஞர் அறிக்கை மூலம் அழுது புலம்புவதற்கு பதிலாக –
தன்னிடம் இருக்கும் வக்கீல் பட்டாளங்களை வைத்து,
உடனடியாக உயர்நீதிமன்றத்தில் “சிபிஐ விசாரணை” கேட்டு
வழக்கு போட வேண்டும்….
( சிபிஐ விசாரித்தால் – திமுக பட்டுவாடா விவரமும்
வெளிவந்து விடுமே என்று அவரது வாரிசுகள் யாராவது அவரிடம்
மறுப்பு தெரிவிக்கக்கூடும். அதையெல்லாம் “நீதி” யில் நம்பிக்கையுடைய
நம்முடைய மூத்த தலைவர் ஏற்கக்கூடாது.
” நீதியே நீ இன்னும் இருக்கின்றாயா?
நீயும் அந்தக் கொலைக் களத்திலே விழுந்து
மாண்டு விட்டாயா..? ” என்கிற அவரது கேள்விக்கு விடை தெரியாமல்
அவர் ஓயக்கூடாது. )
நாளையே கலைஞர் ” தேர்தலில் பணப்பட்டுவாடா” குறித்து
சிபிஐ விசாரணை கேட்டு வழக்கு தொடர்ந்தார் –
என்று செய்தி வெளிவருவதைக்காண
தமிழக மக்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்….!!!



கே.எம்.
என்ன சார் இது.
கொள்ளீக்கட்டையை எடுத்து தலையில் சொரிந்துகொள்ளும்
அளவுக்கு மக்கு என்று கலைஞரை நினைத்து விட்டீர்களா ?
நீங்கள் கூறுவது போல் சிபிஐ விசாரணை கேட்டால் திமுகவும் மாட்டுமே.
கருணா செய்வதை யெல்லாம் செய்து விட்டு, உத்தமர் போல் நடிக்கிறார்.
முதலில், திமுக இந்த தேர்தலில் எவ்வளவு பணம் செலவழித்தது
அந்த பணம் எங்கிருந்து வந்தது என்பதை விசாரிக்க வேண்டும்.
நமக்கு நாமே நடைப்பயணத்துக்கு, பக்கம் பக்கமாக் செய்தி பத்திரிகைகளில்
விளம்பரம், டிவிக்களில் விளம்பரம், வேட்பாளர்களின் சார்பில்
ஓட்டுக்கு கொடுக்கப்பட்ட பணம் அத்தனையையும் பற்றிய உண்மைகள்
வெளிவந்து விடுமே.
அதிமுகவில் இதிலெல்லாம் சரியாக focus செய்ய ஆளில்லை.
கருணாவின் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் பதிலுக்கு குற்றச்சாட்டுகளை
அள்ளி வீச முடியும். ஏனோ தெரியவில்லை அதிமுக இவர்களை
சரியாக கையாளவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
கருணா விசாரணை கமிஷன் கேட்பதற்கு பதிலாக சிபியை விசாரணை
கேட்டு கோர்ட்டுக்கு போகட்டும். அத்தனை வண்டவாளங்களும்
வெளிவரட்டும்.
இவரை இந்த மாதிரி நீங்கள் உற்சாகபடுத்தினால் நோட்டா வாக்குகளும் திமுக வேட்பாளரையே சேரும் என்று ஏதாவது குயுக்தி கணக்கு காட்டுவார் .
In thiruvarur dmk had literally thrown away currencies to very large extent
this time………As many believe IN DMK EVEN
this is kalignars last election in thiruvarur
tamizharasu selvi amirtham group had filled
the packets of the people of thiruvarur……….
KARUNA is desperate i understand that thiruvarur native people
who settled in chennai long time back also received queries
from DMK PEOPLE
நண்ப சந்திரா,
இன்னும் நிறைய இடங்களில் திமுகவின் பணப்பட்டுவாடா
மிக தாராளமாகவே நடந்திருக்கிறது. “கொளத்தூரில்” கூட…!!!
தாங்கள் செய்த தவறு வெளியே தெரியாமல் இருக்க –
தொடர்ந்து மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள்….
மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புகிறோம் என்பதை உணராமல்….
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
யாராவது சரியான பழமொழியை உபயோகிப்பார்களா என்று காத்திருந்தேன். “திருடனுக்குத் தேள் கொட்டிய மாதிரி”. எம்ஜியார் கருணானிதியைக் குற்றம் சொல்லும்போது எல்லோரும் நம்புவார்கள். கருணானிதி குற்றம் சொன்னால், “அவருக்கென்ன பிள்ளையா குட்டியா” என்று கருணானிதியின் குற்றச் சாட்டுக்களைப் புறம் தள்ளுவார்கள். இப்போது, கருணானிதி ஜெவின் மீது எந்தவிதக் குற்றச் சாட்டுக்களைச் சொன்னாலும், “இவன் பெரிய ஒழுங்கா.. இவன் அவளைவிட படு மோசம்” என்ற reactionஐயே கருணானிதி பெறுகிறார்.
இதைத்தான் தமிழில் ‘அங்கதம்’ என்பார்கள்.