படு வேகமாக செயல்பட்டு ப.சி.யின் கனவைக் குலைத்த கலைஞர் ….


pc and karunanithi

பாஜகவை இன்னும் வலிமையாக எதிர்கொள்ள, திரு.ப.சிதம்பரம் அவர்கள்
ராஜ்ய சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்று காங்கிரஸ் தலைமை
விரும்புகிறது. ப.சி.அவர்களுக்கும் இதில் தீவிர விருப்பம்.

முதலில் காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவிலிருந்து ப.சி.யை தேர்ந்தெடுக்க
வைக்க முயற்சிகள் நடந்தன. ஆனால், அங்கு காங்கிரஸ் முதலமைச்சர்
சித்தராமைய்யா அதற்கு இடம் கொடுக்கவில்லை.

அடுத்த மாதம் 11ந்தேதி தமிழக எம்.எல்.ஏ. -க்கள் சார்பில் 6 உறுப்பினர்கள்
ராஜ்ய சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தற்போது திமுக விற்கு
உள்ள பலத்தைக் கொண்டு 2 உறுப்பினர்களை சுலபமாக
தேர்ந்தெடுத்து அனுப்பலாம்.

காங்கிரஸ் தலைமை எந்த நேரமும், இது குறித்து தன்னை தொடர்பு
கொள்ளக்கூடும் என்றும், திரு.ப.சி.யை அந்த இரண்டு பேரில் ஒருவராக
அறிவிக்க வற்புறுத்தும் என்பதை உணர்ந்த கலைஞர் அவசர அவசரமாக
இன்று மதியமே, காங்கிரஸ் கட்சியை கலந்தாலோசிக்காமலே –
எஸ்.ஆர்.பாரதி, டிகேஎஸ் இளங்கோவன் ஆகியோரின்
பெயர்களை அறிவித்து விட்டார்.

இனி, காங்கிரஸ் தலைமை கேட்டாலும், கையை – அகல – விரிக்கலாமே….!!!

என்ன இருந்தாலும் – கலைஞர் கலைஞர் தான்….!!!
இந்த வயதிலும், எத்தனை ஷார்ப் ….!!!

முப்பது வயதிலேயே –

“ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே –
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே….

உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே –
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே….!!! ”

-என்று எழுதியவர் ஆயிற்றே….!!!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to படு வேகமாக செயல்பட்டு ப.சி.யின் கனவைக் குலைத்த கலைஞர் ….

  1. gopalasamy's avatar gopalasamy சொல்கிறார்:

    this is the first time that Karunanidhi has done something to deserve appreciation.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      கோபால்சாமி,

      நீங்கள் சொல்வது சரியே….
      ஆனால், இது தன் சொந்தப்பழியை தீர்த்துக் கொள்வதற்காக
      கலைஞர் பண்ணியது…..
      கட்சி நலனோ, பொது நலனோ கருதியல்ல…!!!

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  2. LVISS's avatar LVISS சொல்கிறார்:

    What DMK will gain by increasing the congress number in RS– TKS Elangovan has been a good spokesperson for the party — He is also quite fluent in English –So the party must have thought he would be useful — The alliance is only for the assembly elections —
    I think the DMK leader has perempted any request from the Congress —

  3. selvarajan's avatar selvarajan சொல்கிறார்:

    தலீவருக்கு இதெல்லாம் ” கை வந்த கலை ” — மகளுக்கு எம் .பி. சீட் வேண்டுமென்றாலும் எல்லாவற்றிலும் முந்திக்கொள்வார் … தற்போது எதிர்கட்சி தலைவர் — பதவியைக் கூட — தன்குடும்பத்திற்கே ஒதுக்கிக் கொண்டவர் ஆச்சே … ஆமா .. அய்யா .. ! ” தாண்டவக்கோனே ” பாடலில் ” காசு ” என்கிற வார்த்தை விட்டு போனதற்கு — தலைவர் கோபித்துக்கொள்ள போகிறார் — இந்தபாடலை ” உண்மையில் ” எழுதியது — பாரதிதாசனா — உடுமலை நாராயண கவியா — கருணாவா … ?

  4. selvarajan's avatar selvarajan சொல்கிறார்:

    // தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை குறித்து விசாரணைக் கமிஷன் அமைத்தால் உண்மைகள் வரும்: கருணாநிதி
    Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-questions-ec-p-1-254274.html // இது இப்போதைய செய்தி — // தேர்தலுக்கு பிறகும் தேர்தல் ஆணையம் மீது கலைஞர் மீண்டும் மீண்டும் புகார் கூறுவதன் மர்மம் என்ன ?
    Posted on ஏப்ரல் 16, 2011 by vimarisanam – kavirimainthan // இது தங்களின் அன்றைய இடுக்கை — அப்போதிருந்து இன்றுவரை — தலீவரு மாறவே இல்லை — அப்படி தானே … ?

  5. CHANDRAA's avatar CHANDRAA சொல்கிறார்:

    JI there exists cold war between P C and kalignar
    nobody from dmk had not even called on p c when his mother passed away
    a few years back
    stalin is always not comfortable with p c
    all know that stalin has an aversion to intelligent people
    so kalignar had planned well in advance………..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.