.
.
உத்தராகண்ட் முதலமைச்சர் ஹரீஷ் ராவத், சுப்ரீம் கோர்ட் துணையுடன்
தன்னுடைய மெஜாரிடியை சட்டமன்றத்தில் நிரூபித்து,
ஜனாதிபதி ஆட்சியை திரும்பப்பெற வேண்டிய நிர்பந்தத்தை மத்திய அரசுக்கு
ஏற்படுத்தி இருக்கிறார்.
ஹிந்து ஆங்கில நாளிதழில் வெளிவந்திருக்கும்
சுரேந்திரா’வின் கார்ட்டூன் பாஜக தலைமையை பார்த்து சிரிக்கிறது….!!!

உத்தராகண்ட் மாநிலத்தில் சட்டமன்றத்தில் காங்கிரசின் உள்கட்சி சண்டை
காரணமாக பிளவு ஏற்பட்டபோது, பாஜக அதை பயன்படுத்தி மாற்று
ஆட்சி அமைக்க முயற்சி செய்தது முட்டாள்தனமானது.
அடுத்த ஆண்டு அந்த மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நிகழவிருக்கிறது
என்கிற நிலையில், காங்கிரஸ் அரசு தானாகவே கவிழும் வரை
பாஜக பொறுமை காத்திருந்தால், அடுத்து நடக்கவிருக்கும் சட்டமன்ற
தேர்தலில் அதன் பலனை அறுவடை செய்திருக்கலாம்.
ஆனால், உள்ளூர் பாஜகவினருக்கு பொறுமை இல்லை.
பாஜக தலைமைக்கோ அதைவிட மகா அவசரம்.
ஜனநாயக மரபு எல்லாம் கிள்ளுக்கீரை.
பாராளுமன்றத்தில் தனி மெஜாரிடி இருந்தால் என்ன வேண்டுமானாலும்
செய்யலாம் என்கிற நினைப்பு….
குறுக்கு வழியை நாடி,
அவசர அவசரமாக –
சட்டமன்றத்தை சஸ்பெண்ட் செய்து,
ஜனாதிபதி ஆட்சியை பிரகடனம் செய்தது.
விளைவு –
பயங்கரமான மூக்குடைப்பு மட்டுமல்ல…
அநாவசியமாக, முதலமைச்சர் ஹரீஷ் ராவத்’ துக்கு
அவரது மாநிலத்தில் ஒரு பரிதாப அலையை (sympathy wave )
உண்டு பண்ணி விட்டிருக்கிறது….
சாதாரணமாக சட்டமன்றத்தில், தானாகவே அரசு கவிழ்ந்து,
தேர்தல் நடந்தால், காங்கிரஸ் மீது அதன் உள்பூசல் காரணமாக
வெறுப்பு வந்து, மக்கள் பாஜகவை தேர்ந்தெடுக்க நிறைய
வாய்ப்புகள் இருந்தன.
தன் பொறுமையின்மை காரணமாகவும்,
குறுக்கு வழியை நாடியதாலும்-
இன்று தேவையே இல்லாமல்,
காங்கிரசுக்கு ஆதரவான ஒரு சூழ்நிலையை
மாநிலத்தில் உருவாக்கி இருப்பதோடு –
ஹிந்து, சுரேந்திரா கார்ட்டூனை போட்டு –
பரிகசிக்கும் நிலைக்கும் ஆளாகி விட்டது….!!!
பாஜக தலைமையின் முதிர்ச்சியற்ற, பொறுமையற்ற தன்மை
அதே போலத்தான் தமிழ்நாட்டிலும் வெளிப்பட்டிருக்கிறது.
தேர்தல் சர்வேக்களை பொதுவாக பார்த்தால், இறுதியில்
மிஞ்சி மிஞ்சி போனால், 3 அல்லது 4 சதவீதம் ஓட்டுக்களையே
பாஜக பெறப்போகிறது.
இதற்காகவா இவ்வளவு ஆட்டம்….?
மாநிலத்தலைமை தன் நிலை மறந்து வாய்க்கு வந்ததை எல்லாம்
பேசியதும், வரிசையாக மத்திய அமைச்சர்கள் இங்கு வந்து
உளறிக்கொட்டியதும் –
3 – 4% ஓட்டுக்களுக்காக, காவு கொடுக்கப்பட வேண்டியதல்ல
மாநில மத்திய அரசுகளுக்கிடையே நிலவும் உறவு.
பாஜக தலைமையின் முதிர்ச்சியற்ற தன்மையே இந்த
விரோத சூழ்நிலை ஏற்படவும் காரணம்.
காங்கிரஸ் ஆடிய ஆட்டம் தாங்க முடியாமல் போனதால் தான் –
மத்தியில் மக்கள் பாஜகவை, மோடிஜியை – ஆட்சிக்கு
கொண்டு வந்தார்கள். இவர்களோ, காங்கிரசை விட
தாங்கள் எந்த விதத்திலும் உயர்ந்தவர்கள், சிறந்தவர்கள் அல்ல –
என்பதை வரிசையாக நிரூபித்துக்கொண்டே வருகிறார்கள்….!!!



BJP was too much in hurry in toppling
Arun Jaitley clearly explained the circumstances that led to the imposition of President;s rule in uttarakhand —