
இது முதல் கட்டம் –
” இந்த வயதில் பணியாற்றும் அவரை எனது தந்தையாகவும்,
இந்த பேரியக்கத்தின் தலைவராகவும் பெற்றது என்னுடைய தவப்பயன்.”
இது திருவாளர் ஸ்டாலின்….!!!
” ஸ்டாலினை மகனாகப் பெற்றது நான் செய்த புண்ணிய தவப்பயன் ”
-இது திருவாளர் கருணாநிதி.
—————————–
இது இரண்டாவது கட்டம் –
(NDTV தொலைக்காட்சிக்கு கலைஞர் தமிழில் அளித்த பேட்டியிலிருந்து – )
கேள்வி –
” நீங்கள் உங்கள் கட்சியில் கடந்த பல ஆண்டுகளாக இளைஞர்களுக்கு
ஊக்கமளித்து, பல இளைய தலைவர்களை வளர்த்துள்ளீர்கள்.
தற்போது உங்களுக்கு 93 வயதாகிறது. எனவே நீங்கள் இளைஞர்களுக்கு
வழிவிட வேண்டும் என பலரும் சொல்கிறார்கள். பாமக இளைஞர் அணி
தலைவர் அன்புமணி ராமதாஸும் நீங்கள் அரசியலில் இருந்து
ஓய்வுபெற வேண்டும் என சொல்லி இருக்கிறார்.
இந்நிலையில் இந்த தேர்தலில் உங்கள் கட்சி வெற்றி பெற்று
ஆட்சியமைத்தால், முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றிய பின்னர்
இளைஞர்களுக்கு வழிவிட்டு ஒதுங்குவீர்களா…?
குறிப்பாக ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என அவரது
ஆதரவாளர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு உள்ளது.
உங்களது பதில் என்ன?”
கலைஞரின் பதில் –
” ஸ்டாலினுக்கே முதல்வர் ஆக வேண்டும் என விருப்பம் இல்லை.
திமுக தலைவர்தான் முதலமைச்சராக வரவேண்டும் என விரும்புகிறார்.
நான் கடந்த 1957 ம் ஆண்டிலிருந்து இதுவரை போட்டியிட்ட தேர்தல்களில்
தோற்றதே இல்லை. இந்த தேர்தலில் வெற்றி பெற்றாலும், நான்தான்
ஆறாவது முறையாகவும் முதலமைச்சராக வரவேண்டும் என
விரும்புகிறவர்களில் முதல் நபர் ஸ்டாலின்”
கேள்வி –
அவர் ( ஸ்டாலின் ) முதல்வராக ஆவதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்
என்று சொல்லும் அவரது ஆதரவாளர்களுக்கு நீங்கள் என்ன
சொல்ல விரும்புகிறீர்கள்?
கலைஞரின் பதில் –
” அவர் ( மு.க. ஸ்டாலின் ) முதல்வராவதற்கு வாய்ப்பு
வரவேண்டுமென்றால் இயற்கை எனக்கு ஏதாவது செய்தால்தான் உண்டு.”
———
இதில் கலைஞரின் முகபாவங்களையும், வார்த்தைகளின்
அழுத்தத்தையும் நேரில் பார்த்தால் தான், அவர் மீண்டும்
முதல் அமைச்சராக வேண்டும் என்பதில் எவ்வளவு
பிடிவாதமாக இருக்கிறார் என்பது தெரியும்.
எனவே, சம்பந்தப்பட்ட டிவி பேட்டி கீழே –
சில கேள்விகள் எழுகின்றன –
———–
சில ஆண்டுகள் முன்னதாக திமுகவின் அடுத்த தலைவர்,
அடுத்த முதல்வர் – குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு,
” திமுக என்ன சங்கர மடமா – வாரிசுகளை நியமிக்க….? “
என்று கலைஞர் எதிர் கேள்வி கேட்டது யாராலும் மறக்கவே முடியாத
ஒரு அனுபவம்….!!!
இப்போது, பொதுக்குழு, செயற்குழு எதுவும் கூடாமலே-
தானாகவே, திரு.ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என்று
அறிவித்தது எப்படி ?
இதையெல்லாம் தந்தையும், மகனும் மட்டும் தீர்மானித்து விட,
இவர்கள் என்ன அரச பரம்பரையினரா…?
இங்கு என்ன முடியாட்சியா நடக்கிறது…?
இல்லை கலைஞர் கூறியது போல் திமுக என்ன “சங்கர மடமா..? ”
—————-
பேட்டியில், தேர்தலில் போட்டியிட்டு தோற்றதே இல்லை என்கிற
வார்த்தை அவர் வாயில் வரவில்லை. “இதுவரை நான் தோற்றதே
இல்லை ” என்று தான், ஒருமுறை அல்ல இரண்டு முறை – கூறுகிறார்….!
எம்.எல்.ஏ. வாக நின்று இவர் தோற்றதில்லை என்று வேண்டுமானால்
சொல்லிக் கொள்ளலாம். ஆனால் தோற்றதே இல்லை என்று
சொல்வது – வெறும் ஜம்பம்.
எம்ஜிஆர் உயிரோடு இருந்த வரை நடந்த எந்த தேர்தலிலும்,
திமுக ஜெயிக்கவில்லை என்பது தான் நிஜம்.
——————
நிற்க முடியவில்லை…
நடக்க முடியவில்லை…
வாய் குழறுகிறது…
கைகளில் காகிதங்களையே உறுதியாக பிடிக்க முடியவில்லை.
பக்கங்களை திருப்பக்கூட யாராவது உதவ வேண்டி இருக்கிறது.
பெரும்பாலும் இவர் பேசுவது யாருக்கும் புரிவதில்லை…
இந்த லட்சணத்தில் –
இயற்கையாக பார்த்து எதாவது செய்யும் வரை
நான் தான் முதல் அமைச்சர் என்று சொல்வது…….!!!



மார்ச் மாதம் 7 — ம் தேதி 2010 — விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில் கலைஞர் — பேச்சு …
// ‘‘தி.மு.கழகம் ஏழைகளுடைய இயக்கம். இந்த மேடையில் எனக்கும், தம்பி ஸ்டாலினுக்கும் பொன்னாலான வரவேற்பு பத்திரங்களை தந்தார் அமைச்சர் பொன்முடி. நான் உள்ளபடியே வருத்தப்படுகிறேன். அது வெறும் தங்கமாக இருந்தால், வாங்கிய வேகத்திலேயே வீசியிருப்பேன். அதில், பெரியார் உருவமும் அண்ணா உருவமும் பொறிக்கப்பட்டிருந்தன. தங்கம் என்று எறிந்தால், தங்கத்தைவிட நாம் அதிகமாக நேசித்த சிங்கங்கள் பெரியாரையும், அண்ணாவையும் தூக்கி எறிந்ததாக ஆகிவிடும்’’& இது கலைஞரின் பேச்சு. எங்கே? மார்ச் 7-&ம் தேதி விழுப்புரத்தில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில்! அதே மேடையில், ‘‘நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ, அப்படித்தான் மக்களும் நம்மைப் பார்த்து நடந்து கொள்வார்கள். நாம் ஏழ்மையிலிருந்து விடுபடவேண்டும் என்று எண்ணுகிறோம் என்றால், அதே நேரத்தில் அந்த மக்களையும் ஏழ்மையிலிருந்து விடுவிப்பவர்களாக இருக்கவேண்டும். அந்த சபதத்தை மேற்கொள்ள வேண்டும். இதைப் பற்றி அண்ணா ஒரு திரைப்படத்தில் வசனம் எழுதியிருந்தார். ‘பணம், பணம் என்று அலைகிறாயே, உன்னுடைய வீட்டிலே என்ன அரிசி? வெள்ளியால் அரிசியா? மரகதத்தால் குழம்பா? ஏழைக்குக் கிடைக்கிற அந்த அரிசிதான் பணக்காரர்களுக்கும். தங்கத்தை உட்கொண்டால் ஜீரணமாகாது. வைரத்தை சாப்பிட்டால், மறுநாள் ஆளே இருக்கமாட்டான். தங்கம், வைரம் எல்லாம் கண்ணுக்கு, காட்சிக்கு அதிசயம் தருவது. வாழ்க்கைக்கு உதவாது. உண்மையான வாழ்க்கை, மக்களை வாழ வைக்கின்ற மனத்திண்மை-யான வாழ்க்கை. பணத்தை, பொருளை, வைரத்தை, நகை நட்டுகளை வெறுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்பார் அண்ணா. அண்ணாவைப்போல, ஒரு வேட்டி, ஒரு துண்டோடு வாழ்ந்தாரே. சட்டையைக் கூட மாட்டத் தெரியாமல் பொத்தானைக்கூட மாத்திப் போட்டுக் கொள்வாரே அப்படிப்பட்ட எளிமைதான் நமக்குத் தேவை’’ என்று விளாசியிருக்கிறார் கலைஞர். கலைஞரின் பேச்சு, பொன்முடியை ரொம்பவே காயப்படுத்தி இருக்குமே என்று கட்சிக்காரர்கள் வருத்தப்பட்டார்கள். அப்படி வருத்தப்பட்டாரா பொன்முடி என்று நாமும் அப்பாவியாக விசாரித்தோம். கலைஞரின் பேச்சு சில நேரங்களில் பூடகமாக இருக்கும். சில விஷயங்களை பொருத்திப் பார்த்தால்தான் புரியும். கடந்த பிப்.14&ம் தேதி சங்கத் தமிழ் பேரவை நடத்திய விழாவில்கூட, பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கமுலாம் பூசப்பட்ட கலைஞர் சிலையை, கலைஞருக்கே பரிசளித்தார் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன். அச்சிலை, இன்றும் கோபாலபுரம் வீட்டில் லிஃப்ட் அருகே அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. அப்படியானால், ஜெகத்துக்கு ஒரு நியாயம், பொன்முடிக்கு ஒரு நியாயம் என்று இருக்க முடியாது. ஆக, விழுப்புரத்தில் அவர் பேசியது, பொன்முடிக்காக அல்ல.// … எவ்வாளவு எளிமையான தலீவரு .. தங்கத்தையே தூக்கி வீசுவேன் என்று கூறி — பையில் போட்டுக்கொண்டவருக்கு — அவர் கூறியதைப்போல 103 — வயதிலும் ” முதல்வர் ஆசை ” விடாது — அப்பு … ! பாவம் … ஸ்டாலின் — விடாது -கருப்பு என்று நொந்து போய் இருப்பாரா … ? [ இதுவும் கலைஞர் அவர்களின் ” டகாய்ச்சி ” வேலையாக இருக்குமோ — தற்போது குடும்பத்தில் குழப்பம் வராமல் இருக்க — தானே முதல்வர் என்று கூறி — ஆட்சி கிடைத்தவுடன் மகனுக்கு முடிசூட்டினால் — குடும்பத்தை சமாளித்து விடலாம் — என்கிற உள்குத்து — நாடகமா … ? ] … http://134804.activeboard.com/t35211542/topic-35211542/?ts=1276178674&page=3&sort=oldestFirst&direction=next …
செல்வராஜன்,
பிரணமாதம்.
சுவையான, பழைய “சமாச்சாரங்களை” எல்லாம்
தேடி எடுக்கிறீர்களே…. தொடருங்கள் உங்கள் பணியை…!!!
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
Dear nature…Pl help TN at least this time….
k.m.sir,
பிரதமரும், முதல்வரும் ஒரே கட்சியாக இருக்க வேண்டும்
என்பதே என் ஆசை – என்று தமிழக பாஜக தலைவர்
தமிழிசை சௌந்திரராஜன் தினமணி பேட்டியில்
கூறி இருக்கிறார். இது குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?
நண்ப ராகவேந்திரா,
அவர் சொல்வதில் ஒரு “லாஜிக்” இருப்பது உண்மை தான்
என்றாலும், நடைமுறை சாத்தியமில்லையே….
பாஜக தலைவர் தமிழ்நாட்டில் சி.எம். ஆகவும் முடியாது,
அதிமுக தலைவர் டெல்லியில் பி.எம்.- ஆகவும் முடியாது….!!!
ஆனால், அவர் போட்டியிடும் விருகம்பாக்கம் தொகுதி மக்கள்
நடைமுறை சாத்தியமான வேறு ஒன்றை யோசிக்கலாம்….
தங்கள் தொகுதியில் காரியங்கள் நிறைவேற –
தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கக்கூடிய கட்சியை சேர்ந்தவரையே
அவர்கள் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கலாம்…. 🙂 🙂
The PM and CM need not be from the same party but they can always work together for the welfare of the state — The central govt and the party in T Nadu also should forget the speeches made during elections which are mostly for public discourse —
http://kurumban.blogspot.com/2016/05/blog-post_11.html
இந்தப் பதிவை படித்தீர்களா? மிக அழகாகத் தொகுத்து எழுதியிருக்கிறார் இந்தப் பதிவர். தமிழக அரசியல் அவலங்களை நன்றாகப் பட்டியலிட்டிருக்கிறார்!
Really good analysis.
நண்ப பந்து,
இந்த கட்டுரையையும், தளத்தையும் எனக்கு அறிமுகப்படுத்தியமைக்கு
மிக்க நன்றி.
அங்கு நான் எழுதியுள்ள கருத்துக்களை இங்கும் பதிகிறேன் –
————-
நண்பர் அரவிந்தன் கண்ணையன் அவர்களுக்கு,
மிக அழகாகவும், ஆழமாகவும் அலசி இருக்கிறீர்கள்.
இத்தகைய விசாலமான பார்வை பலருக்கும் இல்லாததால் தான்
வலையுலகில் நேர்மையான விமரிசனங்கள் மிகக்குறைவாக
வருகின்றன.
எனக்கு உங்கள் வயது தெரியவில்லை.
ஆனால், பழைய விவரங்களை எல்லாம் கிட்டத்தட்ட
சரியாகவே குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
உங்கள் உழைப்புக்கும், ஆர்வத்திற்கும் – எனது உளமார்ந்த பாராட்டுக்கள்.
—————
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
Seshan ji nature should help tamilnadu in the most appropriate time
otherwise party men would seek sympathy votes
Besides anti social elements yes partymen would hijack tamilnadu
Yes tamil nadu people should have enormous patience
in two incidents
one the above nature
second THE FINAL SUPREME COURT RESULT
// மதுரை மாவட்டத்தில் திமுகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது.. அழகிரி ஆவேசம்
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-won-t-win-single-seat-madurai-says-party-s-former-strong-man-alagiri-253442.html .. // அறக்கட்டளையிலும் பங்கு இல்லை … கட்சியிலும் ஒரு பதவியும் இல்லை — தன் ஆதரவாளர் வேட்பாளர் லிஸ்ட் கொடுத்தும் பிரயோஜனம் இல்லை — தெரு முனை பிரசாரத்திற்கு கூட அழைப்பு இல்லை — தனக்கு பின் தான் ஸ்டாலின் முதல்வர் என்று தந்தை சாசனம் எழுதியதை பொருக்க முடியவில்லை — இவர்களின் நலனுக்கு தான் உழைத்த – உழைப்பிற்கு பலன் இல்லை — மதுரையின் உண்மை நிலவரத்தை சொல்லாமல் இருக்க முடியவில்லை — அய்யகோ … என் செய்வேன் …. ? என்று புலம்புகிறார் போல தெரிகிறது … !!!
செல்வராஜன்,
தான் சொல்லும் ரிசல்ட் வர,
திரு.அழகிரி இன்னும் உழைக்க வேண்டும்…. 🙂 🙂
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
வரலாற்றில் கலைஞர் நிரந்தர முதல்வர்….
* ஊழலை விஞ்ஞான முறையில் செய்ததில்….
* குடும்ப அரசியலை காப்பாற்றுவதில் ……..
* அனாவசியமான இலவசங்களை கொடுத்ததில்….
* ஈழ தமிழர்களை படுகொலை செய்ய துணை
புரிந்ததில்…..
…… இன்னும் பல…
Mr Kaviri.. As usual you are doing a tricky talk to indirectly support your .. !!
1. Reporter asked a question about stalin and he said avar mudhalvaraga vara “vaaippu” vendummendral….. he didnt say that he will be mudhalvar… ..
2. It is a open secret that all DMK cadres will back up stalin only.. general body meeting are all just for show only.. same is the case with all parties..!
Dont know why u have so much …. about DMK’s next leadership.. ! 🙂
கருணானிதியின் லேடஸ்ட் பேட்டி சூடான டாபிக். அதைப் பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஸ்டாலினும் கருணானிதியும் சிரித்துக்கொண்டே இருந்தது அவர்கள் முன்பே பேசி வைத்துக்கொண்டதுபோல் தோன்றிற்று. லேடஸ்ட் டாபிக் கருணானிதியை எக்ஸ்போஸ் செய்வதைப் பற்றி எழுதியதில் என்ன தவறு இருக்கிறது? இதுவே சொல்லிவைத்துக் கேட்ட கேள்வியாகவும் இருக்கலாம். கண்ணை மூடிக்கொண்டு கருணானிதியையும் திமுகவையும் ஆதரிப்பவர்களுக்கு இது எப்படித் தெரியும்?
இதில் ஸ்டாலினுக்கு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும் என்று பலர் நினைக்கலாம். கருணானிதி இந்தப் பேட்டியின் மூலம், தனக்குப் பின்பு ஸ்டாலின் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அதனால், அழகிரியோ, கனிமொழியோ வேறு எவரோ திமுகவில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பே இல்லை. கருணானிதியில் தலைமையில் இருந்தவர்கள், ஸ்டாலின் தலைமையை ஏற்றுக்கொள்வார்கள். வைகோ பிரித்ததுபோல் நடக்கவே நடக்காது. நடந்தாலும், அதில் எந்தவித இம்பாக்டும், திமுக தொண்டர்களுக்கு அந்தமாதிரி பிளவு நடந்தாலும் அதைப் பற்றி அக்கரையும் இருக்காது. அப்படிப் பிரிபவர்களை, திமுக தொண்டர், துரோகிகள் என்றுதான் எண்ணுவார்கள். (அது யாராக இருந்தாலும்)