மேடையில் அழுத திருவாளர் துரை முருகன் வைத்திருக்கும் கார் – அப்துல் காதருடையதாமே ….?

.

.

அண்மையில், திரு.துரைமுருகன் அவர்கள் காட்பாடி தொகுதியில்
( அவர் போட்டியிடும் தொகுதி ) மேடையில் பேசும்போது, கண்ணீர் விட்டு
கதறி அழுததாக செய்தி வெளியாகி, பரபரப்பை உண்டு பண்ணியது.

அந்த நாள் மனிதர்கள் அநேகருக்கு திரு.துரைமுருகன் பற்றிய விவரங்கள்
ஓரளவு நன்றாகவே தெரிந்திருக்கும். திமுக தலைவரின் Right Hand.
திமுகவின் நிரந்தர PWD minister.

பலருக்கு தெரியாத ஒரு உண்மை…..
மாணவராக இருந்தபோது, துரைமுருகனை தன் சொந்த செலவில்
படிக்க வைத்தவர் அப்போது திமுகவில் இருந்த எம்.ஜி.ஆர்.

ஆனால், திமுக தலைவர் கருணாநிதி, எம்ஜிஆரை திமுகவிலிருந்து
வெளியேற்றியபோது, எம்ஜிஆருடன் போகாமல், ஆட்சியில் இருந்த
திரு.கருணாநிதியுடனேயே தொடர்ந்து அமைச்சராக நீடித்தவர் திரு.துரை.

அவரைப்பற்றி பலர் அறிந்த இன்னொரு உண்மை –
துரைமுருகன் ஒரு நல்ல மிமிக்ரி நிபுணர்.
யார் மாதிரியும், பேசி, நடிக்க வல்லவர்….
சட்டமன்றத்திலேயே, அமைச்சராக இருந்தபோது கூட
மிமிக்ரி செய்து அனைவரையும் சிரிக்க வைத்தவர் அண்ணன்.


அவர் மீது சொத்துக் குவிப்பு புகார்கள் நிறைய உண்டு…..
இதெல்லாம் ஒரு பக்கம் கிடக்கட்டும்…
இந்த இடுகையை எழுத வந்தது – திரு.துரைமுருகனின் தொகுதியில்
அவரது கட்சியினரிடையே சொல்லப்பட்ட ஒரு கல-கலப்பான
செய்தியை பகிர்ந்து கொள்ளத்தான்.

கீழே அச்சில் செய்தி –

durai-1

durai-2

durai-3

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to மேடையில் அழுத திருவாளர் துரை முருகன் வைத்திருக்கும் கார் – அப்துல் காதருடையதாமே ….?

  1. chandramouly venkatasubramanian's avatar chandramouly venkatasubramanian சொல்கிறார்:

    His yellagiri bungalow was a gift from a PWD contactor

  2. selvarajan's avatar selvarajan சொல்கிறார்:

    எம் .ஜி. ஆருக்கு நன்றி மறந்த — துரை முருகன் கண்ணீர் — சும்மா முதலை வடிக்கும் கண்ணீர் … ! ஏனென்றால் அவரைவிட பலே ” கில்லாடி ” — நம்ம தலீவரு — எப்படிஎன்றால் மகனின் ஜோர் ஏத்தும் ஐஸ் டயலாக்கிற்கு அப்பா — அடித்த அதிரடி — சூப்பர் ஆளுங்கய்யா இவர்கள் :– // ஓய்வறியா உழைப்பாளி கருணாநிதியை தந்தையாகப் பெற்றது என் தவப்பயன்!- முக ஸ்டாலின்
    Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/proud-be-son-karunanidhi-says-mk-stalin-253258.html // மகனின் ” ஐஸ் ” … ! அதற்கு அப்பாவின் அதிரடி : // இயற்கையாக எனக்கு ஏதாவது நேர்ந்தால்தான் மு.க. ஸ்டாலின் முதல்வர்: கருணாநிதி
    Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/stalin-can-become-cm-after-me-says-karunanidhi-253316.html // தி.மு.க. ஒன்றும் சங்கர மடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன். அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும்’ என்பது கருணாநிதி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். … அப்படியிருக்க இப்போ எதற்கு மேலே உள்ள அறிக்கை … ?

    • நெல்லைத் தமிழன்'s avatar நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

      அவசரப்படாதீங்க செல்வராஜன். கா.மை ஐயா இதை அடுத்த பதிவாகப் போட வாய்ப்பு இருக்கிறது. கருணானிதி சும்மா இல்லை. அவர் சொன்னது, “எனக்கு இயற்கையாக மரணம் வந்தால்தான், ஸ்டாலின் முதல்வராக முடியும் அதுவரை நான் தான் முதல்வர்”. இலவு காத்த கிளி ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல.

      • selvarajan's avatar selvarajan சொல்கிறார்:

        நண்பரே … வார்த்தைகளை கட்சிதமா போட்டு பேசுவதில் கில்லாடி கலைஞர் … பொதுவா எனக்கு ஏதாவது நேர்ந்தால்தான் — என்று சாதாரணமா கூறுவதை தவிர்த்து ” இயற்கையாக ” என்கிற ஒரு வார்த்தையை ஏன் அவர் உபயோகிக்க வேண்டும் — என்பதை எண்ணிப்பாருங்கள் … ! அதில் உள்ள சூட்சுமம் புரியும் … !!!

      • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

        நெல்லைத்தமிழன்,

        இதையும் தனிப்பதிவாக அவசியம் போடலாம்.
        அதற்கு முன்னதாக, தளபதி NDTV-க்கு ஒரு superb பேட்டி
        கொடுத்திருக்கிறார். அதையும் நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்.

        -வாழ்த்துக்களுடன்,
        காவிரிமைந்தன்

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      செல்வராஜன்,

      தனியாக, விரிவாக இடுகை போட்டு, அவசியம் பேசலாம்….!!!

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • Seshan's avatar Seshan சொல்கிறார்:

        Like a mohal royal family culture …..
        …………….

        Until that they need the mk live puppet to show in the election.

        But for TN no way to escape from ghost to devil

  3. நெல்லைத் தமிழன்'s avatar நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    கருணானிதி அமைச்சரவையில் யார் உத்தமன்? கருணானிதி ஊழல் செய்யும்போது, அமைச்சர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா? ஏலகிரி பங்களா, சட்டப்படி 3000 ரூபாய்க்கு வாங்கினதாக பக்கா கணக்கு இருக்கும். உதயனிதிக்கும், படங்களில் நடித்து, தயாரித்து லாபம் வந்ததாக 600 கோடி இப்போதே கணக்கு வைத்திருப்பார். என்னடா.. ஏவிஎம் 50 வருடங்களுக்குமேல் படமெடுத்து 10 கோடிக்குமேல் சொத்து சேர்க்கமுடியவில்லையே என்று வருமானவரித்துறை கேட்காது. இதுதான் சட்டப்படி நல்லவர்களாக இருப்பவர்களின் லட்சணம். ஸ்டாலினின் மகள் செந்தாமரைக்கு சொந்தமாக பள்ளிக்கூடம், பலவித சொத்துக்கள் உண்டு. எல்லாத்துக்கும் பக்கா கணக்கு காட்டப்பட்டிருக்கும். ஸ்டாலினுக்கு லண்டன் பயணத்துக்கும் ஆஸ்பத்திரிக்கும், திமுக கட்சி செலவழிக்கிறது. திமுகவுக்கு (அதன் அறக்கட்டளைக்கு) 60,000 கோடி எங்கிருந்து வந்தது என்று கேட்டால், மக்களிடமிருந்து வந்தது என்று பக்காவாகக் கணக்கு இருக்கும். ராசாத்தி அம்மாளுக்கு 50 கோடி எங்கிருந்து வந்தது என்று கேட்டால் (அதுவும் இப்போ 12 வருடத்துக்குள்ளேதான்), சரியான கணக்கு வைத்திருப்பார்கள். வெங்கட்’நாராயணா தெருவில் (தி.நகர்) சரவணபவன் கட்டிடம் ஸ்டாலினுக்குச் சொந்தம் என்று கேள்வி. ரொம்ப ஆராய்ச்சிபண்ணினால், அது, வேளச்சேரியில் உள்ள ஒரு பிச்சைக்காரன் பெயரில் இருக்கும். இந்தக் கும்பல்தான், ஜெ.வின் கொடனாடு பங்களாவைப் பற்றிக் கேள்வி கேட்கிறது.

  4. selvarajan's avatar selvarajan சொல்கிறார்:

    காசில்லாமல் எம்.ஜி.ஆர். உதவியால் படித்த துரைமுருகன்:
    துரைமுருகன் ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சிலர் மூலம் எம்.ஜி.ஆரை அணுகினாராம். அவரது நிலையை கேட்ட எம்.ஜி.ஆர். நன்றாக படி என்று அனுப்பி வைத்தாராம்.
    படிக்க செலவுக்கு பணமில்லை என்று எம்.ஜி.ஆரிடம் போய் நின்றபோது துரைமுருகன் சட்டம் பயில எம்.ஜி.ஆர். பண உதவி செய்தாராம். (அதன் பிறகு கட்சியிலும் மாணவர் அணியில் இருந்த துரைமுருகன் தனது மகன் கல்லூரிக்கு செல்லும் மாணவனாக இருக்கும் வரை மாணவரணி நிர்வாகியாக இருந்தது தனிக்கதை.)
    எம்.ஜி.ஆர். உதவியால் படித்து ஆளான துரைமுருகன் 1977-ல் எம்.ஜி.ஆர். முதல்வராக வந்தபோது நன்றி மறந்து சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக எம்.ஜி.ஆருக்கு எதிராக அரசியல் பண்ணினார். இதுபோல் ஒருநாள் முதல்வர் எம்.ஜி.ஆர்ரை சட்டசபையில் விமர்சித்உத கொண்டு இருந்தபோது திடீரென மயங்கி சட்டசபைக்குள் விழுந்துவிட்டார் துரைமுருகன் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் அவரை வளர்த்து படிக்க வைத்த பாசத்தில், முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். ஓடிவந்து துரை முருகனை தூக்கி தாங்கிபிடித்து தண்ணீரை முகத்தில் தெளித்து மயக்கம் தெளிய வைத்து தாயன்புடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் என்பதும், ” அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த கருணாநிதியும் அப்போது சட்டசபையில் இருந்தார். (மெளனமாக பார்த்துக்கொண்டு) ” அன்று படிப்பு செலவுக்கே பணமில்லாதவர் இன்று பல கோடிக்கு அதிபதி. http://www.thinaboomi.com/news/2014/05/25/7772.html // இந்தசெய்தி ” தின பூமி ” பத்திரிக்கையில் November 25, 2011 அன்று வெளிவந்த // முன்னாள் தி.மு.க. அமைச்சர் வீடுகளில் சோதனை// என்பதில் உள்ளது — இதிலேயே துரைமுருகனின் சொட்டு பட்டியலும் இருக்கிறது — பாவம் … உள்ள சொத்துக்களை காப்பாற்றிக் கொள்ள ” கண்ணீர் ” மட்டுமா வடிப்பார் … ?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      செல்வராஜன்,

      நிறைய மேலதிக தகவல்களை தந்திருக்கிறீர்கள்.
      நன்றி.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  5. CHANDRAA's avatar CHANDRAA சொல்கிறார்:

    All know that DMK is a dangerous diabolical destructive dejected wicked mean minded
    cunning cutthroat political party Let us pray that DMK is finished in this election >>>>MUCH TO THE WELFARE OF TAMIL NADU PEOPLE

  6. selvarajan's avatar selvarajan சொல்கிறார்:

    // ‘ஆம்.. கடந்த காலங்களில் நாங்கள் தவறு செய்திருக்கிறோம்!’- ஸ்டாலின்…http://www.vikatan.com/news/politics/63860-mk-stalin-ndtv-interview.art?utm_source=newsletter&utm_medium=content&utm_campaign=3189 ….// … நல்ல NDTV பேட்டி .. ? நாம் கேட்பதெல்லாம் — தெரிஞ்சோ, தெரியாமலோ செய்த தவறுகளை திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறோம் .. ! இப்படி சொல்லுவதால் மக்களுக்கு என்ன பயன் — ? முந்தைய வருமான வரித்துறையிடம் காட்டிய கணக்கின் படியும் — தற்போதைய வேட்பு மனுவில் மனுவில் காட்டிய கணக்கின் படியும் உள்ள உங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்கள் — போக மீதி உள்ளதை திருப்பி கொடுப்பிங்களா .. ? அதை சொல்லுங்கண்ணே … வாக்கு உங்களுக்கு தான் … !!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.