திரு.கார்த்தி ப.சிதம்பரம் வீடு / பிசினஸ் இடங்களில் ரெய்டு – தாமதமாக வெளி வரும் தகவல்…!!!

karthi_chidambaram

ஏனோ தெரியவில்லை –
தொலைக்காட்சிகளில் இதுவரை இந்த செய்தி வரவில்லை….!
இன்று காலை முதல் திரு.கார்த்தி ப.சிதம்பரம் அவர்களின்
வீடு மற்றும் அலுவலகங்களில் –

வருமான வரி மற்றும் அமலாக்கத்துறை
(Income tax department and Enforcement
Directorate) – அதிகாரிகளால் –
ஒரே நேரத்தில் சோதனை ( raid ) நடத்திக் கொண்டிருப்பதாக
இப்போது தான் பிடிஐ மூலம் தகவல் வெளியாகி இருக்கிறது.

2006- ஆம் ஆண்டில்,திரு.ப.சி.அவர்கள் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, ஏர்-செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனம் வாங்கிய சமயத்தில், Advantage Consulting என்கிற
நிறுவனமும் சம்பந்தப்பட்டிருந்ததாகவும்,
அந்த Advantage Consulting நிறுவனத்திற்கும்
திரு. கார்த்தி அவர்கள் மேஜர் பங்குகளை கொண்டிருந்த
Advantage Strategic, Ausbridge Holdings
ஆகிய நிறுவனங்களுக்கும் உள்ள தொடர்புகள் குறித்ததாக
இந்த சோதனைகள் இருக்கலாமோ என்று ஒரு கருத்து
நிலவுகிறது.

இது குறித்த மற்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை…!!!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in 00, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to திரு.கார்த்தி ப.சிதம்பரம் வீடு / பிசினஸ் இடங்களில் ரெய்டு – தாமதமாக வெளி வரும் தகவல்…!!!

  1. nparamasivam1951's avatar nparamasivam1951 சொல்கிறார்:

    தொலைக்காட்சிகள் வெறும் சீரியல் பார்ப்பதற்கு தான் என நினைக்கிறேன். அவ்வப்போது ரமணன் மழை வரும் ஆனால் வராது என சொல்லிக் கொண்டு இருப்பார்.

  2. thiruvengadam's avatar thiruvengadam சொல்கிறார்:

    Just 10 minutes back saw this news in Vikatan news. Let us await further news. As usual there will be taken some records ( no details information) for investigation. The other side divulge we are pure & will meet the actions.

    • இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

      அப்படிப் போடுங்க அருவாளை
      நுங்கம்பாக்கத்துல தானே மொதலாளி வீடு.
      அதான் மழை பிச்சு பிச்சுன்னு பிச்சுக் கொட்டுது போல !

      வாழ்க வளமுடன் !

  3. paamaran's avatar paamaran சொல்கிறார்:

    The Times of India: News Home » India
    Enforcement Directorate, income tax department conduct raids on Karti Chidambaram’s firms
    TNN | Dec 1, 2015, 12.49 PM ….. மேலே உள்ளது டைம்ஸ் ஆப் இந்தியா வில் இரண்டு மணி நேரத்திற்கு முன்பே வந்த செய்தி …. டைம்ஸ் நவ் தொலைகாட்சியில் வந்தது ……. வந்துகொண்டும் இருக்கிறது …. ! அடுத்து நம் தமிழ்நாட்டு செய்தி ; — ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » தமிழகம் // தமிழகத்துக்கு மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி வழங்ககூடாது: சு.சுவாமி திமிர் பேட்டி!! //
    Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/subramanian-swamy-opposes-central-fund-tn-241258.html …. அய்யா … இரு செய்திகளையும் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது …. ?

    • இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

      இந்த “பொர்க்கி” சாமிக்கு யாராவது சாணியால் அபிஷேகம் செய்தால்
      நான் அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் தரத்தயாராக இருக்கீறேன்.

  4. ஆவி's avatar ஆவி சொல்கிறார்:

    ஊடகங்களுக்கு இதைப்பற்றி எல்லாம் கவலை கொள்ள நேரம் கிடையாது. எவ்வளவு பணம் வருகிறது என்பதைப் பார்த்தே நிகழ்ச்சி நடத்துவார்கள். சினிமா, சாமியார்கள், மதம் பற்றி விவாதிப்பார்கள்.ஆனால் மக்கள் பிரச்சனை பற்றி எப்போதாவது நேரம் கிடைத்தால் பார்க்கலாம் என்று விட்டு விடுவார்கள்.

    விஜய்-தலை அஜித் இரசிகர்களை வைத்து நீயா-நானா நிகழ்ச்சி நடத்தி உள்ளார்கள். சமூகப் பிரச்சனைகள் முடிந்து விட்டது என்பதால் தற்போது இதைக் கையில் எடுத்துள்ளார்கள்?. ஆனால் என்ன அதிசயம் என்றால் இரு தரப்பினரும் அரங்கத்தில் கைகலப்பில் ஈடுபட்டதுதான். நிகழ்ச்சியை சிறிது நேரம் ஒத்தி வைத்து சமாதனப்படுத்தி தொடர்ந்தார்கள். அடுத்த வாரம் ஒளிபரப்பாகிறது.

    எங்கே போகிறது ஊடக சேவை? எங்கே போகிறோம் நாம்?

  5. senthil kumar's avatar senthil kumar சொல்கிறார்:

    ஜீ.வி. சர்வே பார்த்தீர்களா, தங்கள் கருத்தை தெரிவிக்கவும்…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.