” ஜெயகாந்தனுக்குப் பின் நான் தான் ” – திருவாளர் வைரமுத்துவின் latest selfie …..!!!

vairamuthu-bandha....

       ( பகட்டின், படாடோபத்தின் உச்சகட்டம்…..!!!
பல மனிதர்களின் மனோபாவத்தை அவர்கள் எடுத்துக் கொள்ளும்
புகைப்படத்தை வைத்தே சொல்லி விடலாம் …! )

 

 

தமிழ்கூறும் நல்லுலகில் ஜெயகாந்தனுக்குப் பின் அவரைப்
போன்ற சிந்தனையாளர்களோ, எழுத்தாளர்களோ யாரும்
வரவில்லையே என்கிற வருத்தம் யாருக்காவது இருந்தால் –
இனி அது மறைந்து போகட்டும்…..

ஜே.கே.வுக்கு வாரிசாக ….
அல்ல அல்ல ….
அவருக்கு இணையான –
அவர் சொல்ல மறந்த,
அவர் சொல்லாமல் விட்ட,
வாழ்க்கையின் அனுபவங்களை எல்லாம்
( அவரால் எழுதப்படாத மிச்சத்தையும்,
அவரால் வாழப்படாத வாழ்க்கையையும் )
தமிழில் வடித்துக் கொட்ட –
புதிய அவதாரம் எடுத்து புறப்பட்டிருக்கிறார் –
திருவாளர் வைரமுத்து அவர்கள்…..!!!

அவர் 60 வயதுக்கு மேல் சிறுகதை எழுத புறப்பட்டு,
10 மாதங்களில், குமுதம் வார இதழில் வடித்துக் கொட்டிய
40 சிறுகதைகளின் தொகுப்பு நாளைய தினம் வெளியிடப்படுகிறது.

கலைஞர் அவர்கள் புத்தகத்தை வெளியிட,
திருவாளர் கமல்ஹாசன் முதல் பிரதியை பெற்றுக் கொள்கிறார்.

வைரமுத்து அவர்களின் சுயதம்பட்டம் பற்றி இந்த தளத்தில்
ஏற்கெனவே சிலமுறை பேசியிருக்கிறோம்.

எத்தனை பேர், எப்படி எல்லாம் குறை சொன்னாலும் –
அவரது சுயதம்பட்டம் என்னும் selfie ஆர்வம்
குறையவேவில்லை…

இந்த இடுகையை எழுத முற்பட்டதற்கான முக்கிய காரணம் –
இந்த சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டையொட்டி,
அவர் அடித்துக் கொள்ளும் சுயதம்பட்டங்கள் தான்….

மிக அசிங்கமாக –
படிப்பவர் என்ன நினைத்துக் கொள்வார் என்கிற கூச்சம்
சிறிதுமின்றி தன்னைப் பற்றி தானே பீற்றிக் கொள்கிறார்….

இவர் தான் ” இந்திய இலக்கியத்தில் தமிழின் உச்ச” மாம்
தன்னைத்தானே தமிழின் உச்சம் என்று சொல்ல
இவருக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லையே.
( உச்சம் யார் – எச்சம் யார் என்பதை
மக்கள் சொல்ல வேண்டும்…சரித்திரம் சொல்ல வேண்டும் ..!)

புகழுக்கு ஆசைப்படுபவர்கள் பல வகைப்படுவர்.
சிலர் தன்னைத்தானே புகழ்ந்து கொள்வர்…
சிலர் பிறரை தூண்டி விட்டு, தன்னைப் புகழ வைப்பர்.

உண்மையான புகழ்ச்சிக்கு உரியவர்கள் தாங்களாக
எந்த முயற்சியையும் எடுக்க மாட்டார்கள்….
அது தானே வந்து சேரும்.

இவர் தன்னைத்தானே புகழ்ந்து கொள்வதோடு,
“புகழ்ச்சிக் கூட்டங்களை”யும்
தன் செலவிலேயே ஏற்பாடு செய்கின்ற ரகத்தவர்…..

சிறுகதைகள் குமுதம் வார இதழில் வெளிவந்தாலும் –
புத்தகத்தை அவர்கள் பிரசுரிப்பதாக இல்லை.

வைரமுத்து அவர்களின் சொந்த நிறுவனமான –
வெற்றித் தமிழர் பேரவை அமைப்பு தான்
அதற்கான விளம்பரங்களை வெளியிட்டு, விழாவையும்
நடத்துவதாகத் தெரிகிறது.

பல நாளிதழ்கள், வார இதழ்கள், போஸ்டர்கள் ஆகியவற்றின்
மூலம் வெளிவந்துள்ள விளம்பரங்களைப் பார்த்தால் –
ஒரு லட்சம் பிரதி விற்றால் வரக்கூடிய வருமானத்தை விட
இந்த விளம்பரங்களுக்கு அதிகம் செலவழிந்திருக்கும் என்று
தோன்றுகிறது.

சுயவிளம்பரத்தின் சில வாசகங்களைப் பாருங்களேன் –
( எல்லாம் இவரே எழுதியது ….என்பது தான் விசேஷம்…! )

– 40 வாரங்கள் ஒரே படைப்பாளியால் இடைவெளியின்றி
எழுதப்பட்ட கதைகள் என்ற முதல் பெருமை பெறுகிறது….!!!

( அதை வெளியிட்டது தான் 40 வாரங்களில்….
அதை எழுத இவர் எடுத்துக் கொண்டது சுமார் 40 வருடங்கள்…!!!)

– ஒரு நூற்றாண்டுத் தமிழ்ச்சிறுகதைகளில்
தனித்தடம் (…. ?) பதிக்கின்றது…..!!!

( எப்படி என்பதையும் சொன்னால் தேவலை ….!)

-வெளிவந்து கொண்டிருக்கும்போதே தன்னாட்சிக் கல்லூரிகளில்
பாடங்களாகும் பாங்கை பெற்றது ….!!!

( கல்லூரிகளின் பட்டியலையும் வெளியிட்டால் ..
எந்தெந்த “கல்வித்தந்தை”கள் வலையில் வீழ்ந்தனர்
என்பதைத் தெரிந்து கொள்ளலாம் …)

-சென்று, தேய்ந்து, இற்றுப்போன சிறுகதை வாசிப்பை
தமிழ்ச்சமுதாயத்தில் மீட்டெடுத்திருக்கிறது….

( குமுதத்தில் வெளிவந்தது என்பது சரி –
ஆனால், அதை எத்தனை பேர் வாசித்தனர் …? )

( புத்தகம் எத்தனை பிரதிகள் விற்கின்றன
என்கிற விவரங்களை சிறிது காலம் கழித்தேனும்
வெளியிட்டால் – தெரிந்து கொள்ளலாம்..)

இந்த சிறுகதைகள் குமுதத்தில் வாராவாரம்
வெளிவந்துகொண்டிருந்தபோது –

– மறைந்த திரு.ஜெயகாந்தன்
அவர்களின் பெயரை பயன்படுத்தி, இவர்கள் செய்த
விளம்பர ஏமாற்று வித்தையைப்பற்றி முன்பு இந்த தளத்தில்
வெளிவந்த இடுகையில் ( விமரிசனம் இடுகை –
தேதி – ஏப்ரல் 23, 2015 ) விவரமாக பேசப்பட்டது நண்பர்களுக்கு
நினைவிருக்கலாம்.

jk1
(படுத்த படுக்கையாக செயலற்றுக் கிடக்கும் ஒருவரின்
கையில் புத்தகமொன்றைத் திணித்து, அதனை தன்
சான்றிதழுக்காக புகைப்படமும் எடுத்த கொடுமை …)

இந்த செய்தியை உறுதிப்படுத்தி, ஜெயகாந்தன் அவர்களின்
மகள் தீபலக்ஷ்மி அவர்கள் கூறியவை கீழே –

—————

” சில நேரங்களில் மௌனம் குற்றமாகிவிடும் என்பதாலேயே
இதை எழுத நேரிடுகிறது:
இந்த வாரக் குமுதத்தில் கவிஞர் வைரமுத்து அவர்களின்
சிறுகதைகளைப் பாராட்டி எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதியதாக
ஒரு கடிதத்தைப் பிரசுரித்து, அவரது கடைசி எழுத்து
என ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்.

அப்பா கடந்த பல மாதங்களாகவே எதையும் படிக்கவோ
எழுதவோ இயலாத நிலையில் தான் இருந்து வந்தார்
என்பது அவரை வந்து பார்த்த எல்லாருக்கும் தெரியும்.

அன்புடன் வாஞ்சையாக யார் வந்து பேசினாலும் குழந்தை
போல் கையைப்பிடித்துக் கொண்டு பேசும், அவர்கள் எது
சொன்னாலும் மறுத்துப் பேசவோ, கருத்து தெரிவிக்கவோ கூட
இயலாத நிலையில் இருந்தார் என்பதை வலியுடன் இங்கு
வெளிப்படுத்த நேர்வதற்கு வருந்துகிறேன்.

ஒரு வாழ்த்தை அவரே எழுதியது போல் எழுதி வந்து,
வாசித்துக்காட்டி, அதில் கையெழுத்திடுமாறு கேட்டு,
கையெழுத்து கூடச் சரியாகப் போடவராத நிலையில் ……

அப்படி இருக்க, அவர் அந்தக் கதைகளைத் தொடர்ந்து
படித்தார் என்பதும், அவரே கைப்பட வாழ்த்து எழுதி
அனுப்பினார் என்பதும், அந்த வாழ்த்துக் கடிதத்தை
அவரது கடைசி எழுத்து என்று ஆவணப்படுத்தலாம் என்பதும்
அவரையும் அவர் எழுத்தையும் உயிராய் நேசிக்கும்
எவருக்கும் நியாயமாகாது. “

——————-

தான் எத்தனை ஒப்பனை போட்டுக்கொண்டாலும்,
எவ்வளவு நாடகங்களை அரங்கேற்றினாலும்,
தனது உண்மை வடிவத்தை மக்கள் புரிந்து கொண்டு தான்
இருக்கிறார்கள் – என்பதை திரு.வைரமுத்து அவர்கள்
புரிந்து கொண்டு இனியாவது இத்தகைய அசிங்கங்களை
தவிர்ப்பது நல்லது…..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

23 Responses to ” ஜெயகாந்தனுக்குப் பின் நான் தான் ” – திருவாளர் வைரமுத்துவின் latest selfie …..!!!

  1. thiruvengadam's avatar thiruvengadam சொல்கிறார்:

    தன் சுயதம்பட்டத்தால் அவர் திறமைக்குரிய மதீப்பீட்டைக்கூட நடுநிலையாளர்கள் பார்வையில் இழக்கிறார்.

  2. ssk's avatar ssk சொல்கிறார்:

    எவ்வளவு காழ்புணர்ச்சி கொண்டு எழுதினாலும், கவிபேரரசு மிகுந்த திறமை உடையவர். முதலில் மனிதனாக இருக்க தெரிந்தவர். இவரின் திறமைகள் கொண்டு பொருமுகிறவர் தராளமாக செய்யலாம். அவரின் திறமைகள் மேலும் மெருகேறும்.
    பார்பனியத்தை புகழும் வேலை செய்யாததால் இத்தகைய அம்புகள் வருவது இயற்கையே.

    • today.and.me's avatar today.and.me சொல்கிறார்:

      நண்ப ssk

      உங்களுக்கு நான்கு கேள்விகள்..

      மிகுந்த திறமை உடையவர் எதைவைத்து சொல்லுகிறீர்கள்?

      மனிதனாக இருக்கத் தெரிந்தவர் என்று எதைவைத்து சொல்லுகிறீர்கள்?

      இவரின் திறமைகளை கண்டு பொரும வேண்டிய அவசியம் என்ன வந்தது பதிவருக்கு ? காமை என்ன பாடல்கள் எழுதுகிறவரா? அப்படிப்பட்ட அவசியம் இப்போது யாருக்கு இருக்கிறது?

      பார்ப்பனீயத்தை வைய்யிறமுத்து செய்யவே இல்லை என்று தங்களால் உறுதிபட சொல்லமுடியுமா?

      பதில் சொல்லமுடிந்தால் சொல்லலாம்… அல்லது வைரமுத்துக்கு ஜால்ரா அடிக்கும் வேலையை நீங்கள் இன்னும் நன்றாக செய்யலாம்….

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்ப ssk,

      ” திறமைகள் கண்டு பொருமுகிறவர் என்று சொல்கிறீர்களே –
      நான் என்ன சினிமாத்துறையில் இருக்கிறேனா, பாட்டு எழுதுகிறேனா,
      கதை எழுதுகிறேனா – திருவாளர் வைரமுத்துவுக்கு அவரது
      எந்த துறையிலாவது போட்டியாளரா….? நான் ஏன் பொரும வேண்டும்…?

      இடுகையில் நான் சொன்ன முக்கியமான விஷயங்கள் –
      “தற்பெருமை” ” சுயநலம் ” –

      தன் திறமையில் நம்பிக்கை இருப்பவர் ஏன்
      உணர்வற்று படுக்கையில் கிடைப்பவர் கையில் புத்தகத்தை
      வைத்து புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் …?
      அவர் கொடுத்ததாக ஒரு சான்றை இவரே தயாரித்து அதை
      பத்திரிகையிலும் போட வேண்டும் …?

      திரு.ஜெயகாந்தனின் மகள் எழுதியிருப்பதை இடுகையில்
      பார்த்தீர்கள் அல்லவா …? அதற்கு உங்கள் பதில் என்ன ..?
      அதற்கு ஏன் நீங்கள் ஒரு விளக்கமும் அளிக்கவில்லை …?

      எல்லாவற்றையும் விட்டு விட்டு ஜாதியை இழுக்கிறீர்கள்….
      இவர் என்ன தாழ்த்தப்பட்டவரா ? பிற்படுத்தப்பட்டவரா ?
      இவர் விஷயத்திலும் கூட ஜாதியை இழுக்க வெட்கமாக இல்லை
      உங்களுக்கு …?

      ஜாதியை விட்டால் வேறு ஒன்றும்
      ஆதரவான விஷயம் எதுவும் கிடைக்கவில்லையா உங்களுக்கு….?

      மனிதனாக இருக்க தெரிந்தவர் என்கிறீர்களே ….

      35 -40 ஆண்டுகளாக திரைப்படப்பாடல்களை எழுதி
      கோடிகளில் சம்பாதித்தாரே ….
      அவர் செல்வச்செழிப்பு உங்களுக்கு தெரியாதா …?

      சக மனிதனுக்காக என்ன செய்திருக்கிறார்
      சொல்லுங்களேன் – பார்ப்போம். ….
      ( அவரது புகைப்படமும், அதன் பின்னணியும் போதுமே –
      அவர் மனிதனாக இருக்கத் தெரிந்தவர் என்பதை உணர… )

      ஏழைகளுக்கான ஒரு பள்ளிக்கூடம்….
      இலவச சிகிச்சை அளிக்கும் ஒரு மருத்துவ விடுதி ….
      அனாதைச் சிறுவர்களுக்காக எதாவது …..
      பாதுகாப்பற்ற பெண்களுக்காக ஒரு விடுதி….
      வசதியற்ற முதியோர்களுக்காக எதாவது உதவி…. ??????

      ஒரே ஒரு திருமண மண்டபம் கட்டி.
      அதிலும் காசு பார்க்கிறார்…..!!!

      எவ்வளவு திறமைசாலியாக இருந்தால் தானென்ன …?
      வாழ்நாள் முழுவதும் தனக்காகவும், தன் பெண்டு
      பிள்ளைகளுக்காகவும்
      மட்டும் வாழும் ஒரு மனிதனுக்கு
      பாராட்டென்ன வேண்டிக்கிடக்கிறது …?

      இந்த மனிதர் மீது உங்களுக்குள்ள பற்றுதலை
      ஒதுக்கி வைத்து விட்டு, நான் சொல்லும் விஷயங்களைப்பற்றி
      கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்… உங்களுக்கே புரியும்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  3. T.N.MURALIDHARAN's avatar T.N.MURALIDHARAN சொல்கிறார்:

    வைரமுத்துவுக்கு தற்பெருமை கொஞ்சம் அதிகம் என்றாலும் திறமை உள்ளவர் என்பதில் ஐயமில்லை. அந்த சிறுகதைகளில் பல நன்றாகவே இருந்தன.

    • today.and.me's avatar today.and.me சொல்கிறார்:

      //கொஞ்சம் அதிகம் என்றாலும்//

      கொஞ்சமா?
      அதிகமா?

      விளக்குங்கள் ப்ளீஸ்… 🙂 😀

      // திறமை உள்ளவர்//
      திறமை இல்லாதவர் என்று காமை சொன்னதாகத் தெரியவில்லையே.

      😦

    • Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

      நண்ப! உங்கள் கருத்தை சற்றே மாற்றினால் சரியாகிவிடும்.. அதாவது..
      //வைரமுத்துவுக்கு தற்பெருமை மிகவும் அதிகம் என்றாலும் திறமை சற்று உள்ளவர் என்பதில் ஐயமில்லை. அந்த சிறுகதைகளில் சில சுமாராகவே இருந்தன.//

      • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

        கண்பத்,

        அந்த 40 சிறுகதைகளையும் முழுவதுமாகப் படித்தவர்
        திருவாளர் வைரமுத்துவையும், குமுதம் ஆசிரியரையும் தவிர
        வேறு யாரும் இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

        நான் இடைவெளி விட்டு, விட்டு – சில சிறுகதைகளைப் படித்தேன்.
        அவரது தமிழ் நடை ஒரே மாதிரி இருக்கிறது.. கற்பனை வறட்சி….
        கொஞ்சம் படித்த பிறகு அந்த ஸ்டைல் அலுக்கிறது.
        இயற்கையாக இல்லை….
        எழுதியே தீருவது என்னும் கட்டாயத்தில் எழுதியதால் இருக்கலாம்…

        இது என் மதிப்பீடு …. மற்றவர்கள் மாறுபடக்கூடும்…

        ஜெ.கே.யுடன் இவர் தன்னைத்தானே ஒப்பீடு செய்து கொள்வது –
        அக்கிரமம்….

        -வாழ்த்துக்களுடன்,
        காவிரிமைந்தன்

  4. Sundar's avatar Sundar சொல்கிறார்:

    One more Cinema Character….. don’t expect any moral thing from them……Kalai koothadigal….. thats their nature behaviour…. be cool readers……just pass away with a smile…….This comments to Mr/Mrs. SSK/Muralidharan….. Please read more then you understand Mr.KM’s feelings……

    My Hats off to Mr. KM.

  5. chandraa's avatar chandraa சொல்கிறார்:

    the recent short stories by thiru vairamuthu in kumudam are really very standard apart froman outstanding poet and a powerrful speaker vairamuthus contribution in short story writing is amazing….jeyakanthanhad that egoso vairamuthu has… ..believe me he will turn into another kannadadsan…and produce INNUMERABLE ARTHAMULLA HINDHU MATHAM…

  6. Drkgp's avatar Drkgp சொல்கிறார்:

    Humility is the hallmark of great human beings.
    நமது புலவரிடம் அது எள்முனையளவுகூட காண இயலவில்லை என்பது வருந்தத்தக்கது.
    தமிழ் சொல்ஆளுமை மிக்கவர் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.
    திரைபாடல்களில் இந்த ஆளுமையை விரசத்திற்காகவே செலவிட்டார் என்பதிலும் கருத்தொற்றுமை உண்டு.

  7. srinivasanmurugesan's avatar srinivasanmurugesan சொல்கிறார்:

    அய்யா இதனால் திரு.வைரமுத்து அடையப்போவது என்ன?ஏனிந்த ஆர்பாட்டம்

    • Sidarth abhimanyu's avatar Sidarth abhimanyu சொல்கிறார்:

      வைரமுத்து அவர்களின் சிறுகதை தொகுப்பு பற்றி
      என்.சொக்கன் அவர்கள் கூறுகிறார் –
      ( https://www.facebook.com/nchokkan?fref=ts )

      அத்தொகுப்பு நூலைத் தமிழ்ப் படைப்பிலக்கிய உச்சம்
      என்ற ரேஞ்சுக்கு விளம்பரப்படுத்துவதுதான் கொஞ்சம்
      திகைப்பாகவும் அருவருப்பாகவும்கூட இருக்கிறது,
      ஆனால், நிச்சயம் ஆச்சர்யமாக இல்லை

  8. gopalasamy's avatar gopalasamy சொல்கிறார்:

    40 கதைகளில் இதுவரை இல்லாத அளவுக்கு என்ன சிறப்பு? என்ன புதுமை? தங்க நாணயங்கள் மாதிரி சொற்களை அளித்து இருக்கிறாராம். கொட்டி கிடக்கிறது போல உள்ளது. 58 வருடமாக சிறுகதைகள் படித்து வருகிறேன். எனக்கு ஒன்றும் தெரியவில்லை. jeyamohanin aram சிறுகதை தொகுப்பை ஒருமோரை படிக்குமாறு கே. எம்ஜி அவர்களை கேட்டு கொள்கிறேன்

  9. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    தமிழின் உச்ச எழுத
    தமிழின் எச்ச வெளியிட
    தமிழின் சொச்ச பெற்றுக்கொள்ள
    ம்…ம்…ம்… நடத்துங்க நடத்துங்க!
    பணம் பத்தும் செய்யும்

  10. prakash's avatar prakash சொல்கிறார்:

    அன்புள்ள காவிரிமைந்தன்ஜி அவர்களுக்கு வணக்கம்!.

    நீங்கள் ஒரு பதிவில் இலவச தியானவகுப்பு சென்னையில் எங்கு நடக்கிறது என்று கேட்டு இருந்தீர்கள். வரும் ஞாயிற்றுகிழமை (நாளை) 11-10-2015 சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சாமியார் மடத்தில் முதல்நிலை தியானவகுப்பு நடைபெறுகிறது. இது முழுக்க சுவாசம் சம்பந்தபட்ட தியானவகுப்பாகும். உடம்பில் உள்ள ஏழு சக்கரங்களையும் நாம்சுவாசத்தின் மூலம் தூண்டும் ஒருபயிற்சியாகும். இது மொத்தம் பத்துநிலைகளை(levels) கொண்ட தியானவகுப்பாகும். ஒவ்வொரு நிலையாக 48 நாட்களுக்கு ஒருமுறை சொல்லிகொடுக்கபடுகிறது. பத்து நிலைகளுமே இங்கு இலவசமாகவே சொல்லி கொடுக்க படுகிறது. நன்கொடை அவரவர் விருப்பத்திற்கு உட்பட்டது. நாளை வகுப்பு செல்ல இயலாவிட்டாலும் அடுத்த 48 நாட்கள் கழித்து முதல் நிலை வகுப்பு திரும்ப எடுப்பார்கள்.

    முன்பதிவு செய்ய

    OM KARA SWAMIKAL MUTT GNANOTHAYA AALAYAM
    (SAMIYAR MATAM)
    4TH STREET,
    DR. SUBBARAYAN NAGAR,
    KODAMBAKKAM,
    CHENNAI – 24.
    PHONE
    S. UMASEKAR : 99404 87687
    S.NALINI : 97102 43332
    http://www.shreechakrayoga.org/

    தகவல்கள் மற்றும் வகுப்பு கால அட்டவணைகள் குறித்த முழு விபரங்களும் http://www.shreechakrayoga.org என்ற வலை தளத்தில் உள்ளது. என்னுடைய பெயர் பிரகாஷ். மொபைல் எண் : 9600392300.

    நன்றி
    R. பிரகாஷ்

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் பிரகாஷ்,

      நீங்கள் கொடுத்திருக்கும் தகவல்களுக்கு மிகவும் நன்றி.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  11. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    இறுதியாக சொல்கிறேன்..JK கானமயில் வைரமுத்து வான்கோழி

  12. நெல்லைத் தமிழன்'s avatar நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    நான் எதிர்பார்த்தேன்…யாராவது கவுண்டமணி, செந்தில் காணொளியைக் கொடுப்பார்கள் என்று…. யாராலும் மறக்க முடியாது.

    “எல்லாம் ஒரு விளம்பரம்தான்….
    நமக்கு ஏண்டா விளம்பரம்….”

    நம்ம நாட்டில், விளம்பரப்படுத்துபவர்களின் சரக்குதான் விற்பனையாகிறது. எத்தனையோ ‘நிஜ கலைஞர்கள் அரசு பாராட்டுக்களான, ‘பத்ம’ விருதுகள் பெறாமலேயே மறைந்தனர். வைரமுத்துக்கு எத்தனை பத்ம விருதுகள் என்று எண்ணவேண்டியதுதான். அதற்காக வைரமுத்துவுக்குத் திறமை இல்லை என்று கிடையாது. சில நாவல்களிலும், பாடல்களிலும் அவரின் திறமை பளிச்சிடும். ஆனால், ஓவர் பில்டப், எல்லோருக்கும் எரிச்சலைத் தரும். இந்தப் பேரவையே அவரின் பினாமிதான். “வரி”க்குப் பதில், பணம் இதில் செல்கிறது. “பல் இருக்கு… பக்கோடா திங்கறான்”.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.