டி.ராஜேந்தருக்கு அவருடைய “குரு” வுடன் நிகழ்ந்த மறக்க முடியாத அனுபவங்கள்….

rajender and k.k.

தமிழகத்தில் நாம் பார்க்கும் அரசியல்வாதிகளிலேயே (!!- ??) மிகவும் அப்பாவியான மனிதர் டி.ராஜேந்தராகத்தான்
இருக்க முடியும் என்று நினைக்கிறேன்…..

அண்மையில் அவர், தனக்கு, தன் “குரு”வான
கலைஞர் கருணாநிதி மூலம் ஏற்பட்ட சில அற்புதமான
அனுபவங்களைப் பற்றி
விரிவாகச் சொல்லி இருப்பதைப் பார்த்தேன்.
நண்பர்களின் பார்வைக்கு கீழே தந்திருக்கிறேன் –

( இதைவிட அப்பாவி அரசியல்வாதி ( ! ) யாராவது உங்களுக்கு தெரிந்திருந்தால், அவர்களைப் பற்றி
பின்னூட்டத்தில் தெரிவியுங்களேன்…!!!! )

tr-1

tr-2

tr-3

tr-4

tr-5

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

26 Responses to டி.ராஜேந்தருக்கு அவருடைய “குரு” வுடன் நிகழ்ந்த மறக்க முடியாத அனுபவங்கள்….

  1. ஜோதிஜி திருப்பூர்'s avatar ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

    கலைஞரைக்குறித்து நீங்கள் சுட்டிக் காட்டிக் கொண்டேயிருப்பதால் இங்கே ஒன்றும் மாறிப் போய்விடப் போவதில்லை. அவரும் மாற மாட்டார். இன்று வரையிலும் அவர் ஆசிர்வாதம் என்ற பெயரில் பணம் கொடுப்பதே பத்து ரூபாய் தான். வெளியே டீ பத்து ரூபாய் என்பது அவருக்கும் தெரிந்தது தான். அவர் வளர்ந்த விதம், வாழ்ந்த சூழ்நிலை என்று பார்த்தால் இது பெரிய ஆச்சரியம் இல்லை. நீங்கள் கொடுத்துள்ள டிஆர் பேட்டியை விகடனில் படித்த போது இது போன்ற பல சம்பவங்கள் என் மனதில் வந்து போனது. போகட்டும்.

    தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனையாக உள்ள மோடி அரசின் நில கையகப்படுத்தும் திட்டத்திற்கு மற்ற அத்தனை கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த போதிலும் முன்னால் முதல்வர் (தற்போதைய (?)மக்களின் முதல்வர்)குறித்தும், அவர் ஏன் இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தார்? என்ன காரணம் போன்றவற்றை உங்கள் பாணியில் எழுதலாமே?

    செய்ய வேண்டிய காரியங்களை தகுந்த சமயத்தில் செய்யாமல் இருப்பதும், அதனைப் பற்றி எழுதாமல்இருப்பதும் மிகப் பெரிய பாவமே?

    • today.and.me's avatar today.and.me சொல்கிறார்:

      நண்பர் ஜோதிஜி,
      தங்கள் பின்னூட்டத்தின் இரண்டாவது பத்தி குறித்தவிவரங்களைத் தங்கள் பாணியில் ‘தேவியர் இல்லத்தில்’ தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

      ஏனென்றால்,
      செய்ய வேண்டிய காரியங்களை தகுந்த சமயத்தில் செய்யாமல் இருப்பதும், அதனைப் பற்றி எழுதாமல்இருப்பதும் மிகப் பெரிய பாவமே..

    • Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

      ஜோதிஜி கூவம் சாக்கடை என்றால் பக்கிங்காம் கால்வாய் கங்கை என பொருளில்லை அதே போல பக்கிங்காம் சாக்கடை என்றால் கூவம் கங்கை என பொருளில்லை.போதுமா?

    • ராம்'s avatar ராம் சொல்கிறார்:

      உணர்ச்சிவசப்பட்டு, படிக்கின்றவரையும் உணர்ச்சி வசப்படுத்துறீங்க. தவறான நேரத்தில்/இடுகையில் கேட்க படும் கேள்வியும் தவறாகிவிடும் என்பது, இன்று எங்களைப் போன்றோர் அறிந்த உண்மை. தனிப்பட்ட முறையில் விருப்பமாக தெரிவித்து இருக்காலாம் என்று தோன்றுகிறது திரு. ஜோதிஜி.

      //இதைவிட அப்பாவி அரசியல்வாதி ( ! ) ……
      ஒரே கொள்கையில் நிலையில்லாமல், மாறிக் கொண்டே இருப்பவர்கள் அனைவரையும், காலம் அப்பாவிகளாகத் தான் காட்டிக் கொண்டிருக்கிறது. அதனால் தான் அவர்கள் தங்களின் வலைத்தளத்தில் (என்றாவது ஒரு நாள்) வலம் வருபவர்களாகவும் இருக்கின்றனர். நேரடி தாக்குதல் முறையில்லை என்பதால் சுற்றி…. சுற்றி…. வருகிறேன்.

      • ராம்'s avatar ராம் சொல்கிறார்:

        இடுகையில் என்று சொல்ல வந்ததை வலைதளத்தில் என்று சொல்லி விட்டேன். திருத்த வேண்டிய பிழை.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      ஜோதிஜி,

      திரும்ப திரும்ப கலைஞரை குறை கூறாதீர்கள் –
      “மக்கள் முதல்வர்” பற்றி எழுதுங்கள் என்கிறீர்கள்….
      உங்கள் ஆசை புரிகிறது.

      ஆனால் – நான் கலைஞரைப் பற்றி இந்த தளத்தில் எழுதியே
      நீண்ட நாட்களாகி விட்டன என்கிறபோது நீங்கள் எப்படி –

      ” கலைஞரைக்குறித்து நீங்கள் சுட்டிக் காட்டிக்
      கொண்ண்ண்ண்ண்ண்ண்டேயிருப்பதால்…” ???

      – என்று கூறுகிறீர்கள்…?

      சரி – அது கிடக்கிறது விடுங்கள்…..!!
      ——————-

      நான் வெளிப்படையாகவே சொல்கிறேனே –

      உங்களுடைய பார்வை, priority வேறு.
      என்னுடைய priority -வேறு.
      அதில் “இப்போதைக்கு” மக்களின் முதல்வர் இல்லை…!

      அதற்காக நண்பர் today.and.me சொல்வது போல் –
      “தேவியர் இல்லத்தில்” நீங்களே எழுதலாமே
      என்று கூற மாட்டேன். அங்கு என்ன எழுதுவது
      என்பது உங்கள் விருப்பம் / உங்கள் priority …யை
      பொறுத்தது….

      ——————-

      மோடி அரசின் நிலம் கையகப்படுத்துதல் சட்ட மசோதா
      குறித்து எழுதலாம் தான் – ஆனால், நிலவரம்
      ஒரே குழப்பமாக இருக்கிறது. ஏகப்பட்ட திருத்தங்கள் –
      கொண்டு வரப்பட்டிருக்கின்றன. ஒரே குளறுபடி..
      சட்ட வடிவம் இப்போது எந்த நிலையில் இருக்கிறது
      என்றே புரிய மாட்டேனென்கிறது.
      மசோதாவே கைவிடப்படும் நிலையில் இருக்கிறது…
      விஷயம் கொஞ்சம் தெளிவாகட்டுமே….

      ——————–

      உங்களிடம்
      இன்னுமொரு விஷயம்
      சொல்ல விரும்புகிறேன்….

      தமிழ்நாட்டின் தலைவிதியோ,
      தமிழர்களின் தலைவிதியோ
      தெரியவில்லை …..

      குடும்பத்தில் ஒவ்வொருவரும் கோடிக்கணக்கில்
      பணம் சேர்த்து விட்டார்கள்….

      தள்ளாத 92 வயதிலும் மீண்டும் முதலமைச்சர் பதவி
      கிடைக்குமா என்று காத்திருக்கிறார் ஒரு பெரியவர்.

      தொழில் பின்னணி எதுவுமே
      இல்லாத 80 வயது அம்மையார் ஒரு
      தொலைக்காட்சியில் 60 % பங்கு வைத்திருக்கிறார்.

      அவர் மீது இந்த வயதில் ஒரு சிபிஐ வழக்கு….
      அதில் தமக்கு எந்தவித சம்பந்தமும் இல்லாதது போல்
      தோற்றம் அளிக்கின்றனர் அவரது கணவரும், மகனும்…
      .

      வீடியோ கடை வைத்திருந்த ஒரு மகன்
      30 கோடி ரூபாய் சொத்து காட்டி இருக்கிறார்.
      அவர் மகன் 28 வயதிலேயே கோடிக்கணக்கில் பணம் போட்டு –
      சினிமா எடுக்கிறார்… கல்லூரி துவங்குகிறார்.

      நினைவு தெரிந்த நாளிலிருந்தே – அரசியலைத்தவிர
      வேறெந்த தொழிலும் செய்யாத ஒரு மகன்
      22 கோடிக்கணக்கில் சொத்துக் கணக்கு காட்டுகிறார்.

      அவர் மகனும் 25 வயதிலேயே கோடிக்கணக்கில்
      பணம் போட்டு படங்கள் எடுக்கிறார்.
      இன்னொரு மகளோ 17 கோடி சொத்து காட்டுகிறார்.
      பேரன்களோ – கேட்கவே வேண்டாம் …
      மாநிலத்திற்கு மாநிலம் பல தொலைக்காட்சி சேனல்கள்
      வைத்திருக்கிறார்கள்…..

      அதெப்படி ஒரு குடும்பத்தில் அத்தனை பேரும்
      இப்படி பிரம்மாண்ட கோடீஸ்வரர்கள் ஆனார்கள் என்று
      கேட்பதற்கு பதிலாக –

      மீண்டும் – இவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் –
      வந்தால் தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும்
      நல்லது செய்வார்கள் என்று சிலர் நம்புகிறார்கள்….

      இவர்களைப் பற்றி –
      நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ஜோதிஜி…?

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • today.and.me's avatar today.and.me சொல்கிறார்:

        KMji
        I request you to remove Thenali’s comment, which is in bad taste, though saying to Jothiji. Vimarisanam should not entertain these type of color/caste/creed replies.

        This is my humble opinion. any friends feeling the same ?

        • thenali's avatar thenali சொல்கிறார்:

          நமக்கு நகைச்சுவை உணர்ச்சி ரொம்பக் கம்மி. அதிலும் தொட்டாச்சிணுங்கி வேற!!!! Russell peters ஷோ பாத்தது இல்லையா? அதில் வெவ்வேற இனத்தவரை எப்படியெல்லா கழுவிக்கழுவி ஊத்துகிறார்.

          ஆனா இங்க சின்னதாக் காமடிக்காக எழுதினால் பேடு டேஸ்டாம்… கொடுமைடா சாமி… பொறுமை வளர்த்துக்குங்கப்பா! அதைவிட்டுபுட்டு கருத்துரிமைக்கு மதிப்பு கொடுக்குற காவிரி மைந்தன் சாரையும் கெடுத்துறாதீங்கப்பு!

          • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

            மன்னிக்கவும் நண்பர் தெனாலி,

            நீங்கள் தாராளமாக உங்கள் கருத்தைச் சொல்லி
            இங்கே விவாதிக்கலாம்.
            ஆனால் – பயன்படுத்தும் வார்த்தைகள் –
            அவசியம் நாகரிகமாக இருக்க வேண்டும்.

            ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

            -வாழ்த்துக்களுடன்,
            காவிரிமைந்தன்

        • today.and.me's avatar today.and.me சொல்கிறார்:

          நண்ப தெனாலி,
          ஒத்துக்கொள்கிறேன். russell peters ஷோ நான் பார்த்ததில்லைதான்.
          ஆனால் குறளைப் படித்திருக்கிறேன்.

          இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
          கைகொல்லும் காழ்த்த இடத்து

          முள் மரத்தை இளையதாக இருக்கும் போதே வெட்ட வேண்டும், காழ்ப்பு ஏறி முதிர்ந்த போது வெட்டுகின்றவரின் கையை அது வருத்தும்.

          • thenali's avatar thenali சொல்கிறார்:

            @today.and.me
            நீங்க தமிழக அரசியல்வாதியாக முழு தகுதி பெற்றவர். பதவிக்கு வரும் முன்னாடி வெட்டுவங்கறீர். பதவிக்கு வந்ததும் அம்மா பாணியில் கஞ்சா கேசு போடுவீர் போல. அதுக்கும் ஏதாவது திருக்குறள் வைத்திருக்கிறீரா? மற்றபடி எனக்கு எந்த குறிப்பிட்ட சாதியையும் இழிவு படுத்தும் நோக்கமெல்லாமில்லை.

            @காவிரிமைந்தன்
            நானென்றும் தவறாக வார்த்தைகள் பயன்படுத்தியதாக தெரியவில்லை. ‘அபிஸ்டு’ என்றது சரியான வார்த்தையாக அல்லாமல் இருக்கலாம். நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு ஜோதிஜி ஐயா கண்டுக்க மாட்டார் என எழுதிவிட்டேன். அது அவரை புண்படுத்தியிருப்பின் மன்னிக்க வேண்டுவதில் எவ்வித தயக்கமுமில்லை.

      • ஜோதிஜி திருப்பூர்'s avatar ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

        தற்போதைய அரசியல் ஊழல் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதே என்கிற ரீதியில் தான் மக்களின் பார்வையும் இருக்கின்றது. இங்கு யார் தான் யோக்கியர் என்றே பொதுஜனமும் பேசத் துவங்கி விட்டது என்பதை நீங்கள் அறிந்தவர் தானே? உங்கள் ஆதங்கம் புரிகின்றது. அரசியல்வாதிகளின் ஊழல்களைப் பற்றி பேச விரும்பும் வாக்காளர்கள் தங்களுக்கு அவர்கள் ஓட்டுக்காக பணம் கொடுக்க வரும் போது காறித் துப்ப வேண்டாமா? எவரும் அப்படிச் செய்வதில்லையே? எங்கள் பகுதிக்கு ஏன் இன்னமும் வந்து கொடுக்கவில்லை என்ற உரிமைப் போராட்டம் தான் செய்கின்றார்கள். இன்னும் சிலரோ அங்கே அதிகமாக கொடுத்து விட்டு இங்கே ஏன் குறைவாக கொடுக்கின்றாய்? என்று சண்டைக்கு வேறு போகின்றார்கள்?

        நீங்கள் குறிப்பிட்டுள்ள விசயத்தை மக்கள் இதே நோக்கத்தில் பார்ப்பார்கள்? கேட்க வேண்டியவர்களிடம் தார்மீக உரிமையும் இல்லை. கொடுப்பவர்கள் பதவிக்கு வந்த பிறகு செய்ய வேண்டிய கடமை குறித்து மறந்து விட வேண்டிய தொடக்கப் புள்ளியும் இங்கேயிருந்து தான் தொடங்குகின்றது.

        நீங்க சொன்ன மாதிரி நில கையகப்படுத்தும் திட்டத்தின் முழு வடிவமும் இன்னமும் எனக்குத் தெளிவாக தெரியவில்லை. அதனால் தான் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.

        கடைசியாக மக்கள் முதல்வர் ஒரு வகையில் பெரிய அதிர்ஷ்டக்காரர் தான். கேள்வி கேட்கும் நிலையில் இருக்கும் அத்தனை பேர்களும் கேள்வியே கேட்க முடியாத நிலையில் இருப்பதால்?

        • ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

          //கேள்வி கேட்கும் நிலையில் இருக்கும் அத்தனை பேர்களும் கேள்வியே கேட்க முடியாத நிலையில் இருப்பதால்?//

          சூப்பர்ஜி.. சூப்பர்ஜி…

      • Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

        ஒரு வேளை நிறைய அடித்தவர்கள் தான் நிறைய கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையோ என்னவோ! உங்கள் விவரிப்பே பல கோடி பெறும்.ஒன்று பார்த்தீர்களா? கேடி க்கு கால் சேர்த்தால் கோடி.

  2. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    இத்தனை சொல்லும் டிஆர் மீண்டும் ஏன் தி.மு.க வில் சேர்ந்தாராம்?Lets us not waste time on such personalities

    • today.and.me's avatar today.and.me சொல்கிறார்:

      //இத்தனை சொல்லும் டிஆர் மீண்டும் ஏன் தி.மு.க வில் சேர்ந்தாராம்?//

      கண்பத் ஜி,
      இதே கேள்வியை முன்னர் ஒருமுறை ஒருதொலைக்காட்சிப் பேட்டியின்போது பேட்டியாளர் கேட்டதற்கு, “தமிழைப்பார்த்து ஏமாந்துவிட்டேன் ஐயா” என்று டிஆரும் வேதனையோடு சிரித்துக்கொண்டே பதில்கூறினார். எந்த சேனல் என்று மறந்துபோய்விட்டது. நினைவில் வந்ததும், தேடிப்பிடித்து linkஐக் கொடுக்கிறேன்.

      //Lets us not waste time on such personalities//
      I think KMji has put this post not to understand the personolity of TR, but MK.
      🙂 🙂

      • Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

        கருணாவின் கதையைத்தான் கர்ப்பத்தில் உள்ள சிசுவும் அறியுமே! பாவம் சிபிஐ நீதிபதிகள் தவிர! 😉

        • thenali's avatar thenali சொல்கிறார்:

          கணபத் சாரு சொன்ன ‘கருணாவின் கதை’ யைத்தான் ஜோதிஜி ஐயாவும் வேற வார்த்தைகளை போட்டு சொல்லியிருக்கிறார். ஆனால் அவரைப் போட்டு இந்தக் கும்மு கும்முகிறார்கள்

          • today.and.me's avatar today.and.me சொல்கிறார்:

            நண்ப தெனாலி,
            அந்த ‘வார்த்தைகள்’ தான் விசயமே.
            வேகத்தில் வரும் வார்த்தைகளை விட, விவேகமாக வரும் வார்த்தைகளே வெல்லும்.

  3. nparamasivam1951's avatar nparamasivam1951 சொல்கிறார்:

    மாயவரம் பகுதியில் இருந்து எம்.ஏ படித்த, ஒரு சாதாரண இளைஞன், தன்னை மட்டுமே நம்பி சென்னை வந்து உயர முடியும் என்பதற்கு டி.ராஜேந்திரன் ஒரு உதாரணம். திறமை இருந்தால் மிகப் பெரிய அளவில் உயர முடியும் என்பதற்கும் ஒரு உதாரணம். அதே சமயம், தன்னடக்கம் இன்றி, எடுத்து எறிந்து பேசியும், கலைஞர்ஐ நம்பியும் இருந்தால் எந்த அளவுக்கு கீழே தள்ளப்படுவும் கூடும் என்பதற்கும் திரு டி.ஆர் உதாரணம். ஆம்! அவர் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர். வெள்ளி விழா படங்கள் கொடுத்து கோடிக் கணக்கில் பணம் சேர்த்த அவர், அரசியல் ஆசை இன்றி ஒதுங்கி வாழ ஆரம்பித்து இருந்தால் இன்னும் மூன்று நான்கு தலைமுறை பேரன் பேத்திகள் அவர் பெயர் சொல்லி நன்கு வாழ்ந்து இருக்க முடியும். ம் ஆசை யாரை விட்டது ?

  4. ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

    //அவர் ஏன் இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தார்? என்ன காரணம் போன்றவற்றை உங்கள் பாணியில் எழுதலாமே?//

    இன்றில்லாவிட்டாலும் நாளையாவது மாறும் ஜோதிஜி.

  5. srinivasanmurugesan's avatar srinivasanmurugesan சொல்கிறார்:

    இது தான் மு.க. அவர்களின் இயல்பு. தனது மற்றும் தனது குடும்ப நலனுக்காக எதையும் செய்ய தயங்காதவர்.

  6. yogeswaran's avatar yogeswaran சொல்கிறார்:

    Dear Sir,

    This is the political puppet show.

    strings are behind the scenes.

    all tamil naadu politicians are tied in some case.

    so they will have to dance to the music.

    hope and ask god for help.

    when you read their contradictions over lankan tamils.

    really ,,,,,

    we go mad.

    rgs

    yogi

  7. ஆர்.பழனிக்குமார்'s avatar ஆர்.பழனிக்குமார் சொல்கிறார்:

    கண்ணதாசனின் வனவாச அனுபவங்களுக்கு மேலேயா, டி .ஆரின் அனுபவங்கள் ?

  8. karuthaan's avatar karuthaan சொல்கிறார்:

    மக்கள் காசு வாங்கி கொண்டு ஒட்டு போடுகிறார்கள் உரிமையோடு காசு கேட்கிறார்கள் என்று கூறுபவர்கள், மக்கள் அணிதிரண்டு போராடி இன்று உள்ள சூழ்நிலையில் என்ன மாற்றம் கொண்டுவரமுடியும் என்று கூறுவார்களா ? பிரச்சன்னை என்று தெருவில் இறங்கினால் சம்மந்த பட்ட அதிகாரிகளுக்கு பதில் போலீஸ் தான் வருகிறது! அவர்கள் வந்த உடன் கலைந்து போ என்பது தான் அவர்களின் முழக்கமே! மேலும் புரோக்கர் வேலை எல்லாம் மேல் மட்டத்தில் முடிந்து விட்ட பிறகு போராடி தான் என்ன பலன் ?சுப்ரீம் கோர்டே அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாத பொது சாமானிய மக்களால் என்ன செய்து விட முடியும்? ஆகவே அடிக்கிற கொள்ளையில் தானே கொடுக்கிறான் எதாவது கொடுக்கட்டுமே என்பது தான் மக்களின் மனநிலை இதை எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளாத போராட்டத்தையே இடைஞ்சலாகவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகவும் பார்க்கும் படித்த மத்திய தர வர்க்கம் உணர வேண்டும் !

  9. taru's avatar taru சொல்கிறார்:

    Why not? Vaiko, Tamilaruvi, karthik, are also innocent

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.